Followers

Monday, August 17, 2009

போதை தந்த பாடம் ...

எனது நீண்ட நாள் மனப்பதிவிலிருந்து ஒரு சிறு நிகழ்வு

அமைதி யான அந்த கிராமத்திலே , மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள் . பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான் .அவனும் னும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடித்து " வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது ..

பாடத்தொடங்கினான் ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி .
..தங்கம் ...என்று . வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கிவிடார்கள். .அவனது துவீ வண்டி(சைக்கிள்) வேறு ..இடம் வலமாக ஆட்டம் போட தொடங்கி விட்டது ....பொது ஜனங்களுக்கும் இடை யுராக இருந்தான்.

இப்படியாக போய்கொண்டு இருக்கையில் ... வழியில் ஒரு மது வரி இலாகா இருந்தது .. சட்ட விரோத கள்ளு இறக்குதல் ,...வரிபணம் கட்டாமை ,...போன்ற தவறுகளுக்கு , பணம் அறவிடுவார்கள் . சிலரை மறியலிலும் வைப்பார்கள். ..பாவிலுவை கண்டதும் ..துரத்த ஆரம்பித்தார்கள்.

அவன் சைகிளையும் விட்டு விட்டு ..ஓடத்தொடங்கினான் . எட்டி பிடித்தபோது... சாரமும் (லுங்கி) கழண்டு விழ... உள் ஆடையுடன் ஒரே ஓட்டமாக ....எங்கள்... வீடுக்கு அருகாமையில் வந்து,".

அக்கா ............. நான் முடியப்போகிறேன் ....என்று ... பயம் காரணமாக ...எங்கள் வீடுவீட்டு மாட்டுக்கொட்டகையில் புகுந்து கொண்டான் .பின் அவர்கள் சென்று விட்டார்கள்.துரத்தீ வந்தவர்கள்....


. வெறி(போதை) தெளிந்ததும் அவனுக்கு வெட்கமாகி விட்டது .. மனைவி வந்து கூட்டி சென்றாள் . அந்த வெட்கத்தில் போனவர் தான்.. பின் அந்த கிராமத்துக்கு வரவே இல்லை .பின்பு மனைவி ... பிள்ளைகளை ..பெரிய பட்டணத்துக்கு அழைத்துவிட்டார்.

குடியும் விட்டு சில கடைகளுக்கு முதலாளி என்று கேள்விப்படேன். ஒரு நிகழ்வு அவன் வாழ்கை பாதையையே திசை மாற்றி விட்டது .

...இது எப்படி இருக்கு ....

10 comments:

Anonymous said...

இது உண்மைக்கதையோ நிலாமதி அக்கா

நிலாமதி said...

எனக்கு பொய் சொல்லத்தெரியாது உண்மைக்கதை............

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் சகோதரி கதை மிக சிறப்பாக இருந்தது

. said...

:) இது சாத்தியமானால்(ஒரு சின்ன சம்பவத்தால் திருந்துவது) நம் ஊரில் எல்லோரும் எப்போதோ திருந்தி இருப்பார்களே!! ஆனாலும் அவர் திருந்தி இருந்தால்... புதுமை, அருமை! :)

நிலாமதி said...

நன்றி யோ உங்க வரவுக்கும் பதிவுக்கும்.

நிலாமதி said...

நன்றி பிரியங்கா .திருத்த பட்ட சம்பவத்தால் திருந்தி விடார். இன்னும் திருந்தாத ஜென்மங்கள் எவ்வளவோ.

சப்ராஸ் அபூ பக்கர் said...

அங்க போத்தல்..... இங்க போதையா?... (லொள்....)

அருமையாக இருந்தது கதை...

வாழ்த்துக்கள்....

நிலாமதி said...

அபூ .............உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .

Unknown said...

இதைவிட அவமானப் பட்டும் திருந்தாத ஜென்மங்கள் கனக்க இருக்கு

நிலாமதி said...

உண்மைதான் கீத் .............திருந்திய ஒருவனின் முன் மாதிரிகை மற்றவர்களுக்கு பாடமாய் இருக்கட்டும் என்று தந்தேன். வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .........