Followers

Sunday, August 2, 2009

இதயத்தில் ஆறாத ரணம்.

இதயத்தில் ஆறாத ரணம்.


அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது. தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை, போத்தலில் தண்ணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். .


அதில்"நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?
நெஞ்சில் நினைத்திலே நடந்தது தான் எத்தனையோ ?
பாடல் அவளை தாயக நினைவுகளிற்குஅழைத்து சென்றது .

அந்த சிறிய கிராமத்திலே கெலிகளும்,கிபீரும் ஆரவாரம் செய்ய அரக்கர்கள் தேடி அழித்து கொண்டு இருந்த காலம்.ராஜியும் தன் இரு குழந்தைகளுடன் மாமா மாமி மைத்துனி ஆகியோருடன் அவசரமாக எடுத்த பால்மா பிஸ்கற் முக்கிய ஒரு சில பொருட்களுடன் அயல் கிராமத்தில் இடம் பெயர்ந்தாள். மேலும் மேலும் நெருக்கடி வரவே மேலும் இடம் பெயர்ந்து ,ஒரு வள்ளத்தில் பயணம் செய்து , ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தாள் அங்கும் சில மாதங்கள் கழிந்ததும் ,ஒருவாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து,ஒரு லாரியில் அடைபட்டு , வவனியா வந்து சேர்ந்தாள். இத்தனைக்கும் ராகுலன் அந்நிய தேசத்தில்,ஏங்கியபட,காத்திருந்தான்.அவளும் குழந்தைகளும் பட்ட துயரம் சொல்ல முடியாது. வங்கியில் பணமும் எடுக்க முடியாமல் பட்ட துயரம் கொஞ்சமல்ல. ஒருவாறு தலைநகரில் ஒரு தூரத்து உறவினருக்கு காசு அனுப்பி அவர்களை எடுப்பித்தான்.

இடமும் புதிது ,பாசையும் புதிது நுளம்புக்கடி என்பவற்றுடன் போராடி வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் .......

தலை நகரில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் காலத்தில்,ஒரு நாள் அவளையும் குழந்தைகளையும் முகவர் மூலம் எடுக்க இருப்பதாக சொன்னான்.
ஊரவரின் வக்கனை கதைகளுக்கு மத்தியில் வாழ்வதை விடவும்,அப்பாவிடம்
போய் சேரும் ஆர்வத்தில் நாளை எண்ணி காத்திருந்தார்கள். நாளும் வந்தது,
முகவருடன் விமான நிலையம் சென்ற போது ,அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்பபட்டு விட்டார்கள். ராஜிக்கு ஏமாற்றமும் மேலும் தலையிடியும் ஆகியது, மீண்டும் முகவர் காசை தர மறுப்பதாகவும் அவளை தன் தாய் தந்தையுடன் குழந்தைகளை விட்டு வர சொல்லி ராகுலன் சொல்லவே ராஜி மறுத்து விட்டாள்.

பல வித மனப்போராடங்களுக்கு மத்தியில்,பயணத்தை தொடர்ந்தாள். விமான நிலையங்களில் முகவரின் மனைவியாக நாடகமாடிய போது அவனின் அருகாமைமுள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. ஒருவாறு கணவனிடம் வந்து ேர்ந்து வசதிகள் குறைந்த நில கீழ் குடியிருப்பில் அவள் வாழ்க்கை தொடங்கியது.

கடின உழைப்பாளி ராகுலனும் இரண்டு மூன்று வேலை செய்து,தன் குடும்ப செலவுடன் குழந்தைகள்,நாட்டில் பெற்றோர் சகோதரி வாழ்கையும் பார்த்து கொண்டான்.காலங்கள் உருண்டோடி,ராகுலனின் சகோதரிக்கும் திருமணம் ஆகியது.

ராஜியின் ஆறு வயது மகள் முத்து முத்தாக கடிதம் மேல்,கடிதம் எழுதுவாள்.புது மாமா வந்தபின் அத்தை நன்றாக கவனிப்பதில்லை என்றும்,நன்றாக குடிப்பார் என்றும் ,தம்பி நீலன் "அம்மா,அப்பா டண்டா (கனடா) போய் "என்று காணும் விமானம் எல்லாம் பார்த்து சொல்கிறான் என்றும், நீலு அப்பப்பாவிடம் பாடம் கேட்டு படிப்பதாகவும் எழுதுவாள்.


கடிதம் கண்டால் அன்று முழுவதும் கண்ணீரோடு இருப்பாள். காலபோக்கில்
ராஜி தன் அகதி நிலை அங்கீகரிக்க அந்நாட்டு எம் பீ.உதவியுடன் குழந்தைகள் இனைவுக்காக போராடி பத்து மாதங்களில் வெற்றியும் பெற்றாள் எண்ணி பதினோராம் மாதம் தாய் நாடு சென்ற சித்தப்பாவுடன் ஆறு வயது நீலுவும்
மூன்று வயது நீலனும் வந்து சேர்ந்தார்கள்.

ராகுலன் குடும்பத்துக்கு மகிழ்ச்சி பிடிபட வில்லை. குழந்தைகள் , நன்றாக வளர்ந்தார்கள்.

இன்றும் நீலு கேட்பாள்," அம்மா ஏன் எங்களை விட்டு வந்தாய"
ராஜி பட்ட துயர் அவளுக்கு எங்கே விளங்க போகிறது,

அந்த பிஞ்சு மனத்தின் ஆறாத ஆழமான ரணம் இன்றும் நினைவாக உள்ளது. ஒரு போதும் குழந்தைகள் சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்து தாய்ப்பாசத்துக்கு ஏங்க கூடாது .


அது இதயத்தில் ஆழமான ரணம்.