Followers

Thursday, December 3, 2009

குழைத்த சாதம் .......

குழைத்த சாதம் .........

ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக   இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி  சென்றன.  அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு  மத்தியில் வாழ முடியாதென்று  முடிவெடுத்து . வீட்டையும்  நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம்  செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் படித்திராததால் ஒருகந்தோரில் எடு பிடி வேலை தான் கிடைத்தது . அதுவும் அவனுக்கு நல்ல காலம் இருந்ததால் தொடார்ந்து ஐந்து வருடங்கள் வேலை செய்ய கிடைத்தது அவனது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  வேலை.யில் மிகவும் சுறு சுறுப்பாகவும் , பண்பாகவும் நடந்ததால் எல்லோருக்கும் பிடித்து போனது. மெல்ல மெல்ல வீட்டுக் கடனையும் அடைத்தான் .அவனுக்கு இப்போது வயது இருபத்தியாறு .

அவனுக்கு இரண்டு தங்கை மார். மூத்தவள் கலியாணத்துக்காக  காத்திருந்தாள். அவன் வீட்டையடைந்ததும் , உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. ஊர்க்கதைகளில் இருந்து அவனது பள்ளி தோழர் சிலர் காணாமல் போயிருந்தனர். வேலை கிடைத்த பின் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்த காதலி ....இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள். ஏற்கனவே ஒழுங்காக்கி  இருந்த மாப்பிள்ளைக்கு திருமணத்துக்காக தங்கைக்கு நாள் பார்க்க பட்டது. எல்லாம் சுபமே முடிந்தது. அவன் அதிகம் வெளியில் செல்ல விரும்பவில்லை  ஊர் மாலை  ஆறு மணி ஆகியதும் அடங்கி விடும். இன்னும் அவர்களின் அட்ட காசம் இருந்தது.

ஒரு நாள் இவன் திண்ணையில்  சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா  தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு  போக உதவி செய்த , கொழும்பு மாமா தன்  மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள்.   இப்போது அதெல்லாம்   வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே .  அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின்  ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை  செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

அவனது தந்தை மீன் பிடி வள்ளங்களை   வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். கடலில் , கடற்படையினரின் , தொல்லைகளால் , மீனவர்களும் தொழிலுக்கு செல்வதில்லை . பலர் கடலில் மீன் பிடித்து  கொண்டு  இருந்த  போது காணாமல் போயினர். சில சமயம் வலைகளையும்  அறுத்து , பிடித்த  மீன்களையும் பறித்து சென்றனர். தமிழராய் பிறந்தமையினால் அவர்கள்  பட்ட் துன்பம் எழுத்தில்  எழுத முடியாது. அவன் மீண்டும் பயணமாகும் நாளும் வந்தது . மிகவும் சோகத்துடனும் , ஒருகடமை முடித்த திருப்தியுடனும் இருந்தான். மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது  இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து  குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு  வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ..............அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து  கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில்  தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய்.   எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது .........உள்ளத்தை  தொட்டு சென்றால் ஒரு வரி எழுதுங்கள். .............

13 comments:

பூங்குன்றன்.வே said...

//கலியானதுக்காக-கல்யாணத்துக்காக
மாபிள்ளைக்கு-மாப்பிள்ளைக்கு
திருமணதுக்காக்-திருமணத்துக்காக // என்று இருக்கவேண்டும் நிலா.
பெரிய தவறொன்றும் இல்லை.
இருப்பினும் தவறற்ற தெங்கு
தமிழில் எழுதினால் உங்கள் படைப்பு பலரையும் சேரும்.

//வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு//

மனதை நெகிழ வைத்து,எனக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது.

//காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது..ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய்.
எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது//

உண்மைதான் தோழி.நிச்சயம் என்னை போன்ற அந்த நட்புகள் உங்களின் இந்த பதிவின் மூலம் மன ஆறுதல் கொள்ளும்,நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

உண்மை தான் பிழை திருத்தி வெளியிட்டு இருந்தால் இன்னும் நன்று . நான் கொஞ்சம் அவசரக்காரி தான். இனி மேல் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் முதற் பதிவுக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

ஆஹா... நிலா...

தங்கள் எழுத்து மெருகேறி வருகிறது

மனதை நெருடும் கதை

சீமான்கனி said...

//தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........//

அருமையான பதிவு அக்கா....நெஞ்சை தொட்டு வறுடுகிறது...சில கசப்புகளுடன்...வந்த அழகான பகிர்வு அக்கா...நன்றி....

நிலாமதி said...

கதிர் .....சீமான் கனி ...உங்கள் வருகைக்கு நன்றி .

தமிழ் அஞ்சல் said...

நல்ல பதிவை இடுகிறீர்கள்

thiyaa said...

மனம் நெகிழ்ந்து விட்டேன்

Chitra said...

வெளி நாட்டில் தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய். எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது ........உண்மை. மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமில்லை. மற்ற வெளி நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருத்தமான பதிவு.

நிலாமதி said...

திருப்பூர் மணி ...தியா ...சித்ரா ....உங்க வரவுக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

// வேலை கிடைத்த பின் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்த காதலி ....இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள். //

ஹ ஹ ஹா...
பெரும்பாலான காதல் கதைகளும் இப்படித்தான் முடிந்து போய்விடுகிறது மவுனமாய்...

//அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு ......... பிடித்த வளைய முறுக்கு செய்து கொண்டு வந்திருந்தாள். //

இது மொத்தமும் பாசக்குவியல்..

//
ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய். //

மிகச்சரியா சொல்லியிருக்கீங்க...

நிலாமதி said...

பிரியமுடன் வசந்த் ...........உங்கள் வரவுக்கு கருத்துக்கும் நன்றி. ..

அன்புடன் மலிக்கா said...

மனம் நெகிழ்ந்தது நிலா. அருமை.அருமை..

suvaiyaana suvai said...

Touching !!!!