நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

திங்கள், 24 ஜனவரி, 2011

இன்னும் கொஞ்ச நேரம்.


இன்னும் கொஞ்ச நேரம். மம்மி .............

அதிகாலை  சூரியன் இன்னமும் தென படவில்லை ......கோகிலா அலாரத்தின் ஓசைக்கு எழுந்து ...காலைக்  கடன் முடித்து  அடுக் க ளை சென்று காப்பி தயாரித்தாள் ..சரவணனும் எழுந்து அவனும குளிக்கும்  கடமையை செய்து கொண்டு இருந்தான்.சரவணனுக்கு காப்பி தயாராக் மேசையில் காத்திருந்த்து . அவசர அவசரமாக் குளிர் பதனப்பெட்டியிலிரவே போட்டுவைத்திருந்த  சாப்பாட்டு பெட்டிகளை அவனுக்கும் தன்க்குமாக் கைப் பையில் அடக்கி கொண்டாள். இனி குட்டிக் கண்ணன் கோபியை எழுப்பவேண்டும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறான். பாவம் குழந்தை இந்தக் குளிர் நாட்டுக்கு வந்து அவனும் எங்களுடன்.......சேர்ந்தே ஓடுகிறான்.........