Followers

Friday, January 8, 2010

தொலைந்து போனவைகள்.

 வணக்கம் என் வலைப்பதிவுலக நட்புகளுக்கு .........உங்கள் அன்பான் நலன் விசாரிப்புகள் பாராட்டுகள் ... புதுவருட வாழ்த்துகள்   கருத்துகள் என்னை மேலும் தென்பு கொள்ள வைத்து எழுத தூண்டுகின்றன. என்றும் உங்கள் அன்புக்கு நான் தலை சாய்த்து வணக்கமும் நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

தொலைந்து போனவைகள்.

போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு  இளைஞனின்   கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர்  உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தான் எல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது.

பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய்  இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர்  . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,
வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றான். பின்பும் ஊர் நோக்கி வரும் போது சோதனைக் கெடு  பிடிகள் அதிகரிக்கவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி
ஐரோப்பிய நாடொன்றுக்கு பயண மாக  முடிவெடுத்தான். இதன் போது
மனைவிக்கு பேறு காலம் வரவே அவள்அழகிய குழந்தையை பெற்று  எடுத்தாள், வைத்திய சாலையில்   குழந்தையை பார்த்து வந்த போது வெளிநாட்டு பயணம் சரிவந்த்தாக தகவல் வரவே ..மூன்றாம் நாள் மனைவி குழந்தையை  தன் தாய் தந்தையின் பாதுகாப்பில் விட்டு புறப்பட்டான். பல அலைச்சல் களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் சுவிஸ் நாட்டுக்கு போய் சேர்ந்தான். காலம் ஓடிக்கொண்டே இருந்தது ஆனாலும் அவனுக்கு அந்நாட்டு வதிவிட் அனுமதி கிடைக்கவில்லை.......வருடங்கள் எழு உருண்டோடி விட்டன. .

தாயகத்தில் ..தாயும் சேயும் நலமே வளர்ந்து வரும் காலத்தில் .மேலும்மேலும் யுத்தம் .மும்முரமடையவே ...பாஸ்கரன் மனைவி திலகா .....குழந்தை யுடன் அவளது தம்பியின் ஆதரவுடன் ....கனடா நோக்கி புறப்பட்டாள்....சில தடங்கலுக்கு மத்தியில் ....அவளுக்கும மகனுக்கும் அகதி நிலை அங்கீகரிக்க பட்டது.....மகனின் குரல் கேட்க அடிக்கடி தொலை பேசி அழைப்பு வரும். ....இறுதியில் மகனும் தாயும் தந்தையை பார்க்க புறப்பட்டனர் . பிறந்த போது பார்த்த தன் மகனின் தோற்றங் கண்டு அப்பா   பாஸ்கரன் மலைத்து போனான் .மகன்  பாலகுமாரனும் ஆசை தீர தந்தைமடியில் விளையாடினான்.  அவனதுகுழந்தைப்ப் பருவம்  ....மழலை பருவம்...பேச்சு ப்பருவம் ..என்பவை எல்லாம்........இழந்து விட்ட சோகம் மட்டும் தந்தை உள்ளத்தினுள்ளே இருந்தது.   மூன்றுமாத விடுப்பில் சென்ற தாயும் மகனும் பிரிய மனமின்றி ..........பிரிந்து கனடா வந்து சேர்ந்தனர் .........

.பாஸ்கரன் மனைவி .........கணவனை பொறுப்பெடுக்க முடிவு செய்தாள். இங்கு வேலையும் குழந்தையும் காலநிலையும் அவளுக்கு இலகுவாக் இருக்கவில்லை .  அங்குசுவிசில  வைத்து குடும்ப இணைவு  முறையில் செய்ய முடியாததால் அவன் ஒரு சமாதானகால ஒப்பந்தம் வரவே   மீண்டும் தாய்நாட்டுக்கு சென்றான். ஒருவாறு  குடும்ப இணைவு முறையில் ...சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவன் நாலு வருடத்தில் ..........வந்து சேர்ந்தான். மகனுக்கு வயது பதினைந்து ....ஆசைக்கும் அருமைக்கும் ஒரே யொரு  குழந்தை .புலம் பெயர் வாழ்வுகள் தந்த சோகம் ...இழப்பு .........வீணாகிய இளமை ........கண்ணீரில் தொலைத்த  காலங்கள். மது மயக்கத்தில் தூங்கிய இரவுகள் ....தனிமை..........மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த கரங்கள். ..உறவுகளின் ஒத்துழையாமை.  யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம். இது ஒரு சிறு கதை மட்டுமே ....

புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள்  ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும்.   எழுத்தில் வடிக்க கூடியவை ஒரு சில.   எழுதாத பல உள்ளத்துக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

Wednesday, January 6, 2010

அன்று அவர் இல்லை என்றால்.............

அன்று அவர் ... இல்லை என்றால்.............

புது வருடம் பிறந்தும் ஆறு நாட்களாகி விட்டது . ஒரு பதிவு போட முயல்கிறேன் இடையில் சிறிது சுகவீனமும் கூட வாட்டி விட்டது . இருப்பினும் ,உங்களை எல்லாம் வலைத்ததள மூடாக   காண்பதில் மிக மிக மகிழ்ச்சி. .....அண்மையில் என் வீடில் உறவுகளும் நட்புகளும் கூடினார்கள் . கலகலப்பாக இருந்தது. பழையசம்பவங்கள் , ஊர் நினைவுகள்....பள்ளி வாழ்க்கை ..... சிலதும் நிழலாடியது . அதில் இருந்து  ஒரு சிறு கதை. ......

அப்போது பாஸ்கரனுக்கு பதின் மூன்று வயது இருக்கும். துள்ளித்திரியும் பருவம். அவசரமும் ஆர்வமும் எட்டிபார்க்கும்.வயசு.......... இவனது தாயார் ........அதே வீதியில் பிரதான சந்திக்கு அண்மையில் உள்ள சித்தியின் வீட்டில் கொடுக்கும்படியாக , சிறிது பணத்தை இவன் இடம் கொடுத்தனுப்பி இருந்தார். பணத்தை கொடுத்தபின் அங்கு சித்தியின் வீட்டுக்குச்  சென்றதும் அவரது குழந்தைகளுடன் விளயாடி விட்டு , வீடு திரும்புவதாக் சொன்னவன் சித்தி வறுத்துக்கொண்டு இருந்த அரிசிமாவில் வரும் சிறு கட்டிகளை சுவைக்க ஒரு ஆர்வம் வந்தது ..மாவறுக்கும் போது அதில் சில கட்டிகள் தோன்றும் அதை சுவைப்பதில் சிலருக்கு இன்பம். சில கட்டிகளை எடுத்து மாவுடன் சேர்த்து வாய்க்குள் போட்டு விட்டு ....புறபட்டான்

. சில....நிமிடங்கள் நடந்தவனுக்கு தொண்டைக்குள் சிக்கி விட்டது. சத்தம் போட்டு உதவி கேட்கவும் முடியவில்லை.......அவனுடைய .நல்ல காலம் அவ்வீதியின் அருகாமையில் ஒரு முதியவர் ,கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டு இருந்தார். இவன் சைகைகாட்ட ...அவர்  தண்ணீர் வாளியுடன் ஓடி வந்தார்.   இவனுக்கு விழி  பிதுங்கி ...மூச்சடங்கி .....மயங்கும் நிலையில் விழுந்துவிடான். கால் கைகளை அடித்தவாறு.........உடனே அவர் கொண்டுவந்த தண்ணீரால் முகத்தில் அடித்து ,  பின் பிட்ரிபக்கம் சற்று தட்டிக்கொடுத்து . குடிக்க கொடுத்து ...ஒருவாறு விழிப்படைய  செய்து விடார்.  பின் அவனை  ஆசுவாசபடுத்தி....வீடுக்கு அனுப்பி வைத்தார் .........இன்று  அந்த சிறுவன், இளைஞ்சனாகி இருகுழந்தைகளுக்கு தந்தை .........அந்த முதியவர் எனது,   தாத்தா....( அம்மப்பா) ........ உங்கள் தாத்தா..அன்று இல்லையென்றால் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.   என்று கண்ணீர் மல்க கூறினார்.

எனக்கும் என் ஊர் நினைவுகளுடன் .....பல இளம் பராய நினைவுகளும் ....அலையலையாய் வந்து போயின. பெருநாள் விடுமுறையும் ........புது வருட ஆரம்பமும் இனிதே கழிந்தன. ..கடந்து போன வாழ்வை  அசைபோட்டுப் பார்ப்பதிலே
தான் எத்தனை சுகம். .

.பழைய கால் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதே ஒரு தனி சுகம். .........புலம்பெயர் வாழ்வில் இத்தகைய சுகங்கள் எமது குழந்தைகளுக்கு கிடைக்குமா?  என்பதே கேள்விக்குறியாக உள்ளது .ஒவ்வொருவரும் தனித்தனி தீவாக் வாழ்கிறார்கள். ஊர் .....உறவு ...சொந்தங்கள் என்பனவற்றை நிலைநாட்டுவார்களா என்பது சந்தேகமே. .