Followers

Friday, August 14, 2009

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்


அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது .

ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளநீர் தாகம் தீர்க்க , குளித்து விட்டு மத்திய சாப்பாடை முடித்தார்கள். ராகவன் அப்பாவுக்கென கொண்டு வந்த இளநீல சேர்ட் , அம்மாவுக்கு சாரி , ஒரு பை நியைய சொக்கிலேட்ஸ் என்று அன்பளிப்புகளை கொடுத்தான் .சொக்கனுக்கென்று மறக்காமல் வாங்கிய நீல சாரத்தை(லுங்கி ) அவன் பிள்ளைகள் ,வரும்போது கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தான் . ராகவனும் அப்பாவின் சாய்மனையில் இருந்தவாறே பதினாலு வருட கதைகளை சொல்லியவாறே அயர்ந்து விட்டான்

ரம்யா பிள்ளைகளுடன் பின் வளவில் ஆட்குட்டி பிடித்து ,விளையாட்டு காட்டி கொண்டு இருந்தாள் .ராமசாமியார் பின்னும் முன்னும் வந்து ஒன்றே ஒன்று தரமாடீரா என்று நச்சரித்து கொண்டு இருந்தார் " சும்மாபோங்கப்பா" பிள்ளைகள் படுத்த பின் தாரேன் என்று போக்கு காட்டினாள் . இரவும் வந்தது , சுடச்சுட அவித்த குழல் பிட்டும் பலாப் பழாமும் பேரப்பிள்ளைகள் சாப்பிடார்கள் .

இரவு ஒன்பது மணியாகியது . ராமசாமியார் குசினிக்குள் வந்து நான் கேட்டது தர மாடீரா என்றதும் சாபிட்டு முடியுங்கோ படுக்க முதல் தாரன் என்றாள். அவர் சாபிட்டதும் பேரபிள்ளைகள் தூங்கி விட்டார்கள் . ராகவனும் ரம்யாவும் வேப்பமரத்தின் கீழ் நிலவில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ராமசாமியாரின் ஏக்க பார்வை தீரவே இல்லை. ஒருவாறு பத்து மணியளவில் ஜானகியம்மாள் வந்து அவரிடம் இரண்டு சொக்கலேருக்ளை நீடினாள் . சக்கரை வருத்த காரன் வைச்சு வைச்சு சாபிடுங்கோ என்றாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவர் ஜானகியை கட்டி முத்தம் கொடுக்க சீ....... போங்கோ என்று அவள் சினுக்க .....திடுக்கிட்டு எழுந்தாள் ..

ராமசாமி படத்தில் சிரித்து கொண்டிருந்தார் . அவளுக்கு எண்ணமெலாம் தாயகம் நோக்கி சென்றது அவர் இறந்தது , தான் மகனிடம் வந்தது , எல்லோரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் போக நான்கு சுவர் நடுவே இருப்ப்து என்று

..........கழிவறை சென்று முகம் கழுவி காலை வழிபாடு செய்தபின் , இன்று வார விடுமுறையில் ராகவனிடம் அப்பாவின் கல்லறைக்கு போய் தரிசிக்க வேண்டும் என கேட்கவேண்டும் என நினைத்தவாறு .... காலண்டரை பார்த்தாள் .

கார்த்திகை ,இரண்டாம் நாள் ................., வந்து நினைவு படுத்தி போயிருக்கிறார் . இளமையில் கிறிஸ்தவ கலூரியில் படித்ததால் அன்டன் ராம சாமி என் பெயார் மாற்றம் செய்து தனது உடலை சேமக்காலையில் ல் அடக்கம் செய்யவேண்டும் என்று இறுதி ஆசையாக கேட்டு இருந்தார் என்பது நான் எழுதாத விடயம் .

No comments: