Followers

Saturday, August 1, 2009

மனிதன் ....இறைவன் ஆகலாம். .

மனிதன்.....மிருகமாகலாம். அவன் மனிதன் ஆகலாம். அந்த மனிதன் இறைவன் ஆகலாம்.

நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே ஒரு ஒதுக்கு புறமான சிறு கிராமம் காலத்தின் கோலம்,அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். ஒரு விறகு வெட்டியும் அவன் குடும்பத்தினரும் மட்டும் அங்கு வாழ்ந்தார்கள். கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போக்கிடமும் இல்லை.

அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை,கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை அவன் எங்கும் போகவில்லை .

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல அஞ்சி ,பயத்துடன் இருந்தான் . விடிய எழும்பி பார்த்த பொது சில சப்பாத்து கால் தடயங்கள் தெரிந்தன .மறுநாள் வழக்கம் போல அவன் விறகு வெட்ட சென்றான்.

மனைவியும் ,தன் வீட்டு வேளையில் இருந்தாள். சிறுசுகள் இரண்டில்,ஒன்று ஏணையில் ( தொட்டிலில்) மற்றையது முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாய் குரை்கவே அவள் எட்டி பார்த்தாள், இரு படை வீரர், நின்றனர். தண்ணீர் கேட்டனர் அவள உள் செல்லவே தொடர்ந்து சென்று , வீட்டில் யாரும் இல்லையா ? கணவன் எங்கே என்று கேட்டு ,வீடின் அறைக்கதவை திறக்க சொனார்கள் . அவள் திறந்ததும் , ஒருவன் அவள் வாயை துணியால் அடைத்தான் மற்றவன் அவளை சீரழித்தான், இப்படியே அவர்கள் வெறி தீர்ந்தும் ,யாருக்கும் சொல்ல கூடாதென எச்சரித்து சென்று விட்டனர்

சற்று நேரத்தில் விறகு வெட்டி வந்த போது சில அடையாளங்களை கண்டு ,மனைவியை கூப்பிடான் ,அவள் அழுதுகொண்டு ,கலைந்த தலையும் ,கிழிந்த ஆடைகளுடனும் விசும்பிக்கொண்டு இருந்தாள் ,அவனுக்கு விளங்கி விட்டது .அவளை தர தரவென்று இழுத்து சென்று வீட்டின் எல்லையிலுள்ள கிணற்றில்,நீரை அள்ளி கொட்டினான் .
நடந்ததை மறந்துவிடு,அரக்கர்கள் ஆட்சி செய்தால்,மனிதம் வாழாது என்று கூறி,வீட்டு சாமி படத்தின் குங்குமத்தை நெற்றியில் இட்டான் .இந்த கடவுள் கூட காப்பாற்ற வில்லையே என்று வீடின் முகட்டை வெறித்த படியே இருந்தான் .

பின்பு அவன் வைரவ சாமிக்கு பூசை செய்வதே இல்லை .அவள் யோசித்தாள்.உயிரை மாய்த்து கொள்ள நினைத்தாள். தான் அவமானத்தால் இறந்தால் பிஞ்சுகள் ,ஏங்கி விடுவார்கள் ,அவன் நடைபிணமாகி விடுவான் பிள்ளைகளை வளர்க்க கஷ்டபடுவான் . ஒரு தாய் வளர்ப்பது போல வருமா?அவனை எப்படி தேற்றுவது என்று எண்ணியவாறு கண்னயர்ந்தவள், தூரத்தே சேவலின் கூவல் கேட்டு ,இயற்கையுடன் போராட,அன்றாட கடமைகள் செய்ய புறப்படாள் . ...

பிஞ்சுகளுக்கும் அவனுக்கும்,காலை தேநீர் வைக்க ....

அவன் தான் இறைவன்(கடவுள் )அவளுக்கு


அவள் ?.......... .

Thursday, July 30, 2009

அப்பா வருவாரா?

அப்பா வருவாரா?

வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள்.

ராகவன் எற்கானவே ஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவன், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத நிலையால் ெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.

யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் வேலை தேடி ,புறப்பட்டார் கள் . கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது.

அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவர்ளது படிப்பு செலவுக்கு உதவியது.

சிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும். அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி,விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில்,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு,முதலுதவி செய்தனர்.

இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும்,சந்தேகம் இருப்பதாக கூட்டி சென்றவர்கள் விடவே இல்லை .

கடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது நித்திலாவுக்கு ,ராகவன் பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா
எப்ப வருவார் ? என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா? என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா? எங்கேயிருக்கிறான். ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,
சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று. அவன் வருவானா ?

அப்பாவருவாரா ? ......எல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .

Wednesday, July 29, 2009

இலவம் பஞ்சு ........

.. இலவம் பஞ்சு ......

நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின .

நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ளவில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்
எல்லாராலும் விரும்பபட்டவள். படிப்பிலும் கெட்டிக்காரி .

ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது. அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது. விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் .

ராகவனும் மீனுவும் அருகருகே. உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,

மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? .. ஏன் கேட்கிறீங்க ? அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........


நீண்ட அமைதிக்கு பின் .....

தனது முறை பையன அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்ன போது ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..

ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..


தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது
...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....

இவ்வளவு காலம் காத்து, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து கடைசியில் ...........
கடைசியில் ...........

வாசு பாடினான் .....மச்சான்....

.." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் .


.....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும். கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே

........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே.

அவன் மனம் படும் பாடு அவனுக்கு தான் தெரியும்.

Tuesday, July 28, 2009

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ...

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ........

என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது நம் பயணம் கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் .

சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால் சில புறு புறுபுறுப்பு .சரி ,கண்டக்டர் (நடத்துனர் ) பெடியனும் ,சாரதியுமாக மீண்டும் அண்மையில் உள்ள கோவிலில் தீப தூப ஆராதனை காட்டி , புறப்பட்டோம் .

பயணம் இனிமையாக இருந்தது. பிரபலமான சினிமா பாடல்களுடன் .தூர பயணமென்பதால் அதிக இறக்க ஏற்றம் இல்லை . என் வண்டுகள் இடையிடை பசி என்பதால் மச்சாள் உதவியுடன் ,சுடுநீர் போத்தல் பால் தயாரிப்பதும் ,அவர்கள் நித்திரை கொள்வதுமாக இருந்தார்கள் . இடையில் எனக்கு அண்மையில் நடத்துனர் பெடியன் வந்து இருந்து உடையாடிக்கொண்டு ,தேவையான் போது தாக சாந்தி ......வடை டீ போன்ற தரிப்புகளில் நிறுத்தி ஒரு உறவினர் போல பயணித்தோம் .

எமது பயணத்தில் முக்கால் பகுதி முடிந்து விட்ட நிலையில் சக்கரம் (சில்லு ) காற்று போய்விட மாற்றி புறப்படோம் ஒரு ஒருமணி நேர ஓட்டத்தின் பின் " படீர் என்ற சத்தம் " திடுகிட்டு விட்டோம் . ரயர் வெடித்து விட்டது . அதுகிட்ட தட்ட ஒரு காட்டு பிரதேசம் . எலோரும் சரியாக களைத்து விடோம் . காலை ஆறு மணிக்கு வெளிகிட்ட பயணம் பொழுது மங்கும் நேரம் ஏழு மணிக்கு கிட்ட இருக்கும். எலோரும் வாகனத்தை விட்டு இறங்கி விட்டோம். அரை மணி முக்கால் மணி ஆகியது .அந்த பெடியன் (சுந்தரம் ) ஓடி ஓடி தன்னால் ஆனா முயற்சி செய்து கொண்டு இருந்தான்


எங்கள் வயதான மாமனார் .வேறு வாகனத்தில் போவோமா ?.....என்று ஆலோசனை சொல்லிக்கொண்டு இருந்தார் ,நானும் என் குட்டி வண்டுகளின் பிரச்சனையால் (சுடு நீர் தீர்ந்து விட்டது ,)ஆமோதித்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஆயத்தமாகியது.என் மாமனாரின் பேச்சு (அவர் ஒரு சுடுதண்ணி) பயனக்களை வேறு . அவனின் காதில் எங்கள் "ஐடியா" எட்டி விட்டது போலும் ,இறங்கும் வரை
அவன் எங்கள் பக்கம் வந்து கதைக்கவே இல்லை . மீண்டும் ஒன்றரை மணி ஓட்டத்தில் அந்த தளத்தை அடைந்து விட்டோம். இறங்கியதும் அந்த பையன் வந்து "அக்கா உங்களுடன் ஒரு கதை" ....என்றான் .

" .காலையில் ஆறு மணிக்கு ஏறினீங்க அண்ணளவாக ஒரு பத்து மணி நேரம் உங்கள் உயிர் எங்கள் கையில் ......நம்பி தானே ஏறினீங்க .கொண்டு போய் சேர்ப்போம் என்று . பிறகேன்? வாகனம் மாற நினைதீங்க .......நடு வழியில் இப்படி செய்ய இருந்தீங்களே ....என்று தன் நெற்றிக்கண்ணை திறந்தான் . ......"

.எனக்கும் மனம் வேதனையாக போய்விட்டது ,மன்னிப்பு கேட்டேன் .தம்பி என் மாமனார் சற்று கோப காரர் ,என்று சமாளித்தேன் அவன் மனம் ஆறவே இல்லை . அக்கா முதல் தடவை அதை மாற்றி பயணம் தொடங்கினோம் தானே ....,இரண்டாம் முறையும் வெடிக்கும் என்று யார் கண்டார் ,எனக்கு புறப்படும் போதே விளங்கி .....விட்டது அக்கா . இனி மேல் இப்படி செய்யாதீங்க ....அப்போது தான் என் மனதில் உறைத்தது .

புத்தக ப்டிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான் வாழ்கை என்று .


இதனால் தான் பயணத்தில் எண்ணை கொண்டு போக கூடாது என்று

சொல்வார்களோ ?..........

வசந்த கால கோலங்கள் .....

வசந்த கால கோலங்கள் .........

அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . பொழுதினிலே பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறைவழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் அதிபர் விடைபெறுவார்

உயர்வகுப்பில்தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது .


மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அமைதியான் ,அழகான் டீச்சர் செல்வி ,சாதனா ஷன்முகராஜா (கற்பனைபெயர் ).அந்த நாளின் மூன்றாவது பாடம் தாவரவியல் .மிஸ் சாதனவுக்கு வணக்கம் செலுத்திய பின் மாணவ அறிமுகம், பின் அவர்களது ஆய்வு கூடம்,பற்றிய விளக்கம் , இவை முடிய ,வகுப்பு பூக்களின் மகரந்த சேர்கை . பூவினங்கள் ,வகை என்ற தலைப்பில் ஆரம்பிக்க பட்டது.

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,மாணவார்களும் ஆர்வமாக படித்தனர் பாடசாலை முடிய அவர் பஸ் (பேரூந்து) வண்டியில் காத்திருந்து வீடு செல்வார். தினமும் அவர் வரவை அந்த வகுப்பு எதிர் பார்த்திருக்கும் , அந்த பாடசாலையின் ஆசிரிய குழாமின் இளம் வயது டீச்சர் அவதான் . தினம் ஒரு கலர் ,அதே நிற பாதணி (செருப்பு) குடை என்று நன்றாகவே அவதானித்தார்கள் .


அந்த வகுப்பில வாசன் எனும் சீனிவாசனுக்கு மட்டும் தனி விருப்பு அந்த டீச்சரில் பஸ் வண்டி வரும் வரை சில சமயம் அவருக்கு துணையாக ,பஸ் தரிப்பில் நிற்பான் ,தேர்வில் இரண்டாம் இடத்தில் அதிக புள்ளிகள் பெறுவான் . ஊக்கமானவன் ,பாட சந்தேகங்களும் கேட்டு தெரிந்து கொள்வான்.

வருட இறுதி பாட சாலை விடுமுறையும் விடப்போகிறது . அன்று வழக்கம் போல வாசன் பஸ் தரிப்பிடத்தில் நின்றான் . திடீரென ... டீச்சருக்கு அவவின் குடை ஆசிரியர் கூடும் இடத்தில் (..staff room .. ) விட்ட நினைவு வரவே ,அவனை எடுத்து வர சொன்னார் . அவன் ஓட்டமும் நடையுமாக எடுத்து வந்தான் ,அதை கொடுக்கும் போது அவவின் கையை பிடித்து , நீண்ட நாள் கனவான

டீச்சர் "" ஐ லவ் யு " என்று கூறி விட்டு ...


அவிடம் அகன்று விடான் . அவர் திகைத்து விட்டார் .பஸ் வண்டியின் நடத்துனர் ,பட்டணத்தின் பெயரை சொல்லி ஏறும்படி குரல் கேட்கவே , நினைவு திரும்பியவராய்.... தனது இருக்கையில் ஏறி அமர்ந்தார்.


அவர் எண்ணமெல்லாம் இந்த பையன் இப்படி கூறி விட்டான் ? இதற்கு நான் காரணமா ....இந்த சின்ன வயசில் ஏன் இந்த சலனம் . அழகான பெண்கள் வகுப்பில் இருக்க ஏன் இந்த பையன் .....இப்படி ? பருவ கோளாறா ? என் இளமையா ? .....மறு நாள் பாடசாலைக்கு அவன் வரவே இல்லை .....அதிபரிடம் சேதி போய்விடும் என்ற பயமோ ? இப்படியே விட்டால் ......அவன் மன நிலை குழம்பி வருட இறுதி பரீட்சை ..தவற விட்டுவிடுவானோ ? மூன்றாம் நாள் ...வந்தான் வாசன் . மத்திய இடை வேளை வாசனை கூப்பிட்டு அனுப்பினார் டீச்சர்

...வாசன் .....அவனும் குற்ற உணர்வுடன் தயங்கி தயங்கி வரவே அவனை அன்போடு அணைத்து ....கவனமாக கேள் .வருட இறுதி சோதனை வருகிறது. கவனமாக படித்து முன்னேற வேண்டும். மனதை அலை பாயவிடாதே ...தாய் இல்லாத உனக்கு ....

...நான் .....அம்மாவாக வர இருக்கிறேன் ..... என்றார் .

அப்போது தான் அவனுக்கு உறைத்தது .அவன் அப்பா பட்டணத்தில் வேலை பார்ப்பதும் வாரமொருமுறை வருவதும், அப்பம்மாவுடன் வாழ்வதும், அப்பாவை எவ்வளவு வற்புறுத்தியும் இரண்டாம் தாரம் செய்யாமல் இருப்பது. ......ஆமாம் ,

அவள் அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியாக , வரவிருந்தாள். ..

அவளது தனிப்பட்ட வாழ்வில் , பதிவு திருமணம் முடிந்த இரண்டாம் வாரம் ...
கணவனை மோட்டார் வண்டி விபத்தில் பறி கொடுத்து இருந்தாள் என்பது யாருக்கும் தெரியாத ...தனிபட்ட கதை.

Monday, July 27, 2009

அமைதிக்கு பெயர் தான் சாந்தா ....

அமைதிக்கு பெயர் தான் சாந்தா .....

அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான
இரு குடும்பங்கள். .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள்.ஆணும்
பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் குடும்பமும் குழந்தைகளுமாக
வாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று
உயர் பதவிபெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா
வங்கியில் பணியில் சேர்ந்தாள்.

தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான்.
காலம் உருண்டு ஓடியது .சாந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான்.


ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண்
கேட்டு தியாகர் செல்லமனியிடம் வந்தார்.தம்பி இதை எல்லாம்
நீ கேட்க வீண்டுமா?பிறந்த பொழுதே நிச்சயமானது தானே

எதற்கும் ஒரு வார்த்தை பிள்ளைகளிடமும் கணவரிடமும் கேட்டு சொள்கிறான் என்றாள்.ஆரம்பம், ....ஆயத்தங்கள்... எல்லாம் முடிந்தது. அமைதியாக
வாழும் காலத்தில் ,தாய் நாட்டின்.அவலம் அவர்களை புலம் பெயர
வைத்து விட்டது


மணம் முடித்து மூன்று மாதத்திலே பயணமாகவேண்டி வந்தது. வந்ததும்
ஆண்டு ஒன்று கழிந்ததும் அவர்களிடையே பிரச்சனை.... வீட்டுக்கு வராமை..
...ஒன்றாக செல்லாமை ...,பெரிய பிரிவாகி விட்டது . ராகவனும் மனித

பலவீனத்தில ஒரு வேறு இனத்தை சேர்ந்த பெண் துணைதேடி
ஒரு மகனையும் பெற்றான்

செயதி தொலைபேசியில் நாளாந்தம் அலை அலையாக பறந்தது.


இரு வீடாரும் பெரும்.. பகையை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்வு இப்படியா
போக வேண்டும் .. இது யார் செய்த தவறு?.... புலம் பெயர் தவறா?..


சாந்தாவின் விட்டுகொடாமையா? ராவனின் புரிந்து கொள்ளாமையா?..

.அவன் செய்த துரோகமா?......

சாந்தா இன்னும் காத்து இருக்கிறாள். எத்தனையோ திருமணம் பேசியும்

..மறுத்து விட்டாள.



..வாழ்கை என்றால் ஒருவனுடன் தான்...........ஒருமுறைதான்...என்று .....