நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, March 13, 2014

...வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்.....


அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த   பனிக்கால   இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும்   ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ...  நடு   நிசி....எழுந்து பாத்ரூம்   போய்  விட்டு வந்து  தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க  முயற்சிக்கிறாள் ..அருகே இரு   குழந்தைகளும்  ஆழ்ந்த் நித்திரை .....  

முன்னைய  நாட்கலேன்றால் அவரவர்  அறையில்  தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி  அனுமதிபெற்று ...உள்  வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான  கட்டளை.   இந்நாட்டு  வழக்கப்படி   ஆணுக்கு  ஒன்றும் பெண்ணுக்கு  ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை  அனுமதிப்பார்கள்.     சில வாரங்களாக  ...அவர்கள் இவளோடு தூங்குகிறார்கள் இவளுக்கும் அது இதமாக் இருந்தது. அவர்களும் ஒரு  ஆதரவாக உணர்ந்து   இருந்தார்கள்.

பாஸ் கரனுடன் அமைதியாக  சென்ற குடும்ப வாழ்க்கை இப்படி புயலாக  மாறும்  என  அவள்  எண்ணவே  இல்லை. சில் மாதங்களுக்கு முன் நாங்கள்  சற்று பெரியவீடுவாங்குவோம்  ஆலோசனை கூறி  ..அவர்களிருந்த  வீடு விற்பனைக்கானது . பின்பு ஒரு மூன்று அறைகள் கொண்ட (கொண்டோ )தொடர்மாடிக்கு  இடம்  மாறியபோது தான்  அனித்தா விழித்துக்  கொண்டாள் .

சில  மாதங்களாக அவன் இரண்டு நாள் வேலை....தூர இடத்தில் வேலை  என  சாட்டு சொல்லி அங்கு  தங்குவதாக  சொல்வான். வீட் டிலும் எந்நேரமும் சிந்தனை வயப்பட்டவனாக இருப்பான். பிள்ளைகள்  எங்கா வது வெளியில் கூட்டிப் போவதற்காக  இருந்தாலும் தாமதமாக் வந்து அந்த நாளை சோகத்தில் ஆழ்ந்துவான். மகளுக்கு பன்னிருவய தாகிறது அவளில்  மிகுந்த நேசம் உள்ளவன். தன தாயின் சாயல் என்று சொல்வான். படிக்கும் காலத்திலேயே காதலித்துகைப்  பிடித்தவன். இவளும் தந்தையை இழந்த்தவள் .  கனடா நாட்டில்    கடின உழைப்பால்  முன்னுக்கு வந்தவர்கள். ஒரே ஒரு தங்கை ..அவளும் மணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்வாய்  வாழ்கிறாள். கோடை விடுமுறையில் மகனுடன் சேர்ந்து பந்துவிளையாடுவான்.  அமைதியான  வாழ்வில்  ஏன்  இப்படி ஒரு சுழல் காற்று 


 சில மாதங்களுக்கு  முன்பு ...அவள் அவனது செல் போனை ஆராய்ந்த போது   தான் ஒரு பெண்ணின் பெயர் பல தடவை பதிவாகி இருந்தது. அதுபற்றிக்  கேட்டதால்  தான் முதலில் சாட்டுபோக்கு சொன்னான் ...பின் பிரச்சினையாகி ஒரு பூகம்பமே வெடித்து,  சென்ற வாரம் தனது  உடுப்புக்களை எடுத்துக்கொண்டு தன்  ஒன்று விட்ட  சகோதரனின்  வீட் டுக்கு  செல்லுமளவுக்கு வந்து விட்டது .. மறுநாள் அவனது  சகோதரன் வந்திருந்தார்.  தன தம்பிக்கு சில  வருடங்களாக  ஒரு பெண்ணின் சிநேகிதம் இருந்தது என்றும் அவளுடன்  வாழப்போவதாக சொல்லி விட் டாராம்.  அவளும் மன்றாட்டமாய் கேட்டாள் . பிள்ளை களை   எண்ணி தன்னுடன் சேர்த்து வைக்க ம்கேட்டு கெஞ்சினாள் .அவரோ இது குடும்ப விடயம் என் நழுவி விட்டார்.      அவன் மனம் மாறுவான் என் காத்திருந்தாள் .  ...அப்போது தான் அவள்  கடந்த கால அவனது நடவடிக்கைகளை அசை போட்டாள் . . சில் மாதங்களாகவே திட்டமிட்டு வீட்டை யும் விற்க  பண்ணி ..அதில் வந்த தொகையில் சிறுபகுதியில் இந்த மூன்று  அறைகொண்ட (கொண்டோ )தொடர் மாடியை வங்கி விட்டு  மீதிப்ப் பணத்தை தன வசபடுத்தி விட்டான்  என்று.

இனி என்ன செய்வாள் தன் னோடு   வாழப் ப்பிடிக்காத வனை ?  விவாக ரத்து மிகவும் மலிந்த   பொருளாகி விட்டது .பதின் மூன்று வருட இல் வாழ்க்கை சலித்து விட்டது ..ஒரு  கணமாவது  பெற்ற பிள்ளைகளை எண்ணி பார்த்தானா? மகள் மிகவும் சோகமாய் இருக்கிறாள். எப்படி விளங்கக் படுத்துவேன்...அவனது அயோக்கிய  தனத்தை ...சென்ற வா ரம் அம்மாவும் தங்கை குடும்பமும் வந்துபார்த்து விட்டுபோனார்கள் ...ஒரு விழாவுக்கு சென்றால் ஊரவர்  உறவினர் என்ன எண்ணுவார்கள்.  பெண்கள்  கூடிக் கதைப்பார்கள் . இப்படியும் ஒரு துரோகமா... இரண்டு பிள்ளைகளுக்கு  தந்தை யானவனை எப்படி தான்  வளைத்து பிடித்தாளோ  ...இன்று சில ஆசைகளுக்காக  என்னை விட்டு செல் கிற வன் நாளைக்கு அவளையும் விட்டு செல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம் ...மின்னுவதெல்லாம்  பொன்னென்று  எண்ணி ..இவனது மதி கெ ட்ட  தனத்தால் வரும் விளைவு...

என் பிள்ளைகள்   என்ன பாவம் செய்தார்கள். .? அவர்களை தாயும் தந்தையுமாக் கவனித்து வளர்க்கக் வேண்டும்... இப்படியானவர்கள் எப்போது  ஒரு குடும்பத்தின் அருமை பெருமை .. பெறுமதியினை  உணரபோகிரார்கள்..?..கட்டியவளைக் கைவிட்டு,  , காசுபண மேலாம் சுருட்ட ..கூட  வந்து  ஓட்டியவளு ம் கை விட்டு,  நோய் வாய்பட்டு வைத்திய சாலை யில் ..பார்க்க ஒருவருமில்லாமல் ...கடந்த காலத்தை  நினைத்து க டைக் கண்ணால்  நீர் வழிய .....அப்போது காலம் கடந்து விடும். .இவ்வாறு எண்ணியவள் நன்றாக  அயர்ந்து போனாள் .

 திடீரென விழித்தவள்  நேரத்தை பார்த்தும் ..ஒ இன்று சனிக் கிழமை சற் று அவர்கள் தூங்கட்டும் என்று  எண்ணி சத்தமிடாமல் எழுந்து சென்று காலை க் கடன் கலைமுடித்து காலை  உணவுக்கு தயாரானாள் .என்ன கஷ்ட் துன்பம் வந்தாலும் என்  பிள்ளைகளை  வளர்த்து ஆளாக்குவேன் என்று எண்ணிய வாறு பிள்ளைகளை .தற்காப்புக் கலை (.கராட்டி) வகுப்புக்கு அழைத்து  செல்ல  தயாரானாள் ஒருபுதுமை பெண்ணாக ..........கதை கற்பனை அல்ல  பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தன்னம்பிகையுடன்   வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக எழுதபட்ட குட்டிக் கதை . .

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு.....

பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்... உண்மை தான்....

வெங்கட் நாகராஜ் said...

தொடர.....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் வழியாக தங்களது வலைப்பூவை அறிந்தேன். கதையைப் படித்தேன்.நன்று. பாராட்டுகள்.

இமா க்றிஸ் said...

வெகு காலம் கழித்து ஒரு இடுகை.
தொடருங்கள் நிலா.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை...

தொடர்ந்து எழுதுங்க....

நிலாமதி said...

வெங்கட் நாகராஜ் Dr.B...ஜம்புலிங்கம்..இமா சே குமார்..

.ஆம் உறவுகளே நீண்ட நாட்களுக்குப்பின். வந்துள்ளேன் உங்கள் நினைவழியா நட்புக்கு நன்றி. குடும்ப சூழல், சில முக்கியமான பணிகள் என்பவற்றால் எழுத முடியாமலிருந்தது. தொடர்ந்து வருவேன்..மீண்டும் உங்களன்புக்கு நன்றி.

சிவகுமாரன் said...

மனம் கசிகிறது சகோதரி.

Muruganandan M.K. said...

படிப்பினை ஊட்டும் கதை
சுவார்ஸமாகச் சொன்னீர்கள்

தனிமரம் said...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_25.html

Inuvaijurmayuran said...

படிப்பினைக்கதை. அருமையான நடை.