Followers

Saturday, August 15, 2009

"போத்தலை தொடமாடேன் ".......

"போத்தலை தொடமாடேன் "........

அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றாள்


ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும்.
இரவில் சிந்தாமல் குடிப்பாள் என்ற ஆதங்கத்தில் மதியும் அசட்டையாய் இருந்தாள். இன்று ராகவனுக்கு ஒரு நல்ல அனுபவம்

.மாமியார் காய்ச்சல் காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாததால் வேலைக்கு விடுமுறை (லீவு) எடுத்து இருந்தான் . மதியும் வருட இறுதி என்பதால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இருவரும்
கலந்து பேசி ராகவன இன்று வீடில் நின்றான..மாலை ஆகியது

மதி யின் வரவை மூவரும் எதிபார்த்தார்கள். ராகவன் நால்வருக்குமாக தேநீர்கலந்தான். மதியோ ...நிலாக்குட்டி கோப்பையில் தேநீர் பருகுவதை ...அதிசயமாக பார்த்தாள்.

அவளுக்கு புரியவில்லை . ராகவன் சொல்லும் வரை.

ஆதிர்ச்சி வைத்தியம் சில சமயம் தேவை படுகிறது ...............

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

நினைத்துப்பார்க்கிறேன் ....(..கவிதை )

நினைத்துப்பார்க்கிறேன் ..........

தாயின் கர்ப்பத்தில்
அந்த பத்துமாத பந்தம்
கவலையற்று ,இந்த
உலகம் மறந்து
நானும் அம்மாவுமாய்
உண்பதும் உறங்குவதுமாய்
பத்தாம் மாத முடிவில் "குவா"
என அழுகையும் திகைப்புமாய் ,
குதித்தபோது , எண்ணவில்லை ,
உலகம் இவ்வளவு பெரியது என்று ,
திகைத்து விடேன் நானும் தாயான போது

Friday, August 14, 2009

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்


அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது .

ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளநீர் தாகம் தீர்க்க , குளித்து விட்டு மத்திய சாப்பாடை முடித்தார்கள். ராகவன் அப்பாவுக்கென கொண்டு வந்த இளநீல சேர்ட் , அம்மாவுக்கு சாரி , ஒரு பை நியைய சொக்கிலேட்ஸ் என்று அன்பளிப்புகளை கொடுத்தான் .சொக்கனுக்கென்று மறக்காமல் வாங்கிய நீல சாரத்தை(லுங்கி ) அவன் பிள்ளைகள் ,வரும்போது கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தான் . ராகவனும் அப்பாவின் சாய்மனையில் இருந்தவாறே பதினாலு வருட கதைகளை சொல்லியவாறே அயர்ந்து விட்டான்

ரம்யா பிள்ளைகளுடன் பின் வளவில் ஆட்குட்டி பிடித்து ,விளையாட்டு காட்டி கொண்டு இருந்தாள் .ராமசாமியார் பின்னும் முன்னும் வந்து ஒன்றே ஒன்று தரமாடீரா என்று நச்சரித்து கொண்டு இருந்தார் " சும்மாபோங்கப்பா" பிள்ளைகள் படுத்த பின் தாரேன் என்று போக்கு காட்டினாள் . இரவும் வந்தது , சுடச்சுட அவித்த குழல் பிட்டும் பலாப் பழாமும் பேரப்பிள்ளைகள் சாப்பிடார்கள் .

இரவு ஒன்பது மணியாகியது . ராமசாமியார் குசினிக்குள் வந்து நான் கேட்டது தர மாடீரா என்றதும் சாபிட்டு முடியுங்கோ படுக்க முதல் தாரன் என்றாள். அவர் சாபிட்டதும் பேரபிள்ளைகள் தூங்கி விட்டார்கள் . ராகவனும் ரம்யாவும் வேப்பமரத்தின் கீழ் நிலவில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ராமசாமியாரின் ஏக்க பார்வை தீரவே இல்லை. ஒருவாறு பத்து மணியளவில் ஜானகியம்மாள் வந்து அவரிடம் இரண்டு சொக்கலேருக்ளை நீடினாள் . சக்கரை வருத்த காரன் வைச்சு வைச்சு சாபிடுங்கோ என்றாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவர் ஜானகியை கட்டி முத்தம் கொடுக்க சீ....... போங்கோ என்று அவள் சினுக்க .....திடுக்கிட்டு எழுந்தாள் ..

ராமசாமி படத்தில் சிரித்து கொண்டிருந்தார் . அவளுக்கு எண்ணமெலாம் தாயகம் நோக்கி சென்றது அவர் இறந்தது , தான் மகனிடம் வந்தது , எல்லோரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் போக நான்கு சுவர் நடுவே இருப்ப்து என்று

..........கழிவறை சென்று முகம் கழுவி காலை வழிபாடு செய்தபின் , இன்று வார விடுமுறையில் ராகவனிடம் அப்பாவின் கல்லறைக்கு போய் தரிசிக்க வேண்டும் என கேட்கவேண்டும் என நினைத்தவாறு .... காலண்டரை பார்த்தாள் .

கார்த்திகை ,இரண்டாம் நாள் ................., வந்து நினைவு படுத்தி போயிருக்கிறார் . இளமையில் கிறிஸ்தவ கலூரியில் படித்ததால் அன்டன் ராம சாமி என் பெயார் மாற்றம் செய்து தனது உடலை சேமக்காலையில் ல் அடக்கம் செய்யவேண்டும் என்று இறுதி ஆசையாக கேட்டு இருந்தார் என்பது நான் எழுதாத விடயம் .

Wednesday, August 12, 2009

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) ...

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்.கார்த்திகையும் வந்தது . மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் . தலைநகரம் சென்று
கடவுசசீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன், நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பினர் , இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது . அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள். சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான். ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் . வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து, மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான். ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது நித்திலாவின் பெற்றார் நிம்மதியாக இருந்தனர்.

ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார். நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும், தாங்கள் கொழும்பில் பதிவு திருமணம் செய்ததென்றும், மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்.....பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....முறையோ, வெளிக்கிடு வீட்டை விட்டு
என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் .

வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள் வரவே இல்லை. ... கால ஓட்டத்தில் அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல் தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்துவிட்டாள் ..

கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .
..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் அவன் வாழும் ஆலயமாக, தன் மனதுக்கு துரோகம் செய்யாத, புனிதவதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)


வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

மாமன் மகன் செய்தது சரியா?
நித்திலா செய்தது சரியா ?
ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?







Tuesday, August 11, 2009

அவளுக்கு ஒரு "வாரிசு " .......

அவளுக்கு ஒரு "வாரிசு " ..........

அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல்ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவைகளின் ஆர்ப்பரிப்புகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நகரத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது .

செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் .
ஏன் எனில் இவள் செல்லம்மா மூத்தவள் பிறவி ஊமை . இரண்டாவது மகளின் கணவர் தலை நகரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். செல்லம்மா முழு வேலையும் செய்யும் . தந்தை ஆசை பிள்ளையாருக்கு மூத்தவள் இருக்க இரண்டாவது மகளை கட்டி கொடுக்க விருப்பமில்லை இருபினும் அவளுக்கும் வயது வந்து விட்டது . தங்கையின் கணவர் பயணத்தால் வரும் பொது கிணற்றில் தண்ணீர் அள்ளி கொண்டு இருந்தாலும் ஓடி வந்து தங்கைஇடம் மீசையை முறுக்கி காட்டி ,கையில் பயணப்பையை காட்டி சேதி சொல்வாள் தங்கைக்கு .

கால ஓட்டத்தில் அவர்களது தோட்ட வேலைக்கு வரும் செல்லக்கண்டு இவளின் உற்ற நண்பனானான் . ஊராரும் பேசிக்கொண்டனர்.அவனும் இவளுடன் சைகையிலே ஆயிரம் கதை பேசிக்கொள்வர்.இப்படியாக் தொடர்ந்த நட்பு ஒரு நாள் எல்லை மீறி சென்று விட்டது.சில நாட்களாக செல்ல கண்டு தோட்டத்துக்கு வருவதும் நின்றது . அவன் தலை நகரம் போய் விடதாக சொன்னார்கள். ஒருநாள் அவள் காலை வேளை...வாந்தி எடுக்கவே தாய் தங்கம்மா திகைத்து விடாள். வற்புறுத்தி கேட்ட பின் அதற்கு காரணம் செல்லக்கண்டு என்று சொனாள்.

காலம் தான் யாருக்காகவும் காத்திருபதிலையே . பத்தாம் மாதம் ஆண் குழந்தையை பெற்று எடுததாள். ஊராரின் வசை பேச்சுகள் தாங்காமல்..
ஒருவர் பின் ஒருவராக ஆசைப்பிள்ளையும் ..தங்கம்மாவும் போய் சேர்ந்து விட்டனர். தங்கையும் கணவருடன் தலை நகரம் சென்று விடாள். செல்லக்கண்டு ஊருக்கு வரவே இல்லை. தலை நகர் சென்ற ஊரவர்கள் சிலர் அவனை ஒரு ஆட்டோ சாரதியாக கண்டனர். சிறுவன் கனேசுவும் , சாதாரணமாய் பள்ளி சென்றான். சில கர்வம் பிடித்த சிறுவர்கள் அவனை எள்ளி நகையாடினர். இதனால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விடான்.


பின்ப வீட்டில் வரும் காய் கறி களை விற்க தொடங்கியவன் , சற்று பணம் சேரவே , தாய்க்கு தேவையானவைகளை வாங்கி கொடுப்பான். செல்லம்மாவும் சிக்கனமாய் சேமித்து , ஒரு பெரிய தொகையை ,வங்கியில் மரக்கறி கடை வைத்திருக்கும் ஊர் பெரியவர் , இவனின் பண்புகளை கண்டு , தன்னுடன் சேர்த்து கொண்டார். இடையில் தன் தந்தையை பற்றி கேட்க மனம் வந்தாலும் தாயின் நிலை கண்டு , மனதுக்குள் வரும் கேள்வியை , அடக்கி கொள்வான்.

முற்றத்தை கூட்டி முடித்தவள் ,காலை உணவை முடித்து மதிய உணவுக்காக தயாரானாள். வாசலில் தபாறகாரனின் மணிச்சத்தம் கேட்க , சென்று பார்த்தவளுக்கு அதர்ச்சி ........ஒரு தந்தி அவள் பெயருக்கு வந்து இருந்தது . செல்லக்கண்டு விபத்து ஒன்றில் காலமாகி விடான் என்று அந்த ஊர் வாசி ஒருவர் அறிவித்து இருந்தார். இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலையில் வர இருக்கும் தன் வாரிசுக்காக,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான்.

தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு .....தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி ,பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

காத்து கொண்டிருக்கிறாள். .