Followers

Sunday, November 29, 2009

நித்திலா .....தாயாகிறாள்

நித்திலா .....தாயாகிறாள் .

மானிட வாழ்வில் ஒரு பெண் ,திருமணமாகி தாய்மையடைவது இயற்கை தான். இதில் நித்திலா .....என் கதாநாயகி , அப்படி என்ன சாதித்து விடாள் என்று பார்க்கிறீர்களா ? அது தான் கதை ........கதையை வாசிக்க என்னுடன் தொடர்ந்து வாருங்கள்.

அழகான அமைதியான அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு செல்லமாக வளர்ந்தவள் தான் நித்திலா .....தாய் ...தலைமை ஆசிரியரான தந்தை இவர்களுக்கு குழந்தையாக சிறுமியாக ..செல்லமாக வளர்ந்தவள் தான் இந்த நித்திலா.....காலத்தின் கட்டளையோ , விதிவசமோ , கிராமத்தில் இருந்து ... இடம் பெயர்க்க பட்டு இலங்கையின் கொழும்பு மா நகரின் , ஒரு தொடர் மாடியில் வாழ்வை அமைத்து கொண்டார்கள். யாழ் இளம்பெண் கால ஓட்டத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்று ,வரு நாள் திருமண வயதை அடைந்ததும் அவளை தையல் சமையல் என்று அத்தனை கலைகளையும் பயிற்று வித்து அவளின் எதிர் காலம் வளமாக் அமைய காத்து இருந்தனர். பெற்றார். ஒரு நாள் மூவரும் கோவில் வழி பட்டு கொண்டு இருக்கையில் மகனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்த ராஜ ரத்னம் தம்பதிகள் இவளைக்கண்டதும் இவளே தமக்கு மூத்தமருமகள் என தீர்மானித்தனர் .அவளது தன்னடக்கம் பணிவு அழகான் தோற்றம் அவர்களை கவர்ந்தது ஒரு நாள் பழக்கம் வீட்டுக்கு அழைப்பது வரையில் போனது . இரு குடும்பமும் பேசி கலந்துரையாடி உறவுகளை வளர்த்து கொண்டனர். மூத்த மகனுக்கு நித்திலா நிச்சயம ஆனாள் அவனும் வந்து பெண் பிடித்து போகவே கலியாணம் கோலாகலமாக நடந்து .....அவன் கனடாவின் மொன்ரியல் பகுதிக்கு வதிவிட உரிமை பெற்று அழைத்து கொண்டான்.

அன்பான நட்பான் தம்பதிகளாக் வாழ்ந்து வந்தனர். சில நெருங்கிய உறவுகளின் விசேடங்களில் காண்பதுண்டு . எல்லோரும் எதிர்பார்த்து போலவே அவர்களும் எதிர் பார்த்தார்கள். மாதங்கள் வருடங்களாக ஓடிக்கொண்டு இருந்தது .அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்லை .அதுவே அவர்கள் வாழ்வில் பெரு ஏமாற்றமாக இருந்தது .வைத்திய உதவிகளும் நாடினார்கள். விசேடங்களில் கலந்து கொள்ளும் உறவுகளும் கேட்க தொடங்கி விடார்கள். இது நம்மவர் பழக்கமாச்சே . இதனாலோ என்னவோ . அவர்கள் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அவர்களுள் ஒரு தாழ்வு மனப்பான்மை குடிகொண்டது .
என்ன குறையோ யார் குறையோ இதை நான் துருவி கேட்கவோ ஆராயவோ விரும்பவில்லை நீங்களும் கேட்க மாடீர்கள் தானே. அது அழகில்லை. அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை. எல்லாவித வைத்திய உதவியையும் நாடியது உண்மை. சில சந்தர்பங்களில் ராஜ்குமார் நெருங்கிய உறவுகளிடம் "நான் அவளுக்கு குழந்தை அவள் எனக்கு குழந்தை என்பான் " ஆனாலு மனவருத்தம் அவர்களுக்கு இல்லாமலா இருக்கும் . இருவரின் பெறறா்களுக்கும் கவலை தான். சாடை மாடையாக கேட்டும் பார்த்தார்கள். இறுதியில் புரிந்தது கொண்டார்கள்.

இருவரும் தீர்மானித்தார்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன் முடிவெடுத்தார்கள் .அது தான் என்ன.....? கொழும்பில் ஒரு கிறிஸ்டியன் துறவிகள் நடத்தும் கைவிடப்பட்ட குழந்தைகளை நடத்தும் ஒரு நிறுவனமூலம் குழந்தை ஒன்றை தத்தெடுக்க ஆயத்தமானார்கள். சட்ட ஒழுங்குகள் ,அடிக்கடி கொழும்பு பயணம் என்று போய் வந்தார்கள். நான் கடைசியாக கண்டபொது ராஜ்குமாரின் தம்பி சொன்னான் "உங்களுக்கு ஒரு நல்ல சேதி எங்கள் குடும்பத்திலிருந்து வரும் " என்று உனக்கு கலியாணமா என்றேன் ...சிரித்து மழுப்பி விடான்.

எதிர் பாராமல் இரு வாரங்களுக்கு முன் வார விடுமுறையில் மொன்ரியல் புனித யோசெப் பேராலயத்துக்கு குடும்பத்துடன் போய் இருந்தேன். ஆலய வழிபாடின் போது ஒரு சிறு பெண் குழந்தையின் சிணுங்கல் என்னை திரும்பி பார்க்க வைத்தது . வழி பாடு நடந்து கொண்டு இருந்தது . இருந்தும் திரும்பி பார்த்து விடேன். அது ராஜ்குமார் .அவன் தோளில் ஒரு சிறு குழந்தை அருகில் நித்திலா பால் போத்தலை புகட்ட ஆயத்தமாகி கொண்டு இருந்தாள். வழி பாடு முடிய நேரில் கதைத்து உரையாடினோம் வரும்போது அவர்கள் வீடுக்கும் சென்று வந்தோம். எட்டு மாத குழந்தை ....என் மக்களுடனும் சேர்ந்து கொண்டது ...ராஜ் குமார் முகத்தில் மிகவும் மகிழ்வு காணப்பட்டது . நித்திலா எப்போதும் குழந்தையின் சிந்தனையாகவே இருந்தாள். கொடுத்து வைத்த குழந்தை நீரஜா ..........வரும் மார்கழி  முதல் வாரம் வீட்டில் பிறந்த நாள் வைக்க இருப்பதாகவும் , நித்திலா அவளது தனியார் பாடசாலையில் இருந்து மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் சொன்னாள்.  அது ஒரு யாழ்ப்பாணத்து தமிழ் தாயின் ஆறாவது குழந்தை எனவும் ,குடும்ப வறுமை காரணமாக் ,வட பகுதி கன்னியர் மட உதவி கேட்டு அக்குழந்தையை பெற்று கொண்டதாகவும்  .அக்குழந்தையின் நல்வாழ்வுக்கும் . குழந்தையற்ற தம்பதியரின் மகிழ்வுக்குமாக ...என்ற நல் நோக்கத்துக்கான முடிவு என்றும் சொனார்கள்.

இளம் பெற்றாருக்கு " இல்லை ஓர் பிள்ளை " என்ற குறை தீர்ந்தது . பெற்றால் தான் பிள்ளையா ? .அன்போடும்  பண்போடும் நல மனதோடும் பாசத்தை கொட்டி வளர்ப்பவளும் " தாய் " தான்......

கதை உண்மை. பெயர்கள் கற்பனை .............
-

10 comments:

thiyaa said...

நல்ல கதை
நல்ல நடை
இப்பிடியான கதைகள் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

சிலாகித்து படித்தேன்

நிலாமதி said...

தியா உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

tamiluthayam said...

மானிட வாழ்க்கை தானே கதையாக மலர்கிறது. சிறந்த வற்றை தேடி பிடித்து கதையாக தாருங்கள்

ஈரோடு கதிர் said...

உண்மை நிகழ்வை அழகாய் வடித்துள்ளீர்கள் நிலா...

நலமாய் இருக்கிறீர்களா?

நிலாமதி said...

பிரியமுடன் வசந்த் ......கதிர் ...தமிழ் உதயம், உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

சீமான்கனி said...

உண்மை கதை நல்லா எழுதி இருகிங்க அக்கா...பெற்றால் மட்டும் தான் பிள்ளையா இல்ல...தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா said...

அழகான கதை தொடர்ந்து எழுதுங்கள் நிலாமதி..

நிலாமதி said...

சீமான் கனி ........அன்புடன் மாலிக்கா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

"உழவன்" "Uzhavan" said...

நல்லா எழுதுறீங்க