Followers

Monday, June 28, 2010

என் இனியவளே .............

என் இனியவளே ................

பொங்கும் என் உள்ளத்துக்கு அணை போட யாருமில்லை,
மடலிலே வந்த சேதி மனதுக்கு மகிழ்வாச்சு ..
என் இனியவளே . கிடைக்கும் என் எண்ணியிருந்தேன்
இவ்வளவு சீக்கிரமாய் இனிய செய்தி எழுதுவாய்
என்று கனவிலும் எண்ணவில்லை ...

என் உயிர் உன் கருவில் வளர்வதை எண்ணி
உலக மகா உவகை கொண்டேன். என்னவளே
உறுதி செய்த மருத்துவருக்கு என் நன்றியை சொல்.
நாம கண்ட இன்பத்துக்கு  இவ்வளவு சீக்கிரம் பலனா?
உன்னை தூக்கி மகிழ் அருகில் இல்லையே

கண்மணியே ஒன்பதாம் மாதம் வரை பொறுத்திரு
எப்படியும் வந்து விடுவேன் என் உயிரைக் காண
ஊட்டச்சத்துக்கள் முறையாக் எடுத்துக்கொள்.
என் தாயே மீண்டும் வந்து பிறக்கவேண்டும்
நீ விரும்பினால் அடுத்த  வாரிசு.ஆணாக் இருக்கட்டும்.

ஆசிரிய பணி  மகத்தானது உன்னால் முடித்தவரை
பள்ளிக்கூடம் செல் முடியாத போது விடுப்பு எடுத்துக்கொள்
ஒவ்வொரு வாரமும் மடல் வரைக  ....மறந்து விடாமல்.
என் உடல் மட்டும் தான் இங்கே என் உயிர் உன்னிடம  .
மகப்பேறு மகளிருக்கு மறு பிறப்பாம் குறையேதும் இன்றி
படைத்தவன் காப்பான் ...கண்மணியே என்னவளே

கடமை எனை அழைத்தது...கடல் கடந்து வந்து விடேன்
காளையர்கள் பொருள் தேட கடல் கடக்கும் காலமென்பேன்
மறு மடல் காணும் வரை  மறக்காம்ல் என் முத்தங்கள்.
மற்றொன்றும  சொல்ல வேண்டும் ..என் மாமா மாமியார்
குட்டி மைத்துனி மற்றும் அயலவரிடம் நலம் கேட்டதாக் சொல்.

உடலும் உள்ளமும்   நலமே வாழ்க
நாம இருவரல்ல  மூவர் என்னும நினைவே என்
நினைவில்  நிலைத்திருக்கும். என்றும் உன் இனியவன் .

9 comments:

'பரிவை' சே.குமார் said...

nallairukku...
arumai...

சீமான்கனி said...

இனியவளுக்கு ஒரு இனிய மடல்...காதல் கடமை கண்ணீர் எல்லாம் சேர்ந்து அழகாய் வந்திருக்கு நிலாக்கா எழுத்து பிழைகளை கவனிக்கவும்...வாழ்த்துகள்...

ஹேமா said...

நிலா...உண்மையா...இல்லை சும்மா அன்பின் கடிதமா....சரி எதுக்கும் வாழ்த்துக்கள்.அழகான பதிவு தோழி.

வெங்கட் நாகராஜ் said...

இனிய பதிவு சகோதரி. வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

இனிய வரிகள் நிலாமதி

இவன்
மொசுதிநேஷ்குமரன்

ஜெய்லானி said...

@@@ஹேமா--//நிலா...உண்மையா...இல்லை சும்மா அன்பின் கடிதமா....சரி எதுக்கும் வாழ்த்துக்கள்.அழகான பதிவு தோழி. //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

தமிழ் மதுரம் said...

ஒரு தாய் தன் மகளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் அமைந்த கடிதம் அருமை.. வார்த்தைகளில் யதார்த்தமும், பெண்களின் வலிகள் நிறைந்த வாழ்வின் பின்னரான சந்தோசமும் புலப்படுகிறது.

முனியாண்டி பெ. said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

Madumitha said...

கடிதம் நல்லாருக்கு.
பொருள் வயிற் பிரிவு பற்றி
பேசுகிறது.