Followers

Saturday, September 26, 2009

வேப்ப மர உச்சியில்............

வேப்ப மர உச்சியில்............

அந்த ஊரின்  துடிப்பான இளையவர்கள் சேர்ந்து . கொள்ளும் இடம்.  புதிதாக ஒரு எண்ணம் தோன்றவே  ராகுல் அண்ட் கம்பனி தீட்டினார்கள் ஒரு திட்டம்.   மச்சான் ஆவி.........இருக்காடா ......சென்ற வருடம் முதலியார் மாணிக்கம் , குச்சொழுங்கை ...வேப்பமரத்தின் நிழல் வழியே வந்த போது பேயடித்தது உண்மையாடா ......?   பல வாறு சிந்தனைகள் ......கதைகள் ....மறுத்தல்கள் நடுவே வீரமுள்ளவன் ....அவ்வூர் சேமக்காலையில் (கிறிஸ்துவ் மயானம்).வரும் வெள்ளி இரவு ,நள்ளிரவு  பன்னிரண்டு  ஐந்து( 12 .05  ) நிமிடமளவில் வேப்பங்கன்று நடுவதாக தீர்மானிக்க பட்டது.......இந்த மாணவ குழுவில் ஐவர் இருந்தனர் ராகுல் அதில் துடிப்பான இளைஞ்ன் ஆவி இல்லை ..........என்றுவாதிடுபவன். மாணவர்கள் தங்களிடையே மச்சான்" .....என்று அழைத்து கொள்வர் .இது கூட்டாளி ..தோஸ்த்து என்று பொருள் படும்.

அந்த நாளும் வந்தது .......காலையில் ஒன்றுகூடிய போது ராகுல் தான் அங்கு சென்றுவீரம் காட்டுவதாக, வேப்ப  மரம் சுடலையில் நாட்டுவதாக முடிவு செய்ய பட்டது........இதில் சிலர் இறுதியாண்டு கல்லூரி பரீட்சைமுடிவை எதிர் பார்ப்பவர் சிலர் இறுதியாண்டு படித்துகொண்டிருப்பவர்கள். அப்போதுகைத்தொலை பேசி வசதியெல்லாம் இல்லை.  சைக்கிள் தான் அவர்கள் வாகனம்.

மாலை இருள் கவிழ்ந்ததும் ,கன்று  நடுவதற்கு குழி தோண்டுவதற்கு ,மண் வெட்டி , பிக்கான், அலவாங்கு ..........மூன்றுஅடி உயர வேப்பங்கன்று (கல்லூரியில் புரஜக்டு க்கு தேவை என் வீடில் களவாடினது.)...........கொண்டு போய் சேம காலையின்  ஒரு சுவர் ஒரமாக மறைத்துவைக்கபட்டது....இரவு எட்டு மணியில் எல்லோரும்கூடி முடிவெடுத்தபின் கலைந்துவிட்டனர் ..........ராகுலனுக்கு தூக்கமே வரவில்லை .......வீடில் இறுதியாண்டு  பரீட்சைக்கு ப்படிப்பது போல பாவனை செய்தான். வீட்டில் எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர். மணி இரவு பதினொன்றே முக்கால் , அறைக்குள் சென்று ,அரைக்காற்சட்டை போடுக் கொண்டு  அதன் மேல் .சாரம் (லுங்கி)அணிந்தான். .நெஞ்சு சம்மட்டிய் கொண்டு அடிப்பது போல அடித்து கொண்டது. பூனை போல வீட்டு மதிலால் ஏறி மறுபக்கம் குதித்தான் . மடியில் செருகியிருந்த்த் டார்ச் லையிற் ...பத்திரமாக இருப்பதை  உறுதி செய்துகொண்டான். கைக்கடிகாரம் மணி பன்னிரண்டு காட்டியது. முன்னரே கொண்டு வைத்திருந்த பொருட்களை மதிலால் உள் நோக்கி வீசினான். பின் தானும்குத்தித்து ..........அவர்கள் குறித்த திசை நோக்கி பொருட்கள் எடுத்துக்கொண்டு நடந்தான் அந்த இளம் குளிரிலும் நெற்றியால் வியர்வை வழிந்தது . உட்காந்து முதலில் புல்லை மண்வெட்டியால் செருக்கினான்.இரண்டு சதுர அடிக்கு  செதுக்கிய பின் ...இடையில் தண்ணீர் விடாய் போன்ற உணர்வு....பின் அலவாங்கினால் இரண்டு குத்துக்கள் போட்டதும் கற்பாறை தென்படவே  அதை தனக்கு  பின் குற்றி செருகி விட்டு பிக்கான் எடுத்து கிண்ட தொடங்கினான். இரண்டு மூன்று கிண்டல் போட பின்னாக இருந்து அவன் சாரத்தை  யாரோ இழுப்பது போன்ற உணர்வு. பயம்  .....தனித்த  உணர்வு...ஒருவாறு தன்னை  தேற்றி மீண்டும் ஓங்கி நிலத்தில் குழி பறிக்கும் முயற்சி. மீண்டும் பின்னால் பிடிதிளுப்பது போன்ற உணர்வு..........அந்த வேளையில் தூரத்தே ஒரு நாயின் ஊளைச்சத்தம். நாய்களின் கண்களுக்கு பேய் தென்படும்  என்று பாட்டி கதை  சொன்ன ஞாபகம். ஒரு வேளை ஆவி தன்னை நோக்கி வருகிறதோ ............... சாரத்தை கழற்றி விட்டு ஒரே ஓட்டம் ....வீடு போய் சேர்ந்து எப்படி படுத்தான் என்று தெரியவில்லை. மறு நாள் காலை அவனை தாய் தட்டி எழுப்பிய போது உடல் அனலாக கொதித்து. அவ்ள்மீண்டு போர்த்திவிட்டு ...குடிநீர்க் .கசாயம் வைக்க சென்று விடாள். காலையில் நண்பர்கள் சென்று பார்த்த போது ராகுலனின் சாரம் அலவாங்கினால் குத்தபட்டு   (சாரத்தின் தலைப்பு  பகுதியில் அலவாங்கு இறங்கி இவன் அசையும்
போது பின் நோக்கி இழுத்தது ).காணப்பட்டது ஓஹோ ...........மச்சான் இரவு இங்கு வந்திருக்கிறார்.போட்டியில்  வெல்லும் எண்ணத்துடன் என்று நண்பர்கள் கூடி கதைத்து கொண்டார்கள். அன்று மாலை ராகுலனை காணவில்லை  என்று வீட்டுக்கு  சென்ற போது அவன் காய்ச்சலில் இருப்பதை  எண்ணி தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். தாங்கள் போய் பார்த்ததையும் சொல்லி எள்ளி நகையாடினார்கள்.

உண்மையில் பேய் என்பதே இல்லய் அவரவர் மனப் பயம் தான் அருண்டவன் கண்க்கு இருண்டதெல்லாம் பேய் ......... பேய் பிடித்தவர்கள் என்பது உண்மையில்  மன நிலைக் கோளாறு  .மன அதிர்ச்சியால் ஏற்படுவது ..........முற்றும். .

மண் வெட்டி ..........ப வடிவ மரப்பிடி  போட்ட மண் கொத்தும் கருவி .........
அலவாங்கு .............இரண்டு மூணு கிலோ உள்ள முனை கூர்மையான இரும்பு கம்பி
பிக்கான்........இரண்டு முனையும் கூர் உள்ள பிறைவடிவ மரப்பிடி  போட்ட இரும்பு

இந்த பாடல் நினைவு வருகிறது ........

.சின்ன பயலே சின்ன ப்பயலே சேதி கேளடா...............
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று ....
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க .....
வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளால்
உன் வீரத்தை  முளையினிலே  கிள்ளி வைப்பாங்க.............

18 comments:

கவிக்கிழவன் said...

ஆவி உலகத்துக்கு நுழைந்தேன் பயமாக இருக்கிறது

நிலாமதி said...

அட உங்களுக்குமா ..? பதிவுக்கு நன்றி .

ஈரோடு கதிர் said...

அலவாங்கு, பிக்கான் இரண்டும் கேள்விப்படாத வார்த்தைகள்

நன்றி

Elanthi said...
This comment has been removed by the author.
நிலாமதி said...

என் பள்ளிக்காலத்தின் என் அண்ணா மார் செய்த கூத்துக்கள்.
ஒரு வேடிக்கைக்காக் எழுதினேன். இந்த விஞ்ஞான உலகில்
பேயும் ஆவியுமா? இளந்தி

நிலாமதி said...

நன்றி ........கதிர் . தமிழக உறவுகளுக்காக தான் விளக்கம் கீழே எழுதினேன். எங்களிடயே பேச்சு வழக்கில் சில மாறு பாடுகள் உண்டு.

தமிழ் அஞ்சல் said...

உங்கள் பதிவுகளில் திரிகிறது உங்கள் சிந்தனை வளம்,பாராட்டுக்கள்.பதிவுலகில் ஒராண்டாகும் நிலையில், முதல் நண்பராய் என் தளத்தில் உங்கள் வருகையை பதிந்தமைக்கு நன்றி..

நிலாமதி said...

திருப்பூர் மணி .......உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.

Admin said...

கதை நன்றாக இருக்கிறது...
எனக்கு பேய், பிசாசுகளில் நம்பிக்கை இல்லை...

நிலாமதி said...

ஒரு வேடிக்கைகாக தான் எழுதினேன் அந்த நாள் இளையர்களின் கூத்துக்கள். எனக்கும் நம்பிக்கையில்லை இறுதியில் எழுதினேன் மன அதிர்ச்சியும் மன நோயும் தான் பேய் பித்தலாட்டம்
என்று .உங்கள் வரவுக்கு நன்றி ........

இறக்குவானை நிர்ஷன் said...

பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லை தான்.
கதை நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

நிலாமதி said...

நிர்ஷன் ...உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.

கரவைக்குரல் said...

என்ன நீங்க பேய் பிசாசு எண்டு பயம் காட்டுறீங்க
கதையின் போக்கு சிறப்பு

ஈழத்தில் நடைமுறையில் உள்ள வட்டார வழக்கு சொற்களோடு அமைந்த கதை அருமை இது

நிலாமதி said...

கரவைக்குரல்...நன்றிங்க. உங்கள் வரவுக்கும் பதிவுக்கும்.நான் ஈழத்து பெண்.இளையவர்களின் வீரத்தனங்களை காட்டும் வேடிக்கை பதிவு......

M.Thevesh said...

கதை நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பேய்,பிசாசு பலகீனமான மனிதர்
களின் கற்ப்பனை. தொடர்ந்து
எழுதுங்கள்.

நிலாமதி said...

நன்றி தேவேஷ் ....உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

மனுநீதி said...

எனக்கும் பேய் பிசாசுகளின் மேல் நம்பிக்கை கிடையாது. ஆனால் அதை பற்றி படிப்பதற்கும் கதை கேட்பதற்கும் அலாதி பிரியம். நான் சுஜாதாவை விட இந்திரா சௌந்தராஜனை படித்தது தான் அதிகம்:) . கைவசம் இன்னும் பேய் கதைகள் இருந்தால் எழுதுங்கள்.

நிலாமதி said...

மனு நீதி .........உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி .