Followers

Saturday, September 12, 2009

தேவதையிடம் பத்து வரங்கள்.

தேவதையிடம் பத்து வரங்கள்.

இன்று தேவதை உங்கள் முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள் .இந்த தலைப்பை ஆரம்பித்து அதை  தொடரும்படி என்னிடம் மேனகா சத்தியா கேட்டுக்கொண்டார். அதன் படி ஏன் பத்து ஆசைகளை  வரங்களாக் கேட்கிறேன்.

  • (1)   மீண்டும் என் தாய் மண் மீது தோன்ற வேணும். ( கடைசியாய் ஒரு  வார்த்தை சொல்லாமல் சடுதி மரணம் அடைந்து  விடார்.)
  • (2) அழகான் அந்த பள்ளி வாழ்கை (அப்போது புரியவில்லை) இப்போது தேடுகிறேன்.
  • (3)என் தாய் மண்ணில் , மீண்டும் வாழ வேண்டும் தொலைத்த இன்பமெலாம்     பெறவேண்டும்.
  • (4)என் சக உறவுகள் ஒரு நாளில் ஒரு இடத்தில கூட வேண்டும்.
  • (5)உலகம் முழுக்க சுற்றி  வர ஒரு பறவையாய் மாறவேண்டும்.
  • (6)என் தமிழ் ஈழத்தனி நாட்டை உலகம் அங்கீகரித்து , அதை உறுதி படுத்தி ஈழத்த்மிலரெல்லாம் அங்கு வாழவேண்டும்.
  • (7) உலகமெல்லாம் வறுமை ,நோய் பிணி ஒழிய வேண்டும்.
  • (8)என் தாய் நாட்டில் ஈழத்து போரால் சடுதி மரணம் அடைந்த்த்வர் உயிர் பெற்று எழவேண்டும்.
  • (9)இறக்கும் வரை நோயிலாதவாழ்வு வேண்டும்.
  • ( 10)வேண்டியது எல்லாம் கொடுக்கும் தேவதை என் முன் நிஜமாக்   ோன்ற வேண்டும். ..............இதை தொடர நான் அழைப்பவர்கள்.

மெயசொல்ல போறேன் (கிருத்திகன்)
சந்து ருவின் பக்கம் ....சந்து ரு)
யோ வாய்ஸ் ..........யோகா
ஈரோடு கதிர் அவர்கள்
சீமான் கனி அவர்கள் 
சப்ராஸ் அபூ பக்கர்
கவிக் கிழவன் யாழவன்..
மற்றும் என் தளத்தை  பார்வையிடும் உறவுகள் எவரும் எழுதலாம்.எங்கே தொடருங்கள்.பார்க்கலாம். .

Friday, September 11, 2009

அவளுக்குள் ஒரு மனம் ....

அவளுக்குள்  ஒரு மனம் ....

 கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை  முடித்து தேநீருடன்  பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து  வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன்  செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய  உணவையும் சிற்றுண்டி களையும்  கொடுத்து வண்டி வரை சென்று அனுப்பி வைத்தாள். மேகலாவும் , கண்ணனும் பள்ளிக்கு நடந்து தான் செல்வார்கள். அவள் நினைத்திருந்தால் இதிவிட மேலான வசதியான வாழ்வு வாழ்ந்து இருக்கலாம்  ஆனால் பாழும் இதயம் கொண்ட காதலால் தான் இன்றைய வாழ்கை.

கடந்த கால வாழ்வை நோக்கி அவள் மனம் அசை போட தொடங்கியது . அப்போது மாதவி பத்தாம் வகுப்பு படித்து கொண்டு  இருந்தாள். தினமும் பாடசாலைக்கு போகும் வழியில் ஒரு சிறு கடை அதில் தான் ராசா உட்கார்ந்து வியாபாரம செய்து கொண்டிருப்பான். அழகான் இளஞ்ன் ஆனால் என்றுமே பொருட்களை எடுத்து கொடுக்க மாடான். அவன்  எழுந்து நின்றதை கண்டதும் இல்லை. உதவிக்கு நிற்கும் சிறு பையன் தான் பொருட்களை எடுத்து கொடுப்பன். ஒரு நாள் இவள் கடையில் பரீட்சைக்காண  பேப்பேர் வாங்க சென்றாள். அன்று அவளது கஷ்ட காலம் அந்த பையன் வரவில்லை. இவளுக்கு நேரம் ஆகி விட்டது சீக்கிரம் தரும்படி கேட்டாள் . கடைக்கார  ராசாவால் எடுத்து கொடுக்க முடியவில்லை.  இவள் வற்புறுத்தவே அதை உள்ளுக்கு வந்து எடுக்கும்படி சொன்னான். இவளுக்கு கோவம் வந்தது . ஏன் "உங்களால் முடியாதோ "?  என்று ஏசி விடாள். சற்றும் எதிர் பாராத ஒரு சம்பவம் நடந்தது . ராசா கதிரையில் இருந்து குதித்து கால்களை இழுத்தவாறே அதை  எடுத்து கொடுத்தான். இவளுக்கு திகைப்பாக போய் விட்டது . ராசா கால் விளங்க்காதவனா ? மிகவும் கவலைப்படாள். அவன் மீது இரக்க பட்டாள். இவ்வாறே இவர்களது நட்பு காதலாகியது.

இங்கு ராசாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவன் பிறவியில் சாதாரண பையனாக தான் இருந்தான். ஐந்து வயதுக்கு பின் ஒரு கடுமையான காய்ச்சல் வந்து ஒரு ஊசி போடார்களாம் அதன் பின் தான் இப்படி ஆகியது என்றும் இடுப்புக்கு கீழே கால்கள்  பலம் அற்றவையாக போய் விட்டன . ஆரம்பத்தில் கால் களை இழுத்து நடமாடுவான். பின்பு தந்தை ஒரு சக்கர நாற் காலி வாங்கி கொடுத்தார். இவனுடன் கூட பிறந்த்த்வர்கள் எழு பேர் எவருக்கும் இப்படி இல்லை. அவனது தந்தை ஒரு சிறு தொழில் அதிபராயிருந்தார். இவன் மீது மிகவும்பற்று உள்ளவராயிருந்தார். இவன் தான் இல்லாத காலத்தில் சிரமபடுவானே ........யார் கவனிக்க போகிறார்கள் என்று கவலைபட்டு இந்த சிறு கடையை போட்டு கொடுத்தார். காலப்போக்கில் தாயும்  தந்தையும் இறந்து விட்டனர். சகோதரர் களும் ஒவ்வொருவராக் திருமணமாகி சென்று விட்டனர். ராசா மட்டும் தனித்து விடப்படான். இடயில் இவனிடம் உதவி பெற சகோதரர்கள் வந்து போவார்கள். தன் சோக கதையை ஒருநாள். மாதவிக்கு சொல்லியிருக்கிறான் ராசா.

அன்றிலிருந்து அவன் மீது ஒரு இரக்கமும் , நேசமும் அவளுக்குள் உருவாகி அது காதலாகியது.  இதை கேள்வி பட்ட் மாதவியின் பெற்றார் கடுங்கோபபட்ட்னர். நொண்டி என்றும் ஏளனம் செய்தனர். ஒருநாள் இவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் தாலி கட்டி கொண்டனர். அன்றிலிருந்து மாதவி பெற்றவரால் வெறுக்க பட்டாள். இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் எவரும் அவளை அணைக்க் வில்லை. ராசாவின் தந்தை இறந்த பின் அவனது வீடு இவன் பெயருக்கு எழுத பட்டதை அறிந்து ராசாவின் சகோதரர்களும் வேறுபாடு காட்ட தொடங்கினர். அந்த கிராமத்தில் இருக்க விரும்பாத ராசா குடும்பம் வீட்டை விற்று பணத்தை திரட்டி , ஒரு மணிக்கூடு திருத்தும் கடை ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். அவனது விடா முயற்சியும் மாதவியின் ஒத்துழைப்பையும் அவர்களை வாழ்வில் முன்னேற்றியது. வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஒரு வண்டி வாங்கி விடார்கள். அதில் விடாமுயற்சி உள்ள ராசா கை மூலம் இயக்கும் வாகன அனுமதி பெற்றான். மணிக்கூட்டு கடையிலும் பணிக்கு நான்கு பேர் வைத்தது கொண்டார்கள். நகரத்தில் உள்ளவீட்டையும்  சொந்தமாக்கி கொண்டார்கள். ராசா இருந்து கொண்டு செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வமுள்ளவன். விரைவில் தொழில் நுட்பங்க்களை கற்று கொள்வதில் சிறந்தவன். அவனது ஆசையெல்லாம் வாழ்ந்து  காட்ட வேண்டும் என்பது தான். தன் பிள்ளைகளை படிப்பித்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டும் , கடைசிவரை மாதவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் ..

கால் ஊனமுற்றாலும் ஊனபடாத இதயத்தை புரிந்து கொண்டது .........அவளுக்குள் ஒரு மனம் ........கதை உண்மை பெயர்கள் கற்பனை. .

Thursday, September 10, 2009

அத்தை மகளே போய் வரவா ?

அத்தை மகளே ...போய் வரவா ?

மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............

கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட  நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கும் விலை வாசிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெளி நாட்டு   வேலை வாய்ப்புக்காக விண்ணபித்து இருந்தான் பாஸ்கரன். அவனுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எண்ணவே இல்லை. மகிழ்ச்சி ஒரு புறம் அவளது பிரிவு ஒருபுறமாக் புறப்பட்டு விட்டான் . பாஸ்கரன் தந்தையை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது தன் இரு தங்கைகளையும் ஒரு நல்ல நிலைக்கு வைக்கும் பணியும் வீட்டுப் பொறுப்பும் அவனி டம் ஒப்படைத்து விட்டு , தந்தை காலமாகி விடார். அவருக்கு அதிக வயது இல்லய் என்றாலும் , வருத்தமும் துன்பமும் சொல்லிக்கொண்டா வரும் . தலைக்குள் விறைப்பு என்று படுத்தவர்  பின் அது மூளைக் கட்டியாக்கி சத்திரசிகிச்சை வரை போய் சென்ற வருடம் ,   அவரை காலன் கவர்ந்து சென்று விடான்.  பாஸ்கரன்  முடிந்த வரை வீடு பொறுப்பையும் தங்கைகளின் பாடசாலை தேவைகளையும் அவனே பார்த்து கொண்டான். இதுவரை தந்தையின் சேமலாப பணம் கை கொடுத்தது கடந்த மூன்று மாதங்களாக் தான் மிகவும் கஷ்ட படான். இதற்கிடையில் அவனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரி குடும்பம்   நாட்டு பிரச்சினையால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் ஒரே மகள் சந்தியா , ஆசிரியையாக வவுனியாவுக்கு அண்மையில் ஒரு சிறு கிராமத்தில் படிப்பித்து கொண்டு இருந்தாள். அங்கு பிரச்சினையால் மாற்றல் வாங்கி கொண்டு கொழும்புக்கு வந்திருந்தார்கள். இடமும் புதிது ,அவர்களுக்கு தேவையான் உதவிகளை செய்து கொடுத்தான் பாஸ்கரன். அவர்கள் இவர்களையே  நம்பி வந்திருந்தார்கள். இவனது  நட்பு அண்மையில் தான் காதலாகியிருந்த்து .

முறை மாமா ஏதும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆழமாக் இறங்கி விடான் காதலில் . ஆனால் தன் தங்கைகளின்  நல் வாழ்வையும் மறக்க வில்லை இரு வீட்டு  பெற்றவர்களுக்கும்  தெரியாது. அதற்கிடையில் இப்படி வெளி நாட்டு  அழைப்பு வரும் என எண்ண வில்லை அவன். விடை பெறும் நாளும் வந்தது

.எல்லோருக்கும் பயணம் சொல்லி புறபட்டு விட்டான் . வவனியா மாமா தான் விமான நிலையம் வரை வந்தார். முதல் நாள் இரவு , சந்தியா கோவிலுக்கு சென்று வரும் வழியில் ,. சந்தியாவை கண்டு சத்தியம் வாங்கி இருந்தான். தான் வரும் வரை தனக்காக் காத்திருக்கும் படியும் ....வந்ததும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்வதென்று உறுதியுடன்  கூறியிருந்தான். காலம் இவர்களுக்காக காத்திருக்குமா ? காதல் திருமணத்தில் முடியுமா? குடும்பத்தில் ஒரே பெண்ணான சந்தியாவை இவனுக்கு கொடுப்பார்களா ?  ...........ஏக்கங்களுடன் காத்திருக்கிறான் பாஸ்கரன்.

காலம் தான் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும்.

Sunday, September 6, 2009

அகேனம் தேடி தவிக்கிறேன்..........

எனக்கு லாபிரா லாமின்  இடமிருந்து ஒரு  அழைப்பு ..........அகர வரிசையில் எழுதும் படி ...........இதோ என் சிந்தனையில்  உதித்தவை.......

அ..... ..அம்மா. எனக்கு உதிரத்தை பாலாக்கி ஊட்டிய என் தாயை நினைகிறேன்.
ஆ  .....ஆண்டவன் . என்னை  படைத்த ஆண்டவனை போற்றுகிறேன்.
இ........இதயம்  ....என் இதயம் கவர்ந்து  அன்புடன் இருக்கும் என் அன்பு அத்தான்.
 ஈ ......ஈ மடல் மூலம் என்னுடன் அன்போடு உறவாடும் வலைப்பதிவு நட்புகள்.
உ ......உலகம் ...உலகம் உருண்டை து ன்பமும் இன்பமும் உள்ளது
ஊ ....ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.
எ.......என்றும் மறக்க முடியாத உறவுகளை தினமும் நினிக்கிறேன்.
 ஏ...... ஏணி போல்  உதவிய ஆசிரியர்களை, என் நெஞ்சம் என்றும் மறவாது ..
ஐ  .... ஐயா என்று நான் அன்போடு அழைக்கும் என் பக்கத்து வீடு உறவு.
ஒ.......ஒரு நாளும் எனை மறவாத இனிதான மனங்களை  எண்ணுகிறேன்.
ஓ......ஓராயிரம் கோடி நன்றிகளை எனை  பெற்றவருக்கு  சொல்லவேண்டும்
ஒள..........ஒளவை பாட்டியாக எட்டாம் வகுப்பில் நடித்த ஞாபகம் ....நினைவில்
            நிழலாடுகிறது .
 .:         அகேனம் தேடி தவிக்கிறேன் என் கணனியில். .உதவி .........உதவி............


    .:  ithu o0o