நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

திங்கள், 12 டிசம்பர், 2011

தெளிவு ............
 அமைதியான வாழ்வில் புயல்போல் வந்தது சாரங்கனின்...புறப்பாடு ........ அவன் பிரபலமான ஒரு பல்   கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருந்தான்.  இனப்பாகுபாடு காரனமாக   பெரும் கலகம் மூண்டது. நாட்டைவிட்டு வெளியேறியே  ஆக வேண்டிய கட்டாயம் அயலில் உள்ள     ஒரு நாட்டுக்கு புறப்பட்டு  சென்றான் தற்காலிக விசா அனுமதியோடு .மிகவும் கஷ்டபட்டு  ஒருவேலையில் சேர்ந்தான்  .கொண்டுவந்த காசு எவ்வளவு காலம் கை கொடுக்கும். ..பகலில் படிப்பும் இரவில் வேளையுமாக கழிந்தது அவன் காலம். .மூன்று வருடங்கள்  கஷ்ட பட்டு படித்ததின்  பயனாக அவனை அவன் படித்த் தொழில்நுட்ப கல்லூரி இல் பகுதி நேர  விரிவுரையாளராக   சேர்த்தார்கள்.  நாட்டில் மேலும் மேலும் பிரச்சினை நீண்டு கொண்டும் கொடூரமாகவும சென்றதே தவிர தணிந்த    பாடில்லை . .....தனிமையும்  பெற்றவர்களை பிரிந்த சோகமுமவனை வாட்டியது ........

ஓய்வு நேரங்களில் கணனியில் இருபதுதான் அவனது வேலை. நிறைய நண்பர்கள்  கிடைத்தனர் . அவனது தமிழ் எழுத்து ஆற்றல்  மேலும் வளமானது ......முகபுத்த்த்கமேனும்  நட்புவட்ட்த்தில் இணைந்தான்..........சில ஆண்களும் சிலர் பெண் பெயரில் ஆண்களும் பெண்களும் இணைந்து கொண்டனர்
. ....இத்தகைய நட்பு வட்டத்தில் ஒரு பெண் இவனது தளத்தில் இணைந்து கொண்டாள்.   நட்பான   உரையாடலில் அவள் தன்  தாயகத்தை சேர்ந்தவள் என்பதை   அறிந்து மேலும் நட்பை வளர்த்துக் கொண்டார்கள்  . காலபோக்கில் அவள் தன்  சுயசரிதம்  பகிர்ந்து கொண்டாள் அவள் பெயர் சாம்பவி .........அவள் ஒரே ஒருபெண் என்றும்... இளவயதிலே ..வெளிநாடு ஒன்றிக்கு இடம்பெயர்ந்தவள் என்றும் படித்து விட்டு வேலைபார்பதாகவும் சொன்னாள். தந்தையை பற்றிய பேச்சை  அதிகம் தவிர்த்துக் கொண்டாள்  . இவனும் மிகவும் கஷ்டபட்டு  படித்து கொண்டே வேலை செய்வதாகவும்.........தாய் தந்தையர் விவசாயம் செய்பவர்கள் என்றும் சொந்த கிராமத்த்திவிட்டு வேறிடம் இருபதால் வாழ்க்கை செலவுக்கு மிகவும் கஷ்டபடுவ்தாகவும் தெரிவித்தான் .. தன்னை குடும்ப   ஆதாரதுக்காக் நம்பி இருபவர்கள் என்றுமிரு சகோதரிகள் இருபதாகவும் சொல்லிக் கொண்டான்........ஒருதடவை ,அவளது தந்தைபற்றிய பேச்சில் அவர் தாயை பிரிந்து இருப்தாகவும் இதனால்தான் தாயுடனே வசிபதாகவும்.....சிறுவயதிலே தந்தையை பிரிந்ததால் .........மிகவும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டதாகவும் , தந்தையின் அன்புக்கு ஏங்குவதாகவும் சொன்னாள். 

காலம் ஓடிக்கொண்டே இருந்தது ......அவள் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து  கொண்டிருந்தாள் .இவர்களது நட்புக்கு   வயது இரண்டு வருடங்களாகின......ஒரு நாள் இவன் தான் அவளை திருமணம் செய்ய  விரும்புவதாக சொன்னான்........ அவளுக்கும் பிடித்தது  இருந்தது . தன் தாயின் சம்மதம் கேட்டு முறைப்படி திருமணம் செய்ய அவன் இருக்கும் நாட்டுக்கு வ்ருவ்தாக் சொன்னாள். .பின் பதிவுத்திருமணம் நடந்த பின் .........தான் இருக்கும் ..நாட்டுக்கு குடும்ப் ஒன்றிணைவு  குடிவரவு மூலம்  வரவழைத்து கொள்ள்வதாக்வும் சொன்னாள ..அவர்கள் இருவரும் அந்த நல்ல நாளுக்காக   காத்து இருந்தனர்................மீண்டும்    ஒருதடவை பேச்சுவாக்கில் அவள் மன உளைச்சலால் சில காலம் வருந்தியதாகவும் ( depression ) வைத்தியரிடம் காண்பித்து மருந்துவகை பாவிப்பதாகவும்     சொன்னாள். அதைக் கேட்டதும் இவனுக்குள் ஒரு சஞ்சலம்.............தன் நண்பனிடம் கேட்டான் .

அவனோ வெளிநாட்டி ல் வாழும்  புலம்பெயர்ந்தவருக்கு இது இயற்கை எனினும் தந்தையை பிரிந்த   சோகமும் அவளுக்கு இருக்கும் எனவே இது சாதாரணம் அவள் உண்மையை சொல்கிறாள் எனவே நீ துணிந்து    திருமணம் செய் என புத்தி சொன்னான்............

.அவனோ கலங்குகிறான்.................ஒருமுடிவுக்கு வரமுடியாமல்.?.........என்ன செய்யலாம் அவன் வாழ்வு வளம் பெறுமா  ? ....மீண்டும் தாயக்த்தில் சென்று நிம்மதியாக   வாழ முடியாத நிலை அவனுக்கு .......அவன் தெளிவு பெறுவானா ? காலம் தான் அவனுக்கு நல்ல பதில் சொல்ல வேண்டும் ..

கதை கற்பனையல்ல ...........  

14 கருத்துகள்:

புங்கையூரன் சொன்னது…

இந்தக் கதையின் கதா நாயகனுக்கு, இன்னும் ஒரு திருமண பந்தத்தில், ஈடுபடத்தேவையான , பக்குவநிலை இன்னும் வரவில்லை. கொஞ்சக் காலம் பொறுத்திருப்பதே புத்திசாலித்தனம்!!!

அரசன் சொன்னது…

தெளிவான ஒரு முடிவு அவர்தான் எடுக்க வேண்டும் அக்கா..
வாழப்போவது அவர் தான் ..
பகிர்வுக்கு நன்றிங்க அக்கா ...

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

சிநேகிதி சொன்னது…

அருமை

நிலாமதி சொன்னது…

புங்கையூரன்... ரத்னவேல்... அரசன் ..சிநேகிதி ..

என் தளம் வந்து கருத்து பகிர்ந்த உங்களுக்கு என் நன்றி .

இமா சொன்னது…

நிச்சயமற்ற மனதோடு மணவாழ்வில் ஈடுபடுவதை விட பொறுத்திருந்து முடிவுசெய்தல் மேல்.

எஸ் சக்திவேல் சொன்னது…

அத்தோடு அவன் மனம் இன்னும் பக்குவப்படவேண்டும். வெளிக்கு என்னதான் சொன்னாலும் வெளிநாட்டில் வளர்ந்த பெண்ணை இவனால் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமா?

athira சொன்னது…

வெளிநாட்டைப் பொறுத்தவரை டிப்பிரஷன்... மருந்தெடுத்தல் என்பது சகஜமே... அது சாதாரணமானதுதான்... ஆனால் எந்தளவுக்கு ஆளமான டிப்பிரஸ்ட் என்பதை அறிந்து இறங்குவது மேல்.

இன்னும் சிலகாலம் பழகியபின் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றே தோன்றுது. அல்லது ஆரும் தெரிந்த உறவுகள் மூலம் பெண்ணை நேரில் சந்தித்துப் பழகச் சொல்லலாம்.

என் கணவரின் ஒரு நண்பர்.. அவரும் டாட்டர்.. அவருக்கு நல்ல வசதியான குடும்பத்தில் நன்கு படித்து நல்ல பதவியில் இருக்கும் ஒரு அழகான பெண்ணுக்கு கொழும்பில் வீடு வளவோடு, திருமணம் முற்றானது.

பெண் வீட்டினர் வீட்டுக்கு இவரை தினமும் அழைத்து நல்ல நல்ல சிற்றுண்டி எல்லாம் கொடுப்பார்கள், அவர்களுக்கு ஒரே ஒரு பிள்ளைதான் அப்பெண்.

இவருக்கும் எல்லாமே நன்கு பிடித்து, நன்கு போய் கொண்டாடி வந்தார்.... நல்ல ஒட்டு வந்தபின்பே.. அப்பெண் நேரில் சொன்னாராம்... தனக்கு சின்ன வயதிலிருந்தே டயபட்டிக்.. தான் இன்சுலின் பாவிக்கிறேன் என....

அவர் டாட்டரல்லவா... அதன் விளைவுகள் நன்கு தெரியுமெல்லோ.... உடனேயே விலத்தி விட்டார்..

ஆனால் சில காலம் டிப்பிரெஸ்ட் ஆகி ஆரோடும் பேசாமல் இருந்து, மிக கஸ்டப்பட்டுத்தான் வெளியே வந்து நோமலாகி, பின்பொரு பெண்ணை விரும்பி.. இப்போ நலமே இருக்கிறார்கள்.

சில விஷயங்கள் கால் வைக்க முன் முடிவெடுப்பது நல்லதே.

நிலாமதி சொன்னது…

இமா............. சக்திவேல் ..............ஆதிரா என் நன்றிகள்

john danu சொன்னது…

நல்ல பதிவு...

தமிழ்தோட்டம் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி அக்கா,

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அக்கா தொலைதூரக் காதல்களின் பின் விளைவை பதிவில் வடித்துள்ளீர்கள்...

நன்றி... இது என் போன்ற இளம் சந்ததிக்கு சமர்ப்பணமே...

அம்பலத்தார் சொன்னது…

அவ்விருவருக்கும் இடையே போதுமான புரிதல் ஏற்படுமுன் திருமணத்திற்கு அவசரப்பட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு நிலாமதியக்கா. ஆனால், சாரங்கன் சாம்பவியை நேரில் சந்தித்து பேசி அதன் பின்பே திருமணப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்தப் பெண்ணுக்கு திருமணத்தின் பின் மன அழுத்தம் வந்திருந்தால் என்ன செய்வார்? உண்மையில் நேசிப்பதேன்றால் கஷ்டமோ நஷ்டமோ, சந்தோஷமோ சேர்ந்தே பங்கெடுக்க வேண்டும்.

சாரங்கனுக்கு மனக்குழப்பம் வந்து விட்ட படியால், நேரில் கலந்து பேசி முடிவெடுத்தலே சரியாக இருக்கும்.

அன்புடன் - ஈஸ்!