Followers

Tuesday, December 29, 2009

இன்னொரு அம்மா

இன்னொரு அம்மா

மாலதி அதிகாலை  விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள் , அடுப்பை பற்ற வைத்து  , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கை காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்குபோகவேனும்.  ......வரும்போது ..இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள்.

நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் ..இவளது குழந்தைகள். .அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறபட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும்  முடித்து கொண்டவள் ...ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளிகளையும் எச்சரித்து , அமைதிபடுத்தி விளையாட்டு பொருட்கள்  வாங்கி வர வேணும் அம்மா என்றும் ...வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . வஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது.................

தன் பெற்றவரை  மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி........இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள் மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த  நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதரண விவசாயக்  குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர்  இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் ....பலத்த முயற்சியின்  பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் .

வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். இவள் மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக  தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியார் ருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும்  கொஞ்சம் கட்டவேண்டும்.........

வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் . மீதியில்  தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.........வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு ..தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்.............அம்மா என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் ( மறு.........மகள்) வருவாள் என்று வாசலை பார்த்து கொண்டிருப் பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது .

ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை  தீர்க்க வந்த மகள் ....மறு( இன்னொரு)  மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள்  அவர்கள் வாழ்வில் ஸ்டவ் வெடிப்பதில்லை , ......மண்ணெண்ணெய் குளிப்பு இல்லய் ...........மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா......

.அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..