Followers

Monday, October 26, 2009

ரயில் பயணத்தில் .... ......

ரயில் பயணத்தில் ..........

குறிப்பு :.....  சில வாரங்களாக எதுவுமே எழுத முடியவில்லை. உறவுக்குள் ஒரு இழப்பு அயல் ஊர் ...பயணங்கள் ...பின்பு அன்பான் சில பொறுப்புகள்.   வீடில் சில் அலுவல்கள் என்று வலைத் தள பக்கம் வரவேயில்லை. வந்தாலும் ஒரு சிலதை வாசித்து விட்டு  போய் விடுவேன் இன்று ஏதும் எழுதனும் என்று தோன்றவே ஒரு சிறு பதிவு . உங்களுடன்........

செந்தூரன் அன்று காலை அவனது ஊர் நோக்கிய பயணம். பயணப்பை டிக்கட் எல்லாம் சரி பார்த்தபின் டாக்க்சி பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தான். மூன்று வருடங்களுக்கு பின் , ஊர் நோக்கி புறப்டுகிறான். இது வரையில்  படிப்பு கலாசாலை  விடுதி என்று இருந்தவன் கடைசியாக  புரபசராக பதவி கிடைத்தபின் .........இப்போது ஊர் நோக்கி .............

செந்து .......எனும் செந்தூரனுக்கு பெண் பார்த்து , பெற்றார்கள்  அவனை இந்த முறையாவது ஊருக்கு  தீபாவளிக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்து இருந்தார்கள். ஒரு வார விடுப்பில் செல்கிறான். அன்று திங்கள் கிழமை . முதல் வகுப்பில் புக் செய்து இருந்தான். கிழமை நாள் என்பதால் அதிக சனக்கூட்டம் இல்லை. தன் சீட் தேடி அமர்ந்தான். சுற்று முற்றும் பார்த்தான் யாரும் தெரிந்தவர்கள் இல்லை . கையில் ஒரு புத்தகத்தை எடுத்து , வாசிக்க ஆரம்பித்தான். சடேன்று ஒரு வயதான அம்மாளுடன் ஒரு இளம் பெண் , அவனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்தாள். அந்த அம்மாள் அவள் தங்கி இருக்கும் வீடுக்காரியாக இருக்க வேண்டும்., என்பது பேச்சு வாக்கில் புரிந்தது . அவள் விடை பெற்றதும்  சற்று நேரத்தில் ரயில் புறப்பட ஆரம்பித்து. அவசரமாக் தன் பயணப் பையை தலைக்கு   மேல் உள்ள பலகையில் பொருத்த  முயன்றாள் முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கையில் இவன் ..... May I help you .?........yes please. ..thanks. இதன் மூலம்  அவர்களது பரீட்சயம் ஆரம்பமாகியது. மாதங்கி தனது கல்லூரிப்படிப்பு முடிந்து  தனது ஊர் நோக்கி செல்கிறாள். பரீட்சை முடிவுக்காக காத்திருபவள். தனது ஊர் நோக்கி செல்வதாகவும் , தான் ஒரு உறவுக்கார அம்மாவின்  வீடில் தங்கி இருந்து படித்த  தாகவும் பேசி கொண்டதில் இருந்து தெரிந்தது.   சிறிது நேரம் பேசிக் ்கொண்டு இருந்தவள் தன் புத்தகத்தில் மூழ்கினாள். அது ஒரு எட்டு மணி நேரப்பயணம். காலை  எழு மணிக்கு புறபட்ட்வர்கள். மாலை  நான்கு , நாலரை மணியாகும்  அவர்கள் பயணம் முடிய . ... அவனது ஊருக்கு ....முன்னிய தரிப்பில் அவளது தரிப்பு ...அவள் இறங்க வேண்டி வரும்.அழகான் படித்த பெண் . இனிமையாக் பேசுகிறாள்.வீடில் பெண் பார்க்கிறார்கள். இவளை போல் ஒரு பெண் அமைந்தால்...........ரயிலின் தாலாட்டு .அவனை சற்று உறங்க செய்தது .........

.திடீரென டிக்கட் பரிசோதகர் .தட்டிஎழுப்பவும் . தனது இருக்கையில் இருந்து  எழுந்து தனது . டிக்கட்டை காடினான். இதன் பிறகு   அவன் உறக்கம் கலைந்து விட்டது.....மாதங்கி தொடர்ந்து படித்து கொண்டே இருந்தாள். அடுத்த தரிப்பில் மதிய உணவு வேளையாதலால் சற்று நீண்ட நேரம் இருந்தது ரயில் புறப்பட . அவன் எதாவது சாப்பிட வாங்க வேண்டி புறப்பட்ட வேளையில்,  இறங்க தலைபட்ட்வனை  அந்த குரல்  அழைத்து ..........பிளீஸ் .........எனக்கும் ஒரு தண்ணீர் போத்தல் வாங்கி வருவீர்களா? மறுப்பு சொல்லாமல் , இறங்கினான் காசு கொடுக்க முற்பட்டவளை தடுத்தான்.இறங்கி சென்றவன்.   தனக்கு இரண்டு பண்ணும் ஒரு சோடாவும் வாங்கி கொண்டான். அவளுக்கு தண்ணீர்  போத்தலுடன் வந்தவன் அதை கொடுத்தும்,  நன்றி சொல்லி வாங்கி கொண்டாள்.
நேரமும் விரைவாக ஓடிக்கொண்டே இருந்தது . வெளியில் செல்லும் போது வாங்கிய அன்றைய தினசரியை புரட்டி கொண்டு இருந்தான். அடுத்ததாக ,   அவளும்  இறங்க வேண்டிய, நிறுத்தம் வந்தது . அவள் இறங்கி  நன்றி தெரிவித்த போது மீண்டும் ஒரு பொழுதில் சந்திப்போம் என்றாள். சற்று நிமிடங்கள் ஓடின அவன் நினைவு மட்டும் அவளையே சுற்றி சுற்றி வந்தன. இறுதியாக அவனது ஊருக்கான தரிப்பு வரவே அவன் இறங்கி கொண்டான். வீட்டை அடைந்தவன் சென்று கால் முகங்கழுவி ,தேநீருக்காக தயாரான போது , அம்மா சில படங்களுடன் வந்தாள். படங்களை பார்த்தது ம அவனுக்கு அதிர்ச்சி .. அவளது படமும் இருந்தது . அவளுக்கு தெரியாமல் அவளது தந்தை அவளுக்கு திருமணப்பேச்சில் ஈடுபட்டிருந்தார். எனபது . ......அவள் வீட்டை  அடைந்ததும் தான் தெரியவரும். .இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தி செந்து ........மனம் கொண்ட அதே பெண் மண மகளாக  வாய்த் தாள் . திருமணம் இனிதே நிறைவடைந்தது .

ரயில் பயணம் (சிநேகம் ) பாதி வழியில் முடிந்து விடும் என்பார்கள். ஆனால் இவர்களையும் இணைத்து வைத்தது அந்த ரயில் பயணம் (சிநேகம்) தான்.

Tuesday, October 6, 2009

நன்றி சொல்ல உனக்கு ( உங்களுக்கு )

நன்றி சொல்ல உனக்கு ( உங்களுக்கு ) வார்த்தையில்லை எனக்கு ...........

மனதில் இனம் தெரியாத ஒரு உணர்வு, வார்த்தைகளாக் வெளி வரும் இந்த வேளையில் .நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தையில்லை  எனக்கு .......இன்றோடு நான் எழுதிய ஐம்பதாவது பதிவு ..........இந்த வருடம் சித்திரை திங்கள் ஐந்தாம் திகதி எனது முதற்பதிவு .......ஐந்து மாதங்களில் நான்  பதியும் ஐம்பதாவது பதிவா ?.......திகைத்து போகிறேன். அதுவும் நண்பர்கள் சிலர் ஞாபக் படுத்திய பின் .......என்னாலே  என்னயே நம்ப முடியவில்லை. பொறுமையாக் நான் கிறுக்கும் சிறு கதைகளுக்கு எல்லாம் பினூட்ட்மிட்டு ...கருத்து சொல்லி என்னை தட்டிக் கொடுத்த உறவுகளுக்கு .என் உள்ளத்தால் சொல்லும் வார்த்தை" நன்றி"  உங்களுக்கு .......

நான் வலைப்பதிவுக்கு தட்டித் தடுமாறி வந்து திகைத்து நின்ற போது வழி காட்டிய  உள்ளங்களையும் நினைத்து கொள்கிறேன். மேலும் எனக்கு ஊக்கமளித்த வாசகர்களுக்கும் இந்நேரம் மறக்கவில்லை . தமிளிஷ் தமிழ் மணம் மூலமாகவும் வாசகர்களை நான் கவர்ந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது , என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே எனக்கு தோன்று கின்றன. மேலும் என்னை வளர்த்து , பல படைப்புகள் தர அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னை உடல் நலமுடன் வாழ வைக்கவேண்டும் என கூறி விடை பெறுகிறேன். நட்பான வணக்கமுடன் உங்களில் ஒருத்தி நிலா மதி

Monday, October 5, 2009

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத உள்ளங்கள்.

இணைத்து வைத்த திரு மணம் ....இணையாத    உள்ளங்கள்.

அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக  படித்து படமும் பெற்று க்கொண் டாள்  . தந்தைக்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்கநாதனும் சந்தித்து கொள்வார்கள். காலபோக்கில் நட ராஜ பெண்ணுக்கு மாபிள்ளை தேடுவதில் மும் முரமாய் இருந்தார்.பேச்சு வாக்கில் , சாவித்திரி ஏன் தூரத்துக்குள் போவான். நம்ம் பையன் சுதாகரை  , கட்டி வைக்கலாமே என்று ஆசையுடன் கூறினாள். ரங்கநாதனுக்கும் இது சரிஎனபடவே. நட ராஜனிடம் ஒரு நாள் இதைக் காதில் போட்டு வைத்தார். இரு குடும்பமும் பேச்சு வாக்கில் ஒத்து போகவே நட ராஜனின் ஒரே ஒரு செல்லப பெண்ணுக்கும் ரங்கநாதனின்  மூத்த மகன் சுதாகருக்கும் மிகவும் கோலா கலமாக திரு மணம் இனிதே நிறைவேறியது .

நாட்களும் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்றன. ஆனால் இருவரின் மனங்களும் ஒன்றிணைய வில்லை. சுகியும் விட்டுக்க்கொடுபதாயில்லை  அவளின் போக்கு , ஆங்கிலப்படம் ....டான்ஸ் , பார்டி களில் ஈடுபட்டது. கணவனை யும் அழைப்பாள். அவனுக்கு இது விருப்பமற்ற  செயல் . அவள் நண்பிகளுடன் கிளம்பி விடுவாள். சில சமயம் கணவன் வீடுக்கு வந்தால் இவள் ஒரு குறிப்பு எழுத்தை வைத்தது விட்டு  கார் எடுத்து கொண்டு நண்பிகளிடம் போய்விடுவாள். இதற்கிடையில் அவள் கருத்தரித்தாள்.
இதையறிந்ததும் ரங்க நாதன்  குடும்பம் மிகவும் ஆவலுடன் தங்கள் பேரபிள்ளையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் சுகி இப்போது தேவையில்லை என்று கலைக்க முயற்சித்தாள். டாக்டாரிடம் சென்ற போது நாட்கள் தள்ளி போனதால் கலைக்க முடியாது என்று சொல்லி விடார்.. வேண்டாத கருவாக சுகி கருவைச் சுமந்து ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அதன் பின்பும் அவள் மாற வில்லை. குழந்தையை தன் தாயிடம் பராமரிக்க விட்டு விட்டு தன் எண்ணம் போல திரிந்தாள். அவள் கணவன் சுதாகருக்கு சகித்து கொள்ள   முடியவில்லை. அவர்களுள் லேசான பிளவு ஏற்பட தொடங்கியது கணவனுக்கு சமைத்து வைக்க மாடாள். அவன் பாதி நாட்கள் தாய் வீடுக்கு சென்று விடுவான். நடராஜனுக்கு செல்ல பெண்ணை கண்டிக்க முடியவிலை. சுகி இன்னும் , பொறுப்பு அற்றவளாகவே   இருந்தாள். சுதாகருக்கும் வாழ்கை  கசந்து விட்டது இரண்டு வருடங்கள் சென்றன . சுகி தாயுடனும்  சுதாகர் தன்   தாயிடமும் வாழத்தொடங்கினர்.

காலம் உருண்டோடியது .இரண்டு வருடங்களான. இரு குடும்பங்களிடையே  .பழைய உறவு அற்று போய் இருந்தது   ஒரு நாள் சுகிக்கு தபாலில் , விவாகரத்துக்கான கடிதம் வந்தது . இருவரும் , சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றனர். குடும்பங்களை இணைக்கும் எனற , இணைப்பு ப்பாலம் , இரு மனங்களையும் இணைக்க வில்லை .

காலப்போக்கில் அவனுக்கு( சுதாகர் ) கீழ் உள்ள தம்பி மாருக்கு திருமணம் செய்ய விருப்பதால் , அவனும் இளம் வயது என்பதாலும் , அவன்இணைய  மூலம் ஒரு பெண்ணை தேடி மணம் முடித்தான். அவள் ,தான் சாரங்கி , அவள்  எல்லா விதத்திலும் இவனுக்கு பொருத்தமானவளாய் இருந்தாள். குடும்பம், சந்தோஷமாய் இருந்ததில் , ஏனைய அவன் தம்பி மாருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்தது. அவர்களின் , அன்பான் விடுக்கொடுபுள்ள உறவில இரு வருடந்தில் ஒரு பெண் குழந்தை வதனாவை பெற்று எடுத்தனர்.சுகி திருந்திய பாடாய் இல்லய். அத்தனை  கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாய் இருந்தாள் . அவளது போக்கின் காரணமாக தந்தை நட ராஜன்  நோய் வாய்பாட்டு , இறந்து போனார்.

ரங்க ராஜன் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. ஒரு தடவை , அவர்கள் ஒரு திருமண விழாவுக்கு சென்று திரும்பும் வழியில் , மழை வேறு , பொழிந்து கொண்டு இருந்தது . வழியில் ஒரு கார் பெரிய மரத்துடன் மோதிக் க்கானபட்டது . சுதாகர் இறங்கி பார்த்தபோது அது .........சுகி என்று உணர்ந்தான். உடனே அவன் வாகனத்தை திருப்பி , அவளை ஏற்றிக்கொண்டு வைத்தயசாலையில் சேர்த்தான். அவள் அளவுக்கு மீறிய போதையில் இருந்தாள்.பிடரிப்பக்கம் பலமாக  அடிபட்டு இருந்ததால் சிகிச்சை பயனற்று ,இறந்து விடாள். சுதாகர் அவள் நிலையை எண்ணிக் கவலைப்பட்டான்.

காலம் வேகமாக சென்றது. சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகி விட்டன. சுதாகரின் செல்லமகள் வதனாவுக்கு மூணு வயதாகி விட்டது . அவளது பிறந்த நாளுக்கு சில பொருட்கள் வாங்கி விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் பாடசாலை பையுடன் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தான் அழுது கொண்டு.
நேரம் மாலை  நேரம் இரவை அண்மித்து கொண்டு இருந்தது ........அந்த சிறுவனை தனியே கண்டதும் சுகுமாருக்கு தன் மகன் எண்ணம் வந்தது . காரை  நிறுத்தி  அண்மையில்  சென்று பார்த்தான். என்ன ஆச்சரியம் .........அது அவனது மகன் கோகிலன்.சுகுமாருக்கு தாங்க முடியாத துயரம்...........சிறுவன் அழுது கொண்டு தனக்கு அம்மாவும் இல்லய் அப்பாவும் இல்லய் ..........அம்மம்மாவீடுக்கு போக பிடிக்க வில்லை என்று அழுது கொண்டே சொன்னான். இறுக கட்டி அணைத்து முத்தமிட்டு தன் வீடுக்கு கூட்டி வந்தான். தன் மாமியாருக்கு தகவல் அனுப்பினான். முறைப்படி கோர்ட்டு உத்தரவுடன் மகனை பெற்றுக்கொண்டான்.

கோகிலனுக்கு வத்னாவை மிகவும் பிடித்து கொண்டது ....... வதனா கோகிலன், இணை  பிரியாத சகோதரர்களாக விளையாடுவதை ......சாரங்கா பார்த்து ரசித்தாள். .பிறந்த நாட பரிசாக தன் அண்ணா தனக்கு கிடை த்ததை எண்ணி .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

இணைத்து வைத்த திருமணக்களால் இணைந்து போக முடியாத உள்ளங்கள் ....பிரிந்து விடுகின்றன. சில விட்டுக்கொடுப்புகளுடன் சமுதாயத்துக்காக வாழ்கின்றன. ..இரு மனங்களும் இணயாத விட்டுக் கொடுப்பற்ற உறவுகளால் எத்தனை  குடும்பங்கள் சீர் குலைகின்றன......


Saturday, September 26, 2009

வேப்ப மர உச்சியில்............

வேப்ப மர உச்சியில்............

அந்த ஊரின்  துடிப்பான இளையவர்கள் சேர்ந்து . கொள்ளும் இடம்.  புதிதாக ஒரு எண்ணம் தோன்றவே  ராகுல் அண்ட் கம்பனி தீட்டினார்கள் ஒரு திட்டம்.   மச்சான் ஆவி.........இருக்காடா ......சென்ற வருடம் முதலியார் மாணிக்கம் , குச்சொழுங்கை ...வேப்பமரத்தின் நிழல் வழியே வந்த போது பேயடித்தது உண்மையாடா ......?   பல வாறு சிந்தனைகள் ......கதைகள் ....மறுத்தல்கள் நடுவே வீரமுள்ளவன் ....அவ்வூர் சேமக்காலையில் (கிறிஸ்துவ் மயானம்).வரும் வெள்ளி இரவு ,நள்ளிரவு  பன்னிரண்டு  ஐந்து( 12 .05  ) நிமிடமளவில் வேப்பங்கன்று நடுவதாக தீர்மானிக்க பட்டது.......இந்த மாணவ குழுவில் ஐவர் இருந்தனர் ராகுல் அதில் துடிப்பான இளைஞ்ன் ஆவி இல்லை ..........என்றுவாதிடுபவன். மாணவர்கள் தங்களிடையே மச்சான்" .....என்று அழைத்து கொள்வர் .இது கூட்டாளி ..தோஸ்த்து என்று பொருள் படும்.

அந்த நாளும் வந்தது .......காலையில் ஒன்றுகூடிய போது ராகுல் தான் அங்கு சென்றுவீரம் காட்டுவதாக, வேப்ப  மரம் சுடலையில் நாட்டுவதாக முடிவு செய்ய பட்டது........இதில் சிலர் இறுதியாண்டு கல்லூரி பரீட்சைமுடிவை எதிர் பார்ப்பவர் சிலர் இறுதியாண்டு படித்துகொண்டிருப்பவர்கள். அப்போதுகைத்தொலை பேசி வசதியெல்லாம் இல்லை.  சைக்கிள் தான் அவர்கள் வாகனம்.

மாலை இருள் கவிழ்ந்ததும் ,கன்று  நடுவதற்கு குழி தோண்டுவதற்கு ,மண் வெட்டி , பிக்கான், அலவாங்கு ..........மூன்றுஅடி உயர வேப்பங்கன்று (கல்லூரியில் புரஜக்டு க்கு தேவை என் வீடில் களவாடினது.)...........கொண்டு போய் சேம காலையின்  ஒரு சுவர் ஒரமாக மறைத்துவைக்கபட்டது....இரவு எட்டு மணியில் எல்லோரும்கூடி முடிவெடுத்தபின் கலைந்துவிட்டனர் ..........ராகுலனுக்கு தூக்கமே வரவில்லை .......வீடில் இறுதியாண்டு  பரீட்சைக்கு ப்படிப்பது போல பாவனை செய்தான். வீட்டில் எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர். மணி இரவு பதினொன்றே முக்கால் , அறைக்குள் சென்று ,அரைக்காற்சட்டை போடுக் கொண்டு  அதன் மேல் .சாரம் (லுங்கி)அணிந்தான். .நெஞ்சு சம்மட்டிய் கொண்டு அடிப்பது போல அடித்து கொண்டது. பூனை போல வீட்டு மதிலால் ஏறி மறுபக்கம் குதித்தான் . மடியில் செருகியிருந்த்த் டார்ச் லையிற் ...பத்திரமாக இருப்பதை  உறுதி செய்துகொண்டான். கைக்கடிகாரம் மணி பன்னிரண்டு காட்டியது. முன்னரே கொண்டு வைத்திருந்த பொருட்களை மதிலால் உள் நோக்கி வீசினான். பின் தானும்குத்தித்து ..........அவர்கள் குறித்த திசை நோக்கி பொருட்கள் எடுத்துக்கொண்டு நடந்தான் அந்த இளம் குளிரிலும் நெற்றியால் வியர்வை வழிந்தது . உட்காந்து முதலில் புல்லை மண்வெட்டியால் செருக்கினான்.இரண்டு சதுர அடிக்கு  செதுக்கிய பின் ...இடையில் தண்ணீர் விடாய் போன்ற உணர்வு....பின் அலவாங்கினால் இரண்டு குத்துக்கள் போட்டதும் கற்பாறை தென்படவே  அதை தனக்கு  பின் குற்றி செருகி விட்டு பிக்கான் எடுத்து கிண்ட தொடங்கினான். இரண்டு மூன்று கிண்டல் போட பின்னாக இருந்து அவன் சாரத்தை  யாரோ இழுப்பது போன்ற உணர்வு. பயம்  .....தனித்த  உணர்வு...ஒருவாறு தன்னை  தேற்றி மீண்டும் ஓங்கி நிலத்தில் குழி பறிக்கும் முயற்சி. மீண்டும் பின்னால் பிடிதிளுப்பது போன்ற உணர்வு..........அந்த வேளையில் தூரத்தே ஒரு நாயின் ஊளைச்சத்தம். நாய்களின் கண்களுக்கு பேய் தென்படும்  என்று பாட்டி கதை  சொன்ன ஞாபகம். ஒரு வேளை ஆவி தன்னை நோக்கி வருகிறதோ ............... சாரத்தை கழற்றி விட்டு ஒரே ஓட்டம் ....வீடு போய் சேர்ந்து எப்படி படுத்தான் என்று தெரியவில்லை. மறு நாள் காலை அவனை தாய் தட்டி எழுப்பிய போது உடல் அனலாக கொதித்து. அவ்ள்மீண்டு போர்த்திவிட்டு ...குடிநீர்க் .கசாயம் வைக்க சென்று விடாள். காலையில் நண்பர்கள் சென்று பார்த்த போது ராகுலனின் சாரம் அலவாங்கினால் குத்தபட்டு   (சாரத்தின் தலைப்பு  பகுதியில் அலவாங்கு இறங்கி இவன் அசையும்
போது பின் நோக்கி இழுத்தது ).காணப்பட்டது ஓஹோ ...........மச்சான் இரவு இங்கு வந்திருக்கிறார்.போட்டியில்  வெல்லும் எண்ணத்துடன் என்று நண்பர்கள் கூடி கதைத்து கொண்டார்கள். அன்று மாலை ராகுலனை காணவில்லை  என்று வீட்டுக்கு  சென்ற போது அவன் காய்ச்சலில் இருப்பதை  எண்ணி தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். தாங்கள் போய் பார்த்ததையும் சொல்லி எள்ளி நகையாடினார்கள்.

உண்மையில் பேய் என்பதே இல்லய் அவரவர் மனப் பயம் தான் அருண்டவன் கண்க்கு இருண்டதெல்லாம் பேய் ......... பேய் பிடித்தவர்கள் என்பது உண்மையில்  மன நிலைக் கோளாறு  .மன அதிர்ச்சியால் ஏற்படுவது ..........முற்றும். .

மண் வெட்டி ..........ப வடிவ மரப்பிடி  போட்ட மண் கொத்தும் கருவி .........
அலவாங்கு .............இரண்டு மூணு கிலோ உள்ள முனை கூர்மையான இரும்பு கம்பி
பிக்கான்........இரண்டு முனையும் கூர் உள்ள பிறைவடிவ மரப்பிடி  போட்ட இரும்பு

இந்த பாடல் நினைவு வருகிறது ........

.சின்ன பயலே சின்ன ப்பயலே சேதி கேளடா...............
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று ....
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க .....
வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளால்
உன் வீரத்தை  முளையினிலே  கிள்ளி வைப்பாங்க.............

Tuesday, September 22, 2009

பாடம் சொன்ன பாப்பா .....(குழந்தை ).

 பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

      வாயிலில் தந்தையின் மோட்டர் வண்டியின் ஒலி கேட்கவே குட்டி அக்ஷயா , ஓடோடி சென்று வாயில் கதவை (கேட்) திறந்து விடாள். பின் தந்தையின் மடியில் உட்கார்ந்த அந்த சிறு  இடை வெளியில்பயணம் செய்தாள். சத்தம் கேட்ட லக்ஸ்மி , வாயிற் படிக்கு செல்லவும் குட்டி அக்ஷயா தாவி , தோள் மீது உட்கார்ந்து கொண்டாள். . வேலைக்களையால் வந்த மாதவன் , குளித்து வரவும் , அப்பாவின் தேநீருக்கு பங்கு க்கு நின்றாள் தானும் ஒரு மிடறு குடித்து சுவைப்பதற்காக என்று . மூன்று வயதான் அக்ஷயா , நல்ல அழகான் பெண் அலை போன்ற அழகான் கேசம், முத்து பற்கள். நீலக்கண்கள் என்று எல்லா அழகையும் சேர்த்து பிறந்திருந்தாள். வீடிலே எல்லோருக்கும் அவள் செல்ல பிள்ளை . தேநீர் வேலை முடிந்த்ததும் , லக்ஸ்மி இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். மாதவன் அன்றைய தினசரியில் மெய் மறந்திருந்தான்.

        சிறுமி அக்ஷயா , தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவளது அப்பப்பா , பின் வீட்டு தோட்டத்தில் இருந்து நாளை சமையலுக்கு தேவையான , காய் கறிகளை ஆய்ந்து கொண்டு வந்திருந்தார். விளையாட்டு பொருட்கள் சலித்து போகவே  , மூணு சில்லு  சைக்கிள் வண்டியை உருட்டிகே கொண்டு இருந்தாள் .
சிறிது நேரம் செல்லவே அதிலும் சலித்து போய் . படுக்கையறைக்குள் சென்று விடாள்.வாயிலில்  மணிச் சத்தம்கேட்கவே ..........மாதவன் சென்று பார்த்தான்.

வீடுகாரர் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாக்  இருந்தனர். அவளது பாட்டி தனது பழைய சீலைகள் உள்ள பெட்டியை திறந்து ,  அதை ஒழுங்காக அடுக்கி கொண்டு இருந்தார். சிறுமி அக்ஷயாவைகானவே இல்லய் .திடீரென , மாதவன் தன் குழந்தை நினைவு வந்தவனாய் , படுக்கை  அறையில் சென்று பார்த்தான் . அவன் கண்ட காட்சி அவனை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது .........குட்டி அக்ஷயா ..........கண்ணாடி முன் நின்று ,கண்ணில் தந்தையின் கூலிங் கிளாசும் , கையில் குழாய் போல (சிகரட் ) சுருட்டிய வெண் பெப் பர் , வாயில் வைப்பதும் எடுபப்துமாக  அப்பா போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
மாதவன் ரகசியமாக் அவளை குழப்பாமல் , வீட்டார் அனை வருக்கும் காட்டினான் . மாதவனுக்கு அன்று இரவு ஒரே குழப்பமாக் இருந்தது .தன்னை  பார்த்து தன் மகள் செய்து விடாளே என்ற கவலை ......காலயில்  கண் விழித்ததும் தீர்மானித்தான் ஆரம்பத்தில் கஷ்டமாக் தான் இருந்தது . தான் விடா முயற்சியால் கொஞ்சமாக் குறைத்து பின்பு  ஒரு நான்கு மாதத்தில் முற்றாக விட்டு விடான்.

தந்தைக்கு பாடம் சொல்லி தந்த குழந்தை ...

..( கதை உண்மை) புகை பிரியர்கள் மன்னிக்கவும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

Friday, September 18, 2009

நான் என் வரலாறு கூறுதல்.



நண்பர் ராஜராஜன் என்னை நான் பதிவர் உலகுக்கு  வந்த வரலாறு பற்றி
எழுத  சொல்லியதற்கிணங்க. இதோ சில வரிகள். 

எனக்கு படிக்கும் காலத்தில் ஆடல்... பாடல் ...நாடகம்.... நாட்டுக் க்கூத்து மேடை பேச்சு என்பன நன்றாக வரும் . எனது முதலாவது  கலைத் திறமை ஒன்பது வயதில் என் ஒன்றுவிட்ட சகோதர பையன் களுடன் ஆண் வேடம் போட்டு வில்லுபாட்டு நடத்தியது என் ஊரவாரின் பாராட்டை பெற்றேன். எனக்குள்ளே கலையுலகவாழ்வு உள்ளடங்கி இருந்தது . இளம் வயதில் சின்ன் கதைபுத்தகங்கள். வாசிப்பேன். எனது மூத்த சகோதரி வாங்கும் குமுதம் கல்கி  ஆனத்தவிகடன் என்பன் எழுத்துக்கூட்டி வாசிப்பேன் . எனக்கும் அவருக்கு பத்து வயது வித்தியாசம் இடையில் ஆண் சகோ தரன்கள். பின்பு உயர்வகுப்பு முடிந்து  ஆசிரிய பயற்சிக்கு சென்று ஆசிரியையாக கடமையாற்றியபின் திருமணம் வந்தது. என் வெளியுலகவாழ்வு குறைந்து  இருகுழந்தைகள் வீடு.... வேலை என்று ஒரு முற்று புள்ளி வந்தது . ஓய்வு நேரங்களில் முன்பு கற்று இருந்த தட்டெழுத்து பயிற்சி கைகொடுக்க் அதை மாணவ மாணவிகளுக்கு சொல்லி கொடுத்தேன். பொழுது போக்காகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது .திடீரென ஒரு நாள் நம் நாட்டு ப  பிரச்சினை உச்சக்கட்ட்மடைய ..என் இரு கைக்குழந்தை  தைகளுடனும் .இடம்பெயர்ந்தேன். எதுவுமே என் வீட்டில்  எடுக்கவில்லை அன்று தொடங்கிய ஓட்டம் ஒவ்வொரு ஊராக சென்று புலம் பெயர்ந்து கனடா மண்ணிலே காலடி பதிக்கவைத்து . என்னவனுக்கு எங்கள் உயிரை தவிர வேறெதுவுமே வேண்டி  இருக்கவில்லை. சில காலங்களில் சற்று நோய்வாய் படேன். வெளியுலகமும் குறைவாக இருந்தது. என் பிள்ளைகளும்  வளர்ந்து வர அவர்களுக்கு கணனி வாங்கி கொடுத்தார்.

நான் மீளவும் கணணி  கற்று ஒரு தடவை "யாழ் இணையம் "எனும் ஒரு தளத்தின் அறிமுகம் கிடைத்து தமிழ் எழுத கற்று கொண்டேன். சில தடவை தமிழ் எழுத தனி விசைபலகை வாங்கவேண்டுமோ என் நினைத்ததுண்டு. அங்கும் சிலர் அறிமுகமாகி கூகிள் வழி மொழி மாற்றி மூலம் (.google transliterte ............) தமிழ் எழுதுகிறேன் இடையில் தமிழிச் போன்ற தளங்களும் வாசிப்பேன். ஒரு நாள் சில மாதங்களுக்கு முன் .blogger....wordpress ..... .என்பதை ஆராய்கையில் இதனுள் நுழைந்தேன். பகலில் மருந்து மாத்திரைகளினால் தூங்கி  எழுந்த நான் கண்ணியில் நுழைந்த பின்பகல் தூக்கம் மறந்தேன் என் னுள்ளே ஒரு உற்சாகம் ஒருவகை மலர்ச்சி .......கணணி ஒரு கடல் என்று கண்டு கொண்டேன். இதன் மூலம் ஆரம்பத்தில் சந்துரு, கிருத்திகன்  அபூ யோ சீமான் கனி  கதிர் ....எனும் நண்பர்கள்  அறிமுகமாகி(யாராவது விடுபடால்   மன்னிக்கவும் )  இன்று நாற்பத்தியேழு நட்புகளை கொண்ட ஒரு குழுவே உண்டு . தமிழ் நாட்டு  உறவுகள் கருத்து எழுதும் போது தொப்புள் கொடி உறவுகளின் அருகாமையை உணர்கிறேன்.அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கூட எழுதுகிறார்கள் என்று என்னும்போது என் இறக்கைகளால் வானில் பறப்பது போன்ற உணர்வு. இந்த வலைப்பதிவுக்கு வந்து சில அதாவது ஒரு சில மாதங்கள் மட்டுமே இடையில் சில் நுணுக்கங்களை இணைக்க தெரியாமல் தி ண்டாடியதும் உண்டு.

மீண்டும் பாடசாலை வாழ்க்கை போன்ற ஒரு உணர்வு.  நட்புக்கள் ....மடல்கள் ....பாராட்டுக்கள். வலை உலகம் ஒரு தனி உலகம். இணைந்திருப்போம் நண்பர்களாக.நீங்காத நினைவுடனும் மாறாத அன்புடனும். காலமெல்லாம்
கணனி நீடூழி வாழ்க .

Thursday, September 17, 2009

பார்வைகள் ....பலவிதம்.

பார்வைகள் ....பலவிதம்.

       நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி  வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும்,  இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ்   குடியிருப்பில் வாழ்கையை தொடங்கினர். சுகந்தன் இரு சகோதரிகளுக்கு அண்ணன். அவனது தாய் தந்தையரும் பெண் வீடாருக்கு பயந்து ஏற்றுக்கொள்ள்வில்லை. கடைசியில் சுகந்தனின் தந்தையின் அனுமத்யுடன் , சுகந்தனின் தாய் அவர்களது வீடில் ஒரு அறையில் வசிக்க அனுமதித்தாள்.  மீளவும் வாழ்கை தொடங்கியது இருவரும் படிப்பை நிறுத்தி விட்டனர் .

.     ஒரு நாள் நிரா அவனது தங்கையுடன் , ஒரு கலை விழா பார்க்க ஆசை பட்டாள் சுகந்தன் தனக்கு வேலை  என்றும் தங்கையுடன் அனுப்பி வைத்தான். அங்கு சுகந்தனின் நண்பனொருவனை கண்டனர். அவன் இன்னும் சிலருடன் காண ப்பட்டான் அவன் வந்து இவர்களுடன் உரையாடினான். அதில் ஒருவன் "குட்டி யாரடா .......வளைச்சு பார்க்கலாமா ?   என்று கேட்க சுகந்தனின் நண்பன் அவள் தன் நண்பனின் மனைவி என்று கூறினான்.

சில் வேடிக்கை நிகழ்வுகளை பார்த்து விட்டு  அத்தோடு விழா  நிறைவுற்று அவர்கள் வீடு வந்தார்கள். சுகந்த்னின் நண்பன் நடந்தவற்ரை .சுகந்தனை கண்ட போது  கூறி விடான். தொடங்கியது பிரளயம் ...நிராவுடன் வாக்கு வாதப பட்டான் , அன்று சற்று  மதுவும் அருந்தி இருந்தான் . காரணம் அவள் கையிலாத சட்டை யும் ஜீன்சும் அணிந்து இருந்தாள். அந்த விழாவுக்கு. நீ ஏன் அவ்வாறு போனாய் .........என்று அவன் கேட்க
நீ என்னை பார்த்த அதே ஆடைகள்  தான்.  நான் கவ்ர்சியாக், எதுவும் புதிதாக வாங்கஇல்லை  என்றும் வாதிட்டாள்  சுகந்தன் கோவத்தின்  உச்சத்தில் அவளை அறைந்து விடான். அதனால் தான் அவள் அழுது கொண்டு இருந்தாள்.  பக்குவமடையாத மனம் , இளம் வயது , சகிப்பு தன்மையற்ற குணம் இந்த இளம் தம்பதிகளை வேதனையில் ஆழ்த்தி விட்டது. அறியாத வயது புரியாத் உறவு பிஞ்சிலே பழுத்த வெம்பல்கள்.

வாழ்க்கை இலகுவானதல்ல. எதிர் நீச்சல் போட்டு வாழவேண்டும். அது ஆயிரங்காலத்து பயிர். ஆல் போல் தழைத்து அறுகு  போல் வேரூன்றி நின்று நிலைத்து நீண்ட காலம் வாழவேண்டும்.
பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி வருவது துன்பம் தருவது காதல். .
மனமும் உடலும் பக்குவ பட்டு
திருமணத்தில் முடிய வேண்டும் காதல்.
காலமெல்லாம் காதல் வாழ்க .

Tuesday, September 15, 2009

காதல் ...........அழகு ....கடவுள்...... பணம்

காதல் ...........அழகு ....கடவுள்...... பணம்

.பதிவர் உலக நண்பர் யோ அவர்கள் என்னை  இது பற்றி எழுத அழைத்ததால் , அன்பான அழைப்பை தட்டி கழிக்க   முடியவில்லை. இது ஒன்றும் கஷ்டமான் வேலையுமில்லை.

  • முதலில் கடவுள்........என்னை படைத்த  அந்த சக்திக்கு இறைவனுக்கு நன்றி...........இளமைக்காலத்தில் மிகுந்த பய பக்தியுடன் வளர்க்க பட்டேன். நான்கிறிஸ்டியன் பெண். பாடகி .கோவில் லில் வாசகி ......தினமும் கோவிலுக்கு போய் தான் மறுவேலை.

  • பணம்..........இது இல்லாவிடாலும் தொல்லை ...இருந்தாலும் இதை  பாது காக்கும் தொல்லை. அளவோடு உழைத்து அளவோடு வாழனும். ஐந்து ரூபா உழைத்தால் அதற்கேற்ற செலவு .........ஐம்பது உழைத்தால்  அதற்கு ஏற்ற செலவு எங்கிருந்தாவது வரும். கொஞ்சம் இருந்தாலும் கஷ்ட படுபவர்களுக்கு கொடுக்கணும். 

  • காதல் .............உள்ளத்து உணர்வு எல்லோருக்கும் வரும் . மனம் கொண்டது மாளிகை , நானும் காதலித்தேன் . போராடி வென்றேன்.சோதனை  வேதனைகளைக் கண்டு சாதனை புரிந்தேன். யாராலும் கொடுக்க முடியாத மன அமைதியும் , சாடிக்கு ஏற்ற மூடி . 
  • அழகு .............ஒருவருடைய ரசனை என்றும் சொல்லலாம். அது பார்ப்பவர் உள்ளதை பொறுத்தது . இயற்கை , பூக்கள்,  குழந்தைகள்,  நீலக்கடல்,  வீசும் தென்றல். தாய்மை  அழகு. 

யாரவது முடிந்தவர்கள் தொடரலாம். ரசனையுள்ளவர்கள் தொடரலாம். நட்புடன் நிலாமதி

Saturday, September 12, 2009

தேவதையிடம் பத்து வரங்கள்.

தேவதையிடம் பத்து வரங்கள்.

இன்று தேவதை உங்கள் முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள் .இந்த தலைப்பை ஆரம்பித்து அதை  தொடரும்படி என்னிடம் மேனகா சத்தியா கேட்டுக்கொண்டார். அதன் படி ஏன் பத்து ஆசைகளை  வரங்களாக் கேட்கிறேன்.

  • (1)   மீண்டும் என் தாய் மண் மீது தோன்ற வேணும். ( கடைசியாய் ஒரு  வார்த்தை சொல்லாமல் சடுதி மரணம் அடைந்து  விடார்.)
  • (2) அழகான் அந்த பள்ளி வாழ்கை (அப்போது புரியவில்லை) இப்போது தேடுகிறேன்.
  • (3)என் தாய் மண்ணில் , மீண்டும் வாழ வேண்டும் தொலைத்த இன்பமெலாம்     பெறவேண்டும்.
  • (4)என் சக உறவுகள் ஒரு நாளில் ஒரு இடத்தில கூட வேண்டும்.
  • (5)உலகம் முழுக்க சுற்றி  வர ஒரு பறவையாய் மாறவேண்டும்.
  • (6)என் தமிழ் ஈழத்தனி நாட்டை உலகம் அங்கீகரித்து , அதை உறுதி படுத்தி ஈழத்த்மிலரெல்லாம் அங்கு வாழவேண்டும்.
  • (7) உலகமெல்லாம் வறுமை ,நோய் பிணி ஒழிய வேண்டும்.
  • (8)என் தாய் நாட்டில் ஈழத்து போரால் சடுதி மரணம் அடைந்த்த்வர் உயிர் பெற்று எழவேண்டும்.
  • (9)இறக்கும் வரை நோயிலாதவாழ்வு வேண்டும்.
  • ( 10)வேண்டியது எல்லாம் கொடுக்கும் தேவதை என் முன் நிஜமாக்   ோன்ற வேண்டும். ..............இதை தொடர நான் அழைப்பவர்கள்.

மெயசொல்ல போறேன் (கிருத்திகன்)
சந்து ருவின் பக்கம் ....சந்து ரு)
யோ வாய்ஸ் ..........யோகா
ஈரோடு கதிர் அவர்கள்
சீமான் கனி அவர்கள் 
சப்ராஸ் அபூ பக்கர்
கவிக் கிழவன் யாழவன்..
மற்றும் என் தளத்தை  பார்வையிடும் உறவுகள் எவரும் எழுதலாம்.எங்கே தொடருங்கள்.பார்க்கலாம். .

Friday, September 11, 2009

அவளுக்குள் ஒரு மனம் ....

அவளுக்குள்  ஒரு மனம் ....

 கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை  முடித்து தேநீருடன்  பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து  வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன்  செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய  உணவையும் சிற்றுண்டி களையும்  கொடுத்து வண்டி வரை சென்று அனுப்பி வைத்தாள். மேகலாவும் , கண்ணனும் பள்ளிக்கு நடந்து தான் செல்வார்கள். அவள் நினைத்திருந்தால் இதிவிட மேலான வசதியான வாழ்வு வாழ்ந்து இருக்கலாம்  ஆனால் பாழும் இதயம் கொண்ட காதலால் தான் இன்றைய வாழ்கை.

கடந்த கால வாழ்வை நோக்கி அவள் மனம் அசை போட தொடங்கியது . அப்போது மாதவி பத்தாம் வகுப்பு படித்து கொண்டு  இருந்தாள். தினமும் பாடசாலைக்கு போகும் வழியில் ஒரு சிறு கடை அதில் தான் ராசா உட்கார்ந்து வியாபாரம செய்து கொண்டிருப்பான். அழகான் இளஞ்ன் ஆனால் என்றுமே பொருட்களை எடுத்து கொடுக்க மாடான். அவன்  எழுந்து நின்றதை கண்டதும் இல்லை. உதவிக்கு நிற்கும் சிறு பையன் தான் பொருட்களை எடுத்து கொடுப்பன். ஒரு நாள் இவள் கடையில் பரீட்சைக்காண  பேப்பேர் வாங்க சென்றாள். அன்று அவளது கஷ்ட காலம் அந்த பையன் வரவில்லை. இவளுக்கு நேரம் ஆகி விட்டது சீக்கிரம் தரும்படி கேட்டாள் . கடைக்கார  ராசாவால் எடுத்து கொடுக்க முடியவில்லை.  இவள் வற்புறுத்தவே அதை உள்ளுக்கு வந்து எடுக்கும்படி சொன்னான். இவளுக்கு கோவம் வந்தது . ஏன் "உங்களால் முடியாதோ "?  என்று ஏசி விடாள். சற்றும் எதிர் பாராத ஒரு சம்பவம் நடந்தது . ராசா கதிரையில் இருந்து குதித்து கால்களை இழுத்தவாறே அதை  எடுத்து கொடுத்தான். இவளுக்கு திகைப்பாக போய் விட்டது . ராசா கால் விளங்க்காதவனா ? மிகவும் கவலைப்படாள். அவன் மீது இரக்க பட்டாள். இவ்வாறே இவர்களது நட்பு காதலாகியது.

இங்கு ராசாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும் அவன் பிறவியில் சாதாரண பையனாக தான் இருந்தான். ஐந்து வயதுக்கு பின் ஒரு கடுமையான காய்ச்சல் வந்து ஒரு ஊசி போடார்களாம் அதன் பின் தான் இப்படி ஆகியது என்றும் இடுப்புக்கு கீழே கால்கள்  பலம் அற்றவையாக போய் விட்டன . ஆரம்பத்தில் கால் களை இழுத்து நடமாடுவான். பின்பு தந்தை ஒரு சக்கர நாற் காலி வாங்கி கொடுத்தார். இவனுடன் கூட பிறந்த்த்வர்கள் எழு பேர் எவருக்கும் இப்படி இல்லை. அவனது தந்தை ஒரு சிறு தொழில் அதிபராயிருந்தார். இவன் மீது மிகவும்பற்று உள்ளவராயிருந்தார். இவன் தான் இல்லாத காலத்தில் சிரமபடுவானே ........யார் கவனிக்க போகிறார்கள் என்று கவலைபட்டு இந்த சிறு கடையை போட்டு கொடுத்தார். காலப்போக்கில் தாயும்  தந்தையும் இறந்து விட்டனர். சகோதரர் களும் ஒவ்வொருவராக் திருமணமாகி சென்று விட்டனர். ராசா மட்டும் தனித்து விடப்படான். இடயில் இவனிடம் உதவி பெற சகோதரர்கள் வந்து போவார்கள். தன் சோக கதையை ஒருநாள். மாதவிக்கு சொல்லியிருக்கிறான் ராசா.

அன்றிலிருந்து அவன் மீது ஒரு இரக்கமும் , நேசமும் அவளுக்குள் உருவாகி அது காதலாகியது.  இதை கேள்வி பட்ட் மாதவியின் பெற்றார் கடுங்கோபபட்ட்னர். நொண்டி என்றும் ஏளனம் செய்தனர். ஒருநாள் இவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் தாலி கட்டி கொண்டனர். அன்றிலிருந்து மாதவி பெற்றவரால் வெறுக்க பட்டாள். இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் எவரும் அவளை அணைக்க் வில்லை. ராசாவின் தந்தை இறந்த பின் அவனது வீடு இவன் பெயருக்கு எழுத பட்டதை அறிந்து ராசாவின் சகோதரர்களும் வேறுபாடு காட்ட தொடங்கினர். அந்த கிராமத்தில் இருக்க விரும்பாத ராசா குடும்பம் வீட்டை விற்று பணத்தை திரட்டி , ஒரு மணிக்கூடு திருத்தும் கடை ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். அவனது விடா முயற்சியும் மாதவியின் ஒத்துழைப்பையும் அவர்களை வாழ்வில் முன்னேற்றியது. வெளியிடங்களுக்கு செல்வதற்கு ஒரு வண்டி வாங்கி விடார்கள். அதில் விடாமுயற்சி உள்ள ராசா கை மூலம் இயக்கும் வாகன அனுமதி பெற்றான். மணிக்கூட்டு கடையிலும் பணிக்கு நான்கு பேர் வைத்தது கொண்டார்கள். நகரத்தில் உள்ளவீட்டையும்  சொந்தமாக்கி கொண்டார்கள். ராசா இருந்து கொண்டு செய்யும் பணிகளில் மிகவும் ஆர்வமுள்ளவன். விரைவில் தொழில் நுட்பங்க்களை கற்று கொள்வதில் சிறந்தவன். அவனது ஆசையெல்லாம் வாழ்ந்து  காட்ட வேண்டும் என்பது தான். தன் பிள்ளைகளை படிப்பித்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டும் , கடைசிவரை மாதவியை வைத்து காப்பாற்ற வேண்டும் என்பது தான் ..

கால் ஊனமுற்றாலும் ஊனபடாத இதயத்தை புரிந்து கொண்டது .........அவளுக்குள் ஒரு மனம் ........கதை உண்மை பெயர்கள் கற்பனை. .

Thursday, September 10, 2009

அத்தை மகளே போய் வரவா ?

அத்தை மகளே ...போய் வரவா ?

மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............

கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட  நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கும் விலை வாசிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெளி நாட்டு   வேலை வாய்ப்புக்காக விண்ணபித்து இருந்தான் பாஸ்கரன். அவனுக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என எண்ணவே இல்லை. மகிழ்ச்சி ஒரு புறம் அவளது பிரிவு ஒருபுறமாக் புறப்பட்டு விட்டான் . பாஸ்கரன் தந்தையை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது தன் இரு தங்கைகளையும் ஒரு நல்ல நிலைக்கு வைக்கும் பணியும் வீட்டுப் பொறுப்பும் அவனி டம் ஒப்படைத்து விட்டு , தந்தை காலமாகி விடார். அவருக்கு அதிக வயது இல்லய் என்றாலும் , வருத்தமும் துன்பமும் சொல்லிக்கொண்டா வரும் . தலைக்குள் விறைப்பு என்று படுத்தவர்  பின் அது மூளைக் கட்டியாக்கி சத்திரசிகிச்சை வரை போய் சென்ற வருடம் ,   அவரை காலன் கவர்ந்து சென்று விடான்.  பாஸ்கரன்  முடிந்த வரை வீடு பொறுப்பையும் தங்கைகளின் பாடசாலை தேவைகளையும் அவனே பார்த்து கொண்டான். இதுவரை தந்தையின் சேமலாப பணம் கை கொடுத்தது கடந்த மூன்று மாதங்களாக் தான் மிகவும் கஷ்ட படான். இதற்கிடையில் அவனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரி குடும்பம்   நாட்டு பிரச்சினையால் கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் ஒரே மகள் சந்தியா , ஆசிரியையாக வவுனியாவுக்கு அண்மையில் ஒரு சிறு கிராமத்தில் படிப்பித்து கொண்டு இருந்தாள். அங்கு பிரச்சினையால் மாற்றல் வாங்கி கொண்டு கொழும்புக்கு வந்திருந்தார்கள். இடமும் புதிது ,அவர்களுக்கு தேவையான் உதவிகளை செய்து கொடுத்தான் பாஸ்கரன். அவர்கள் இவர்களையே  நம்பி வந்திருந்தார்கள். இவனது  நட்பு அண்மையில் தான் காதலாகியிருந்த்து .

முறை மாமா ஏதும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆழமாக் இறங்கி விடான் காதலில் . ஆனால் தன் தங்கைகளின்  நல் வாழ்வையும் மறக்க வில்லை இரு வீட்டு  பெற்றவர்களுக்கும்  தெரியாது. அதற்கிடையில் இப்படி வெளி நாட்டு  அழைப்பு வரும் என எண்ண வில்லை அவன். விடை பெறும் நாளும் வந்தது

.எல்லோருக்கும் பயணம் சொல்லி புறபட்டு விட்டான் . வவனியா மாமா தான் விமான நிலையம் வரை வந்தார். முதல் நாள் இரவு , சந்தியா கோவிலுக்கு சென்று வரும் வழியில் ,. சந்தியாவை கண்டு சத்தியம் வாங்கி இருந்தான். தான் வரும் வரை தனக்காக் காத்திருக்கும் படியும் ....வந்ததும் பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்வதென்று உறுதியுடன்  கூறியிருந்தான். காலம் இவர்களுக்காக காத்திருக்குமா ? காதல் திருமணத்தில் முடியுமா? குடும்பத்தில் ஒரே பெண்ணான சந்தியாவை இவனுக்கு கொடுப்பார்களா ?  ...........ஏக்கங்களுடன் காத்திருக்கிறான் பாஸ்கரன்.

காலம் தான் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும்.

Sunday, September 6, 2009

அகேனம் தேடி தவிக்கிறேன்..........

எனக்கு லாபிரா லாமின்  இடமிருந்து ஒரு  அழைப்பு ..........அகர வரிசையில் எழுதும் படி ...........இதோ என் சிந்தனையில்  உதித்தவை.......

அ..... ..அம்மா. எனக்கு உதிரத்தை பாலாக்கி ஊட்டிய என் தாயை நினைகிறேன்.
ஆ  .....ஆண்டவன் . என்னை  படைத்த ஆண்டவனை போற்றுகிறேன்.
இ........இதயம்  ....என் இதயம் கவர்ந்து  அன்புடன் இருக்கும் என் அன்பு அத்தான்.
 ஈ ......ஈ மடல் மூலம் என்னுடன் அன்போடு உறவாடும் வலைப்பதிவு நட்புகள்.
உ ......உலகம் ...உலகம் உருண்டை து ன்பமும் இன்பமும் உள்ளது
ஊ ....ஊர் , உறவுகள் நான் வாழ்த அமைதியான் கிராமம்.
எ.......என்றும் மறக்க முடியாத உறவுகளை தினமும் நினிக்கிறேன்.
 ஏ...... ஏணி போல்  உதவிய ஆசிரியர்களை, என் நெஞ்சம் என்றும் மறவாது ..
ஐ  .... ஐயா என்று நான் அன்போடு அழைக்கும் என் பக்கத்து வீடு உறவு.
ஒ.......ஒரு நாளும் எனை மறவாத இனிதான மனங்களை  எண்ணுகிறேன்.
ஓ......ஓராயிரம் கோடி நன்றிகளை எனை  பெற்றவருக்கு  சொல்லவேண்டும்
ஒள..........ஒளவை பாட்டியாக எட்டாம் வகுப்பில் நடித்த ஞாபகம் ....நினைவில்
            நிழலாடுகிறது .
 .:         அகேனம் தேடி தவிக்கிறேன் என் கணனியில். .உதவி .........உதவி............


    .:  ithu o0o

Wednesday, September 2, 2009

ஈன்ற பொழுதில் .............

ஈன்ற பொழுதில் .............

       அன்று மாலை ராகவனும் மனைவி சாரதாவும் குட்டி பாப்பா , அனு என்கிற அனுஷ்காவும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு பிறந்த நாள் விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். இங்கு அனுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ராகவனுக்கு முதல் பெண் குழந்தை...அவன் அம்மாவுக்கு முதல் பெற்றது  பெண்ணாக இருந்ததில் சற்று வருத்தம் தான் . இருபினும் ராகவனுக்கு அதிலெல்லாம் , கவலையில்லை . வேலை முடிந்து வரும் அப்பாவை  காண  ஓடோடி வருவாள். காலில் சொக்ஸ் ( காலுறை) கழற்றுவது , அம்மாவின்  தேநீரை அவன் பருகி இடயில் ஒரு மிடறு பங்கு போட்டு கொள்வது என்று அவன் உலகமே அவள் தான் . நல்ல குறுகுறுப்பான பெண் குழந்தை . வேலையில் சற்று தாமதமானாலும் , அவள் இரவு படுக்கும் நேரமானாலும் தந்தையின் மோட்டார்  பைக் சத்தம் கேட்டால் துள்ளி ஓடி வாசலுக்கு வந்து விடுவாள் "அனுக்குட்டி "என்று அவன் அழைத்தால் அவன் வேலை களையெலாம் பறந்து விடும் ..

பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . நான்கு வயது எட்ட இன்னும் சில மாதங்கலே இருந்ததன . பாடசாலயில் சொல்லிக்கொடுக்கும் சிறு பாட்டுக்களை அம்மா தூங்க வைக்கும் போது பாடிக்காட்டுவாள். அவர்கள் தாயாராகி விடவும் , அவர்களை அழைத்து செல் வாடகை வண்டி , வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அங்கு சென்றதும் அனுஷ்காவுக்கு ஒரே கொண்டாடம் . சோடனைகள்... அவளை போலவே அம்மா அப்பாவுடன் குழந்தைகள். அன்று பிறந்தா நாள் கொண்டாட இருப்பவர் ஒரு பாட்டி தன எழுபதியிந்தாவது பிறந்த நாள். அவருக்கு விருப்பம் இல்லாமலே   பேரார்களால் ஆயத்தம் செய்ய பட்டது. சிற்றுண்டி பரிமாறபட்டது .சிந்தாமல் அழகாக்  சாப்பிட்டாள். ராகவன் விருந்தின் போது மருந்தாக் சில குடிவகை எடுப்பார். அதனால் தான் அவர்கள் வாடகை வண்டியில் வந்தனர்.மாயா ஜால வித்தைக்காரன் , வித்தை காடினான். கை கொட்டி ரசித்தாள்.  சங்கீத கதிரை போன்ற  , போட்டி விளையாட்டுக்களும் இருந்தன . பாட்டிக்கு கொள்ளை சந்தோசம். இறுதியாக இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு சிறு போட்டி .........சிறுவர்கள் பாட்டுப்பாடி மகிழ்விக்க வேண்டும்.  சிலர் பிகு பண்ணினார். சிலர் வெட்க பட்டனர். சிலரை இழுத்து வந்து பாட வைத்தனர். அவர் அமைந்துள்ள வரிசையில் ,  அனுஷ்காவின்  முறை வந்தது. தாய் சாரதா .........அவளை பாடிக்காட்டும்படி , கேட்க , கம்பீரமாக் எழுந்து சென்றாள்.  .எல்லோரும் அனுக்குட்டியை பார்த்து கைதட்டினார்கள்.  பாடினாள்.........

அப்பா வை  போல இவ்வுலகில்
 யாரோ உள்ளார் அன்புடையார் ...
காலும் கையும் சோராமல்
கருத்தாய் என்னை காத்திடுவார்
தட்டி தட்டி கொடுத்திடுவார்
தாலோ தாலோ தூங்கேன்பார். ...............

..சாரதாவுக்கு ஒரே ஆச்சரியம் . கடந்த முறை  பெற்றார் தினவிழாவுக்கு பாடிய  அம்மாவைப போல் என்ற பாடலை இவள் அப்பாவை போல் என்று பாடுகிறாளே என்று . ராகவன் சத்தம் கேட்டு ஓடோடி வந்து கட்டி அணைத்தான். குட்டி அனுஷ்கா எல்லோருடைய பாராட்ட யும் பெற்றாள். ........

.ஈன்ற  பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......
.பாடகி என் கேட்ட தந்தை. ..

Tuesday, September 1, 2009

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் .......

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............

அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை  இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை.

பண்ணை  வீட்டுக்கு  போகும் பிரதான நீர் வழங்கல்  குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை எழுத்து கொண்டு , போக அவன் வீடு  பெட்டை  நாய் ஈன்ற குட்டிகளில்  ஒன்று தானும் தானும் என்று , அவன் பின்னே துள்ளி யும் ஓடியும் சென்றது .அவ்வழியால் போவோருக்கு பண்ணை வீட்டு  காவல் நாய்களுக்கு பயம். அவைகளின் தோற்றமும் , கத்தும் (குரைக்கும்) தொனியும் திகிலூட்டும். அவைகளை   கூட்டை விட்டு இரவில் திறப்பார்கள் அதிகாலை  ஆறு மணிக்கெல்லாம் , அடைத்து வைப்பார்கள். யாரும் உள் செல்வதென்றால் காவலாளியிடம் நாய் கூடுக்குள் நிற்கிறதா என்று கேட்டு விட்டு தான் உட் செல்ல முடியும்.

கடைக்குட்டி குடத்தில் நீரை நிரப்பி , தான் தலை மீது வைக்கவும் , நாய்களின் குரைப்பு கேட்கவும் குடத்தை  கீழே போட்டு விட்டு ஓடத்தொடங்கினான். குட்டி நாயும் வேகமாக ஓடத்தொடங்கியது .அவர்களின் கஷ்ட காலம் அன்று நாய்கள் கூட்டுக்குள் அடைக்கவில்லை. ஒரே ஒரு கவ்வி உதறலுடன் குட்டி நாய் , கதறலுடன் இறந்து விட்டது .பெரிய நாய் தன் இனம் என்று கூட சிந்திக்கவில்லை.(ஐந்து அறிவு படைத்தஜீவ்ன் எங்கே அறிவு ) பின்னல் துரத்தி வந்த காவலாளி , அவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

கடைக்குட்டி வீட்டில்  போய் நடந்ததை சொன்னான். வலிமை படைத்தவனின் நாய் கூட , ஏழை களின் நாயை குதறி விட்டன.சில  நாடுகளின் அதிகாரவார்க்கம் , சிறுபான்மையினத்தை கொன்று ஒழிப்பது போல  பண்ணை வீட்டு நாய்க்கும் ஏழை வீட்டு நாய்க்கும் நடந்த கதை  .

 ஒரு  நாட்டில் பெரும் பான்மை இனம் சிறு பான்மை இனத்தை சில வலிமையானவர்களின் உதவியோடு ஒழித்து கட்டுவது என் நினைவுக்கு வருகிறது.

நாய்களுக்கே  இந்தகதி என்றால் மனிதர்களுக்கு .............(என்னை சிந்திக்க வைத்த நிகழ்வு )

யாரை நம்பி ..................

யாரை நம்பி ..............


.......கடந்த வாரம் ஒரு மரண வீடுக்கு சென்று இருந்தேன். ஒரு பெண்மணி எழுபது வயது இருக்கும் . ஊரில் பாலர் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் . காலம் தன் வேலையை செய்ய நானும் வளர்ந்து பெரியவளாகி என் படிமுறைகளை கடந்து இன்று ஒரு அம்மா வாக புலம் பெயர்ந்து உலகின் குளிர் iகூடிய நாட்டில்.


என் எண்ண aஅலைகள் மீளவும் தாயகம் நோக்கி ...........நான் பிறந்து வளர்ந்தது அமைதியான் ஒரு கிராமம் . அங்கு அந்தரீச் சர் தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்தார் .கணவன் ஒரு புடவைகடையில் வேலை பார்த்து வந்தார் . மூன்று ஆண் குழந்தைகள். வீட்டு வேலை , பாடசாலை வேலை என என்ன கஷ்ட பட்டு இருப்பார் அவர்களை வளர்க்க. மூத்தவன் , ஏ எல் (பன்னிரண்டாம் வகுப்பு )படித்து முடிய பல் கலை கழகம் செல்ல புள்ளிகள் போதவில்லை , ஒரு மாமன் முறையானவர் துணையுடன் , பிரித்தானியா அனுப்பி வைத்தார் . அங்கு அவன் படித்து பட்டம் , நல்ல உயர் தொழிலும் செய்வதாக ஊரில் பேசிக்கொள்வார்.

இரண்டாவது மகனும் படித்து நாட்டுப் பிரச்சினையால் மேற்படிப்பு படிக்க முடியாமல் ,ஜெர்மனிக்கு புறப்பட்டான். மூன்றாவது கடைக்குட்டி , குட்டி யானை போல. எந்நேரமும் தாயின் (கைக்குள் )சீலைக்கு பின் திரிவான். நம்ம ஊரில் ராணுவகக்கெடு பிடி . இளம் பையன்களை பிடிப்பதும் , ஆட்காட்டி முன் காட்டி கொடுப்பதுமாய் இருந்த காலம் . பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது நான் வசிக்கும் குளிர் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் . காலம் ஓடிக்கொண்டே இருந்தது , நானும் திருமணமாகி என ஊரில் வாழ்த்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு துயர செய்தி .அவரது மகன் மாரடைப்பால் காலமாகி விடார் என்று . அதை அங்கு வசிக்கும் வெள்ளைக்கார பெண் ஒருவர் தான் அறிவித்து இருந்தார். இவரும பல கஷ்டங்களுக்கு மத்தியில் , லண்டனுக்கு சென்று , மகனின் கிரிகைகளில்பங்கெடுத்தார் . . இறந்த அதிர்ச்சியுடன் மேலும் அதிர்ச்சி இவருக்கு அறிவித்த பெண் , வெள்ளைக்காரி, மருமகள் என்பது , அவனுக்கு ஆணும் பெண்ணுமாக் இரு வாரிசுகள் வேறு. என்ன செய்வது . இவர் தாயகம் திரும்பி விடார். இருப்பினும் அவள் இவருடன் தொடர்புகளை வைத்திருந்தார்.

பின் சில காலம் கணவனும் வலிப்பு நோய் காரணமாகஇறந்து விட்டார். இவர் தனித்து வாழும் காலத்தில் இரண்டாவது மகனுக்கு பெண் பேசி அனுப்பி விட்டார். அங்கு சென்றவள் அவனின் கோலத்தை பார்ர்த்து மணமுடிக்க மறுத்து விடாள், இவருக்கு துன்பத்தில் மேல் துன்பம் , இறுதியாக மூன்றாவது மகன் , பொறுபேற்று நான் வசிக்கும் குளிர் கூடிய நாடுக்கு வந்து விட்டார். சில காலம் இன்பமாய் வாழ்ந்தார். பின்பு மகன் இவரை கவனிப்பதில்லை . நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை , இப்படியாக இருக்கும் காலத்தில் அவனுக்கும் ஒரு பெண் சிநேகிதியாம். அவள் சரித்திரம் அறிந்தால்........... ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை பெற்ற வளாம் .கணவன் கை விட்டு சென்று விடானாம் . இவருக்கு அவளுடனும் ஒத்து வரவில்லை . நம்ம ஊரவார்களை கண்டால் பேசமாடார்.


சோகத்தின் மேல் சோகம் , பின்பு தனியாக ஒரு இல்லிடம் எடுத்து வாழ்ந்து வந்தார். ஆசிரியரின் பிள்ளைகளே இப்படி செய்து விடார்கள் எனறு ஊரார் பேசிகொண்டார்கள் . பின்பு நோயும் மூப்பும் வாட்ட ஒரு பராமாரிப்பு நிலையத்தில் வாழ்ந்தார். இடையில் மகன் மட்டும் வந்து பார்த்து செல்வதாக கேள்வி பட்டோம். அந்தஆசிரியரின் வாழ்வை நினைக்கவே கண் கலங்கு கிறது. பெற்ற பிள்ளைகள் இப்படி செய்து விடார்கள்.

புலம் பெயார் நாடுகளில் என்ன வாழ்கை என்று வாழ்வே வெறுத்து போகிறது . இயந்திரங்களோடு இயந்திரமாக் வாழவேண்டிய வாழ்வு .

இந்த நேரம் என என நினைவில் நிழலாடும் பாடல்.........


..தென்னையை பெற்றால் இளநீரு ,
பிள்ளயை பெற்றால் கண்ணீரு ,
பெற்றவள் மனமோ பித்தம்மா ,
பிள்ளை மனமோ கல்லம்மா ...............

...இப்படி எத்தனை பிள்ளைகள் கல் மனமாய் வாழ்கின்றனரோ ?

Wednesday, August 26, 2009

பேனாவின் சிவத்த மை ....

பேனாவின் சிவத்த மை .........

அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது , கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று , மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள்.


போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் பிரத்தியேக (.tuition ..)வகுப்புமாய் ,இருந்தாள். வருட இறுதியும் வந்தது .
தனது திறமையெல்லாம் திரட்டி சோதனையில் வெற்றி பெற்று விட்டாள்.
நான்கு டீ தரத்திலும் நான்கு சி தரத்திலும் சித்தியடைந்து விட்டாள் . பெரியன்னாவுக்கும் ,பெரிய பட்டணத்துக்கு அம்மாவின் கடிதத்துடன்
அவளும் கடிதம் எழுதினாள் . அவளின் பெரியண்ணா மூணு
மாதமொருமுறை ,மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் போது
தான் வருவார்.

அண்ணாவின் பதிலுக்காக நாளும் பொழுதும் பார்த்து கொண்டு இருந்தாள். அடுத்த வகுப்பு க்கு அக்கிராமத்தில் வசதி குறைவு என்பதால் யாழ்பாணத்தில் இருந்து ப்டிக்க, ஒழுங்கு களை பெற்றவர் ஆயத்த படுத்திக்கொண்டு இருந்தனர் மூன்று வாரங்களால் ,பெரியண்ணாவின் கடிதம் அவள் பெயருக்கு ,
திருத்தி திருப்பி அனுப்பப்பட்டது . ஆங்கில எழுத்துகளை சுற்றி சிவப்பு வட்டங்களுடன்....... " கடிதம் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும் " .....

இறுதியில் அடுத்த வாரம் போயா விடுமுறையுடன் ,ஊருக்கு வருவதாகவும் ,
மீதி நேரில் என்று . அந்த கடிதம் அவளுக்கு சம்மட்டி போன்று இருந்தது.
பரிசை எதிபார்த்து , சந்தோஷத்தில் துள்ளி குதித்த அந்த சிட்டின் மனம்
நொந்து விட்டது ஏமாற்றத்தால் . அந்த சொற்கள் (...Distintion, Credit, Bus, traveling,tuition fees ,......)போன்றவை . அவள் மனம் .....இவர் "பெரிய "....
சட்டம்பியார் போல ...என்று திட்டி கொண்டது .

அந்த நாளும் வந்தது , மாலைபொழுது இருளாகிய நேரம் வந்தார் பெரியண்ணா. வீடுக்கதைகள் ,பேசியபின் ,சாதனாசிட்டு ,பெரியண்ண வுடன் ,கோபமாகவே இருந்தது. மறுநாள் காலை ,அவள் ப்டிக்கும் மேசையில் , ஒரு நூறு ரூபா நோட்டு (தாள்) காற்றில் பறக்காமல் புத்தகத்தின் கீழ் இருந்தது. பிரபலமான கண்டோஸ் சொகோலேட் உடன் . .அண்ணா மீண்டும் பெரியபட்டண்ணம் சென்று விட்டார் .

நம்ம கதாநாயகி ,உயர் தரம் முடித்து ,கோப்பாய் பயிற்சி கூடம் முடித்து காலப்போக்கில் சர்வகாசாலையில் தமிழ் விரிவுரையாளர் ஆகினார் . .
சில வருடங்கள் உருண்டோடின ,பெரிய அண்ணாவும் குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் . சாதனாவும் இயற்கை சக்கரத்தில் சுழன்று , தாயாகி தொடர்ந்தும் வேலையில் இருந்தாள் .

வரலாறு மீண்டும் எழுதப்படும் என்பது போல , பெரிய அண்ணாவின் மகனும் பல்கலை கழகம் வந்தான் , ஒரு நாள் அவனது குறிப்புகள் திருத்தும் போது அவனின் புத்தகத்தில் பிழைகளை சுற்றி வட்டம் போடும் போது ,எங்கோ சென்றுவிட்ட , பழைய நினைவுகள் ,மீட்ட பட , நொந்த அவள் இதயத்தில்
இருந்து கண்ணீர் துளிகளாய் .... இரண்டு சொட்டுகள் அவன் புத்தகத்தில் விழுந்தன . அவளது திருப்பி அனுப்ப பட்ட கடிதம் நன்றாக மனத்தை பாதித்து இருந்தது . . .

(அண்ணா சட்டம்பியாராக இல்லாமல் , பாசத்துடன் சொல்லி திருத்தி இருக்கலாம் தானே .அன்று மனம் நோகாதிருந்தால் .......இன்று நான் எழுதியிருக்க மாட்டேன் )

யார் சொன்னது இது கற்பனை .............என்று

Tuesday, August 25, 2009

தெளிவு பிறந்தது .............

தெளிவு பிறந்தது .................

அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடுமையால் தாயின் அருகாமையயை விட்டு விலகவே இல்லை . பள்ளி விடுமுறை வேறு . எங்காவது கூடி போங்கள் என்று சாருமதி கேட்டு இருந்தாள். மாதக் கடைசி விடுப்பு எடுக்க முடியாது அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

அலுவலகத்தில் டைபிஸ்டு இந்திரா , சற்று ஒரு மாதிரியானவள் என்று கேள்வி பட்டு இருந்தான் . ஆனால் அவனுடன் எந்த விதமான் , செயல்களுக்கும் இடம் கொடுபவளாக் காட்டிக் கொடுக்க வில்லை. . ராகவன் தன் தேநீர் இடைவேளை முடிந்து , மீண்டும் தன் இருக்கையை அடைந்தான். எதோ சந்தேகம் கேட்க வந்தவள் , சார் இன்று , ஏதும் சுகவீனமா ? ஏதும் பிரசினியா ? வீடுக்கு போகும் போது நம்ம வீடு பக்கம் வந்து போங்க சார் என்று ........சூசகமாக சொன்னாள்.

ராகவன் மனம் கிடந்து அல்லாடியது. இரவு மனைவியின் அணைப்பு கிடைக்க வில்லை எதோ ஒன்றுக்காக மனம் ஏங்கியது. அவனது வாழ்வில் என்றுமே அப்படியான இடங்களுக்கு போனதில்லை. வாலிபத்திலும் சரி இப்போதும் சரி , "அப்படியான " கதைகளை நண்பர்களுடன் பேசி கொள்ளவதுடன் சரி . அந்த இடத்திலே அந்த நினைப்பை விட்டு விடுவான். இன்று ஏனோ ஒரு தடுமாற்றம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் என்று ..... என்று மனம், அமைதி அடைய வில்லை.

எதோ ஒரு தவிப்பு ........ஒரு தடவை போய் தான் பார்ப்போமே....என்று மனம் ஏங்க , வேலை முடிந்ததும் தன் வாகனத்தை ,அவள் வீடு நோக்கி ஓட்டினான். வீட்டை அண்மித்தும் சற்று தூரத்தில் நிறுத்தினான். கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான். களவு மாங்காய் ருசிக்கும் என்பார்கள். அவள் வீட்டை அண்மித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். அழைப்ப்பு மணியை , அழுத்த கையை உயர்த்தியவன் , வாயிலில் இருக்கும் ஆண்களின் காலணிகளை பார்த்தும் திடுக்கிட்டான். யாரோ உள்ளிருக்கிறார்கள். சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு . விறு விறு என்று , தன் காரை நோக்கி நடந்தான். வேகமாக் வீடு நோக்கி சென்றான். வீட்டை அடைந்ததும் , சாருமதி , ஏனுங்க இவ்வளவு லேட்டு , மாதுளனை டாக்டரிடம் அழைத்து போனேன் , மாத்திரைகள் தந்தார், நன்றாக் வேர்த்து காய்ச்சல் , குறைந்து விட்டது. சமர்த்தாக் தூங்குகிறான் என்றாள்.

குளித்து இரவு உணவை முடித்தவன் .........சற்று நேர தொலைக்காட்சி பார்த்தவன், நித்திரைக்கு சென்றான். சமையலறை வேலை முடித்து வந்தவள் , மாதுளனுக்கு இரவு மருந்தை புகட்டி விட்டு , நன்றாக் போர்வையை இழுத்தி போர்த்து விட்டு , படுக்க சென்றாள். ராகவன சலனமற்று காத்திருந்தான். என்னங்க தூங்கிடீங்க்களா? நேற்று மாதுளனுக்கு ,முடியலைங்க , அது தான் அவனுடன் படுக்க வேண்டியதாயிற்று என்றாள். . அடியே என் ராசாத்தி கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும். ஒரு சின்ன் அஜச்த்மேண்டு (adjustment )...இது கூடவா முடியாது ? என்று அவளை இறுக அணைத்தான். விடிந்ததும் நல்ல பொழுதாக் விடிந்தது , . வேலைக்கு போகும் வழியில் அட சீ .....இப்படி ஒரு , சபலமா ? அநியாயமாக் ஒரு சாக்கடையில் விழ இருந்தேன். ஜென்மம் முழுது ம ஒரு கறையை தேட இருந்தேன். அப்படி போய் இருந்தால் மனம் அமைதியடையுமா? சாருவுடன் , இணயும் போது குற்ற உணர்வால் அல்லவா கூனி குறுகி இருப்பேன். என் சாருவுக்கு துரோகம் செய்ய இருந்தேனே. கடவுளே என்னை மன்னித்து விடு ...........இனி மேலும் தடுமாற விடாதே என்று மனதுள் கும்பிடான். அலுவலகம் சென்றவன், அமைதியாக தன் வேலையில் ஈடு படான். டைபிச்டுவை கூபிட்டு ..........தான் ஒரு வாரம் குடும்பத்துடன் விடுமுறை செல்வதாகவும் அந்த வாரதுக்கான் வேலையை குறிபெடுக்க் வரச் சொல்ல அழைப்புமணியை யை அழுத்தினான்.

மறு நாள் ராகவன் சாரு , குழந்தைகள் மாதுளன் , மனோஜனுடன் விடுமுறை விடுதி ..........நோக்கி பயணமாயினர்.

குறிப்பு .....நான் இப்படி யான கதை எழுவது இது தான் முதல் தடவை .
குறை நிறை சொல்லுங்க.

Monday, August 24, 2009

பருவத்தே செய்யும் பயிர் ............

பருவத்தே செய்யும் பயிர் ..............

அன்று ஞாயிறுமாலை, ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .
எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது. கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவஅட்டகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை எல்லாம் பணமாகி ,அவன்
லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை
கொஞ்சம் தணித்து மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,
மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் .

சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்திரத்தை மீட்க பணம் அனுப்பும் படி கடிதம் வந்தது . இவ்வாறு அவன் அனுப்பும் செலவை மீத படுத்த மூன்று மாத காசை ஒரே தடவையில் அனுப்பினான் .காசை எப்படி உழைத்தான் என்பது வேறுகதை ,படிப்பில் ஆர்வமுள்ள அவன கஷ்டத்தின் மத்தியிலும் படித்தான் , இரவில் வேலையும் , பகலில் படிப்பும் ,ஆகி ,நித்திரை குறைய
உடல் சோர தொடங்கியது ,இதற்கிடையில் கெளசலா வின் கலியாணம் நடந்து முடிந்தது , தம்பியின் காசில் கோலாகலமாக் கலியாணம் . மாறிய கடன் கட்ட இரண்டாவது வேலை தொடங்கினான் . காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடியது

தகப்பனும் இளைப்பாறி ,தாயக கெடுபிடியால் அவர்கள் மருமகனின் துணையுடன் கொழும்புக்கு இடம் மாறினார்கள். அதற்கும் ஒரு பெரிய தொகை நண்பர்களிடமும் ,முதலாளியிடமும் உருட்டி பிரட்டி அனுப்பி வைத்தான் , காலம் தன் கடமையை செய்ய அவனும் முப்பது வயதானான் . தந்தையின் ஓய்வு ஊதியப் பணம் போதாது என்றும் மாதம் மாதம் அனுப்பும் படியும் கடிதம் மேல் கடிதம் வரும் சிலசமயம் மேசையில் உள்ள கடிதம் திறக்க படாமலே இருக்கும் கெள சலாவும் இரு பெண் குழந்தைகளுக்கு தாயாகி ,வாழும் காலத்தில் , ஆதவனை பற்றி , அவன் உணர்வுகளை பற்றி சிறிதும் எண்ணவில்லை ,தந்தையாரும் காலமானார் .

பதின் மூன்று வருடங்காளாகின.... ஒரு நாள் அதிகாலை , டெலிபோன் (தொல்லை பேசி ) சிணுங்கியது ,உடன் தங்களுக்கு அழைக்கும் படி .... சேதி இது தான் ............ அக்கா மகள் பெரியவளாகி விடாள் . ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று , நான் என்ன காசு காய்க்கும் மரமா ? கோடியில் வெட்டி அள்ளியா காசு வரும் . எதோ கடமைக்காக அனுப்பி வைத்தான். மறு மாத மடலில் அவனது ,முகம் தெரியா மருமகளின்
வித விதமான் போட்டோக்கள் (நிழல்படம் ) அன்றைய தபாலில் வந்திருந்தன . இன்னும் காலம் கடமையை செய்யா ,அவன் வந்து பதினாறு வருடங்கள்
ஆயின . வயதும் முப்பதியாறானது . இப்போதெலாம் சாராசரி வாழ்கை காலம் அறுபது என்பார்கள் .அதில் முப்பத்தி ஐந்தில் மாரடைப்பு வருவது ,விதி விலக்கு வாழ்கையின் மூன்றில் இரண்டு பகுதியை , இழந்து விட்டான் .அக்காவோ அம்மாவோ அவனை பற்றி சிந்திபதாயில்லை . உறவினர் கேட்டாலும் ,
கடன் பிரச்சனை என்று சமாளித்து விடுவான் .

காலம் கரைந்து கொண்டேயிருந்தது . கடற்கரை இருள் சூழ்ந்து கொண்டது .
தாயக சேதிகளை கேட்கும் அவன், மீண்டும் தாயகத்தில் , தனது அயல வீட்டு நண்பனை ....,இரண்டு மாதங்களுக்கு முன் மாவீரனான கேசவனை, நினைத்து கொண்டது .அவர்களின் குடும்பம் தற்போது வவனியாவில் .இருந்தனர்.

தன்வீடு நோக்கி செல்லும் அவனின் எண்ணத்தில் ,கேசவனின் அக்காவையும் குடும்பத்தினரையும் , இந்தியாவுக்கு வரும்படி தொலை பேசியில் அழைத்து சொல்லவேண்டும் ........,கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் .

காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக ......................

Saturday, August 22, 2009

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை..

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை...

நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , நான் அன்புக்கு பஞ்சம் இல்லை . பெரிய பட்டண த்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பழவகை எல்லாம் ...கொண்டு வருவார் ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் அப்பா .. நெஞ்சிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) என்று தொடரும் ..

.பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . நானும் புலம் பெயர்ந்து , நானும் அம்மாவாகி , புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டேன் அப்பா அந்த பாட்டு ...

தொலை பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் .

பென்சனியர் , அம்மவும் காலமாகி விட்டா. நாங்களும் போக முடியாத நிலை . எங்கள் வீட்டு சொக்கன் (தோட்ட வேலை செய்தவர் ) பெற்ற பிள்ளையுடன் இருந்து காலமாகி விட்டார். கடைசி வரை அப்பா என்னுடன் இருக்க கொடுத்து வைக்கவில்லை ..இன்று அதி காலை கனவு கண்டேன் . எனக்கு உறக்கம் இல்லை ...ஒரே பழைய கால சிந்தனையாகவே இருக்கிறது. அவர் விரும்பி பாடும் பாடல் இது தான் ..........

நான் பெற்ற நவமான செல்வம்,.... தேன் மொழி பேசும் சிங்கார ச்செல்வம் நீ...அன்பே இல்லா மானிடரால் ..... அன்னை யை இழந்தாய் இளவயதில் ...
பண்பே இல்லா பாதகர்கள் வாழுகின்ற பூமி இது .............நீ நான் பெற்ற செல்வம்.

Thursday, August 20, 2009

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ....

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ..........

அந்த நகரத்தின் எல்லையில் ஊரில் அமைந்து இருந்தது ஒரு கன்னியர் மட விடுதி. அங்கு தான் நம்ம கதா நாயகியை சந்திச்சேன். பெயர் தனேஸ்வரி ....அநேகமாக் ஈஸ்வரி என்று தான் அழைக்க படுவாள். நகர கட்டிட மேற்பார்வையாளர் கனகாம்பரதுக்கும் மனைவி கோமதிக்கும் பத்து வருட தாம்பத்திய வாழ்வுக்கு பின் தவமிருந்து பெற்ற பிள்ளைதான்
ஈஸ்வரி ..ஆரம்பத்தில் அவள் சாதாரண குழந்தையாகவே இருந்தாள்.
காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே

சில நாளாக அவள் மந்த புத்தி உள்ளவளாக பாடசாலை போகமனம் அற்றவளாக எதையும் விளங்கி கொள்ளாத தோற்றம் உள்ளவளாக விளங்கினாள். அழைத்து சென்று காடாத வைத்தியரில்லை . . நீண்ட நாட்களின் பின்பு தந்த பிள்ளை பாக்கியமும், இப்படியா போகவேண்டும். கவலையில் ஓவசியர் கனகாம்பரமும் கண் மூடி விடார். மனைவி கோமதி அவர் மீதம் வைத்த சொத்தை கொண்டு காலம் ஓட்டினாள் . பின் வருவதை உணர்ந்தோ என்னவோ தன் வீட்டை மகள் பெயருக்கு உயில் எழுதி வைத்தாள். குமரிப்பருவத்தை யடைந்த ஈஸ்வரி சிறு பையன் களுடன் விளையாடுவாள். ஏனைய பருவ பெண் போல இருக்கமாடாள். உடல் வளர்ச்சி இருப்பினும் , புத்தி மந்த நிலையிலே இருந்தது

காலம் தான் பங்குக்கு ஓடிக்கொண்டே இருந்தது . கனகாம்பரம் செத்த பின் கோமதியின் உறவுகள் ஒட்டிக் கொண்டனர். தான் இல்லாத காலத்தில் தன் மகளை யார் கவனிப்பார் என்ற கவலையும் அவளை ஆட்கொண்டது . தன் இளைய தம்பி மாணிக்கத்தை மட்டும் நம்பி எல்லாக் காரியத்தையும் செய்வாள். ஆனால் அவன் மனைவி மரகதம் மிகவும் கொடியவள் . ஈஸ்வரியின் கஷ்ட காலம் தாய் கோமதி , தந்தை இறந்த மூணு வருடத்தில் தானும் போய் சேர்ந்து விடாள். இந்த தருணத்துக்காக காத்திருந்தவள் போல மரகதம் கணவனை நச்சரிக்க தொடங்கினாள். ஈஸ்வரியின் கையெழுத்துடன் வீட்டை தான் பெயருக்கு மாற்றும் படி , கணவன் மாணிக்கமும் அவள் சொல்கேட்டு மனைவி பெயருக்கு மாற்றினான். ஒரு நாள் காலை ஈஸ்வரிக்கு அழகான் பட்டுச்சட்டை போட்டு , காலையில் அவளுக்கு விரும்பிய பழைய சாதமும் கொடுத்து , பெருவிரலிலே மை பூசி பத்திரங்களிலே கை நாட்டு (கையெழுத்து ) பெற்று பின் ஊர்சுற்றி பார்க்கவென அழைத்து சென்றனர். அவளுக்கு தெரியாது அந்த இடம் தான் தான் வாழ் நாள் அஸ்தமிக்கும் இடம் என்று .

ஒரு கன்னியர் நடத்தும் விடுதிக்கு அழைத்து சென்று , இவளை பாரம் கொடுத்தனர். மாதாமாதம் பணம் அனுப்புவதாகவும். உறுதி கூறினார். இப்படியே ஒரு வருடம் நடந்தது முன்பு மாதம் ஒரு முறை வந்து பார்ப்பவர்கள் வருடத்து கொரு முறை வந்து ஈல்வரியை பார்த்தனர். பின் பு முற்றாகவே நின்று விட்டது. அந்த கன்னியர் மட நிர்வாகம்விசாரித்த போது அவர்கள் வீட்டை விற்று வேறு நாடுக்கு சென்று விட்டதாக ஊரார் பேசிக்கொண்டனர். அன்று தொட்டு அங்கு அவள் அனாதையானாள். ஆனால் கன்னியர் அவளை கவனமாக் கண்காணித்தனர்.

எனது ஆரம்ப வேலை யாக சிறுவர் பராமரிப்பு பள்ளியில் துணை ஆசிரியராக கிடைத்து . அங்கு சில காலம் விடுதியிலும் இருந்தேன். ஈஸ்வரியை முற்றாக உணரக் கிடைத்து. விசேட காலங்களில் ஒன்று கூடல் நடக்கும் அப்போது சிறார்கள் கலை நிகழ்ச்சி நடக்கும் . இறுதியில் இவளை போன்றவர்களின் நிகழ்வும் நடக்கும் இவளை போல உடல் நல குறை பாடு உள்ளவர்கள் பலர் இருந்தார்கள் அந்த கன்னியர் விடுதியில். . இவளது முறை வரும் போது எழுந்து நின்று "அமுதை பொழியும் நிலவே " என வானத்தை சுட்டு விரலால் காட்டி அபிநயம் செய்வாள் .

பெயரில் உள்ள தன ஈஸ்வரிக்கு ......தனம் சம்பத்து இல்லாவிடாலும் ..பாது காப்பான இல்லிடமாவது கிடைத்தது .......

.உலகம் இப்படித்தான்

Wednesday, August 19, 2009

(தொடர்ச்சி )...பட்டமும் பெறப்பட்ட வேளை

(தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை .

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்தது
இரக்கம் சிறிதும் இல்லாத வான் குண்டு
என் தாயை சிதைத்தது என்று

விம்மி வெடித்தேன் விழுந்து புரண்டேன்
காலனே உனக்கு கண் இல்லையா
அயல் உறவு ஊரோடு புலம் பெயர
என் தாயை ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்
மண் கொண்டு சென்றாலும்
மலர் தூவ நான் வருவேன் ........


.என் தாயின் இறப்பு நாள் அண்மிக்கிறது
தினமும் நினைக்கும் கவிதைகளில் ஒன்று

மலர் கொண்டு வருவேன் .........

மலர் கொண்டு வருவேன் ..........

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு
ஒரு நினைவலை தாலாட்டு
பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு
பாசமுடன் பேறு எடுத்த பெட்டை நான்
பாலுட்டி தாலாட்டி பண்புடன் நல்ல பழக்கமுடன்

பாங்காய் அணைத்து வளர்த்திடாள்
பள்ளி சென்று நானும்படிகையிலே
பக்குவமாய் பாடங்கள் பலதும்
சொல்லித்தந்த வழிகாட்டி
கடை குட்டி என் மீது கூடிய கரிசனம்
கண்ணன் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுப்பி விடுதி விட்டு
வீடு க்கு விடுமுறை வந்தால்
விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்
பல்கலைக்கு காலடி நான் வைத்த போது
கண் கான தேசம் கவனமடி கண்மணியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது ................

Tuesday, August 18, 2009

சில ஞாபகம் தாலாட்டும் ..........

சில ஞாபகம் தாலாட்டும் ..........

அம்மா கை பிடித்து நான் நடந்தது ஞாபகம்
அப்பா முதுகில் செய்த சவாரி  ஞாபகம்
படுக்கையில் சிறுநீர் கழித்த மறு நாள்
என்னையும் படுக்கை போர்வையும்
துவைத்து காலில் செல்ல அடி ஞாபகம்,
 ,அப்பம்மா,பாட்டி , விலக்கு பிடித்த ஞாபகம்.
அம்மாவின்  செருப்பும், குடையும் பிடித்து
முற்றத்து ,வெய்யிலில் உலா வந்த ஞாபகம்
அயல் வீட்டு தம்பியை காட்டி எனக்கும
ஒரு தம்பி வேணுமென்று அடம் பிடித்த ஞாபகம்
மூணு வயதிலே புத்தக பையை சுமந்து காட்டிய ஞாபகம்
பாலர் பள்ளிக்கு தாத்தாவுடன் சவாரி சென்ற ஞாபகம்
முற்றத்து மாமரத்தில் பழமும் காயும் சுவைத்த ஞாபகம்.
கோமதியின் (பசு) பாலுக்காய் , இரவில் விழித்த ஞாபகம்
கோவில் விழாவில் , அப்பா மடியில் கச்சான் ( நிலக்கடலை )
கடலை கொறித்து தின்ற ஞாபகம் .
பக்கத்து வீடு பாமாவுடன் டூ ........விட்டு நான் வென்ற ஞாபகம்.
தொட்டித் தண்ணீரில் நீச்சல் போட்ட ஞாபகம் .
தூங்கும்  பாப்பாவை விளையாட கூப்பிட்ட  ஞாபகம் ...
வளர்ந்ததும் அவனுடன் சண்டை போட்ட ஞாபகம் .
அவன் புளியங்காய்க்கு எறிந்த கல் என் தலையில் பட
என்னை கட்டி அணைத்து , கண்ணீர் துடைத்து
"சொல்லாதே" என சத்தியம் வாங்கிய ஞாபகம் .........

இத்தனை ஞாபகங்களை என் தாயகத்தில்
விட்டு வந்த ஞாபகமாய் .......என் செல்ல மகள்
என் பிறந்த நாளுக்கு எழுதிய பதிவுகளாய் .....

..உங்களுடன் நான். .

ஒரே ஒரு கணம் ..........

ஒரே ஒரு கணம் ..........

நகரத்தின் ஒதுக்கு புரமான் தொரு கிராமத்தில் , ஆச்சி யம்மாள் தன் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். அவளது நான்கு பிள்ளைகளில் கோவாலு தான் ஆண் மகன். கணவன் ஒரு பிரச்சினை காரணமாக் ஊருக்கு வருவதே இல்லை. கிட்ட தட்ட கைம்பெண் நிலையிலே இருந்தாள் ஆச்சியம்மாள்.

காலம் கடந்து போக பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். மூத்தவள் காயத்திரி ...மணப்பருவம் எய்தினாள் . ஆச்சியம்மாள் வாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்த பணத்தை எண்ணி சரிபார்த்து விட்டு . ஒரு கலியாண தரகரை பார்க்க போனாள். மறுவாரமே கலியாணமும் சரி வந்தது ........மாபிள்ளை ...பெண் பார்த்தபின் அடிக்கடி வரதொடங்கினார். வரும் கார்த்திகை மாதம் கலியாணம் என நிச்சயமாகியது . மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாகவே இருந்தனர். இவர்கள் ஒரு சிறு காணியை குத்தகைக்கு எடுத்து அதில் வரும் விலை பொருட்களை விபதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஐந்து ஜீவன்களும் காலத்தை ஓட்டினார்கள்.

கோவாலு ஆண் மகன் தான் அதிக பிரயாசை எடுத்து கொள்வான். சகோதரிகளும் களை பிடுங்குதல் நீர் இறைக்க் உதவுதல் என்று கை கொடுப்பார்கள். திருமணம் முடித்து எண்ணி எட்டாம் மாதமுடிவில் , மணப்பெண் காயத்திரி அழகான் ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். டாக்டார் கூற்று படி குழந்தை நிறைமாதம் எனவே குறிப்பிடார் . காலம் தன் வேலையை செய்ய ....ஒரு வருடத்தால் மீண்டும் கருத்தரித்தாள். மாபிள்ளை தன் தாய் வீட்டுக்கு போகிறவன் அங்கேய சில நாட்கள் தங்கி விடுவான் . இவள் காயத்திரியும் போய் கூபிடாள் இவளுக்காக வருவான். இப்படியாக காலம் செல்ல செல்ல மாபிள்ளை சில சமயம் சீறி சினத்து விழுவான். தோட்டத்தில் உள்ளதை விற்க சென்றால் காசு கணக்கும் குறைவாகவே காட்டுவான் . காயத்திரியும் எதுவுமே கேட்பதில்லை. இதனால் கோவாலு மிகவும் மனமுடைந்து போனான் . தோட்டத்தை கவனிப்பதுமில்லை .நன்றாக் குடிக்க தொடங்கினான். சாதாரண நிலையிலும் அமைதி அற்றவனாகவே காணப்பட்டான். .

ஒரு நாள் மாப்பிள்ளை தாய் வீடு போனவன் வரவே இல்லை. ஊரார் பலவாறு கதைக்க தொடங்கினர். வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் பேசிக்கொண்டனர். கோவாலு ,வருவான் மாபிள்ளை என பார்த்து கொண்டு இருந்தவன் இரு வாரங்களாகியும் வரவேயில்லை..........அவனை பார்த்து வரும்படி ஆச்சியம்மாள் கோவாலுவை அனுப்பினான். அங்கு மாபிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

விறகு வெட்டும் வேலைக்கு போயிருப்பான் போலும் . அருகில் கிடந்த கோடரியை எடுத்து "சதக் " என ஒரே வெட்டு . கழுத்தில் பட்ட வெட்டினால் மாப்பிள்ளை துடி துடித்து இறந்தான். அன்று மாலையிலே அவன் கோவாலு பொலிஸாரால் கைது செய்ய படான் . வழக்கும் நடந்தது தீர்ப்பாகும் நாள் , ஊரிலே மிகத்திறமையான் சட்ட தரணியை கொண்டு வழக்கு பேசினார்கள் முடிவு .................அவன் ஒரு மன நோயாளிஎன்றும் . அந்த நாள் பூரணை நாள் என்பதால் அதன் தாக்கம் அதிகமாய் இருக்குமென்றும் ...நோய் காரணமாகவும் அதிகம் உணர்ச்சி வசபாட்டதாலும்அவன் அந்த கொலையை செய்தான் என்று தீர்ப்பாகியது .........

.சகோதரி விதவை ஆனாள். இரு குழந்தைகளுக்கு தாயானாள். கணவனை..என்ன இருந்தாலும் சகோதரன், தன் வாழ்வை அழித்து விட்டான் என்று கோப படாள் . கோவாலுவின் ஆத்திரம் ஒரு உயிரை காவு கொண்டது .....ஒரு தாயை விதவை ஆக்கியது ...........அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க பட்டது ...........

நாட்டின் சில விழா காலத்தில் கைதிகளை மன்னிப்பு பெற்று விடுதலையாவார்கள். . அப்படியான ஒரு காலத்தில் கோவாலுவும் விடுதலையானான். சில நாட்கள் ஊரார் கண்களுக்கு தென்படாது இருந்தான் அந்த ஊர் மக்களும் ஆச்சியமாள் குடும்பத்துடன் உறவு வைக்க , தயங்கினர். அந்த மாதத்தின் பெளர்ணமி இரவொன்றில் .....கோவாலு தூங்கி இறந்து கிடந்தான். ஆத்திரமும் அவசரமும் அவன் கண்களை குருடாக்கி அவன் சகோதாரி வாழ்வையும் பறித்து ...........தன்னையும் மாய்த்து கொண்டான்.


அவன் ஒரே ஒரு கணம் சித்தித்து இருந்தால் ...................

Monday, August 17, 2009

போதை தந்த பாடம் ...

எனது நீண்ட நாள் மனப்பதிவிலிருந்து ஒரு சிறு நிகழ்வு

அமைதி யான அந்த கிராமத்திலே , மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள் . பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான் .அவனும் னும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடித்து " வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது ..

பாடத்தொடங்கினான் ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி .
..தங்கம் ...என்று . வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கிவிடார்கள். .அவனது துவீ வண்டி(சைக்கிள்) வேறு ..இடம் வலமாக ஆட்டம் போட தொடங்கி விட்டது ....பொது ஜனங்களுக்கும் இடை யுராக இருந்தான்.

இப்படியாக போய்கொண்டு இருக்கையில் ... வழியில் ஒரு மது வரி இலாகா இருந்தது .. சட்ட விரோத கள்ளு இறக்குதல் ,...வரிபணம் கட்டாமை ,...போன்ற தவறுகளுக்கு , பணம் அறவிடுவார்கள் . சிலரை மறியலிலும் வைப்பார்கள். ..பாவிலுவை கண்டதும் ..துரத்த ஆரம்பித்தார்கள்.

அவன் சைகிளையும் விட்டு விட்டு ..ஓடத்தொடங்கினான் . எட்டி பிடித்தபோது... சாரமும் (லுங்கி) கழண்டு விழ... உள் ஆடையுடன் ஒரே ஓட்டமாக ....எங்கள்... வீடுக்கு அருகாமையில் வந்து,".

அக்கா ............. நான் முடியப்போகிறேன் ....என்று ... பயம் காரணமாக ...எங்கள் வீடுவீட்டு மாட்டுக்கொட்டகையில் புகுந்து கொண்டான் .பின் அவர்கள் சென்று விட்டார்கள்.துரத்தீ வந்தவர்கள்....


. வெறி(போதை) தெளிந்ததும் அவனுக்கு வெட்கமாகி விட்டது .. மனைவி வந்து கூட்டி சென்றாள் . அந்த வெட்கத்தில் போனவர் தான்.. பின் அந்த கிராமத்துக்கு வரவே இல்லை .பின்பு மனைவி ... பிள்ளைகளை ..பெரிய பட்டணத்துக்கு அழைத்துவிட்டார்.

குடியும் விட்டு சில கடைகளுக்கு முதலாளி என்று கேள்விப்படேன். ஒரு நிகழ்வு அவன் வாழ்கை பாதையையே திசை மாற்றி விட்டது .

...இது எப்படி இருக்கு ....

Saturday, August 15, 2009

"போத்தலை தொடமாடேன் ".......

"போத்தலை தொடமாடேன் "........

அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றாள்


ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும்.
இரவில் சிந்தாமல் குடிப்பாள் என்ற ஆதங்கத்தில் மதியும் அசட்டையாய் இருந்தாள். இன்று ராகவனுக்கு ஒரு நல்ல அனுபவம்

.மாமியார் காய்ச்சல் காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாததால் வேலைக்கு விடுமுறை (லீவு) எடுத்து இருந்தான் . மதியும் வருட இறுதி என்பதால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இருவரும்
கலந்து பேசி ராகவன இன்று வீடில் நின்றான..மாலை ஆகியது

மதி யின் வரவை மூவரும் எதிபார்த்தார்கள். ராகவன் நால்வருக்குமாக தேநீர்கலந்தான். மதியோ ...நிலாக்குட்டி கோப்பையில் தேநீர் பருகுவதை ...அதிசயமாக பார்த்தாள்.

அவளுக்கு புரியவில்லை . ராகவன் சொல்லும் வரை.

ஆதிர்ச்சி வைத்தியம் சில சமயம் தேவை படுகிறது ...............

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

நினைத்துப்பார்க்கிறேன் ....(..கவிதை )

நினைத்துப்பார்க்கிறேன் ..........

தாயின் கர்ப்பத்தில்
அந்த பத்துமாத பந்தம்
கவலையற்று ,இந்த
உலகம் மறந்து
நானும் அம்மாவுமாய்
உண்பதும் உறங்குவதுமாய்
பத்தாம் மாத முடிவில் "குவா"
என அழுகையும் திகைப்புமாய் ,
குதித்தபோது , எண்ணவில்லை ,
உலகம் இவ்வளவு பெரியது என்று ,
திகைத்து விடேன் நானும் தாயான போது

Friday, August 14, 2009

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்


அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது .

ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளநீர் தாகம் தீர்க்க , குளித்து விட்டு மத்திய சாப்பாடை முடித்தார்கள். ராகவன் அப்பாவுக்கென கொண்டு வந்த இளநீல சேர்ட் , அம்மாவுக்கு சாரி , ஒரு பை நியைய சொக்கிலேட்ஸ் என்று அன்பளிப்புகளை கொடுத்தான் .சொக்கனுக்கென்று மறக்காமல் வாங்கிய நீல சாரத்தை(லுங்கி ) அவன் பிள்ளைகள் ,வரும்போது கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தான் . ராகவனும் அப்பாவின் சாய்மனையில் இருந்தவாறே பதினாலு வருட கதைகளை சொல்லியவாறே அயர்ந்து விட்டான்

ரம்யா பிள்ளைகளுடன் பின் வளவில் ஆட்குட்டி பிடித்து ,விளையாட்டு காட்டி கொண்டு இருந்தாள் .ராமசாமியார் பின்னும் முன்னும் வந்து ஒன்றே ஒன்று தரமாடீரா என்று நச்சரித்து கொண்டு இருந்தார் " சும்மாபோங்கப்பா" பிள்ளைகள் படுத்த பின் தாரேன் என்று போக்கு காட்டினாள் . இரவும் வந்தது , சுடச்சுட அவித்த குழல் பிட்டும் பலாப் பழாமும் பேரப்பிள்ளைகள் சாப்பிடார்கள் .

இரவு ஒன்பது மணியாகியது . ராமசாமியார் குசினிக்குள் வந்து நான் கேட்டது தர மாடீரா என்றதும் சாபிட்டு முடியுங்கோ படுக்க முதல் தாரன் என்றாள். அவர் சாபிட்டதும் பேரபிள்ளைகள் தூங்கி விட்டார்கள் . ராகவனும் ரம்யாவும் வேப்பமரத்தின் கீழ் நிலவில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ராமசாமியாரின் ஏக்க பார்வை தீரவே இல்லை. ஒருவாறு பத்து மணியளவில் ஜானகியம்மாள் வந்து அவரிடம் இரண்டு சொக்கலேருக்ளை நீடினாள் . சக்கரை வருத்த காரன் வைச்சு வைச்சு சாபிடுங்கோ என்றாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவர் ஜானகியை கட்டி முத்தம் கொடுக்க சீ....... போங்கோ என்று அவள் சினுக்க .....திடுக்கிட்டு எழுந்தாள் ..

ராமசாமி படத்தில் சிரித்து கொண்டிருந்தார் . அவளுக்கு எண்ணமெலாம் தாயகம் நோக்கி சென்றது அவர் இறந்தது , தான் மகனிடம் வந்தது , எல்லோரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் போக நான்கு சுவர் நடுவே இருப்ப்து என்று

..........கழிவறை சென்று முகம் கழுவி காலை வழிபாடு செய்தபின் , இன்று வார விடுமுறையில் ராகவனிடம் அப்பாவின் கல்லறைக்கு போய் தரிசிக்க வேண்டும் என கேட்கவேண்டும் என நினைத்தவாறு .... காலண்டரை பார்த்தாள் .

கார்த்திகை ,இரண்டாம் நாள் ................., வந்து நினைவு படுத்தி போயிருக்கிறார் . இளமையில் கிறிஸ்தவ கலூரியில் படித்ததால் அன்டன் ராம சாமி என் பெயார் மாற்றம் செய்து தனது உடலை சேமக்காலையில் ல் அடக்கம் செய்யவேண்டும் என்று இறுதி ஆசையாக கேட்டு இருந்தார் என்பது நான் எழுதாத விடயம் .

Wednesday, August 12, 2009

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) ...

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்.கார்த்திகையும் வந்தது . மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் . தலைநகரம் சென்று
கடவுசசீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன், நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பினர் , இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது . அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள். சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான். ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் . வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து, மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான். ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது நித்திலாவின் பெற்றார் நிம்மதியாக இருந்தனர்.

ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார். நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும், தாங்கள் கொழும்பில் பதிவு திருமணம் செய்ததென்றும், மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்.....பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....முறையோ, வெளிக்கிடு வீட்டை விட்டு
என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் .

வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள் வரவே இல்லை. ... கால ஓட்டத்தில் அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல் தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்துவிட்டாள் ..

கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .
..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் அவன் வாழும் ஆலயமாக, தன் மனதுக்கு துரோகம் செய்யாத, புனிதவதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)


வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

மாமன் மகன் செய்தது சரியா?
நித்திலா செய்தது சரியா ?
ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?







Tuesday, August 11, 2009

அவளுக்கு ஒரு "வாரிசு " .......

அவளுக்கு ஒரு "வாரிசு " ..........

அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல்ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவைகளின் ஆர்ப்பரிப்புகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நகரத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது .

செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் .
ஏன் எனில் இவள் செல்லம்மா மூத்தவள் பிறவி ஊமை . இரண்டாவது மகளின் கணவர் தலை நகரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். செல்லம்மா முழு வேலையும் செய்யும் . தந்தை ஆசை பிள்ளையாருக்கு மூத்தவள் இருக்க இரண்டாவது மகளை கட்டி கொடுக்க விருப்பமில்லை இருபினும் அவளுக்கும் வயது வந்து விட்டது . தங்கையின் கணவர் பயணத்தால் வரும் பொது கிணற்றில் தண்ணீர் அள்ளி கொண்டு இருந்தாலும் ஓடி வந்து தங்கைஇடம் மீசையை முறுக்கி காட்டி ,கையில் பயணப்பையை காட்டி சேதி சொல்வாள் தங்கைக்கு .

கால ஓட்டத்தில் அவர்களது தோட்ட வேலைக்கு வரும் செல்லக்கண்டு இவளின் உற்ற நண்பனானான் . ஊராரும் பேசிக்கொண்டனர்.அவனும் இவளுடன் சைகையிலே ஆயிரம் கதை பேசிக்கொள்வர்.இப்படியாக் தொடர்ந்த நட்பு ஒரு நாள் எல்லை மீறி சென்று விட்டது.சில நாட்களாக செல்ல கண்டு தோட்டத்துக்கு வருவதும் நின்றது . அவன் தலை நகரம் போய் விடதாக சொன்னார்கள். ஒருநாள் அவள் காலை வேளை...வாந்தி எடுக்கவே தாய் தங்கம்மா திகைத்து விடாள். வற்புறுத்தி கேட்ட பின் அதற்கு காரணம் செல்லக்கண்டு என்று சொனாள்.

காலம் தான் யாருக்காகவும் காத்திருபதிலையே . பத்தாம் மாதம் ஆண் குழந்தையை பெற்று எடுததாள். ஊராரின் வசை பேச்சுகள் தாங்காமல்..
ஒருவர் பின் ஒருவராக ஆசைப்பிள்ளையும் ..தங்கம்மாவும் போய் சேர்ந்து விட்டனர். தங்கையும் கணவருடன் தலை நகரம் சென்று விடாள். செல்லக்கண்டு ஊருக்கு வரவே இல்லை. தலை நகர் சென்ற ஊரவர்கள் சிலர் அவனை ஒரு ஆட்டோ சாரதியாக கண்டனர். சிறுவன் கனேசுவும் , சாதாரணமாய் பள்ளி சென்றான். சில கர்வம் பிடித்த சிறுவர்கள் அவனை எள்ளி நகையாடினர். இதனால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விடான்.


பின்ப வீட்டில் வரும் காய் கறி களை விற்க தொடங்கியவன் , சற்று பணம் சேரவே , தாய்க்கு தேவையானவைகளை வாங்கி கொடுப்பான். செல்லம்மாவும் சிக்கனமாய் சேமித்து , ஒரு பெரிய தொகையை ,வங்கியில் மரக்கறி கடை வைத்திருக்கும் ஊர் பெரியவர் , இவனின் பண்புகளை கண்டு , தன்னுடன் சேர்த்து கொண்டார். இடையில் தன் தந்தையை பற்றி கேட்க மனம் வந்தாலும் தாயின் நிலை கண்டு , மனதுக்குள் வரும் கேள்வியை , அடக்கி கொள்வான்.

முற்றத்தை கூட்டி முடித்தவள் ,காலை உணவை முடித்து மதிய உணவுக்காக தயாரானாள். வாசலில் தபாறகாரனின் மணிச்சத்தம் கேட்க , சென்று பார்த்தவளுக்கு அதர்ச்சி ........ஒரு தந்தி அவள் பெயருக்கு வந்து இருந்தது . செல்லக்கண்டு விபத்து ஒன்றில் காலமாகி விடான் என்று அந்த ஊர் வாசி ஒருவர் அறிவித்து இருந்தார். இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலையில் வர இருக்கும் தன் வாரிசுக்காக,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான்.

தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு .....தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி ,பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

காத்து கொண்டிருக்கிறாள். .

Sunday, August 2, 2009

இதயத்தில் ஆறாத ரணம்.

இதயத்தில் ஆறாத ரணம்.


அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது. தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை, போத்தலில் தண்ணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். .


அதில்"நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?
நெஞ்சில் நினைத்திலே நடந்தது தான் எத்தனையோ ?
பாடல் அவளை தாயக நினைவுகளிற்குஅழைத்து சென்றது .

அந்த சிறிய கிராமத்திலே கெலிகளும்,கிபீரும் ஆரவாரம் செய்ய அரக்கர்கள் தேடி அழித்து கொண்டு இருந்த காலம்.ராஜியும் தன் இரு குழந்தைகளுடன் மாமா மாமி மைத்துனி ஆகியோருடன் அவசரமாக எடுத்த பால்மா பிஸ்கற் முக்கிய ஒரு சில பொருட்களுடன் அயல் கிராமத்தில் இடம் பெயர்ந்தாள். மேலும் மேலும் நெருக்கடி வரவே மேலும் இடம் பெயர்ந்து ,ஒரு வள்ளத்தில் பயணம் செய்து , ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தாள் அங்கும் சில மாதங்கள் கழிந்ததும் ,ஒருவாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து,ஒரு லாரியில் அடைபட்டு , வவனியா வந்து சேர்ந்தாள். இத்தனைக்கும் ராகுலன் அந்நிய தேசத்தில்,ஏங்கியபட,காத்திருந்தான்.அவளும் குழந்தைகளும் பட்ட துயரம் சொல்ல முடியாது. வங்கியில் பணமும் எடுக்க முடியாமல் பட்ட துயரம் கொஞ்சமல்ல. ஒருவாறு தலைநகரில் ஒரு தூரத்து உறவினருக்கு காசு அனுப்பி அவர்களை எடுப்பித்தான்.

இடமும் புதிது ,பாசையும் புதிது நுளம்புக்கடி என்பவற்றுடன் போராடி வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் .......

தலை நகரில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் காலத்தில்,ஒரு நாள் அவளையும் குழந்தைகளையும் முகவர் மூலம் எடுக்க இருப்பதாக சொன்னான்.
ஊரவரின் வக்கனை கதைகளுக்கு மத்தியில் வாழ்வதை விடவும்,அப்பாவிடம்
போய் சேரும் ஆர்வத்தில் நாளை எண்ணி காத்திருந்தார்கள். நாளும் வந்தது,
முகவருடன் விமான நிலையம் சென்ற போது ,அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்பபட்டு விட்டார்கள். ராஜிக்கு ஏமாற்றமும் மேலும் தலையிடியும் ஆகியது, மீண்டும் முகவர் காசை தர மறுப்பதாகவும் அவளை தன் தாய் தந்தையுடன் குழந்தைகளை விட்டு வர சொல்லி ராகுலன் சொல்லவே ராஜி மறுத்து விட்டாள்.

பல வித மனப்போராடங்களுக்கு மத்தியில்,பயணத்தை தொடர்ந்தாள். விமான நிலையங்களில் முகவரின் மனைவியாக நாடகமாடிய போது அவனின் அருகாமைமுள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. ஒருவாறு கணவனிடம் வந்து ேர்ந்து வசதிகள் குறைந்த நில கீழ் குடியிருப்பில் அவள் வாழ்க்கை தொடங்கியது.

கடின உழைப்பாளி ராகுலனும் இரண்டு மூன்று வேலை செய்து,தன் குடும்ப செலவுடன் குழந்தைகள்,நாட்டில் பெற்றோர் சகோதரி வாழ்கையும் பார்த்து கொண்டான்.காலங்கள் உருண்டோடி,ராகுலனின் சகோதரிக்கும் திருமணம் ஆகியது.

ராஜியின் ஆறு வயது மகள் முத்து முத்தாக கடிதம் மேல்,கடிதம் எழுதுவாள்.புது மாமா வந்தபின் அத்தை நன்றாக கவனிப்பதில்லை என்றும்,நன்றாக குடிப்பார் என்றும் ,தம்பி நீலன் "அம்மா,அப்பா டண்டா (கனடா) போய் "என்று காணும் விமானம் எல்லாம் பார்த்து சொல்கிறான் என்றும், நீலு அப்பப்பாவிடம் பாடம் கேட்டு படிப்பதாகவும் எழுதுவாள்.


கடிதம் கண்டால் அன்று முழுவதும் கண்ணீரோடு இருப்பாள். காலபோக்கில்
ராஜி தன் அகதி நிலை அங்கீகரிக்க அந்நாட்டு எம் பீ.உதவியுடன் குழந்தைகள் இனைவுக்காக போராடி பத்து மாதங்களில் வெற்றியும் பெற்றாள் எண்ணி பதினோராம் மாதம் தாய் நாடு சென்ற சித்தப்பாவுடன் ஆறு வயது நீலுவும்
மூன்று வயது நீலனும் வந்து சேர்ந்தார்கள்.

ராகுலன் குடும்பத்துக்கு மகிழ்ச்சி பிடிபட வில்லை. குழந்தைகள் , நன்றாக வளர்ந்தார்கள்.

இன்றும் நீலு கேட்பாள்," அம்மா ஏன் எங்களை விட்டு வந்தாய"
ராஜி பட்ட துயர் அவளுக்கு எங்கே விளங்க போகிறது,

அந்த பிஞ்சு மனத்தின் ஆறாத ஆழமான ரணம் இன்றும் நினைவாக உள்ளது. ஒரு போதும் குழந்தைகள் சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்து தாய்ப்பாசத்துக்கு ஏங்க கூடாது .


அது இதயத்தில் ஆழமான ரணம்.

Saturday, August 1, 2009

மனிதன் ....இறைவன் ஆகலாம். .

மனிதன்.....மிருகமாகலாம். அவன் மனிதன் ஆகலாம். அந்த மனிதன் இறைவன் ஆகலாம்.

நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே ஒரு ஒதுக்கு புறமான சிறு கிராமம் காலத்தின் கோலம்,அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். ஒரு விறகு வெட்டியும் அவன் குடும்பத்தினரும் மட்டும் அங்கு வாழ்ந்தார்கள். கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போக்கிடமும் இல்லை.

அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை,கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை அவன் எங்கும் போகவில்லை .

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல அஞ்சி ,பயத்துடன் இருந்தான் . விடிய எழும்பி பார்த்த பொது சில சப்பாத்து கால் தடயங்கள் தெரிந்தன .மறுநாள் வழக்கம் போல அவன் விறகு வெட்ட சென்றான்.

மனைவியும் ,தன் வீட்டு வேளையில் இருந்தாள். சிறுசுகள் இரண்டில்,ஒன்று ஏணையில் ( தொட்டிலில்) மற்றையது முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாய் குரை்கவே அவள் எட்டி பார்த்தாள், இரு படை வீரர், நின்றனர். தண்ணீர் கேட்டனர் அவள உள் செல்லவே தொடர்ந்து சென்று , வீட்டில் யாரும் இல்லையா ? கணவன் எங்கே என்று கேட்டு ,வீடின் அறைக்கதவை திறக்க சொனார்கள் . அவள் திறந்ததும் , ஒருவன் அவள் வாயை துணியால் அடைத்தான் மற்றவன் அவளை சீரழித்தான், இப்படியே அவர்கள் வெறி தீர்ந்தும் ,யாருக்கும் சொல்ல கூடாதென எச்சரித்து சென்று விட்டனர்

சற்று நேரத்தில் விறகு வெட்டி வந்த போது சில அடையாளங்களை கண்டு ,மனைவியை கூப்பிடான் ,அவள் அழுதுகொண்டு ,கலைந்த தலையும் ,கிழிந்த ஆடைகளுடனும் விசும்பிக்கொண்டு இருந்தாள் ,அவனுக்கு விளங்கி விட்டது .அவளை தர தரவென்று இழுத்து சென்று வீட்டின் எல்லையிலுள்ள கிணற்றில்,நீரை அள்ளி கொட்டினான் .
நடந்ததை மறந்துவிடு,அரக்கர்கள் ஆட்சி செய்தால்,மனிதம் வாழாது என்று கூறி,வீட்டு சாமி படத்தின் குங்குமத்தை நெற்றியில் இட்டான் .இந்த கடவுள் கூட காப்பாற்ற வில்லையே என்று வீடின் முகட்டை வெறித்த படியே இருந்தான் .

பின்பு அவன் வைரவ சாமிக்கு பூசை செய்வதே இல்லை .அவள் யோசித்தாள்.உயிரை மாய்த்து கொள்ள நினைத்தாள். தான் அவமானத்தால் இறந்தால் பிஞ்சுகள் ,ஏங்கி விடுவார்கள் ,அவன் நடைபிணமாகி விடுவான் பிள்ளைகளை வளர்க்க கஷ்டபடுவான் . ஒரு தாய் வளர்ப்பது போல வருமா?அவனை எப்படி தேற்றுவது என்று எண்ணியவாறு கண்னயர்ந்தவள், தூரத்தே சேவலின் கூவல் கேட்டு ,இயற்கையுடன் போராட,அன்றாட கடமைகள் செய்ய புறப்படாள் . ...

பிஞ்சுகளுக்கும் அவனுக்கும்,காலை தேநீர் வைக்க ....

அவன் தான் இறைவன்(கடவுள் )அவளுக்கு


அவள் ?.......... .

Thursday, July 30, 2009

அப்பா வருவாரா?

அப்பா வருவாரா?

வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள்.

ராகவன் எற்கானவே ஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவன், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத நிலையால் ெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.

யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் வேலை தேடி ,புறப்பட்டார் கள் . கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது.

அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவர்ளது படிப்பு செலவுக்கு உதவியது.

சிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும். அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி,விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில்,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு,முதலுதவி செய்தனர்.

இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும்,சந்தேகம் இருப்பதாக கூட்டி சென்றவர்கள் விடவே இல்லை .

கடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது நித்திலாவுக்கு ,ராகவன் பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா
எப்ப வருவார் ? என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா? என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா? எங்கேயிருக்கிறான். ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,
சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று. அவன் வருவானா ?

அப்பாவருவாரா ? ......எல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .

Wednesday, July 29, 2009

இலவம் பஞ்சு ........

.. இலவம் பஞ்சு ......

நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின .

நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ளவில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்
எல்லாராலும் விரும்பபட்டவள். படிப்பிலும் கெட்டிக்காரி .

ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது. அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது. விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் .

ராகவனும் மீனுவும் அருகருகே. உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,

மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? .. ஏன் கேட்கிறீங்க ? அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........


நீண்ட அமைதிக்கு பின் .....

தனது முறை பையன அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்ன போது ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..

ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..


தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது
...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....

இவ்வளவு காலம் காத்து, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து கடைசியில் ...........
கடைசியில் ...........

வாசு பாடினான் .....மச்சான்....

.." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் .


.....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும். கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே

........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே.

அவன் மனம் படும் பாடு அவனுக்கு தான் தெரியும்.

Tuesday, July 28, 2009

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ...

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ........

என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது நம் பயணம் கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் .

சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால் சில புறு புறுபுறுப்பு .சரி ,கண்டக்டர் (நடத்துனர் ) பெடியனும் ,சாரதியுமாக மீண்டும் அண்மையில் உள்ள கோவிலில் தீப தூப ஆராதனை காட்டி , புறப்பட்டோம் .

பயணம் இனிமையாக இருந்தது. பிரபலமான சினிமா பாடல்களுடன் .தூர பயணமென்பதால் அதிக இறக்க ஏற்றம் இல்லை . என் வண்டுகள் இடையிடை பசி என்பதால் மச்சாள் உதவியுடன் ,சுடுநீர் போத்தல் பால் தயாரிப்பதும் ,அவர்கள் நித்திரை கொள்வதுமாக இருந்தார்கள் . இடையில் எனக்கு அண்மையில் நடத்துனர் பெடியன் வந்து இருந்து உடையாடிக்கொண்டு ,தேவையான் போது தாக சாந்தி ......வடை டீ போன்ற தரிப்புகளில் நிறுத்தி ஒரு உறவினர் போல பயணித்தோம் .

எமது பயணத்தில் முக்கால் பகுதி முடிந்து விட்ட நிலையில் சக்கரம் (சில்லு ) காற்று போய்விட மாற்றி புறப்படோம் ஒரு ஒருமணி நேர ஓட்டத்தின் பின் " படீர் என்ற சத்தம் " திடுகிட்டு விட்டோம் . ரயர் வெடித்து விட்டது . அதுகிட்ட தட்ட ஒரு காட்டு பிரதேசம் . எலோரும் சரியாக களைத்து விடோம் . காலை ஆறு மணிக்கு வெளிகிட்ட பயணம் பொழுது மங்கும் நேரம் ஏழு மணிக்கு கிட்ட இருக்கும். எலோரும் வாகனத்தை விட்டு இறங்கி விட்டோம். அரை மணி முக்கால் மணி ஆகியது .அந்த பெடியன் (சுந்தரம் ) ஓடி ஓடி தன்னால் ஆனா முயற்சி செய்து கொண்டு இருந்தான்


எங்கள் வயதான மாமனார் .வேறு வாகனத்தில் போவோமா ?.....என்று ஆலோசனை சொல்லிக்கொண்டு இருந்தார் ,நானும் என் குட்டி வண்டுகளின் பிரச்சனையால் (சுடு நீர் தீர்ந்து விட்டது ,)ஆமோதித்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஆயத்தமாகியது.என் மாமனாரின் பேச்சு (அவர் ஒரு சுடுதண்ணி) பயனக்களை வேறு . அவனின் காதில் எங்கள் "ஐடியா" எட்டி விட்டது போலும் ,இறங்கும் வரை
அவன் எங்கள் பக்கம் வந்து கதைக்கவே இல்லை . மீண்டும் ஒன்றரை மணி ஓட்டத்தில் அந்த தளத்தை அடைந்து விட்டோம். இறங்கியதும் அந்த பையன் வந்து "அக்கா உங்களுடன் ஒரு கதை" ....என்றான் .

" .காலையில் ஆறு மணிக்கு ஏறினீங்க அண்ணளவாக ஒரு பத்து மணி நேரம் உங்கள் உயிர் எங்கள் கையில் ......நம்பி தானே ஏறினீங்க .கொண்டு போய் சேர்ப்போம் என்று . பிறகேன்? வாகனம் மாற நினைதீங்க .......நடு வழியில் இப்படி செய்ய இருந்தீங்களே ....என்று தன் நெற்றிக்கண்ணை திறந்தான் . ......"

.எனக்கும் மனம் வேதனையாக போய்விட்டது ,மன்னிப்பு கேட்டேன் .தம்பி என் மாமனார் சற்று கோப காரர் ,என்று சமாளித்தேன் அவன் மனம் ஆறவே இல்லை . அக்கா முதல் தடவை அதை மாற்றி பயணம் தொடங்கினோம் தானே ....,இரண்டாம் முறையும் வெடிக்கும் என்று யார் கண்டார் ,எனக்கு புறப்படும் போதே விளங்கி .....விட்டது அக்கா . இனி மேல் இப்படி செய்யாதீங்க ....அப்போது தான் என் மனதில் உறைத்தது .

புத்தக ப்டிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான் வாழ்கை என்று .


இதனால் தான் பயணத்தில் எண்ணை கொண்டு போக கூடாது என்று

சொல்வார்களோ ?..........

வசந்த கால கோலங்கள் .....

வசந்த கால கோலங்கள் .........

அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . பொழுதினிலே பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறைவழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் அதிபர் விடைபெறுவார்

உயர்வகுப்பில்தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது .


மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அமைதியான் ,அழகான் டீச்சர் செல்வி ,சாதனா ஷன்முகராஜா (கற்பனைபெயர் ).அந்த நாளின் மூன்றாவது பாடம் தாவரவியல் .மிஸ் சாதனவுக்கு வணக்கம் செலுத்திய பின் மாணவ அறிமுகம், பின் அவர்களது ஆய்வு கூடம்,பற்றிய விளக்கம் , இவை முடிய ,வகுப்பு பூக்களின் மகரந்த சேர்கை . பூவினங்கள் ,வகை என்ற தலைப்பில் ஆரம்பிக்க பட்டது.

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,மாணவார்களும் ஆர்வமாக படித்தனர் பாடசாலை முடிய அவர் பஸ் (பேரூந்து) வண்டியில் காத்திருந்து வீடு செல்வார். தினமும் அவர் வரவை அந்த வகுப்பு எதிர் பார்த்திருக்கும் , அந்த பாடசாலையின் ஆசிரிய குழாமின் இளம் வயது டீச்சர் அவதான் . தினம் ஒரு கலர் ,அதே நிற பாதணி (செருப்பு) குடை என்று நன்றாகவே அவதானித்தார்கள் .


அந்த வகுப்பில வாசன் எனும் சீனிவாசனுக்கு மட்டும் தனி விருப்பு அந்த டீச்சரில் பஸ் வண்டி வரும் வரை சில சமயம் அவருக்கு துணையாக ,பஸ் தரிப்பில் நிற்பான் ,தேர்வில் இரண்டாம் இடத்தில் அதிக புள்ளிகள் பெறுவான் . ஊக்கமானவன் ,பாட சந்தேகங்களும் கேட்டு தெரிந்து கொள்வான்.

வருட இறுதி பாட சாலை விடுமுறையும் விடப்போகிறது . அன்று வழக்கம் போல வாசன் பஸ் தரிப்பிடத்தில் நின்றான் . திடீரென ... டீச்சருக்கு அவவின் குடை ஆசிரியர் கூடும் இடத்தில் (..staff room .. ) விட்ட நினைவு வரவே ,அவனை எடுத்து வர சொன்னார் . அவன் ஓட்டமும் நடையுமாக எடுத்து வந்தான் ,அதை கொடுக்கும் போது அவவின் கையை பிடித்து , நீண்ட நாள் கனவான

டீச்சர் "" ஐ லவ் யு " என்று கூறி விட்டு ...


அவிடம் அகன்று விடான் . அவர் திகைத்து விட்டார் .பஸ் வண்டியின் நடத்துனர் ,பட்டணத்தின் பெயரை சொல்லி ஏறும்படி குரல் கேட்கவே , நினைவு திரும்பியவராய்.... தனது இருக்கையில் ஏறி அமர்ந்தார்.


அவர் எண்ணமெல்லாம் இந்த பையன் இப்படி கூறி விட்டான் ? இதற்கு நான் காரணமா ....இந்த சின்ன வயசில் ஏன் இந்த சலனம் . அழகான பெண்கள் வகுப்பில் இருக்க ஏன் இந்த பையன் .....இப்படி ? பருவ கோளாறா ? என் இளமையா ? .....மறு நாள் பாடசாலைக்கு அவன் வரவே இல்லை .....அதிபரிடம் சேதி போய்விடும் என்ற பயமோ ? இப்படியே விட்டால் ......அவன் மன நிலை குழம்பி வருட இறுதி பரீட்சை ..தவற விட்டுவிடுவானோ ? மூன்றாம் நாள் ...வந்தான் வாசன் . மத்திய இடை வேளை வாசனை கூப்பிட்டு அனுப்பினார் டீச்சர்

...வாசன் .....அவனும் குற்ற உணர்வுடன் தயங்கி தயங்கி வரவே அவனை அன்போடு அணைத்து ....கவனமாக கேள் .வருட இறுதி சோதனை வருகிறது. கவனமாக படித்து முன்னேற வேண்டும். மனதை அலை பாயவிடாதே ...தாய் இல்லாத உனக்கு ....

...நான் .....அம்மாவாக வர இருக்கிறேன் ..... என்றார் .

அப்போது தான் அவனுக்கு உறைத்தது .அவன் அப்பா பட்டணத்தில் வேலை பார்ப்பதும் வாரமொருமுறை வருவதும், அப்பம்மாவுடன் வாழ்வதும், அப்பாவை எவ்வளவு வற்புறுத்தியும் இரண்டாம் தாரம் செய்யாமல் இருப்பது. ......ஆமாம் ,

அவள் அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியாக , வரவிருந்தாள். ..

அவளது தனிப்பட்ட வாழ்வில் , பதிவு திருமணம் முடிந்த இரண்டாம் வாரம் ...
கணவனை மோட்டார் வண்டி விபத்தில் பறி கொடுத்து இருந்தாள் என்பது யாருக்கும் தெரியாத ...தனிபட்ட கதை.

Monday, July 27, 2009

அமைதிக்கு பெயர் தான் சாந்தா ....

அமைதிக்கு பெயர் தான் சாந்தா .....

அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான
இரு குடும்பங்கள். .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள்.ஆணும்
பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் குடும்பமும் குழந்தைகளுமாக
வாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று
உயர் பதவிபெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா
வங்கியில் பணியில் சேர்ந்தாள்.

தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான்.
காலம் உருண்டு ஓடியது .சாந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான்.


ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண்
கேட்டு தியாகர் செல்லமனியிடம் வந்தார்.தம்பி இதை எல்லாம்
நீ கேட்க வீண்டுமா?பிறந்த பொழுதே நிச்சயமானது தானே

எதற்கும் ஒரு வார்த்தை பிள்ளைகளிடமும் கணவரிடமும் கேட்டு சொள்கிறான் என்றாள்.ஆரம்பம், ....ஆயத்தங்கள்... எல்லாம் முடிந்தது. அமைதியாக
வாழும் காலத்தில் ,தாய் நாட்டின்.அவலம் அவர்களை புலம் பெயர
வைத்து விட்டது


மணம் முடித்து மூன்று மாதத்திலே பயணமாகவேண்டி வந்தது. வந்ததும்
ஆண்டு ஒன்று கழிந்ததும் அவர்களிடையே பிரச்சனை.... வீட்டுக்கு வராமை..
...ஒன்றாக செல்லாமை ...,பெரிய பிரிவாகி விட்டது . ராகவனும் மனித

பலவீனத்தில ஒரு வேறு இனத்தை சேர்ந்த பெண் துணைதேடி
ஒரு மகனையும் பெற்றான்

செயதி தொலைபேசியில் நாளாந்தம் அலை அலையாக பறந்தது.


இரு வீடாரும் பெரும்.. பகையை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்வு இப்படியா
போக வேண்டும் .. இது யார் செய்த தவறு?.... புலம் பெயர் தவறா?..


சாந்தாவின் விட்டுகொடாமையா? ராவனின் புரிந்து கொள்ளாமையா?..

.அவன் செய்த துரோகமா?......

சாந்தா இன்னும் காத்து இருக்கிறாள். எத்தனையோ திருமணம் பேசியும்

..மறுத்து விட்டாள.



..வாழ்கை என்றால் ஒருவனுடன் தான்...........ஒருமுறைதான்...என்று .....

Thursday, July 23, 2009

மனங்களிலே பல ....நிறம் ..கண்டேன்

மனங்களிலே பல ...நிறம் ..கண்டேன்

உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம்
தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து
உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம்
முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம்.

அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ...
விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் .
மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் ,
நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் .

புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து
ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு ....
இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம்
அது கண்ணீரில் நீராடி கரையாமல் காப்பது ஒரு மனது .

போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

பூவே........... பூச் சூட வா

பூவே..... பூச் சூட வா ...

மலர்களிலே பல நிறம் கண்டேன்
மாலையாகும் திறன் கண்டேன்
பூஜைக்கு போகும் சில ,கண்டேன்
மலர் வளையமாகும் சில கண்டேன்

த்ண்ணீரில் மிதக்கும் சில கண்டேன்
மாடியில் வாடும் சில கண்டேன்
மாலையில் மலரும் சில கண்டேன்
காலையில் மலரும் பல கண்டேன்


நிறம் உள்ளவை பல கண்டேன் ,
முட்களின் நடுவே சில கண்டேன்
நறு மணம் உள்ளவை பல கண்டேன்
பால்போன்ற வெண்மையும் கண்டேன்

வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை .
மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி
கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும்
மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும்.

மலர்களிலே இத்தனை வகை என்றால்
மனிதமலர் கள் எத்தனை வகை ?....
மலர்கள் பல வகை மலர்ந்து சிரிக்கிறது
மனிதனும் பலவகை மலர்ந்து அழுகிறது...

.இன்பம் எங்கே .....இன்பம் எங்கே.....

இன்பம் எங்கே.....இன்பம் எங்கே

மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம்
சிறுமிக்கு பொம்மை மீது இன்பம்
மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம்
பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம்

மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும்
பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம்
கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின்
(******** ) விரும்பியதை போட்டு வாசிக்க

தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம்
தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம்
பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம்
வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம்

தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம்
களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம்
மனிதருக்கு இன்பத்தை தேடி தொலைக்கும் வாழ்வு
பாடையில் போனபின் நித்திய இன்பம்

Wednesday, July 22, 2009

சின்ன சின்ன ......ஆசை

சின்ன சின்ன ......ஆசை

வானத்து நிலவை பிடித்துவிட ஆசை
பஞ்சு முகில் மீது சவாரி செய்ய ஆசை
பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை
மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை
வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை
அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை

முற்றத்து மண்ணில் விளையாட ஆசை
துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை
சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை
நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை

படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை
பனைமர நுங்கும் ,பழமும் தின்ன ஆசை
மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை
முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ....

பாடி திரிந்த் பறவைகள் ......

பாடி திரிந்த் பறவைகள் .......


அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் .
வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (get together )நடத்துவார்கள் .அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள். அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள்,ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிவதில்லை .உங்களுக்கும்  விளங்கும் தானே .

அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை ( parcel passing ) போது அதில் எழுதி
இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெண்ணுடனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம்வரவும் .எல்லோரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

அவள் எழுந்து அதிபரின் (ஆண் ) கை பிடித்து உலா வந்தாள் ...புத்திசாலி ....60 வயது அதிபருக்கு இனம் புரியாதா சந்தோசம் ...பக்கத்தில் அவர் மனைவி ...ஆச்சரியத்துடன் ...என்று பார்த்தார் . சக வயதினரை சேர்த்து நடந்தால் மறுநாள் ஊரில் தலை காட்ட முடியுமா?....அப்படி .. ஒரு நிகழ்ச்சி....

அது ஒரு பாடி பறந்த ... பருவம் . இது ஒரு பசுமை நிறைந்த நினைவு ...

......நன்றியுடன் நிலாமதி

Monday, July 20, 2009

சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து

சிட்டுகுருவி. ..முத்தம் கொடுத்து ....

மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில்
அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன
மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ...
ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது .
கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல
..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து
..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது.
நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ...........

மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்தம் கேட்டு சென்று விட்டன்.என் வேலையில் மும்முரமாக இருந்ததில் மறந்து விட்டேன் ஒரு வாரம் சென்று விட்டது
ஒரு நாள் குருவி நினைவு வர ...ஒரு ஏணி வைத்து எட்டி பார்த்தேன் சின்னஞ்சிறு ... மூன்று முட்டைகள் இருந்தன ..
எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை சுற்றும் முற்றும் பார்த்து கையில் எடுத்து பார்த்து
விட்டு வைத்து விட்டேன் ...

ஆண் குருவி கண்டால் அவ்வளவு தான் கொத்தி.... குட்டி விடும் ... ...சில வாரங்கள் சென்று விட்டன.நானும் எனது வேலையில் ....ஒரு நாள் மரத்தை பார்த்த பொது கீச் ...கீச் என்ற சத்தம் ..
தாய் குருவி குஞ்சு களுக்கு உணவு கொடுத்து கொண்டு இருந்தது ...எவ்வளவு இனிமையான வாழ்கை ...
..ஆண் பெண் குருவிகளிடியே.. உள்ள பாசம் ...ஒற்றுமை ...இரண்டும் சேர்ந்து பராமரிப்பு .

இப்படி மனிதர்கள் வாழ்கிறார்களா/.....

சிட்டு குருவி முத்தம்கொடுத்து... சேர்ந்திடக் கண்டேனே .

செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே ...

மொட்டு விரிந்த மலர்களிலே வண்டு மோதிடக் கண்டேனே ....