Followers

Wednesday, July 29, 2009

இலவம் பஞ்சு ........

.. இலவம் பஞ்சு ......

நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின .

நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ளவில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்
எல்லாராலும் விரும்பபட்டவள். படிப்பிலும் கெட்டிக்காரி .

ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது. அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது. விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் .

ராகவனும் மீனுவும் அருகருகே. உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,

மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? .. ஏன் கேட்கிறீங்க ? அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........


நீண்ட அமைதிக்கு பின் .....

தனது முறை பையன அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்ன போது ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..

ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..


தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது
...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....

இவ்வளவு காலம் காத்து, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து கடைசியில் ...........
கடைசியில் ...........

வாசு பாடினான் .....மச்சான்....

.." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் .


.....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும். கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே

........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே.

அவன் மனம் படும் பாடு அவனுக்கு தான் தெரியும்.

4 comments:

Admin said...

உங்கள் கதைகள் அனைத்தும் அருமை... இன்னும் உங்களிடமிருந்து பல படைப்புக்களை எதிர் பார்க்கிறேன்...

நிலாமதி said...

சந்துரு உங்கள் வரவுக்கு நன்றி ....

Unknown said...

பலமான வாழ்க்கை அனுபவம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் மெருகேற்றி எழுதுங்கள்..நல்ல தாக்கம் இருக்கும்

நிலாமதி said...

கீத் ....உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி ...