Followers

Tuesday, August 3, 2010

தாய்மை

தாய்மை

அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம்  மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு  தன் தாயார் வீடு நோக்கி   பட்டணத்துக்கான   பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று  கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள்.  ஒரு  மணி நேரத்துக்குபின  பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல்  எழுந்து விடான். அவள்  புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை  சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று  வரட்டும் "விலகுங்கப்பா " என்று சத்தமிட்டனர்.    அப்போதும் அவன் அழுகை அடங்க வில்லை ....Èபாலைக் கொடும்மா"  என்றனர் பெண்கள்ளில் பாட்டி  வயதானவர். முதற்குழந்தை அவள் வெட்கப்பட்டாள்.  ஆண்கள் வேறு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்...

இளம் தாய் ..மிகவும் சங்கடபட்டாள். . அவர் சாரியும் பிளவுசும் அணிந்து இருந்தார்....ஒருவாறு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குழந்தையை மெல்ல  அணைத்து சேலைத் தலைப்பால் அவனை மூடி ..மெல்ல பிளவுஸின் கொக்கிகளை .....( hook ) தளர்த்தினாள். அவளையே குறு குறு என் பார்த்து கொண்டிருதவார்களின் கண்கள் மறு திசை நோக்கி பார்த்தன...ஒரு கையால் அணைத்து மறு கையால் தட்டி தட்டி உறிஞ்சத் தொடங்கினார். நம் கதா நாயகன். அழுகை ஓய்ந்த திருப்தியில் அத்தனை பயணிகளும்.  நிம்மதிப் பெரு  மூச்சு விட்டனர்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தாயப்பாலையே  நம்பி வாழ்ந்தனர். இந்தகாலத்தில் பெண்களின் ஊட்ட சத்து குறைவோ என்ன காரணமோ பால் சுரப்பு சிலருக்கு போதியதாக் இருப்பதில்லை. பலருக்கு வேலைக்கு போகும் அவசரத்தில், புட்டிபால் கொடுகிறார்கள் சிலர் ....அது ஒரு நாகாரிகமாகவே கருதுகிறார்கள். தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது . கண்டிப்பாக  ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான கருக் கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம்.

7 comments:

சீமான்கனி said...

தாய் பாலின் சிறப்பு சொல்லும் பகிர்வுக்கு நன்றி அக்கா...பேருந்தில் இப்படிப்பட்ட தருணத்தில் தாய்மார்களின் பாடு பெரும்பாடுதான்...வாழ்த்துகள் நிலக்கா...

ஹேமா said...

நிலா...அருமையான பதிவு.
உண்மையில் இன்றைய இளம் தாய் யாராவது மனதில் இப்பதிவை எடுத்தால் நல்லது.

முனியாண்டி பெ. said...

அருமையனா பதிவு. தாய்மை, தாய்பால் அவசியத்தை உணர்த்தும் காலத்தின் அவசியமானா பதிவும் கூட. ஆனால் பாவம் வேலைக்கு போகும் தாய்... என்னசெய்வாள்? உலகில் மிகப்பெரிய சோகம் தாய்பால் வீணாவது என்றே நினைக்கிறேன். காலமும்? corporate company யும் அனுமதிக்குமா? குழந்தையை தாய் வேலைசெய்யும் இடத்திற்கு? எத்தனையோ தாய்ப்பால் வீனாகிக்கொண்டுதான் இருக்கிறது தாயின் கண்ணிருடன் அலுவக கழிப்பறைகளில்.

வெங்கட் நாகராஜ் said...

World Breastfeeding Week [1-7, August] ஆகிய இவ்வாரத்தில் அழகிய பகிர்வு. பெரும்பாலானவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி தவறான எண்ணங்கள் இருக்கிறது. மாற்ற உங்கள் இடுகை வழிவகுக்கும் என நம்புவோம். வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

// தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி யுள்ளது . கண்டிப்பாக ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான . கரு கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம். //


தாய் பாலின் சிறப்பு சொல்லும் பகிர்வுக்கு நன்றி .

நிலாமதி said...

என் பதிவுக்கு கருத்து பகிர்ந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி

தூயவனின் அடிமை said...

அன்றைய தாய் தன் குழந்தையின் பசியை தீர்க்க எந்த சூழ்நிலையில் பால் ஊட்டினால் என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள். இன்றோ
குழந்தையை பெற்று கழிவறையில் வீசி விட்டு வந்த செய்தியை கேட்கும் பொழுது, இன்றைய கலாசாரம் இளைய தலை முறையை எங்கு
கொண்டு செல்கின்றது சிந்திப்பார்களா?