Followers

Thursday, December 3, 2009

குழைத்த சாதம் .......

குழைத்த சாதம் .........

ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக   இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி  சென்றன.  அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு  மத்தியில் வாழ முடியாதென்று  முடிவெடுத்து . வீட்டையும்  நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம்  செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் படித்திராததால் ஒருகந்தோரில் எடு பிடி வேலை தான் கிடைத்தது . அதுவும் அவனுக்கு நல்ல காலம் இருந்ததால் தொடார்ந்து ஐந்து வருடங்கள் வேலை செய்ய கிடைத்தது அவனது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  வேலை.யில் மிகவும் சுறு சுறுப்பாகவும் , பண்பாகவும் நடந்ததால் எல்லோருக்கும் பிடித்து போனது. மெல்ல மெல்ல வீட்டுக் கடனையும் அடைத்தான் .அவனுக்கு இப்போது வயது இருபத்தியாறு .

அவனுக்கு இரண்டு தங்கை மார். மூத்தவள் கலியாணத்துக்காக  காத்திருந்தாள். அவன் வீட்டையடைந்ததும் , உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. ஊர்க்கதைகளில் இருந்து அவனது பள்ளி தோழர் சிலர் காணாமல் போயிருந்தனர். வேலை கிடைத்த பின் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்த காதலி ....இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள். ஏற்கனவே ஒழுங்காக்கி  இருந்த மாப்பிள்ளைக்கு திருமணத்துக்காக தங்கைக்கு நாள் பார்க்க பட்டது. எல்லாம் சுபமே முடிந்தது. அவன் அதிகம் வெளியில் செல்ல விரும்பவில்லை  ஊர் மாலை  ஆறு மணி ஆகியதும் அடங்கி விடும். இன்னும் அவர்களின் அட்ட காசம் இருந்தது.

ஒரு நாள் இவன் திண்ணையில்  சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா  தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு  போக உதவி செய்த , கொழும்பு மாமா தன்  மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள்.   இப்போது அதெல்லாம்   வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே .  அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின்  ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை  செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

அவனது தந்தை மீன் பிடி வள்ளங்களை   வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். கடலில் , கடற்படையினரின் , தொல்லைகளால் , மீனவர்களும் தொழிலுக்கு செல்வதில்லை . பலர் கடலில் மீன் பிடித்து  கொண்டு  இருந்த  போது காணாமல் போயினர். சில சமயம் வலைகளையும்  அறுத்து , பிடித்த  மீன்களையும் பறித்து சென்றனர். தமிழராய் பிறந்தமையினால் அவர்கள்  பட்ட் துன்பம் எழுத்தில்  எழுத முடியாது. அவன் மீண்டும் பயணமாகும் நாளும் வந்தது . மிகவும் சோகத்துடனும் , ஒருகடமை முடித்த திருப்தியுடனும் இருந்தான். மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது  இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து  குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு  வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ..............அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து  கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில்  தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய்.   எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது .........உள்ளத்தை  தொட்டு சென்றால் ஒரு வரி எழுதுங்கள். .............

Monday, November 30, 2009

நம்பிக்கை ......

நம்பிக்கை  .........

குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீடுக்கு வைத்திருந்தார்.அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய  இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர  பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன்   ஒரே கொண்டாட்டம்.

அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில்  டி வீ  யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைபடவே . அம்மம்மா .........My T.V is not working ...........கொஞ்ச நேரம் காத்திரு என்று இவர் சொல்லி இருக்கிறார். மீண்டும் நஞ்சரித்து இருக்கிறான் . வழக்கமாக் "தடங்கலுக்கு வருந்து கிறோம் " என்று ஆங்கிலத்தில் போடுவார்கள் ஆனால் அன்று போடவில்லை. குழந்தை எழு நிமிடமாக் காத்திருந்து விட்டு .........மீண்டும் அம்ம்மாம்மா ..............வொர்க் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கிறான். அவரும் வேலையாக் இருந்தவர  ஜீசஸ் இடம்கேளு என்று சொல்லியிருகிறார். சில நிமிடங்கள் சத்தத்தை  காணவில்லை...........

அவர் வீட்டில்  இருந்த பூஜை  அறையில் இவன்.....கண்களை மூடியவாறே .......jesus give my t.v. back ........jesus give my t.v back ..இருகரங்க்கூப்பியவாறே ......திடீரென டி வீ வேலை செய்ய தொடங்கி விட்டது .......அம்மம்மா .............my t.v is back.........அம்மம்மாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை. அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை...........

...இவன் வீடில் தமிழ் கதைத்தாலும் அங்குள்ள் பெரியவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என தெரியும் ஆங்கிலத்திலே தான் உரையாடுவான். சில சமயம் அரைத்  தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவான். . எப்டியாவது தனக்கு தேவையானதை பேசி சாதித்து கொள்வான்.  அம்மம்மாவும் தாயின் கவலை ....வரக்கூடாது என்பதால் அணைத்து இரு மொழியிலும் பேசுவார். சிலசமயம் தாய் வேண்டுமென்று அடம் பிடித்தால் யாரையாவது வரச்சொல்லி அத்தாயிடம் அனுப்பி விடுவார். இளம் வயதிலே கடவுள்  தருவார் என்ற நம்பிக்கை அவன் பிஞ்சு மனதிலே முளை விடும் என்பதில் ஏது வித ஐயமும் இல்லய். வருகிறது கிறிஸ்மஸ் பண்டிகை , இப்பவே ஆயத்தங்கள் ...........எதிர் பார்ப்புகள் பரிசுக்காக.

சின்ன சின்ன சந்தோஷங்கள் என்னையும் தொற்றி கொள்ள உங்களுடன் நானும்  பகிந்து கொள்கிறேன் . சந்தோஷத்துடன்...............


Sunday, November 29, 2009

நித்திலா .....தாயாகிறாள்

நித்திலா .....தாயாகிறாள் .

மானிட வாழ்வில் ஒரு பெண் ,திருமணமாகி தாய்மையடைவது இயற்கை தான். இதில் நித்திலா .....என் கதாநாயகி , அப்படி என்ன சாதித்து விடாள் என்று பார்க்கிறீர்களா ? அது தான் கதை ........கதையை வாசிக்க என்னுடன் தொடர்ந்து வாருங்கள்.

அழகான அமைதியான அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு செல்லமாக வளர்ந்தவள் தான் நித்திலா .....தாய் ...தலைமை ஆசிரியரான தந்தை இவர்களுக்கு குழந்தையாக சிறுமியாக ..செல்லமாக வளர்ந்தவள் தான் இந்த நித்திலா.....காலத்தின் கட்டளையோ , விதிவசமோ , கிராமத்தில் இருந்து ... இடம் பெயர்க்க பட்டு இலங்கையின் கொழும்பு மா நகரின் , ஒரு தொடர் மாடியில் வாழ்வை அமைத்து கொண்டார்கள். யாழ் இளம்பெண் கால ஓட்டத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்று ,வரு நாள் திருமண வயதை அடைந்ததும் அவளை தையல் சமையல் என்று அத்தனை கலைகளையும் பயிற்று வித்து அவளின் எதிர் காலம் வளமாக் அமைய காத்து இருந்தனர். பெற்றார். ஒரு நாள் மூவரும் கோவில் வழி பட்டு கொண்டு இருக்கையில் மகனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்த ராஜ ரத்னம் தம்பதிகள் இவளைக்கண்டதும் இவளே தமக்கு மூத்தமருமகள் என தீர்மானித்தனர் .அவளது தன்னடக்கம் பணிவு அழகான் தோற்றம் அவர்களை கவர்ந்தது ஒரு நாள் பழக்கம் வீட்டுக்கு அழைப்பது வரையில் போனது . இரு குடும்பமும் பேசி கலந்துரையாடி உறவுகளை வளர்த்து கொண்டனர். மூத்த மகனுக்கு நித்திலா நிச்சயம ஆனாள் அவனும் வந்து பெண் பிடித்து போகவே கலியாணம் கோலாகலமாக நடந்து .....அவன் கனடாவின் மொன்ரியல் பகுதிக்கு வதிவிட உரிமை பெற்று அழைத்து கொண்டான்.

அன்பான நட்பான் தம்பதிகளாக் வாழ்ந்து வந்தனர். சில நெருங்கிய உறவுகளின் விசேடங்களில் காண்பதுண்டு . எல்லோரும் எதிர்பார்த்து போலவே அவர்களும் எதிர் பார்த்தார்கள். மாதங்கள் வருடங்களாக ஓடிக்கொண்டு இருந்தது .அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்லை .அதுவே அவர்கள் வாழ்வில் பெரு ஏமாற்றமாக இருந்தது .வைத்திய உதவிகளும் நாடினார்கள். விசேடங்களில் கலந்து கொள்ளும் உறவுகளும் கேட்க தொடங்கி விடார்கள். இது நம்மவர் பழக்கமாச்சே . இதனாலோ என்னவோ . அவர்கள் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அவர்களுள் ஒரு தாழ்வு மனப்பான்மை குடிகொண்டது .
என்ன குறையோ யார் குறையோ இதை நான் துருவி கேட்கவோ ஆராயவோ விரும்பவில்லை நீங்களும் கேட்க மாடீர்கள் தானே. அது அழகில்லை. அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை. எல்லாவித வைத்திய உதவியையும் நாடியது உண்மை. சில சந்தர்பங்களில் ராஜ்குமார் நெருங்கிய உறவுகளிடம் "நான் அவளுக்கு குழந்தை அவள் எனக்கு குழந்தை என்பான் " ஆனாலு மனவருத்தம் அவர்களுக்கு இல்லாமலா இருக்கும் . இருவரின் பெறறா்களுக்கும் கவலை தான். சாடை மாடையாக கேட்டும் பார்த்தார்கள். இறுதியில் புரிந்தது கொண்டார்கள்.

இருவரும் தீர்மானித்தார்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன் முடிவெடுத்தார்கள் .அது தான் என்ன.....? கொழும்பில் ஒரு கிறிஸ்டியன் துறவிகள் நடத்தும் கைவிடப்பட்ட குழந்தைகளை நடத்தும் ஒரு நிறுவனமூலம் குழந்தை ஒன்றை தத்தெடுக்க ஆயத்தமானார்கள். சட்ட ஒழுங்குகள் ,அடிக்கடி கொழும்பு பயணம் என்று போய் வந்தார்கள். நான் கடைசியாக கண்டபொது ராஜ்குமாரின் தம்பி சொன்னான் "உங்களுக்கு ஒரு நல்ல சேதி எங்கள் குடும்பத்திலிருந்து வரும் " என்று உனக்கு கலியாணமா என்றேன் ...சிரித்து மழுப்பி விடான்.

எதிர் பாராமல் இரு வாரங்களுக்கு முன் வார விடுமுறையில் மொன்ரியல் புனித யோசெப் பேராலயத்துக்கு குடும்பத்துடன் போய் இருந்தேன். ஆலய வழிபாடின் போது ஒரு சிறு பெண் குழந்தையின் சிணுங்கல் என்னை திரும்பி பார்க்க வைத்தது . வழி பாடு நடந்து கொண்டு இருந்தது . இருந்தும் திரும்பி பார்த்து விடேன். அது ராஜ்குமார் .அவன் தோளில் ஒரு சிறு குழந்தை அருகில் நித்திலா பால் போத்தலை புகட்ட ஆயத்தமாகி கொண்டு இருந்தாள். வழி பாடு முடிய நேரில் கதைத்து உரையாடினோம் வரும்போது அவர்கள் வீடுக்கும் சென்று வந்தோம். எட்டு மாத குழந்தை ....என் மக்களுடனும் சேர்ந்து கொண்டது ...ராஜ் குமார் முகத்தில் மிகவும் மகிழ்வு காணப்பட்டது . நித்திலா எப்போதும் குழந்தையின் சிந்தனையாகவே இருந்தாள். கொடுத்து வைத்த குழந்தை நீரஜா ..........வரும் மார்கழி  முதல் வாரம் வீட்டில் பிறந்த நாள் வைக்க இருப்பதாகவும் , நித்திலா அவளது தனியார் பாடசாலையில் இருந்து மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் சொன்னாள்.  அது ஒரு யாழ்ப்பாணத்து தமிழ் தாயின் ஆறாவது குழந்தை எனவும் ,குடும்ப வறுமை காரணமாக் ,வட பகுதி கன்னியர் மட உதவி கேட்டு அக்குழந்தையை பெற்று கொண்டதாகவும்  .அக்குழந்தையின் நல்வாழ்வுக்கும் . குழந்தையற்ற தம்பதியரின் மகிழ்வுக்குமாக ...என்ற நல் நோக்கத்துக்கான முடிவு என்றும் சொனார்கள்.

இளம் பெற்றாருக்கு " இல்லை ஓர் பிள்ளை " என்ற குறை தீர்ந்தது . பெற்றால் தான் பிள்ளையா ? .அன்போடும்  பண்போடும் நல மனதோடும் பாசத்தை கொட்டி வளர்ப்பவளும் " தாய் " தான்......

கதை உண்மை. பெயர்கள் கற்பனை .............
-