Followers

Friday, September 11, 2009

அவளுக்குள் ஒரு மனம் ....

அவளுக்குள்  ஒரு மனம் ....

 கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை  முடித்து தேநீருடன்  பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து  வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன்  செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய  உணவையும் சிற்றுண்டி களையும்  கொடுத்து வண்டி வரை சென்று அனுப்பி வைத்தாள். மேகலாவும் , கண்ணனும் பள்ளிக்கு நடந்து தான் செல்வார்கள். அவள் நினைத்திருந்தால் இதிவிட மேலான வசதியான வாழ்வு வாழ்ந்து இருக்கலாம்  ஆனால் பாழும் இதயம் கொண்ட காதலால் தான் இன்றைய வாழ்கை.

கடந்த கால வாழ்வை நோக்கி அவள் மனம் அசை போட தொடங்கியது . அப்போது மாதவி பத்தாம் வகுப்பு படித்து கொண்டு  இருந்தாள். தினமும் பாடசாலைக்கு போகும் வழியில் ஒரு சிறு கடை அதில் தான் ராசா உட்கார்ந்து வியாபாரம செய்து கொண்டிருப்பான். அழகான் இளஞ்ன் ஆனால் என்றுமே பொருட்களை எடுத்து கொடுக்க மாடான். அவன்  எழுந்து நின்றதை கண்டதும் இல்லை. உதவிக்கு நிற்கும் சிறு பையன் தான் பொருட்களை எடுத்து கொடுப்பன். ஒரு நாள் இவள் கடையில் பரீட்சைக்காண  பேப்பேர் வாங்க சென்றாள். அன்று அவளது கஷ்ட காலம் அந்த பையன் வரவில்லை. இவளுக்கு நேரம் ஆகி விட்டது சீக்கிரம் தரும்படி கேட்டாள் . கடைக்கார  ராசாவால் எடுத்து கொடுக்க முடியவில்லை.  இவள் வற்புறுத்தவே அதை உள்ளுக்கு வந்து எடுக்கும்படி சொன்னான். இவளுக்கு கோவம் வந்தது . ஏன் "உங்களால் முடியாதோ "?  என்று ஏசி விடாள். சற்றும் எதிர் பாராத ஒரு சம்பவம் நடந்தது . ராசா கதிரையில் இருந்து குதித்து கால்களை இழுத்தவாறே அதை  எடுத்து கொடுத்தான். இவளுக்கு திகைப்பாக போய் விட்டது . ராசா கால் விளங்க்காதவனா ? மிகவும் கவலைப்படாள். அவன் மீது இரக்க பட்டாள். இவ்வாறே இவர்களது நட்பு காதலாகியது.

இங்கு ராசாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவன் பிறவியில் சாதாரண பையனாக தான் இருந்தான். ஐந்து வயதுக்கு பின் ஒரு கடுமையான காய்ச்சல் வந்து ஒரு ஊசி போடார்களாம் அதன் பின் தான் இப்படி ஆகியது என்றும் இடுப்புக்கு கீழே கால்கள்  பலம் அற்றவையாக போய் விட்டன . ஆரம்பத்தில் கால் களை இழுத்து நடமாடுவான். பின்பு தந்தை ஒரு சக்கர நாற் காலி வாங்கி கொடுத்தார். இவனுடன் கூட பிறந்த்த்வர்கள் எழு பேர் எவருக்கும் இப்படி இல்லை. அவனது தந்தை ஒரு சிறு தொழில் அதிபராயிருந்தார். இவன் மீது மிகவும்பற்று உள்ளவராயிருந்தார். இவன் தான் இல்லாத காலத்தில் சிரமபடுவானே ........யார் கவனிக்க போகிறார்கள் என்று கவலைபட்டு இந்த சிறு கடையை போட்டு கொடுத்தார். காலப்போக்கில் தாயும்  தந்தையும் இறந்து விட்டனர். சகோதரர் களும் ஒவ்வொருவராக் திருமணமாகி சென்று விட்டனர். ராசா மட்டும் தனித்து விடப்படான். இடயில் இவனிடம் உதவி பெற சகோதரர்கள் வந்து போவார்கள். தன் சோக கதையை ஒருநாள். மாதவிக்கு சொல்லியிருக்கிறான் ராசா.

அன்றிலிருந்து அவன் மீது ஒரு இரக்கமும் , நேசமும் அவளுக்குள் உருவாகி அது காதலாகியது.  இதை கேள்வி பட்ட் மாதவியின் பெற்றார் கடுங்கோபபட்ட்னர். நொண்டி என்றும் ஏளனம் செய்தனர். ஒருநாள் இவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் தாலி கட்டி கொண்டனர். அன்றிலிருந்து மாதவி பெற்றவரால் வெறுக்க பட்டாள். இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் எவரும் அவளை அணைக்க் வில்லை. ராசாவின் தந்தை இறந்த பின் அவனது வீடு இவன் பெயருக்கு எழுத பட்டதை அறிந்து ராசாவின் சகோதரர்களும் வேறுபாடு காட்ட தொடங்கினர். அந்த கிராமத்தில் இருக்க விரும்பாத ராசா குடும்பம் வீட்டை விற்று பணத்தை திரட்டி , ஒரு மணிக்கூடு திருத்தும் கடை ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். அவனது விடா முயற்சியும் மாதவியின் ஒத்துழைப்பையும் அவர்களை வாழ்வில் முன்னேற்றியது. வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஒரு வண்டி வாங்கி விடார்கள். அதில் விடாமுயற்சி உள்ள ராசா கை மூலம் இயக்கும் வாகன அனுமதி பெற்றான். மணிக்கூட்டு கடையிலும் பணிக்கு நான்கு பேர் வைத்தது கொண்டார்கள். நகரத்தில் உள்ளவீட்டையும்  சொந்தமாக்கி கொண்டார்கள். ராசா இருந்து கொண்டு செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வமுள்ளவன். விரைவில் தொழில் நுட்பங்க்களை கற்று கொள்வதில் சிறந்தவன். அவனது ஆசையெல்லாம் வாழ்ந்து  காட்ட வேண்டும் என்பது தான். தன் பிள்ளைகளை படிப்பித்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டும் , கடைசிவரை மாதவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் ..

கால் ஊனமுற்றாலும் ஊனபடாத இதயத்தை புரிந்து கொண்டது .........அவளுக்குள் ஒரு மனம் ........கதை உண்மை பெயர்கள் கற்பனை. .

14 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

மனமிருந்தால் மார்க்கமுண்டு

நல்லாயிருக்குங்க .....கதை

நிலாமதி said...

முதன் முதலாய் ..........கருத்து சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்.

thiyaa said...

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை

Menaga Sathia said...

super story nila!!

கவிக்கிழவன் said...

அன்புள்ள நிலமதி அக்கா நன்றாக உளது அனைத்தும் உங்கள் அனுபவங்களும் உங்கள் வாழ்கையின் சோகங்களும் என்பது விளங்குகின்ட்றது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இது ஒரு உண்மைக் கதை என்று அறிய மிகவும் மகிழ்ச்சி. உண்மைக் காதல் சில இடங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு என் ஆசிகள்.

நிலாமதி said...

தியா ..உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.....

நிலாமதி said...

சத்தியா........உங்கள் வரவுக்கு என் நன்றிகள் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

நிலாமதி said...

கவிக்கிழவா ...இவர்கள் என் வாழ்கையில் கண்டவர்கள். இன்னும் வாழ்கிறார்கள். சற்று எழுத்து பிழையை பாரடா கண்ணா ..நிலாமதி அக்கா

Admin said...

அருமையாக இருக்கின்றது.

ஈரோடு கதிர் said...

மிக அழகான கவிதை நிலா...

இன்று மின்னஞ்சல் செய்கிறேன்

சீமான்கனி said...

kadhai nenjai thodukirathu nila akka.....arumai....
vazhthukal.....

நிலாமதி said...

சந்துரு உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .........

நிலாமதி said...

சீமான் கனி எங்கே உங்கள் தமிழ் எழுத்துக்கள் போனது ...சும்மா பகிடி. உங்கள் வரவுக்கு நன்றி .