Followers

Friday, August 6, 2010

பிரதி பலன் .......


பிரதி பலன்


     காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து  அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம்  குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர் .பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார்.  ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை  நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி  நாட்டு வாழ்வுக்கே உரிய கால  நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி

Wednesday, August 4, 2010

தாய்மை...அன்று ஒரு நாள்

 
தன் முதற் பேறாய் என்னைக்  கருவுற்ற வேளை
உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை
மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது
பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது

காலப்போக்கில் உதரம்(வயிறு) சற்றே பருத்து
அயலவர்க்கு அடையாளம் காட்டியது
முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது
மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது

முருங்கைக் கீரை சத்துணவானது
எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது
இளம் வெந்நீர்க் குளியலில்  உடல் சிலிர்க்கையில்
 குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது

என் தந்தை என்னே தாய்மை என்றார்
எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் 
நாட்கள் எண்ணும் வேளை தன்னில்
இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க 

அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய்
கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று
மருத்துவிச்சி உதவியுடன் மகவு நான் வந்த போது
மட்டில்லா மகிழ்வு கொண்டு மகனாக் வந்துதித்தேன்

என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள்
சாண் பிள்ளையானாலும்  ஆண்  பிள்ளை என்றார் அப்பா
உற்றாரும் உறவும் கூடி ஆராரோ பாடி ..
அம்மாவின் அமுதம் சுவைத்து

மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ
அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக
ஒவ்வாத உணவுகளை விலக்கி வைத்தாள்
மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி

பாற் பல்லு  முளைத்தும் குறும்பன் நான்
குறும்பு செய்ய ..தடை போடாள் வேப்பென்னையுடன் .
.பல் வேறு உணவுகளும் பழக்கிய பின்
தவனம் தீரவில்லைஉறங்க  அணைக்கையிலே

பால் குடி மறக்க வைக்க பாட்டி  துணை வந்தாள் ...
அன்றைய என் தாய் எங்கே ...இன்றைய அவசர் உலகில்
நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர
பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் ....


குறிப்பு....

                 .மாந்தம் ..(ஒருவகை  வயிற் றோட்டம்)
                 மருத்துவிச்சி ....மருத்துவமாது ..(.இவரால்
                 முடியாவிடால் தான்  மருத்துவர் , வருவார். )
                
                  தவனம்....ஒருவகைத்தாகம் .

Tuesday, August 3, 2010

தாய்மை

தாய்மை

அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம்  மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு  தன் தாயார் வீடு நோக்கி   பட்டணத்துக்கான   பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று  கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள்.  ஒரு  மணி நேரத்துக்குபின  பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல்  எழுந்து விடான். அவள்  புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை  சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று  வரட்டும் "விலகுங்கப்பா " என்று சத்தமிட்டனர்.    அப்போதும் அவன் அழுகை அடங்க வில்லை ....Èபாலைக் கொடும்மா"  என்றனர் பெண்கள்ளில் பாட்டி  வயதானவர். முதற்குழந்தை அவள் வெட்கப்பட்டாள்.  ஆண்கள் வேறு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்...

இளம் தாய் ..மிகவும் சங்கடபட்டாள். . அவர் சாரியும் பிளவுசும் அணிந்து இருந்தார்....ஒருவாறு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குழந்தையை மெல்ல  அணைத்து சேலைத் தலைப்பால் அவனை மூடி ..மெல்ல பிளவுஸின் கொக்கிகளை .....( hook ) தளர்த்தினாள். அவளையே குறு குறு என் பார்த்து கொண்டிருதவார்களின் கண்கள் மறு திசை நோக்கி பார்த்தன...ஒரு கையால் அணைத்து மறு கையால் தட்டி தட்டி உறிஞ்சத் தொடங்கினார். நம் கதா நாயகன். அழுகை ஓய்ந்த திருப்தியில் அத்தனை பயணிகளும்.  நிம்மதிப் பெரு  மூச்சு விட்டனர்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தாயப்பாலையே  நம்பி வாழ்ந்தனர். இந்தகாலத்தில் பெண்களின் ஊட்ட சத்து குறைவோ என்ன காரணமோ பால் சுரப்பு சிலருக்கு போதியதாக் இருப்பதில்லை. பலருக்கு வேலைக்கு போகும் அவசரத்தில், புட்டிபால் கொடுகிறார்கள் சிலர் ....அது ஒரு நாகாரிகமாகவே கருதுகிறார்கள். தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது . கண்டிப்பாக  ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான கருக் கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம்.