Followers

Monday, January 10, 2011

மெளனமாய் ஒரு காதல்




மெளனமாய் ஒரு காதல் 

அந்த பள்ளி நாட்கள் நீண்டு போகாதா?  என் அங்கலாய்க்கும் ஒரு மாலைபொழுதில் ..............
கிராமத்தின் முக்கியமான்( இருபாலாருக்குமான )கலவன்  பாடசாலைகளில் ஒன்றில் ராகவன் உயர்வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். பணி நிமித்தம் இடம் மாற்றலாகி வந்தவர்கள் தான் .கேசவ வாத்தியார் குடும்பம். அவர்களுக்கு அழகான் ஒரே ஒரு பெண . அன்று ஒரு தை திங்கள் முதலாம் வாரம் , இவர்கள் பாட்சாலை யின் அனுமதிக்காக காத்திருந்தார்கள் அப்பாவும் பெண்ணும். தலைமை  ஆசிரியர் அன்றைய பணியில் மூழ்கி இருந்ததால் , ராகவன், அவர்களுக்கு உதவும் முகமாக , வரவேற்பறையில் ஒரு ஆசனத்தில் இருத்தி , காத்திருக்கும்படி சொன்னான். அவன் வகுப்புக்கு சென்றுவிடான். சில மணி நேரங்களில் வகுப்பு ஆசிரியரை இடை மறித்த தலைமை  ஆசிரியர் தேவகியை அறிமுகம் செய்தார்.
ராகவனுக்கு ஒரே ஆச்சரியம் அவள் தன் வகுப்பில் இணைந்து  காலப்போக்கில் சக மாணவர்களுடன் கலந்து கொண்டாள். 

ஆரம்பத்தில் கண்ட அறிமுகம் ராகவன் மீது ஒரு மதிப்பை தேவகிக்கு கொடுத்து இருந்தது. நல்ல அறிவாளியான பெண . விரைவில் கற்று கொள்வாள். சக தோழியருடன் கல் கலபாக் பேசுவாள். மாணவர்களுடன் பேச சற்று வெட்க  படுவாள் . ராகவனுடன் மட்டும் ஒரு அறிமுக புன் முறுவலுடன்  சென்று விடுவாள்.  ஒரு நாள் இவர்கள் வகுப்பு ஒரு சுற்றுலா புறப்பட ஆயத்தமானது. மூன்று விஞ்ஞான ஆசிரியைகளுடன் ,இருபது மாணவிகளும் பதினைத்து மாணவர்க்களுமாக் பயணம் புறப்பட்டார்கள். அது ஒரு தாவரவியல் பூங்காவுக்கான , பயணம். செல்லும் வழி எல்லாம் பாட்டும் நக்கல் நளினங் களுமாக் சந்தோஷமாக் சென்றது.  அங்காங்கே ஆசிரியை நிறுத்தி விபரங்களுடன்  குறிபெடுத்து கொண்டனர். மாலை  வீடு திரும்பும் நேரம் குறித்த் நேரத்துக்கு மிகவும் தாமதமாகியது . வீடு செல்லும் போது மிகவும் இருட்டிவிட்டது அது ஒரு கிராமமாகையால் பெருந்தெருக்களில் மட்டும் வெளிச்சம் இருக்கும் தேவகி  வீடு ராகவன் வீடுக்கு அடுத்த் தெருவில் இருந்தது. எல்லோரையும் பாதுகாப்பாக் சேர்ந்து போகும்படி ஆசிரியை வழிகாட்டினார். இறுதியாக் தேவகியின்  முறை வந்த்தும் அவள் தனித்து விடபட்டாள். ராகவன் முன் வந்து அவளை பாதுகாப்பாக  அவள் வீடுக்கு அழைத்து செல்வதாக் சொன்னான். 

காலம் உருண்டோடியது ஆண்டின் இறுதிபரீட்சைக்கு ஆயத்த காலம் . ஒரு நாள் நண்பன் வீடில் பாடங்களை  இணைந்து படித்து விட்டு ( group study ) வீடு திரும்பி கொண்டு இருந்த போது தேவகி எதிர்பட்டால் நட்பு நிமித்தம் பேசிக்கொண்டே சென்றார்கள். பரீட்சையும் முடிந்தது . எல்லோரும் அவரவர் பாட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.  தேவகியும் அவள் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள்.  அவளுக்கு முன்னே வேகமாக் வந்த சைக்கிள் வண்டி சற்று தாமதத்தி த்தது ...பின்னே திரும்பி பார்த்தவள் ராகவன்  தன்னை காரணமில்லாமல் பின் தொடர்வதை உணர்ந்தாள்.  எதுவுமே பேச்வில்லையே என் ஆரம்பி த்தவ வளுக்கு ராகவனின் எண்ணம் புரிந்தது . அவளது குண இயல்புகள் தன்னை மிகவும் கவர்ந்த்ததாக்வும். அவளை விரும்புவதாகவும் சொன்னான். அமைதியான் ஒரு புன்னகையுடன் அவள் வீடு வரவே அவன் விடைபெற்றான் 

பின்பு ஒரு நாள் , ராகவன் அவளை கோவில் ஆலமரத்தடியில் சந்தித்து , தான் தலை  நகருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து செல்வதாக் சொல்லி விடை பெற்றான். நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி சென்றது. பரீட்சை முடிவு  வந்தது. இருவரும் மிகவும் திறமையாக் சித்தி பெற்று இருந்ததனர். தேவகி ஒரே ஒரு பெண என்பதால் விரைவில் திருமண் பேச்சை  ஆரம்பித்தனர். அந்த ஆண்டு திருவிழாவுக்கு ராகவன் ஊருக்கு வந்திருந்தான். திருவிழாவின் இறுதி நாளன்று தேவகி சேலை அணிந்து தேவதை போல காட்சியளித்தாள். அன்று தான் அவன் அவளை சேலையில் பார்த்தது. அழகாய் இருப்பதாக  சைகையால் தெரிவித்தான். அவள்  நாணத்தால்  சிவந்தாள். மீண்டும் வார விடுப்பு முடியவே தன் பணிக்கு சென்றுவிடான். அந்த மாத இறுதியில் ஒரு நாள்.இவன்பெயருக்கு ஒரு மடல் வந்திருந்தது , அதில் தேவகி தனக்கு திருமணம் நிச்சயமாகி வருவதாகவும் , அவனது நிலைமையில் அவனை பற்றி எதுவும் தன்பெற்றாருக்கு சொல்லி முடிவெடுக்கக் முடியாதிருபதாக்வும் அவனது தங்கை , குடும்பபொறுப்பு ..அவன் பெற்றாரின் நிலை என்பது பற்றி விளக்கி, தன்னை மறந்துவிடும்படி எழுதியிருந்தாள். ராகவன் மிகவும் மனமோடிது போனான் தன் த கையாலாகாத தனத்தை எண்ணி கலங்கினான்.  அந்த வருட திருவிழாவுக்கு செல்ல வில்லை.  அவளது கணவன் அவூரின் பல்கலைகழக விரிவுரையாளர் எனவும் திருமணத்தின் பின் அவ்வூருக்கு மாற்றல் பெற்று வார இருபதாகவும் ராகவனின் தந்தை மடல் மூலம் சேதி கண்டான். 

அவன் ஊருக்கு சென்று வருடங்கள் மூன்று உருண்டோடி விட்டது. இடையிடையே அவ்ளை பற்றி  ராகவனின் தங்கை எழுதுவாள்.  ஒரு முறை அவளுக்கு அழகான் பென் குழந்தை கிடைத்திருப்பதாக எழுதினாள்.  வருடங்கள் பல உருண்டோடின . ஒரு நாள் ராகவனின் தாயிடமிருந்து ஒரு மடல் . தங்கைக்கு மாபிள்ளை பார்த்திருபதாக்வும் அம்முறை திருவிழாவோடு பெண பார்க்க வர இருக்கிறார்கள் எனவும் ராகவனை ஊருக்கு வந்து தந்தையிலாத அவளுக்கு , ஆறுதலாய் , வந்து காரியத்தை ஒழுங்கு செய்யும்படி தாயார் மிகவும் வற்புறுத்தி கேட்டு எழுதினார்.  ராகவன் தங்கைக்காக புறப்பட ஆயத்த்தமானான் . ஊருக்கு புறபட்ட்வனின் எண்ண அலைகள் ஒருவித சோகம் ஏமாற்றம் வெறுமையால் சூழப்பட்டது. தங்கையின் அலுவல்கள் பேச்சுவார்த்தை போன்றவை சுபமே நிறைவடைந்த்து.  அடுத்த முகூத்த்தில் திருமண் ஏற்பாடாகி இருந்தது. மறுநாள் , ஊர்க்கோவிலின் இறுதி திருவிழா வீதியெங்கும் சிறு கடைதொகுதிகளால் நிறைந்து இருந்தது. பலூன்கள் , ஊது குழல்களின்  சத்தம் சிறு விளையாட்டு பொருட்களின் வியாபரம் என் ஒரே ஜனக்கூட்டம்.  

அவன் அருகில் மூன்றுவயது சிறுமி ..ஒரு பலூனை துரத்தியவாறு எட்டிப்பிடிக்க் வந்து கொண்டு இருந்தாள்.ராகவி ...என் அழைத்தவாறு , தாயார் ...அவள் பின்னே . திரும்பி பார்த்தவன் ஆச்சரியத்தால் பிரமித்தான். அவன் அருகில்  தேவகியும் குழந்தையும்... பேச நாக்கு அசையவில்லை. அவள் தான் பேசினாள் " நல்லாய்  இருகிறீங்களா? " .......எதோ இருக்கேன். ...குரலில் சோகம் இழையோட ..கூறி மெளனமானான் . ...ராகவி ...........ராகவி .........அவன் வீடு வரும் வரை ஒலித்து கொண்டே இருந்தது. அவள் குழந்தைக்கு என் பெயரின் ஆரம்ப  எழுத்துக்கள். மெளனமாய் அவன பெயர் , அவன் காதல் அவள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

எல்லோருடைய காதலும் நிறைவேறுவதில்லை.சில காதல்கள் தான் நின்று நிலைத்து வெற்றியடைகின்றன . . இளமையில்  காதல் இல்லாத வாழ்வும் இல்லை.,  இருப்பினும் மெளனமாய் அவர்கள் காதல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ...என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒன்று 

12 comments:

கவி அழகன் said...

அருமையான காதல் கதை என்ன சோகத்தில் முடிந்து விட்டது. அந்த காலம் ஏன்டா படியா தொடர்பாடல் பிரச்னை இப்ப ஏன்டா sms skpe எண்டு ஒரு மாதிரி develope பணியிருப்பன் ராகவன்
பாவம்

Yaathoramani.blogspot.com said...

காதலில் எப்போதும் மௌனமே அதிகம் பேசும்
அதை இக்கதையில் உணர முடிகிறது

Chitra said...

very well written.

ஹேமா said...

இப்படி எத்தனை காதல்கள் நினைவுகளோடு மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன !

அந்நியன் 2 said...

காதல் கதை எப்போதுமே சோகத்தில்தான் முடியும் என்று நிருபித்து விட்டீர்கள் கதையும் அதை பொறுமையாக எழுதிய விதமும் அருமை வாழ்த்துக்கள்.

தமிழ்த்தோட்டம் said...

அருமையான காதல் கதை அக்கா

arasan said...

அக்கா அழகா ஒரு காதல் கதை ...

அற்புதமா எழுதி இருக்கீங்க ...

நான் மிகவும் ரசித்து படித்தேன் ....

ரொம்ப நல்லா இருக்குங்க அக்கா

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான காதல் கதை. ராகவி - அழகிய பாத்திரப் பெயர். பகிர்வுக்கு நன்றி சகோ.

'பரிவை' சே.குமார் said...

அருமையான காதல் கதை.

ADHI VENKAT said...

நன்றாக இருந்தது.

ம.தி.சுதா said...

காதல் நினைவுகள் அழியாதவையாகும்...

jgmlanka said...

//மெளனமாய் அவர்கள் காதல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ..// கதையின் இறுதியில் இந்த வரிகள் நெஞ்சைப் பிழிகின்றன.... அழகிய கதை என்று கூற முடியாதவாறு கதையின் சோகம் தடுக்கிறது... வாழ்த்துக்கள் தோழி