Followers

Wednesday, February 2, 2011

உன்னைத் தவிர என்னவேண்டும் .........



உன்னைத் தவிர என்ன  வேண்டும் ...........

அன்புக்கும் ஆசைக்கும்  பரிசாய்
வந்துதித்த வெண்ணிலவின்
கண்களும் கவிபேசி
காதலும் உருவாகி
சுப நாள் ஒரு திருநாளிலே
மணமகன் நீயாக்
மங்கையிவள் கைப்பிடித்து
இன்புற்று வாழ்கையில்

 ஆணோன்றும் பெண னோன்றும்
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு
ஒன்றுமாய்  பெற்று
இன்புற்று  வாழ்கையில்
மாரடைப்பில் தந்தையை
கொண்டு சென்ற காலன்
தாயையும் நோயிலாழ்த்தினான்.
விதி வந்த வேளை
அன்னை அவள்  சென்றுவிட
.
ஈர்பத்து வருடங்கள்  உருண்டோடி
.மகவுகளும் கரை சேர்ந்து
இன்புற்று இல்லறம் நோக்கி
 மகவுகளும் சென்றுவிட
தாயாய் தாரமாய்
மங்கையவள் துணை  நிற்க
வானமாய் அவன் காத்து நிற்க
வருடங்கள் மூபத்து
சொல்லாமல்  ஓடியது .

அன்னை வளர்ப்பில் இருபதும்
அத்தான் அணைப்பில் முப்பதுமாய்
ஐ பத்து வருடங் கள் தளம்பாமல்
தன்னாலே சென்றது
தாய் தந்தையிலும்  மேலாய் எனை
கண் போல் காத்து கரிசனையாய்
உணவோடு உடை தந்து  துணை இருந்து
அன்போடு  ஆதரவும் பரிவு பாசம் தந்தாய்

உயிராய் எனை வலம் வந்தவனே
உனக்கும் ஆண்டுகள் ஆறு பத்து ஆயிற்று
வேறென்ன வேண்டும் இப் புவியில்
.உனைபிரிந்து  இவ்வுலகில்
உயிர் தரியேன் ஒரு நாளும்
உன்னோடு இணைந்தே வர
வரம் தரவேண்டும்
உலகாளும் இறைவா
............


திருத்தம் ..............உடன் கடடையேற  என்பது இணைந்தே  வர  என் திருத்தப் பட்டது  

Tuesday, February 1, 2011

எதிர்பார்ப்பின் எல்லைகள்

எதிர்பார்ப்பின் எல்லைகள் 

அந்த பேரூந்தின் நெரிசலில் ஏறிக் கொண்டாள். பயணிகள் காலை மிதிப்பதும் மனிதர்களின் வியர்வை மணமும் . அழும் குழந்தைகளுமாய் ஒரு மணி நேர பயணம் அவளுக்கு ஆரம்ப மாகியது ...அவள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். சில அவளது பணி நேரம் பகலிலும் இருவாரங்களுக்கு ஒரு முறை இரவிலும் அவள்து பணி இருக்கும்.............தோளில் தொங்க்கும் கைப் பை ..ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கும் மத்திய உணவு , ...இவற்றை ஒதுக்கி பேரூந்துக் கட்டணத்துக்கான காசை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்து டிக்கட் எடுத்தாள் . கை பிடிக்கும் கம்பிக்கு அருகே நின்று கொண்டாள் . அருகே இருந்த வயதான் மூதாட்டி இறங்கும் இடம் வரவே .