Followers

Wednesday, January 6, 2010

அன்று அவர் இல்லை என்றால்.............

அன்று அவர் ... இல்லை என்றால்.............

புது வருடம் பிறந்தும் ஆறு நாட்களாகி விட்டது . ஒரு பதிவு போட முயல்கிறேன் இடையில் சிறிது சுகவீனமும் கூட வாட்டி விட்டது . இருப்பினும் ,உங்களை எல்லாம் வலைத்ததள மூடாக   காண்பதில் மிக மிக மகிழ்ச்சி. .....அண்மையில் என் வீடில் உறவுகளும் நட்புகளும் கூடினார்கள் . கலகலப்பாக இருந்தது. பழையசம்பவங்கள் , ஊர் நினைவுகள்....பள்ளி வாழ்க்கை ..... சிலதும் நிழலாடியது . அதில் இருந்து  ஒரு சிறு கதை. ......

அப்போது பாஸ்கரனுக்கு பதின் மூன்று வயது இருக்கும். துள்ளித்திரியும் பருவம். அவசரமும் ஆர்வமும் எட்டிபார்க்கும்.வயசு.......... இவனது தாயார் ........அதே வீதியில் பிரதான சந்திக்கு அண்மையில் உள்ள சித்தியின் வீட்டில் கொடுக்கும்படியாக , சிறிது பணத்தை இவன் இடம் கொடுத்தனுப்பி இருந்தார். பணத்தை கொடுத்தபின் அங்கு சித்தியின் வீட்டுக்குச்  சென்றதும் அவரது குழந்தைகளுடன் விளயாடி விட்டு , வீடு திரும்புவதாக் சொன்னவன் சித்தி வறுத்துக்கொண்டு இருந்த அரிசிமாவில் வரும் சிறு கட்டிகளை சுவைக்க ஒரு ஆர்வம் வந்தது ..மாவறுக்கும் போது அதில் சில கட்டிகள் தோன்றும் அதை சுவைப்பதில் சிலருக்கு இன்பம். சில கட்டிகளை எடுத்து மாவுடன் சேர்த்து வாய்க்குள் போட்டு விட்டு ....புறபட்டான்

. சில....நிமிடங்கள் நடந்தவனுக்கு தொண்டைக்குள் சிக்கி விட்டது. சத்தம் போட்டு உதவி கேட்கவும் முடியவில்லை.......அவனுடைய .நல்ல காலம் அவ்வீதியின் அருகாமையில் ஒரு முதியவர் ,கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டு இருந்தார். இவன் சைகைகாட்ட ...அவர்  தண்ணீர் வாளியுடன் ஓடி வந்தார்.   இவனுக்கு விழி  பிதுங்கி ...மூச்சடங்கி .....மயங்கும் நிலையில் விழுந்துவிடான். கால் கைகளை அடித்தவாறு.........உடனே அவர் கொண்டுவந்த தண்ணீரால் முகத்தில் அடித்து ,  பின் பிட்ரிபக்கம் சற்று தட்டிக்கொடுத்து . குடிக்க கொடுத்து ...ஒருவாறு விழிப்படைய  செய்து விடார்.  பின் அவனை  ஆசுவாசபடுத்தி....வீடுக்கு அனுப்பி வைத்தார் .........இன்று  அந்த சிறுவன், இளைஞ்சனாகி இருகுழந்தைகளுக்கு தந்தை .........அந்த முதியவர் எனது,   தாத்தா....( அம்மப்பா) ........ உங்கள் தாத்தா..அன்று இல்லையென்றால் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.   என்று கண்ணீர் மல்க கூறினார்.

எனக்கும் என் ஊர் நினைவுகளுடன் .....பல இளம் பராய நினைவுகளும் ....அலையலையாய் வந்து போயின. பெருநாள் விடுமுறையும் ........புது வருட ஆரம்பமும் இனிதே கழிந்தன. ..கடந்து போன வாழ்வை  அசைபோட்டுப் பார்ப்பதிலே
தான் எத்தனை சுகம். .

.பழைய கால் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதே ஒரு தனி சுகம். .........புலம்பெயர் வாழ்வில் இத்தகைய சுகங்கள் எமது குழந்தைகளுக்கு கிடைக்குமா?  என்பதே கேள்விக்குறியாக உள்ளது .ஒவ்வொருவரும் தனித்தனி தீவாக் வாழ்கிறார்கள். ஊர் .....உறவு ...சொந்தங்கள் என்பனவற்றை நிலைநாட்டுவார்களா என்பது சந்தேகமே. .

14 comments:

பிரபாகர் said...

காலத்தால் செய்த உயிர்காக்கும் உதவி...

நினைவுகூர்ந்தமை அருமை சகோதரி...

பிரபாகர்.

பூங்குன்றன்.வே said...

//கடந்து போன வாழ்வை அசைபோட்டுப் பார்ப்பதிலே
தான் எத்தனை சுகம். .//

எத்தனை வருஷங்கள் ஆனாலும் இந்த பால்ய கால நினைவுகள் தான் நமக்கான போகிஷங்கள்.இடுகையை ரசித்தேன்.

இப்போ உங்களுக்கு உடம்பு சரியாகி விட்டதா? take care.

Romeoboy said...

அக்கா உடல் நிலையை பார்த்துகோங்க.

நிலாமதி said...

பிரபாகர் உங்கள் வருகைக்கு நன்றி.........

நிலாமதி said...

பூங்குன்றன் ...உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ...

நிலாமதி said...

ரோமியோ பாய் ....மிக்க நன்றி.

அகல்விளக்கு said...

உடல்நிலை தற்போது சுகமா அக்கா??

மகா said...

அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்.. ..

Pinnai Ilavazhuthi said...

//புலம்பெயர் வாழ்வில் இத்தகைய சுகங்கள் எமது குழந்தைகளுக்கு கிடைக்குமா?//
பதிலளிக்க இயலவில்லை!.. இந்த வரிகளை படித்ததும் கனமாகிறது இதயம்.

sathishsangkavi.blogspot.com said...

நினைவுகளை நினைக்க நினைக்க மனது இனிக்கிறது....

கலகலப்ரியா said...

:).. good post... tk care..

ஈரோடு கதிர் said...

நிறைய எழுதுங்கள் நிலா

சீமான்கனி said...

நல்ல அனுபவ பகிர்வு அக்கா...பகிர்வுக்கு நன்றி.
உடல் நலம் இப்போது தேறி இருப்பதில் மகிழ்ச்சி அக்கா....வாழ்த்துகள்...

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கு உடம்பு சரியாகி விட்டதா? take care.
அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்