Followers

Tuesday, August 25, 2009

தெளிவு பிறந்தது .............

தெளிவு பிறந்தது .................

அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடுமையால் தாயின் அருகாமையயை விட்டு விலகவே இல்லை . பள்ளி விடுமுறை வேறு . எங்காவது கூடி போங்கள் என்று சாருமதி கேட்டு இருந்தாள். மாதக் கடைசி விடுப்பு எடுக்க முடியாது அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

அலுவலகத்தில் டைபிஸ்டு இந்திரா , சற்று ஒரு மாதிரியானவள் என்று கேள்வி பட்டு இருந்தான் . ஆனால் அவனுடன் எந்த விதமான் , செயல்களுக்கும் இடம் கொடுபவளாக் காட்டிக் கொடுக்க வில்லை. . ராகவன் தன் தேநீர் இடைவேளை முடிந்து , மீண்டும் தன் இருக்கையை அடைந்தான். எதோ சந்தேகம் கேட்க வந்தவள் , சார் இன்று , ஏதும் சுகவீனமா ? ஏதும் பிரசினியா ? வீடுக்கு போகும் போது நம்ம வீடு பக்கம் வந்து போங்க சார் என்று ........சூசகமாக சொன்னாள்.

ராகவன் மனம் கிடந்து அல்லாடியது. இரவு மனைவியின் அணைப்பு கிடைக்க வில்லை எதோ ஒன்றுக்காக மனம் ஏங்கியது. அவனது வாழ்வில் என்றுமே அப்படியான இடங்களுக்கு போனதில்லை. வாலிபத்திலும் சரி இப்போதும் சரி , "அப்படியான " கதைகளை நண்பர்களுடன் பேசி கொள்ளவதுடன் சரி . அந்த இடத்திலே அந்த நினைப்பை விட்டு விடுவான். இன்று ஏனோ ஒரு தடுமாற்றம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் என்று ..... என்று மனம், அமைதி அடைய வில்லை.

எதோ ஒரு தவிப்பு ........ஒரு தடவை போய் தான் பார்ப்போமே....என்று மனம் ஏங்க , வேலை முடிந்ததும் தன் வாகனத்தை ,அவள் வீடு நோக்கி ஓட்டினான். வீட்டை அண்மித்தும் சற்று தூரத்தில் நிறுத்தினான். கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான். களவு மாங்காய் ருசிக்கும் என்பார்கள். அவள் வீட்டை அண்மித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். அழைப்ப்பு மணியை , அழுத்த கையை உயர்த்தியவன் , வாயிலில் இருக்கும் ஆண்களின் காலணிகளை பார்த்தும் திடுக்கிட்டான். யாரோ உள்ளிருக்கிறார்கள். சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு . விறு விறு என்று , தன் காரை நோக்கி நடந்தான். வேகமாக் வீடு நோக்கி சென்றான். வீட்டை அடைந்ததும் , சாருமதி , ஏனுங்க இவ்வளவு லேட்டு , மாதுளனை டாக்டரிடம் அழைத்து போனேன் , மாத்திரைகள் தந்தார், நன்றாக் வேர்த்து காய்ச்சல் , குறைந்து விட்டது. சமர்த்தாக் தூங்குகிறான் என்றாள்.

குளித்து இரவு உணவை முடித்தவன் .........சற்று நேர தொலைக்காட்சி பார்த்தவன், நித்திரைக்கு சென்றான். சமையலறை வேலை முடித்து வந்தவள் , மாதுளனுக்கு இரவு மருந்தை புகட்டி விட்டு , நன்றாக் போர்வையை இழுத்தி போர்த்து விட்டு , படுக்க சென்றாள். ராகவன சலனமற்று காத்திருந்தான். என்னங்க தூங்கிடீங்க்களா? நேற்று மாதுளனுக்கு ,முடியலைங்க , அது தான் அவனுடன் படுக்க வேண்டியதாயிற்று என்றாள். . அடியே என் ராசாத்தி கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும். ஒரு சின்ன் அஜச்த்மேண்டு (adjustment )...இது கூடவா முடியாது ? என்று அவளை இறுக அணைத்தான். விடிந்ததும் நல்ல பொழுதாக் விடிந்தது , . வேலைக்கு போகும் வழியில் அட சீ .....இப்படி ஒரு , சபலமா ? அநியாயமாக் ஒரு சாக்கடையில் விழ இருந்தேன். ஜென்மம் முழுது ம ஒரு கறையை தேட இருந்தேன். அப்படி போய் இருந்தால் மனம் அமைதியடையுமா? சாருவுடன் , இணயும் போது குற்ற உணர்வால் அல்லவா கூனி குறுகி இருப்பேன். என் சாருவுக்கு துரோகம் செய்ய இருந்தேனே. கடவுளே என்னை மன்னித்து விடு ...........இனி மேலும் தடுமாற விடாதே என்று மனதுள் கும்பிடான். அலுவலகம் சென்றவன், அமைதியாக தன் வேலையில் ஈடு படான். டைபிச்டுவை கூபிட்டு ..........தான் ஒரு வாரம் குடும்பத்துடன் விடுமுறை செல்வதாகவும் அந்த வாரதுக்கான் வேலையை குறிபெடுக்க் வரச் சொல்ல அழைப்புமணியை யை அழுத்தினான்.

மறு நாள் ராகவன் சாரு , குழந்தைகள் மாதுளன் , மனோஜனுடன் விடுமுறை விடுதி ..........நோக்கி பயணமாயினர்.

குறிப்பு .....நான் இப்படி யான கதை எழுவது இது தான் முதல் தடவை .
குறை நிறை சொல்லுங்க.

16 comments:

காமராஜ் said...

ரொம்ப நல்லாருக்கு
வாழ்த்துக்கள்

நிலாமதி said...

வணக்கம் திரு காமராஜ் அவர்களே ........உங்க பாராட்டு, மழையில் நனைந்தது போல மகிழ்வாய் இருக்கிறது .நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள். உங்க வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

சீமான்கனி said...

//கிணற்று நீரை ..ஆற்று நீரா..அடித்துவிட போகிறது...//

நல்லா கதை சொல்றிங்க நிலா....அருமை....
கதையின் கருர்தும் அருமை....
நல்ல தொடக்கம்...வாழ்த்துகள்.....

நிலாமதி said...

சீமான் கனி ..........நீங்க சொன்ன சரிங்க , என் கதை பிடிச்சிருக்கா ? மனம் நிறைந்த நன்றிங்க. தொடர்ந்து இருங்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான்//

நானும் உங்கள் கதையை இப்படி தைரியத்தை வரவழைத்து தான் வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் நான் சும்மா பயந்து விட்டேன் என விளங்கியது.

ஈரோடு கதிர் said...

அழகான இடுகை

பாராட்டுகள்

எம்.எம்.அப்துல்லா said...

குறை ஒன்றுமில்லை :)

நிலாமதி said...

யோ ....வரவுக்கும் பதிவுக்கும் நன்றி. தப்பு செய்ய போகும் போது எப்படீங்க் இருக்கும்.? (சும்மா )........நன்றிங்க

நிலாமதி said...

வணக்கம்.கதிர். என் கதை நடை அழகாய் இருக்கா. மிக்க நன்றிங்க்க் நீக்க மூத்த வலைப்பதிவர். உங்க பாராட்டு நிலைக்கட்டும்.

நிலாமதி said...

எம் எம் அப்துல்லா...........உங்க வரவுக்கு நன்றி. எதாவது சொல்லிட்டு போங்க ப்ளீஸ்

சப்ராஸ் அபூ பக்கர் said...

என்ன சொல்றது?... வழமை போலவே best. எப்போதாவது குறை கண்டால் நிச்சயம் சுட்டிக் காட்டுவேன்....

வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

அபூ.......உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .

தியா said...

கதை நன்றாக உள்ளது வாழ்த்துகள்

நிலாமதி said...

நன்றி தீயா உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

ரெட்மகி said...

ஒரு சபலம்
ஒரு பாசம்
ஒரு கோபம்

முடிவில் வென்றது பாசமே...

நல்ல முயற்சி நிலாமதி...

தொடரட்டும் வாழ்த்துக்கள்

நிலாமதி said...

ரெட்மகி ...உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள். நட்புடன் நிலாமதி