Followers

Wednesday, June 30, 2010

பெற்றவர்கள் பட்ட கடன் ........

அந்த  தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது  அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை  காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது  சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை  ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக  மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும்  பணியில் இருந்தான். கையில் காசு புரளவே மீண்டும் குடிக்க தொடங்கினான் முன்பு நட்புகளோடு சேர்ந்து குடித்தவன் இப்பொது தானே வீடில் வைத்து குடிக்க தொடங்கினான். ஒரு நாள் போதையில் வாகனத்தை ஓட்டிசெல்கையில் ..திடீரென வாகனம் பற்றி எரிந்தது . அதிக வெப்பமாகி விட்டது முறையாக கவனிக்கப்படவில்லை.

 மாலதி குடும்பத்தை  கொண்டு செல்ல மிகவும் கஷ்ட பட்டாள். தன் பிரச்சினைகள் எதுவுமே தன் சகோதரர்களிடம் சொல்வதில்லி. ஒரு நாள் வெளி நாடில் இருக்குமஇளைய சகோதரனுக்கு செய்தி எட்டவே நீண்ட கடிதம்  ஒன்று எழுதினார். கொழும்புக்கு வந்து ....நிற்கும் படியும் அவரை தங்களிடம் கூப்பிடுவதாகவும் ஆறுதல் சொன்னார் சகோதரன் மனைவியின்  பிராத்தனையோ தெரியாது ...வசீகரன் கனடா நாடுக்கு வந்து சேர்ந்தார். ஒருவாறு மிகுந்த சிரமமப்ட்டு ...காலக்கிரமத்தில்  மனைவி பிள்ளைகளை குடும்ப இணைவில்  அழைத்துக்கொண்டார். அவர்களும் வந்து பாடசாலயில் சேர்ந்து ....நனறாக் கல்வி கற்றார்கள் .  மாலதி வசீகரன் வாழ்வில் கடன்கள் தீர்ந்து  வசந்தம் வீசியது.
ஒரு நாள் பால்ய நண்பன் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார் . அவரது சிநேகம் தொடரவே மீண்டும் குடிவகை தொடங்கினார் .  இத்துடன் புகைத்தலும் சேர்ந்து கொண்டது மீண்டும் மாலதி  வாழ்வு சீர்குலைந்த்து . குடித்துவிட்டு பணியிடம் ( வேலைக்கு )செல்ல தொடங்கினார் . பொய் புளுகு ...அவரை  ஆட்கொண்டது மனைவிக்கு  உண்மை சொல்ல மாட்டார். மனைவியை அடித்து துன்புறுத்த  தொடங்கினார். இதனால் பணியிடத்தில் வேலையில்  இருந்து விலக்கப்பட்டார் . மாலதியின் சகோதரன் வேலைபார்க்கும் பணிஇடத்தில் தான் இவரது வேலை . மாலதியின் சகோதரனுக்கும் இதனால் மிகவும் மதிப்பின்மை ஏற்பட்டது. வேலையுமில்லை .ஒரு நாள் மதுபோதையில் வாகனம் செலுத்தி .அகப்ப்டார் .. சாரதி அனுமதி தடை செய்யப்பட்டது எச்ச்ரிக்கையுடன் மீண்டும் கொடுத்தார்கள். ஒரு தடவை வாகனத்தில் திறந்த மதுப்போத்தல் இருக்க பிடிபட்டார் .. இதனால் ஆறு வருடங்கள் வாகன சாரதி பத்திரம் ரத்து செய்யப் பட்டது.
 கடுங்குளிரில் மாலதி மிகவும் போக்கு வரத்துக்கு கஷ்ட பட்டாள். இதற்கிடையில் அவர்களது மூத்த புதல்வன் வாகன சாரதி .ஓட்டுனர் பத்திரம் .பெற்றுக்கொண்டான். தந்தையின் அனுமதி ரத்து செய்ய பட்ட் நிலையில் ..அவன் வாகனம் செலுத்தத்  பெருந்தொகை காப்புறுதிப்பணம் மாதம் கட்ட் வேண்டியுள்ளது . தந்தைக்கு அனுமதியிருப்பின்  அவரது உதவி ஓட்டுனர் என குறைந்த காப்புறுதியில் வாகனம் செலுத்தத் அனுமதி கிடைக்கும்.  புதல்வனுக்கு பயிற்சிக் காலம்  அதிகமாகும். அனுமதிப் பத்திரம் காலம் செல்லச்செல்ல பெறுமதி கூடும் சிறந்த ஒரு அடையாளமாக் ( identification ) வெளி நாட்டில்  கணிப்பர் . மகன் சுபன் வாகனம் ஓட்டுவதானால் காப்புறுதிப்ப்  பணமாக பெருந்தொகை  கட்ட் வேண்டியிருக்கும்  .மகனுக்கு தடையாக் இருப்பது தந்தையின் பொறுப்பற்ற செயல். புதல்வன் இப்பொது வாகனம் செலுத்தி பயிற்சி பெற்றுக் கொண்டால் இன்னும் இரு வருடங்களில் பெருந் தெருக்களுக்கான அனுமதி கிடைக்கும். மகனின் எதிர்காலம் தந்தையின் செயலில்..
இப்படிப்பட்ட  தந்தை  மீது எப்படி அன்பு வரும் ..............

வாழுகின்ற மக்களுக்கு,வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட் கடன், பிள்ளைகளை சேருமடி
சேர்த்து வைச்ச புண்ணியந்தான், சந்ததியை காக்குமடி...

 என்னை இப்பதிவு எழுத தூண்டியது உண்மைச்சம்பவம்.

.

Monday, June 28, 2010

என் இனியவளே .............

என் இனியவளே ................

பொங்கும் என் உள்ளத்துக்கு அணை போட யாருமில்லை,
மடலிலே வந்த சேதி மனதுக்கு மகிழ்வாச்சு ..
என் இனியவளே . கிடைக்கும் என் எண்ணியிருந்தேன்
இவ்வளவு சீக்கிரமாய் இனிய செய்தி எழுதுவாய்
என்று கனவிலும் எண்ணவில்லை ...

என் உயிர் உன் கருவில் வளர்வதை எண்ணி
உலக மகா உவகை கொண்டேன். என்னவளே
உறுதி செய்த மருத்துவருக்கு என் நன்றியை சொல்.
நாம கண்ட இன்பத்துக்கு  இவ்வளவு சீக்கிரம் பலனா?
உன்னை தூக்கி மகிழ் அருகில் இல்லையே

கண்மணியே ஒன்பதாம் மாதம் வரை பொறுத்திரு
எப்படியும் வந்து விடுவேன் என் உயிரைக் காண
ஊட்டச்சத்துக்கள் முறையாக் எடுத்துக்கொள்.
என் தாயே மீண்டும் வந்து பிறக்கவேண்டும்
நீ விரும்பினால் அடுத்த  வாரிசு.ஆணாக் இருக்கட்டும்.

ஆசிரிய பணி  மகத்தானது உன்னால் முடித்தவரை
பள்ளிக்கூடம் செல் முடியாத போது விடுப்பு எடுத்துக்கொள்
ஒவ்வொரு வாரமும் மடல் வரைக  ....மறந்து விடாமல்.
என் உடல் மட்டும் தான் இங்கே என் உயிர் உன்னிடம  .
மகப்பேறு மகளிருக்கு மறு பிறப்பாம் குறையேதும் இன்றி
படைத்தவன் காப்பான் ...கண்மணியே என்னவளே

கடமை எனை அழைத்தது...கடல் கடந்து வந்து விடேன்
காளையர்கள் பொருள் தேட கடல் கடக்கும் காலமென்பேன்
மறு மடல் காணும் வரை  மறக்காம்ல் என் முத்தங்கள்.
மற்றொன்றும  சொல்ல வேண்டும் ..என் மாமா மாமியார்
குட்டி மைத்துனி மற்றும் அயலவரிடம் நலம் கேட்டதாக் சொல்.

உடலும் உள்ளமும்   நலமே வாழ்க
நாம இருவரல்ல  மூவர் என்னும நினைவே என்
நினைவில்  நிலைத்திருக்கும். என்றும் உன் இனியவன் .