Followers

Tuesday, July 28, 2009

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ...

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ........

என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது நம் பயணம் கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் .

சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால் சில புறு புறுபுறுப்பு .சரி ,கண்டக்டர் (நடத்துனர் ) பெடியனும் ,சாரதியுமாக மீண்டும் அண்மையில் உள்ள கோவிலில் தீப தூப ஆராதனை காட்டி , புறப்பட்டோம் .

பயணம் இனிமையாக இருந்தது. பிரபலமான சினிமா பாடல்களுடன் .தூர பயணமென்பதால் அதிக இறக்க ஏற்றம் இல்லை . என் வண்டுகள் இடையிடை பசி என்பதால் மச்சாள் உதவியுடன் ,சுடுநீர் போத்தல் பால் தயாரிப்பதும் ,அவர்கள் நித்திரை கொள்வதுமாக இருந்தார்கள் . இடையில் எனக்கு அண்மையில் நடத்துனர் பெடியன் வந்து இருந்து உடையாடிக்கொண்டு ,தேவையான் போது தாக சாந்தி ......வடை டீ போன்ற தரிப்புகளில் நிறுத்தி ஒரு உறவினர் போல பயணித்தோம் .

எமது பயணத்தில் முக்கால் பகுதி முடிந்து விட்ட நிலையில் சக்கரம் (சில்லு ) காற்று போய்விட மாற்றி புறப்படோம் ஒரு ஒருமணி நேர ஓட்டத்தின் பின் " படீர் என்ற சத்தம் " திடுகிட்டு விட்டோம் . ரயர் வெடித்து விட்டது . அதுகிட்ட தட்ட ஒரு காட்டு பிரதேசம் . எலோரும் சரியாக களைத்து விடோம் . காலை ஆறு மணிக்கு வெளிகிட்ட பயணம் பொழுது மங்கும் நேரம் ஏழு மணிக்கு கிட்ட இருக்கும். எலோரும் வாகனத்தை விட்டு இறங்கி விட்டோம். அரை மணி முக்கால் மணி ஆகியது .அந்த பெடியன் (சுந்தரம் ) ஓடி ஓடி தன்னால் ஆனா முயற்சி செய்து கொண்டு இருந்தான்


எங்கள் வயதான மாமனார் .வேறு வாகனத்தில் போவோமா ?.....என்று ஆலோசனை சொல்லிக்கொண்டு இருந்தார் ,நானும் என் குட்டி வண்டுகளின் பிரச்சனையால் (சுடு நீர் தீர்ந்து விட்டது ,)ஆமோதித்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஆயத்தமாகியது.என் மாமனாரின் பேச்சு (அவர் ஒரு சுடுதண்ணி) பயனக்களை வேறு . அவனின் காதில் எங்கள் "ஐடியா" எட்டி விட்டது போலும் ,இறங்கும் வரை
அவன் எங்கள் பக்கம் வந்து கதைக்கவே இல்லை . மீண்டும் ஒன்றரை மணி ஓட்டத்தில் அந்த தளத்தை அடைந்து விட்டோம். இறங்கியதும் அந்த பையன் வந்து "அக்கா உங்களுடன் ஒரு கதை" ....என்றான் .

" .காலையில் ஆறு மணிக்கு ஏறினீங்க அண்ணளவாக ஒரு பத்து மணி நேரம் உங்கள் உயிர் எங்கள் கையில் ......நம்பி தானே ஏறினீங்க .கொண்டு போய் சேர்ப்போம் என்று . பிறகேன்? வாகனம் மாற நினைதீங்க .......நடு வழியில் இப்படி செய்ய இருந்தீங்களே ....என்று தன் நெற்றிக்கண்ணை திறந்தான் . ......"

.எனக்கும் மனம் வேதனையாக போய்விட்டது ,மன்னிப்பு கேட்டேன் .தம்பி என் மாமனார் சற்று கோப காரர் ,என்று சமாளித்தேன் அவன் மனம் ஆறவே இல்லை . அக்கா முதல் தடவை அதை மாற்றி பயணம் தொடங்கினோம் தானே ....,இரண்டாம் முறையும் வெடிக்கும் என்று யார் கண்டார் ,எனக்கு புறப்படும் போதே விளங்கி .....விட்டது அக்கா . இனி மேல் இப்படி செய்யாதீங்க ....அப்போது தான் என் மனதில் உறைத்தது .

புத்தக ப்டிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான் வாழ்கை என்று .


இதனால் தான் பயணத்தில் எண்ணை கொண்டு போக கூடாது என்று

சொல்வார்களோ ?..........

13 comments:

Admin said...

உங்கள் இடுகைகள் எல்லாமே அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்....தொடருங்கள்....

நிலாமதி said...

வணக்கம் சந்துரு .........உங்களை போன்ற நட்புகளின் ஊக்கம் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கை என்பதே ஒரு பாடம்

அருமையா சொன்னீங்க.

Admin said...

உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..

நிலாமதி said...

வணக்கம் ஜாமால் எழுத்துலகுக்கும் கணி வலைப்பதிவுக்கும் நான் மிக மிக புதியவள் இப்போது தான் ஆரம்ப நிலை ..உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் நட்பும் , ஊக்கமும் மேலும் என்னை எழுத தூண்டும். பகிர்வுக்கும் வாவுக்கும் நன்றி . நட்புடன் நிலாமதி

நட்புடன் ஜமால் said...

.உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் நட்பும் , ஊக்கமும் மேலும் என்னை எழுத தூண்டும். ]]

எங்கள் ஊக்கம் எப்பொழுதும் உண்டு.

மூத்த எழுத்தாளனெல்லாம் இல்லை

கற்றுகொண்டிருப்பவன் - அவ்வளவே.

தேவன் மாயம் said...

வாழ்க்கைப் பாடம் அருமை!!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்....தொடருங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

நன்றாக எழுதுகிறீர்கள் கீப் இட் அப், சொல்லை சரி பார்த்து பின்னூட்டம் போடா கஷ்டமா இருக்கு, word verification ஐ தூக்கி விடுங்கள்

அதிரை அபூபக்கர் said...

//புத்தகப்டிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான் வாழ்கை என்று //

சரியாக சொல்லியுள்ளீர்கள்....

நிலாமதி said...

தேவன் ..............உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

நிலாமதி said...

யோ .........உங்கள் வரவுக்கு நன்றி .நீக்கி விடுகிறேன். நான் இன்னும் முழுமையாக் உருவாக்கல் பற்றி தெரியாமல் இருக்கிறேன். பல விடயங்கள் எனக்கு அறிய வேண்டி இருக்கிறது. உங்களுக்கு என் நன்றிகள்

நிலாமதி said...

வணக்கம் ஆதிரை அபூபக்கர். உன்கள் வரவுக்கு நன்றி .உனக்ளை போன்றவர்களின் ஊக்கம் என்னை மிக மகிழ்ச்சி படுத்துகின்றது. நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள்