நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கடவுளைக்கண்டேன் .......

....

பத்து மாதம் பத்தியமிருந்து காத்து 
கோவில் என்னும் கருவறையில் சுமந்து
கண் விழித்து வேதனையுற்று
உடல் வலி தந்து பட்டினியிருந்து
கை காலுதைத்து வெளிவந்த பின்பு
கடவுள் உன்னைக்  கண்டேன்.

பயணத்தின் போது தோளில் பை
பால் பவுடர் நாப்கின் மாற்றுத்துணியோடு
இன்பச்சுமை  என்னையும் சுமப்பவளே
தாய் என்னும் கோவிலே கருவறைத்தெய்வமே
கடவுளை கண் கொண்டு பார்க்க முடியாது
இதனால் தானோ?  தாய் உன்னை படைத்தான்.

19 கருத்துகள்:

Sangkavi சொன்னது…

//கண் விழித்து வேதனையுற்று
உடல் வலி தந்து பட்டினியிருந்து
கை காலுதைத்து வெளிவந்த பின்பு
கடவுள் உன்னைக் கண்டேன்.//

அழகிய அழத்தமான வரிகள்...

dheva சொன்னது…

தாய்மையை இந்த கவிதையின் மீது சிறப்பித்தமைக்கு நன்றி....! வாழ்த்துக்கள்!

நிலாமதி சொன்னது…

சங்கவி...உங்கள்வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

நிலாமதி சொன்னது…

தேவா .......(....dheva ) உங்கள் வரவுக்கு என் நன்றி

ஹேமா சொன்னது…

அம்மா என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.உலகின் ஒட்டு மொத்தச் சந்தோஷம் என்றே சொல்லலாம்.
வாழ்வின் வழிகாட்டி.நல்லதொரு கவிதை.நானும் இன்று அம்மா பற்றிய நிகழ்வோடு ஒரு கவிதைதான் போட்டிருக்கிறேன் நிலா.

seemangani சொன்னது…

நிலா கா தாய்மையை மிக சிறப்பாய் சொல்லிடீங்க...இன்பசுமை..அழகு...

சே.குமார் சொன்னது…

அழுத்தமான...
ஆழமான...
அழகான கவிதை..!
அருமை நிலா.

ரிஷபன் சொன்னது…

தாய்மை உணர்வை அப்படியே உணர வைத்த வரிகள்..

நிலாமதி சொன்னது…

ஹேமா ....சீமான கனி ....சே குமார் .. ரிஷபன்...உங்கள் வரவுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

//அம்மா என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.உலகின் ஒட்டு மொத்தச் சந்தோஷம் என்றே சொல்லலாம்.
வாழ்வின் வழிகாட்டி//

அதேதான் நானும் சொல்கிறேன் நிலாமதி அருமை கவிதை..

எங்கே ஆளையே காணோம்..

கமல் சொன்னது…

முதன் முதலாக உங்களின் தளத்திற்கு இன்று வந்தேன். தாய்மையின் பாசமும், நன்றி மறவாமல் நினைவு கூரும் பண்பும் தங்களின் கவிதையில் தெரிகிறது. பூமியில் நிலையாக வாழும் தெய்வம் பற்றிய கவிதை அருமை.

அண்ணாமலை..!! சொன்னது…

அம்மாக்கவிதை எப்போதுமே அழகு..
இங்கு இன்னும் அழகாக இருக்கிறது..!!

Madumitha சொன்னது…

அம்மாக் கவிதை என்றும்
இனிமை.

நிரூஜா சொன்னது…

அருமை அக்கா... வாழ்த்துக்கள்

தியாவின் பேனா சொன்னது…

super

சி. கருணாகரசு சொன்னது…

உங்க அன்பு நெகிய வைக்கிறது....
தாயின் வலி உணர்ந்தவன் தான் உண்மையான மனிதன்.

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

தாய்மையின் மகத்துவத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

asiya omar சொன்னது…

நல்ல கருத்துள்ள கவிதை.அருமை.

விஜய் சொன்னது…

//பயணத்தின் போது தோளில் பை
பால் பவுடர் நாப்கின் மாற்றுத்துணியோடு
இன்பச்சுமை என்னையும் சுமப்பவளே
தாய் என்னும் கோவிலே கருவறைத்தெய்வமே
கடவுளை கண் கொண்டு பார்க்க முடியாது
இதனால் தானோ? தாய் உன்னை படைத்தான். //

கண் கலங்க வைக்கறீங்க அக்கா, எழுத்துன்ன எதாவது பண்ணனும் அக்கா , அது உங்க எழுத்துல இருக்கு, இன்னும் நிறையா எழுதுங்க