Followers

Friday, February 18, 2011

என் அக்காச்சி




என்  அக்காச்சி  


அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்
 பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால்
ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் 
ஈரைந்து மாதங்களில்  இருந்தே என்னை சீராட்டி 
பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.துள்ளித்திரியும் பருவத்தே
 துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.  

பங்காளிகளுடன் சண்டை என்றால் 
கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். 
சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.
அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய 
வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து 
சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . 
உயர்கல்வி கற்க  வேற்றிடம் செல்ல நேர்கையில் 
விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.

பட்டம் நான்பெற்ற போது என் பரிசை 
மாரோடு அணைத்து மகிழ்ந்தவள். 
ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.
முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து  
திருவிழா செல்கையில் யார் இந்த தேவதை
என ஊர் பார்க்க வியந்தவள். 

திருமண வயதில் தேடி வந்து பெண் கேட்ட் 
திலகம் மாஸ்டர் முன் நாணிக் கோணி நிற்கையில் 
என் இதயம் களவு போவதை  எண்ணி ,
உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக  நலமாக நீ வாழ் வேண்டும் 
என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .

திருமண் மாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற என்  இதயம் 
துக்கத்தால் துவண்டது . கருவொன்று உருவாக்கி
மகபேற்று விடுமுறையில் வாழ்ந்த வீடு வந்த போது 
மட்டிலா மகிழ்வு கொண்டு , என் உயிரில் தாங்கினேன். 

பெண் மகவொன்று வந்துதிக்க் உனக்கு தான் என்னவள் 
என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி என்னை
 மனமுருக வைத்தவளே .மறுபடியும் மகவாக் 
என் வாழ்வில் மகராசி வரவேண்டும்.  

Thursday, February 10, 2011

காதலர் தின வாழ்த்துக்கள்.



காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலித்துக் கொண்டு இருபவர்களுக்கும்
நிறைவேறி வாழ்பவர்களுக்கும்
இனிக்காதலிக்க் போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

காதல் கை கூடுவது இலகுவான் பாதை அல்ல
உண்மைக் காதல் என்றும் அழிவதில்லை.

உயிரோடு கலந்தது காதல்.
எல்லோருக்கும் எல்லார் மீதும் வருவதில்லை.

உண்மைக்காதல் பணம் அந்தஸ்த்து சாதி மாதம் பார்பதில்லை.
நெஞ்சில் துணிவு தைரியம் இல்லாதவர்கள் காதலிக்க் கூடாது .

காதல் பாதை முட்கள் நிறைந்தது.
எதிர்ப்பு ஏளனம் பொறுப்பு என்னும் கற்கள்
நிறைந்த,கரடு முரடான பாதை பாதை .

காதல் திருமணத்தின் பின் தான் காமத்தை தேடும்
காதல் எல்லோருக்கும் எப்போதாவது வரும்

தற்காலத்தில் மிகவும் மலிந்தது
அந்தஸ்த்து வச்தி,,பணம் .. பார்த்து வருவது

உண்மைக்காதல் உயிர் உள்ள வரை  நிலைக்கும்.
காதலில் அவசரம் ஆகாது .

காதலில் இறங்கியவர்கள்  ஒரு புது உலகில் சஞ்சரிபதுபோல இருக்கும்.
பல காதல் நீர்க்குமிழி போல சில தான் நாணல் போல நின்று நிலைக்கும்.

படித்ததில் பதிந்த்த்வை 
  

Wednesday, February 2, 2011

உன்னைத் தவிர என்னவேண்டும் .........



உன்னைத் தவிர என்ன  வேண்டும் ...........

அன்புக்கும் ஆசைக்கும்  பரிசாய்
வந்துதித்த வெண்ணிலவின்
கண்களும் கவிபேசி
காதலும் உருவாகி
சுப நாள் ஒரு திருநாளிலே
மணமகன் நீயாக்
மங்கையிவள் கைப்பிடித்து
இன்புற்று வாழ்கையில்

 ஆணோன்றும் பெண னோன்றும்
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு
ஒன்றுமாய்  பெற்று
இன்புற்று  வாழ்கையில்
மாரடைப்பில் தந்தையை
கொண்டு சென்ற காலன்
தாயையும் நோயிலாழ்த்தினான்.
விதி வந்த வேளை
அன்னை அவள்  சென்றுவிட
.
ஈர்பத்து வருடங்கள்  உருண்டோடி
.மகவுகளும் கரை சேர்ந்து
இன்புற்று இல்லறம் நோக்கி
 மகவுகளும் சென்றுவிட
தாயாய் தாரமாய்
மங்கையவள் துணை  நிற்க
வானமாய் அவன் காத்து நிற்க
வருடங்கள் மூபத்து
சொல்லாமல்  ஓடியது .

அன்னை வளர்ப்பில் இருபதும்
அத்தான் அணைப்பில் முப்பதுமாய்
ஐ பத்து வருடங் கள் தளம்பாமல்
தன்னாலே சென்றது
தாய் தந்தையிலும்  மேலாய் எனை
கண் போல் காத்து கரிசனையாய்
உணவோடு உடை தந்து  துணை இருந்து
அன்போடு  ஆதரவும் பரிவு பாசம் தந்தாய்

உயிராய் எனை வலம் வந்தவனே
உனக்கும் ஆண்டுகள் ஆறு பத்து ஆயிற்று
வேறென்ன வேண்டும் இப் புவியில்
.உனைபிரிந்து  இவ்வுலகில்
உயிர் தரியேன் ஒரு நாளும்
உன்னோடு இணைந்தே வர
வரம் தரவேண்டும்
உலகாளும் இறைவா
............


திருத்தம் ..............உடன் கடடையேற  என்பது இணைந்தே  வர  என் திருத்தப் பட்டது  

Tuesday, February 1, 2011

எதிர்பார்ப்பின் எல்லைகள்

எதிர்பார்ப்பின் எல்லைகள் 

அந்த பேரூந்தின் நெரிசலில் ஏறிக் கொண்டாள். பயணிகள் காலை மிதிப்பதும் மனிதர்களின் வியர்வை மணமும் . அழும் குழந்தைகளுமாய் ஒரு மணி நேர பயணம் அவளுக்கு ஆரம்ப மாகியது ...அவள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். சில அவளது பணி நேரம் பகலிலும் இருவாரங்களுக்கு ஒரு முறை இரவிலும் அவள்து பணி இருக்கும்.............தோளில் தொங்க்கும் கைப் பை ..ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கும் மத்திய உணவு , ...இவற்றை ஒதுக்கி பேரூந்துக் கட்டணத்துக்கான காசை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்து டிக்கட் எடுத்தாள் . கை பிடிக்கும் கம்பிக்கு அருகே நின்று கொண்டாள் . அருகே இருந்த வயதான் மூதாட்டி இறங்கும் இடம் வரவே .

Monday, January 24, 2011

இன்னும் கொஞ்ச நேரம்.


இன்னும் கொஞ்ச நேரம். மம்மி .............

அதிகாலை  சூரியன் இன்னமும் தென படவில்லை ......கோகிலா அலாரத்தின் ஓசைக்கு எழுந்து ...காலைக்  கடன் முடித்து  அடுக் க ளை சென்று காப்பி தயாரித்தாள் ..சரவணனும் எழுந்து அவனும குளிக்கும்  கடமையை செய்து கொண்டு இருந்தான்.சரவணனுக்கு காப்பி தயாராக் மேசையில் காத்திருந்த்து . அவசர அவசரமாக் குளிர் பதனப்பெட்டியிலிரவே போட்டுவைத்திருந்த  சாப்பாட்டு பெட்டிகளை அவனுக்கும் தன்க்குமாக் கைப் பையில் அடக்கி கொண்டாள். இனி குட்டிக் கண்ணன் கோபியை எழுப்பவேண்டும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறான். பாவம் குழந்தை இந்தக் குளிர் நாட்டுக்கு வந்து அவனும் எங்களுடன்.......சேர்ந்தே ஓடுகிறான்.........

Friday, January 14, 2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன்?

நான் ஏன்(எப்படி) பதிவெழுத வந்தேன்?

தம்பி கவிக் கிழவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதை தொடர்கிறேன்........
என்னை மாட்டி  விடுவதில் அவ்வளவு இன்பமா? ஏன் எழுதுகிறேன் என்பதை விட எப்படி இந்த ஆர்வம் வந்து என்று சிந்தித்தால் .............

தமிழ் மீது எனக்குள்ள் ஆர்வத்தை  வளர்த்துக்கொள்ள வேளையும்., வளமும் ,வசதி வாய்ப்பும் கிடைத்தது ., என்று சொல்லலாம். .என்று கூறலாம். பள்ளி வாழ்வின் பின்  கடிதம்  தவிர பத்திரிக்கை வாசிப்பதுடன்  நின்று விட்டது தமிழ் எழுத்தின்  ஆர்வம்கடின முயற்சிக்கு பின் கணனியில் தமில் l  வாசிகக் கற்றுக்கொண்டேன். பின்பு நான் ஆரம்பத்தில் இணைந்தத "யாழ் இணையம் " எனும் தளம் எனக்கு தமிழை எழுத வழி சொல்லித்தந்தது. அங்கு உறுப்பினராக இணைந்து தமிழ் எழுதவும் பங்கு பற்றவும்  கற்றுக் கொண்டேன். .அங்கு ஏற்பட்ட் சில தொடர்புகளால்  வலைபப்க்கத்தையும்  எட்டிபார்க்க் வசதி கிடைத்தது

Monday, January 10, 2011

மெளனமாய் ஒரு காதல்




மெளனமாய் ஒரு காதல் 

அந்த பள்ளி நாட்கள் நீண்டு போகாதா?  என் அங்கலாய்க்கும் ஒரு மாலைபொழுதில் ..............
கிராமத்தின் முக்கியமான்( இருபாலாருக்குமான )கலவன்  பாடசாலைகளில் ஒன்றில் ராகவன் உயர்வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். பணி நிமித்தம் இடம் மாற்றலாகி வந்தவர்கள் தான் .கேசவ வாத்தியார் குடும்பம். அவர்களுக்கு அழகான் ஒரே ஒரு பெண . அன்று ஒரு தை திங்கள் முதலாம் வாரம் , இவர்கள் பாட்சாலை யின் அனுமதிக்காக காத்திருந்தார்கள் அப்பாவும் பெண்ணும். தலைமை  ஆசிரியர் அன்றைய பணியில் மூழ்கி இருந்ததால் , ராகவன், அவர்களுக்கு உதவும் முகமாக , வரவேற்பறையில் ஒரு ஆசனத்தில் இருத்தி , காத்திருக்கும்படி சொன்னான். அவன் வகுப்புக்கு சென்றுவிடான். சில மணி நேரங்களில் வகுப்பு ஆசிரியரை இடை மறித்த தலைமை  ஆசிரியர் தேவகியை அறிமுகம் செய்தார்.

Tuesday, January 4, 2011

திருப்பங்கள்



திருப்பங் கள் 

நம் வாழ்க்கையில் சில சம்பவங்கள்  திருப்பங்கள்,  மாற்றங்களை ஏற்படுத்து கின்றன. அந்த வகையில் இதோ ஒரு இளைஞ்சனின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம். 

மீனட்சியின் ஒரே ஒரு மகன் தான் பால சங்கரன் . இளவயதில்  தந்தையை தொலைத்தவன். ஏனைய குடும்பம் போல மீனாட்சியும் பாலகுமாரனை கைபிடித்து வாழ்ந்தவள் தான் . காலபோக்கில் ஒரு நாள் பட்டணத்துக்கு வி யாபாரம் செய்ய போனவன், போனவன் தான் ஒரு வித பதிலும் இல்லை.அவளும் தேடிக் களைத்து  விடாள். மூன்று வயது பாலச்ங்கரனுக்கு அப்பாவை நினைவில்லை. வருடங்களுருண்டோடி வய்து பதினாறு  ஆகிவிட்டது. ஆரம்பத்தில் வாழ்க்கையை சமாளித்தவள் ஊராரின் கேலிக்கும்  புண்படுத்தும் வார்தைக்க்ளுக்கும் பதிலின்றி தவித்தாள். தன் முயற்சியால் இருவரின் வயிற்றைக்  கழுவ கூலி வேலைக்கு போனாள். . அம்மாவை நினைத்தும் ஊராரின் வசைப் பேச்சுக்களை எண்ணியும்.

Tuesday, December 28, 2010

புது வருடத்தில் சந்திப்போம்


என் வலைதள நட்புகளுக்கு இனிய புத்தாண்டு மலரட்டும்.
அழகான் மலர்களை போல மலர்ந்து மணம் வீசட்டும்.
பழையன்  கழிந்து புதிய எண்ணங் கள் செயல்கள், தீர்மானங் கள்
நிலைத்து நிறைவேற வாழ்த்துக்கள்.

 நல்லதையே நினைத்து  நல்லதையே செய்வோம்.
வருங்காலம் வளமாகட்டும் ,உங்களுக்கும் எனக்கும்
.புதியதாய் சிந்திப்போம்  மீண்டும் புது வருடத்தில் சந்திப்போம்.

Tuesday, December 21, 2010

மார்கழித் திங்கள் அல்லவா



மார்கழித் திங்கள்  அல்லவா ?

மார்கழி மாதம் என்றால் கடுங்குளிரும் , வெளி நாடுகளில் வாட்டும்பனி ..பொழிவும் ஒரு ஆண்டின் முடிவும் அடுத்த ஆண்டிற்கான் எதிர்பார்புகளுடனான   .ஒரு மகிழ்வும் பழையன  கடந்து புதியனவற்றை மகிழ் வோடு எதிர்  நோக்கியிருக்கும்  மகிழ்வும் மக்கள் மனத்தில் தென்படதொடங்கும். வெளி நாடுகளில் கார்த்திகை முடிவிலே சோடினைக்கான ஆயத்தங்கள் கடைத்தொகுதியில் விளம்பரதுக்கான் சோடினைகள் , மகிழ்ச்சியுடன்  , பரிசு பொருட்களின்  தேர்வு என்று சனக்கூட்டம் களை கட்ட் தொடங்கும்.

 உங்களைப் போலவே நானும் மகிழ்வோடும் எதிர்பார்போடும் கிறீஸ்து பிறப்பின்  மகிழ்வு உலகுக்கும் நாட்டும் வீட்டுக்கும் அமைதி சமாதானம் மகிழ்வு கொண்டு வரவேண்டும். என் எதிர்பார்ப்புகளுடன் கிறீஸ்து பிறப்பின் நாளை எதிர் கொண்டு , ஆவலுடன் இருக்கிறேன். என் குழந்தைகள் நத்தார் தினமாகிய இந்த நாட்களில் முன்பு சோடினைகள் செய்ய சொல்லி என்னவரை கட்டயபடுத்துவார்கள். இப்பொது வளர்ந்து விடார்கள் பரிசுப் பொருட்களுக்காக காத்திருப்பார்கள். வீட்டின் ஒரு மூலையில் கிறிஸ்மஸ் மரம் அலங்க்கரித்தாகி  விட்டது .

Saturday, December 18, 2010

லச்சுமி பேசறேன்..........

லச்சுமி  பேசறேன்...........


என் தாயக் நினைவுகளை மீட்டும் பதிவு........அதிகாலை எழு மணி இருக்கும்.  சென்றவாரம், ஒரு வெளி நாட்டு  தொலைபேசி அழைப்பு.  மறு முனயில் இதுவரை கேளாத குரல் சற்று வித்தியாசமாயும் இருந்தது........." அக்கா நான் லச்சுமி பேசறேன் நல்லாய் இருக்கீங்களா? எந்த லட்சுமி ..........? என் நினைவுகள் பின்னோக்கி பதினைந்து,  இருபது வருடங்களுக்கு முன் ....ஓ....ஒ........அவளா ?  இனம் தெரியாத மகிழ்ச்சி ...வியப்பு ஆச்சரியம் என என் நினைவுகள் தாயகம் நோக்கி பறந்ததன........

Tuesday, December 14, 2010

சிரிப்.. பூ ..சிரிக்கலாம் வாங்க..ஹா ஹா

http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded


சிரிப்....  பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா

சிரிக்க கூடிய ஒரே ஒரு விலங்கு மனிதன். சிரிப்பு கவலைகளை மறக்க வைக்கிறது மனதுக்கு உற்சாகத்தை தருகிறது .சிரிப்பு பல வகை கள்ள மில்லா  குழந்தைச்சிரிப்பு கன்னியரின்  புன் சிரிப்பு. நமட்டு சிரிப்பு ...ம்ம்ம் ...ஆணவச்சிரிப்பு. சிரிப்பு தசைகளுக்கு பயிற்சியளிக்கிறது .மனசு இலேசாகிறது .  இளமையை கூட்டுகிறது.

என்னுடன் சேர்ந்து நீங்களும் சிரியுங்கள்.

Friday, December 3, 2010

கிறிஸ்மஸ் பரிசாக என்ன வேண்டும் ?





மீள் பதிவு (காலத்துக்கு ஏற்ற கதை என்பதால்.)

யாழ்  நகரத்தின் மையப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருந்தது . 
அந்தக்   கன்னியர் மடம்.  அங்கு இருபகுதிகளாக் பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர்  மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை.


அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன்கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின்  உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வயதிலும் பெண் சிறுமிகள் சேர்க்க பட்டார்கள். ஆண்களுக்காக இதற்கு அடுத்த தெருவில் , மிக சிறு அளவில் சேர்ந்த பிள்ளைகளுடன் ஏற்கனவே இருந்த நிலையம் புனரமைக்க  படப் போகிறது. இந்த சிறுமிகளில் பலர் தாயையும் தந்தையையும் இழந்தவர்கள் ஒரு சிலர் தாயை இழந்தவர்கள் சிலர் உறவுகளால் சேர்க்க பட்டவர்கள். அவர்களுக்கான அடிப்படை உதவியுடன் முதலில் இங்கும் பின்பு அதனுடன் தொடர்பு பட்ட கல்விக்கூடத்திலும் வயதுக்கேற்ப சேர்க்க படுவார்கள்.

Tuesday, November 30, 2010

அளவோடு ஆசைப்படு.........

ஆசையே  அலை போல நாமேலாம் அதன் மேலே........


ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.

தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

Thursday, November 25, 2010

இது சோகங்கள் சுமந்த வாரம்.

http://www.youtube.com/watch?v=koFEEMYgrr8&feature=player_embedded




எங்கிருந்தாலும்  எங்களின்  இதயம்  உங்களுக்காக  துடிக்கும் . 

இது சோகங்கள் சுமந்த வாரம். ஒவ்வொரு ஈழத்தமிழன் வீடிலும் நடந்த இழப்ப்பு வருடாவருடம் அவர்களை நினைக்கும் வாரம். காலப் பெருந்துயரில் அவர்களை இழந்தாலும் அவர்களின் ஆசைகள் நோக்கங்கள் என்றோ ஒருநாள் நிறைவேறும்.

Friday, November 19, 2010

என் இதயம் கவர்ந்தவளே



 என் இதயம் கவர்ந்தவளே
கண்கள் கண்டதால்
கவரபட்டதால்
காதல் கொண்டதால்
கருத்து ஒன்றி அதனால்
இணைந்து கொண்ட இருவர்
கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா

கனத்தத் மனதுடன்
கலந்து பேசி நாமும்
கலைத்திடுவோம் பகை
கன்னி உனக்கு ஆகாது
கருத்து மோதலில்
கரையும் நம் வாழ்க்கை
கண்மணியே வா
காலமெலாம் கை
கொடுப்பேன்
காலம் இன்னும்
கடக்க வில்லை

மன்னிப்போம் மறப்போம்
மங்கை நீ மனது வைத்தால்
மா மலையும் ஒரு துரும்பு
மகிழ்வான காலம் இருக்கு
மனது வைத்து மன்னித்தால்
மாலை யிட்ட மணாளனின்
மனது தன்னை புரிந்து விடு
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
இனிய  இல்லறத்துக்கு
புகழ் சேர்க்கும் புனித மொழி
புரிந்து கொள் , புறப்படுவாய்
புகலிடம் நோக்கி

உன் வரவைக்கான விரும்பும் ................

Monday, November 15, 2010

பசி தீர்க்கும் தாய்மை



நம் பசி தீர்க்க தன்
பசிக்கு உணவு
நாடிச்  சென்றவள
சென்றும் பல நாழியாச்சு

நலமோடு வரும் வரையில்
நாம இருப்போம் ஒற்றுமையாய்
நகர்ந்து சென்று ஓடாதே
நன்றும் தீதும் காத்திருக்கும்

நிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்
சென்ற வழி பார்த்திருப்போம்

பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி  வந்திடுவாள்

அண்ணாவும் நானுமாய் .....




அண்ணாவும் நானுமாய்
மகிழ்ந்திருந்த காலங்கள்
விளையாட்டு தோழனாய்
துணைக்கு உற்ற நண்பனாய்

பிரித்தது உயர் கல்வி
என்னும் உயர் கடமை
தனி மரமாய் நானும்
தவித்திருந்த வேளை

துணையாகி வந்தான்
நண்பனேனும் கோபி
அவனது பழக்கங்கள்
என்னுடன் ஒட்டின

கூடா வேறு நட்புகளும்
கேடாய் முடிந்தது
பாடாய் படுத்துகிறது
கூடம் என்னும் சிறைக்கூடம்

வாடுகிறேன் அண்ணா
 உனை எண்ணி நாளும்
வந்து ஒரு வழி சொல்லு
விட்டு விடுதலை யாகி விட

வீண் வேடிக்கை கதையல்ல்
உன் உயிர் மீது சத்தியம்
பெற்றவர் உற்றவர் இன்றி
தேடுகிறேன் விடுதலை
 

Thursday, November 11, 2010

மாலதி டீச்சர் ............


மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு  போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன்  கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில்   பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி   )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம்.  அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது.  அம்மா  அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு  விடைபெற ஆரம்பித்தார்.

Monday, November 8, 2010

விடிவு பிறக்கும்.




ப ரந்த வெளியிலே
ஒற்றை மரமாய்
தனித்து நின்றாலும்
இரைதேடும் பட்சிகளுக்கு
தங்குமிடமாகிறது

மேற்கே மறையும் சூரியனும்
தெளிந்த நீரோடையும்
மெல்லென் தழுவிச்
செல்லும் காற்றும்

நீரிலே தோன்றும்
சூரிய ஒளியும்
இரவை நோக்கி
நகர்ந்து சென்று

விடிவு என்னும்  உதயம் 
உனக்கும் எனக்குமாய் 
ஆழ்ந்த நம்பிக்கையோடு 
நிச்சயம் பிறக்கும்