Followers

Friday, September 18, 2009

நான் என் வரலாறு கூறுதல்.



நண்பர் ராஜராஜன் என்னை நான் பதிவர் உலகுக்கு  வந்த வரலாறு பற்றி
எழுத  சொல்லியதற்கிணங்க. இதோ சில வரிகள். 

எனக்கு படிக்கும் காலத்தில் ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மேடை பேச்சு என்பன நன்றாக வரும் . எனது முதலாவது  கலைத் திறமை ஒன்பது வயதில் என் ஒன்றுவிட்ட சகோதர பையன் களுடன் ஆண் வேடம் போட்டு வில்லுபாட்டு நடத்தியது என் ஊரவாரின் பாராட்டை பெற்றேன். எனக்குள்ளே கலையுலகவாழ்வு உள்ளடங்கி இருந்தது . இளம் வயதில் சின்ன் கதைபுத்தகங்கள். வாசிப்பேன். எனது மூத்த சகோதரி வாங்கும் குமுதம் கல்கி  ஆனத்தவிகடன் என்பன் எழுத்துக்கூட்டி வாசிப்பேன் . எனக்கும் அவருக்கு பத்து வயது வித்தியாசம் இடையில் ஆண் சகோ தரன்கள். பின்பு உயர்வகுப்பு முடிந்து  ஆசிரிய பயற்சிக்கு சென்று ஆசிரியையாக கடமையாற்றியபின் திருமணம் வந்தது. என் வெளியுலகவாழ்வு குறைந்து  இருகுழந்தைகள் வீடு.... வேலை என்று ஒரு முற்று புள்ளி வந்தது . ஓய்வு நேரங்களில் முன்பு கற்று இருந்த தட்டெழுத்து பயிற்சி கைகொடுக்க் அதை மாணவ மாணவிகளுக்கு சொல்லி கொடுத்தேன். பொழுது போக்காகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது .திடீரென ஒரு நாள் நம் நாட்டு ப  பிரச்சினை உச்சக்கட்ட்மடைய ..என் இரு கைக்குழந்தை  தைகளுடனும் .இடம்பெயர்ந்தேன். எதுவுமே என் வீட்டில்  எடுக்கவில்லை அன்று தொடங்கிய ஓட்டம் ஒவ்வொரு ஊராக சென்று புலம் பெயர்ந்து கனடா மண்ணிலே காலடி பதிக்கவைத்து . என்னவனுக்கு எங்கள் உயிரை தவிர வேறெதுவுமே வேண்டி  இருக்கவில்லை. சில காலங்களில் சற்று நோய்வாய் படேன். வெளியுலகமும் குறைவாக இருந்தது. என் பிள்ளைகளும்  வளர்ந்து வர அவர்களுக்கு கணனி வாங்கி கொடுத்தார்.

நான் மீளவும் கணணி  கற்று ஒரு தடவை "யாழ் இணையம் "எனும் ஒரு தளத்தின் அறிமுகம் கிடைத்து தமிழ் எழுத கற்று கொண்டேன். சில தடவை தமிழ் எழுத தனி விசைபலகை வாங்கவேண்டுமோ என் நினைத்ததுண்டு. அங்கும் சிலர் அறிமுகமாகி கூகிள் வழி மொழி மாற்றி மூலம் (.google transliterte ............) தமிழ் எழுதுகிறேன் இடையில் தமிழிச் போன்ற தளங்களும் வாசிப்பேன். ஒரு நாள் சில மாதங்களுக்கு முன் .blogger....wordpress ..... .என்பதை ஆராய்கையில் இதனுள் நுழைந்தேன். பகலில் மருந்து மாத்திரைகளினால் தூங்கி  எழுந்த நான் கண்ணியில் நுழைந்த பின்பகல் தூக்கம் மறந்தேன் என் னுள்ளே ஒரு உற்சாகம் ஒருவகை மலர்ச்சி .......கணணி ஒரு கடல் என்று கண்டு கொண்டேன். இதன் மூலம் ஆரம்பத்தில் சந்துரு, கிருத்திகன்  அபூ யோ சீமான் கனி  கதிர் ....எனும் நண்பர்கள்  அறிமுகமாகி(யாராவது விடுபடால்   மன்னிக்கவும் )  இன்று நாற்பத்தியேழு நட்புகளை கொண்ட ஒரு குழுவே உண்டு . தமிழ் நாட்டு  உறவுகள் கருத்து எழுதும் போது தொப்புள் கொடி உறவுகளின் அருகாமையை உணர்கிறேன்.அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கூட எழுதுகிறார்கள் என்று என்னும்போது என் இறக்கைகளால் வானில் பறப்பது போன்ற உணர்வு. இந்த வலைப்பதிவுக்கு வந்து சில அதாவது ஒரு சில மாதங்கள் மட்டுமே இடையில் சில் நுணுக்கங்களை இணைக்க தெரியாமல் தி ண்டாடியதும் உண்டு.

மீண்டும் பாடசாலை வாழ்க்கை போன்ற ஒரு உணர்வு.  நட்புக்கள் ....மடல்கள் ....பாராட்டுக்கள். வலை உலகம் ஒரு தனி உலகம். இணைந்திருப்போம் நண்பர்களாக.நீங்காத நினைவுடனும் மாறாத அன்புடனும். காலமெல்லாம்
கணனி நீடூழி வாழ்க .

Thursday, September 17, 2009

பார்வைகள் ....பலவிதம்.

பார்வைகள் ....பலவிதம்.

       நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி  வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும்,  இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ்   குடியிருப்பில் வாழ்கையை தொடங்கினர். சுகந்தன் இரு சகோதரிகளுக்கு அண்ணன். அவனது தாய் தந்தையரும் பெண் வீடாருக்கு பயந்து ஏற்றுக்கொள்ள்வில்லை. கடைசியில் சுகந்தனின் தந்தையின் அனுமத்யுடன் , சுகந்தனின் தாய் அவர்களது வீடில் ஒரு அறையில் வசிக்க அனுமதித்தாள்.  மீளவும் வாழ்கை தொடங்கியது இருவரும் படிப்பை நிறுத்தி விட்டனர் .

.     ஒரு நாள் நிரா அவனது தங்கையுடன் , ஒரு கலை விழா பார்க்க ஆசை பட்டாள் சுகந்தன் தனக்கு வேலை  என்றும் தங்கையுடன் அனுப்பி வைத்தான். அங்கு சுகந்தனின் நண்பனொருவனை கண்டனர். அவன் இன்னும் சிலருடன் காண ப்பட்டான் அவன் வந்து இவர்களுடன் உரையாடினான். அதில் ஒருவன் "குட்டி யாரடா .......வளைச்சு பார்க்கலாமா ?   என்று கேட்க சுகந்தனின் நண்பன் அவள் தன் நண்பனின் மனைவி என்று கூறினான்.

சில் வேடிக்கை நிகழ்வுகளை பார்த்து விட்டு  அத்தோடு விழா  நிறைவுற்று அவர்கள் வீடு வந்தார்கள். சுகந்த்னின் நண்பன் நடந்தவற்ரை .சுகந்தனை கண்ட போது  கூறி விடான். தொடங்கியது பிரளயம் ...நிராவுடன் வாக்கு வாதப பட்டான் , அன்று சற்று  மதுவும் அருந்தி இருந்தான் . காரணம் அவள் கையிலாத சட்டை யும் ஜீன்சும் அணிந்து இருந்தாள். அந்த விழாவுக்கு. நீ ஏன் அவ்வாறு போனாய் .........என்று அவன் கேட்க
நீ என்னை பார்த்த அதே ஆடைகள்  தான்.  நான் கவ்ர்சியாக், எதுவும் புதிதாக வாங்கஇல்லை  என்றும் வாதிட்டாள்  சுகந்தன் கோவத்தின்  உச்சத்தில் அவளை அறைந்து விடான். அதனால் தான் அவள் அழுது கொண்டு இருந்தாள்.  பக்குவமடையாத மனம் , இளம் வயது , சகிப்பு தன்மையற்ற குணம் இந்த இளம் தம்பதிகளை வேதனையில் ஆழ்த்தி விட்டது. அறியாத வயது புரியாத் உறவு பிஞ்சிலே பழுத்த வெம்பல்கள்.

வாழ்க்கை இலகுவானதல்ல. எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும். அது ஆயிரங்காலத்து பயிர். ஆல் போல் தழைத்து அறுகு  போல் வேரூன்றி நின்று நிலைத்து நீண்ட காலம் வாழவேண்டும்.
பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி வருவது துன்பம் தருவது காதல். .
மனமும் உடலும் பக்குவ பட்டு
திருமணத்தில் முடிய வேண்டும் காதல்.
காலமெல்லாம் காதல் வாழ்க .

Tuesday, September 15, 2009

காதல் ...........அழகு ....கடவுள்...... பணம்

காதல் ...........அழகு ....கடவுள்...... பணம்

.பதிவர் உலக நண்பர் யோ அவர்கள் என்னை  இது பற்றி எழுத அழைத்ததால் , அன்பான அழைப்பை தட்டி கழிக்க   முடியவில்லை. இது ஒன்றும் கஷ்டமான் வேலையுமில்லை.

  • முதலில் கடவுள்........என்னை படைத்த  அந்த சக்திக்கு இறைவனுக்கு நன்றி...........இளமைக்காலத்தில் மிகுந்த பய பக்தியுடன் வளர்க்க பட்டேன். நான்கிறிஸ்டியன் பெண். பாடகி .கோவில் லில் வாசகி ......தினமும் கோவிலுக்கு போய் தான் மறுவேலை.

  • பணம்..........இது இல்லாவிடாலும் தொல்லை ...இருந்தாலும் இதை  பாது காக்கும் தொல்லை. அளவோடு உழைத்து அளவோடு வாழனும். ஐந்து ரூபா உழைத்தால் அதற்கேற்ற செலவு .........ஐம்பது உழைத்தால்  அதற்கு ஏற்ற செலவு எங்கிருந்தாவது வரும். கொஞ்சம் இருந்தாலும் கஷ்ட படுபவர்களுக்கு கொடுக்கணும். 

  • காதல் .............உள்ளத்து உணர்வு எல்லோருக்கும் வரும் . மனம் கொண்டது மாளிகை , நானும் காதலித்தேன் . போராடி வென்றேன்.சோதனை  வேதனைகளைக் கண்டு சாதனை புரிந்தேன். யாராலும் கொடுக்க முடியாத மன அமைதியும் , சாடிக்கு ஏற்ற மூடி . 
  • அழகு .............ஒருவருடைய ரசனை என்றும் சொல்லலாம். அது பார்ப்பவர் உள்ளதை பொறுத்தது . இயற்கை , பூக்கள்,  குழந்தைகள்,  நீலக்கடல்,  வீசும் தென்றல். தாய்மை  அழகு. 

யாரவது முடிந்தவர்கள் தொடரலாம். ரசனையுள்ளவர்கள் தொடரலாம். நட்புடன் நிலாமதி