நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

திங்கள், 23 நவம்பர், 2009

தாயக கனவுடன் சாவினை தழுவிய ....

தாயக கனவுடன் சாவினை தழுவிய .....
..
கார்த்திகை இருபத்தியேழு  மாவீரர் தினம்.
மெளனமாய் அஞ்சலிப்போம்.....

முப்பது வருடங்களுக்கு மேலாக
எம்மை நாமே ஆளவேண்டும்
சகல உரிமையுடன் வாழ் வேண்டும்
என்னும் உன்னத நோக்கதுகாய்
"தமிழர் தாயகம் தமிழ் ஈழம்"
என்னும் தாரக மந்திரத  தோடு
சாவினை தழுவிய மா வீரர்களே

இறுதி போரிலே , கந்தக குண்டுகளின்
குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே
குற்றுயிரும் ..குறை உயிருமாய்
புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள்
மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள்
விழி நீர் மழை சொரிய ,  நினைக்கின்றேன்
எத்தனை கனவுகள் ஆசைகள்
விருப்பங்கள் என்பவற்றை
மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே.
தாயாய் தந்தையாய் சகோதரியாய்
மனைவியாய்  மகளாய் மகனாய்
விதைபட்டவர்களே ஆறாது எம் துன்பம் ,

நீவிர் இலட்சியதுகாய் இறந்தவர்கள்
வல்லரசுகளின் உதவியாலும் வான் மீது
குண்டுகளாலும்அயல உறவு
குள்ள நரிகளின் தந்திரத்தாலும்
இலட்சியம் திசை மாற்ற பட்டாலும்
வீழாது ஒரு போதும் ஈழத்தமிழனின் உறுதி
காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும்
என்றோ ஒரு நாள் தோன்றும் தமிழ் ஈழம்
இது  மாவீரரின் ரத்தப் பழி .ஈழ மக்களின்
இலட்சிய கனவுகளின் கோட்டை
நிறைவாகும் ஒரு நாள் சத்தியம் உமது  கல்லறை மீது