Followers

Friday, February 18, 2011

என் அக்காச்சி




என்  அக்காச்சி  


அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்
 பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால்
ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் 
ஈரைந்து மாதங்களில்  இருந்தே என்னை சீராட்டி 
பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.துள்ளித்திரியும் பருவத்தே
 துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.  

பங்காளிகளுடன் சண்டை என்றால் 
கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். 
சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.
அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய 
வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து 
சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . 
உயர்கல்வி கற்க  வேற்றிடம் செல்ல நேர்கையில் 
விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.

பட்டம் நான்பெற்ற போது என் பரிசை 
மாரோடு அணைத்து மகிழ்ந்தவள். 
ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.
முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து  
திருவிழா செல்கையில் யார் இந்த தேவதை
என ஊர் பார்க்க வியந்தவள். 

திருமண வயதில் தேடி வந்து பெண் கேட்ட் 
திலகம் மாஸ்டர் முன் நாணிக் கோணி நிற்கையில் 
என் இதயம் களவு போவதை  எண்ணி ,
உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக  நலமாக நீ வாழ் வேண்டும் 
என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .

திருமண் மாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற என்  இதயம் 
துக்கத்தால் துவண்டது . கருவொன்று உருவாக்கி
மகபேற்று விடுமுறையில் வாழ்ந்த வீடு வந்த போது 
மட்டிலா மகிழ்வு கொண்டு , என் உயிரில் தாங்கினேன். 

பெண் மகவொன்று வந்துதிக்க் உனக்கு தான் என்னவள் 
என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி என்னை
 மனமுருக வைத்தவளே .மறுபடியும் மகவாக் 
என் வாழ்வில் மகராசி வரவேண்டும்.