நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

என் அக்காச்சி
என்  அக்காச்சி  


அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்
 பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால்
ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் 
ஈரைந்து மாதங்களில்  இருந்தே என்னை சீராட்டி 
பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.துள்ளித்திரியும் பருவத்தே
 துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.  

பங்காளிகளுடன் சண்டை என்றால் 
கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். 
சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.
அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய 
வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து 
சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . 
உயர்கல்வி கற்க  வேற்றிடம் செல்ல நேர்கையில் 
விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.

பட்டம் நான்பெற்ற போது என் பரிசை 
மாரோடு அணைத்து மகிழ்ந்தவள். 
ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.
முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து  
திருவிழா செல்கையில் யார் இந்த தேவதை
என ஊர் பார்க்க வியந்தவள். 

திருமண வயதில் தேடி வந்து பெண் கேட்ட் 
திலகம் மாஸ்டர் முன் நாணிக் கோணி நிற்கையில் 
என் இதயம் களவு போவதை  எண்ணி ,
உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக  நலமாக நீ வாழ் வேண்டும் 
என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .

திருமண் மாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற என்  இதயம் 
துக்கத்தால் துவண்டது . கருவொன்று உருவாக்கி
மகபேற்று விடுமுறையில் வாழ்ந்த வீடு வந்த போது 
மட்டிலா மகிழ்வு கொண்டு , என் உயிரில் தாங்கினேன். 

பெண் மகவொன்று வந்துதிக்க் உனக்கு தான் என்னவள் 
என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி என்னை
 மனமுருக வைத்தவளே .மறுபடியும் மகவாக் 
என் வாழ்வில் மகராசி வரவேண்டும்.  

21 கருத்துகள்:

r.v.saravanan சொன்னது…

me first

இரவு வானம் சொன்னது…

arumai :-)

அந்நியன் 2 சொன்னது…

ஆகா அருமை ...அக்காச்சியின் கவிதை படிப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது இங்கு.

ஆனால் இன்றைய நடப்பு சூழ்நிலையிலேயும் மகளின் சேவையை அழகாக வர்ணித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் !

ரங்கன் சொன்னது…

எனக்கு ஒரு அக்காள் இல்லையே என்று இப்போ ஃபீலிங்கா இருக்கு..!!

Chitra சொன்னது…

பெண் மகவொன்று வந்துதிக்க் உனக்கு தான் என்னவள்
என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி என்னை
மனமுருக வைத்தவளே .மறுபடியும் மகவாக்
என் வாழ்வில் மகராசி வரவேண்டும்.


...நெகிழ வச்சிட்டீங்க...

இளம் தூயவன் சொன்னது…

சகோதரியின் பாசத்தை அழகாக வடித்துள்ளிர்கள்,உண்மையான பாச மலர்கள்.

நிலாமதி சொன்னது…

ஆர் வீ சரவணன். ரங்கன் சித்ரா இரவு வானம் ...........இளம் தூயவன். உங்கள் அனை வருக்கும் என் நன்றிக் கள் .
இது சற்று முந்திய காலக் கதை தான் . இந்த அக்காச்சியின் சிறுபராய நினைவுகள்.

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
மனமுருகி படித்தேன்.
வாழ்த்துக்கள்.

யாதவன் சொன்னது…

நெஞ்சை தொடும் நிகழ்வு அருமையாக எழுத்து உள்ளீர்கள் உணர்வுபோர்வமாக இருக்கிறது ஏங்க இருந்தது தான் இந்த நிகழ்வெல்லாம் உங்களுக்கு கிடைக்குதோ தெரியா எல்லாம் அனுபவம் தந்த உணர்வுகள் போல

Sriakila சொன்னது…

என்னமா எழுதியிருக்கிறீங்க? சூப்பர்! சூப்பர்!

ஹேமா சொன்னது…

மனதை உருக்கியெடுக்கும் பாசம்.வரிகளில் நின்று நின்று படிக்கவைக்கிறது அக்கா !

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

பாசமுள்ள சகோதரம் கிடைப்பது மனதுக்கு இனியதுதானே. உணர்வோட்டமான பதிவு

Ramani சொன்னது…

எல்லா அக்காச்சியிடமும் நிறைந்து கிடக்கும்
தாய்மையை மிக அழகாகச் சொல்லிச் செல்லுகிறது
உங்கள் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

எனக்கு ஒரு அக்காவோ தங்கையோ இல்லையே என ஏங்க வைத்து விட்டீர்கள்.
நன்றி அக்கா

சீமான்கனி சொன்னது…

அன்பான அக்காச்சியிடமிருந்து...
அழகான அக்காச்சி...(கவிதை)...நல்லா இருக்கு அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஎன் இதயம் களவு போவதை எண்ணி ,
உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக நலமாக நீ வாழ் வேண்டும்ஃஃஃஃ

இவ்வளவு அழுத்தமா எழுதிறிங்களே... அருமை அக்கா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

சே.குமார் சொன்னது…

அக்காச்சியின் கவிதை அருமை.

அரசன் சொன்னது…

அக்கா மிக இயல்பாய்
எளிமையாய் வார்த்தைகளை
பக்குவமாய் கையாண்டு
அக்காச்சியின் உணர்வுகளையும் , தம்பியின்
பாசத்தையும் சிறப்புற கூறி இருக்கின்றீர் ...
படிக்கும் போது சில இடங்களில்
மனது என்னவோ பண்ணுகிறது...
உயிர்ப்புள்ள வரிகள் அக்கா ....
மிகவும் ரசித்தேன்

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

தாய் பாசத்தோடு அக்கா பாசம்! அன்பில் நெகிழ்ந்து, அக்கா இல்லையே என ஏங்க வைத்து விட்டது கவிதை! அருமை!!

சுந்தரா சொன்னது…

அக்காவின் பாசம் அழகான வாழ்த்தைகளில்...

நெகிழ்ச்சியான கவிதை.

பழமைபேசி சொன்னது…

நன்று