நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, September 13, 2010

அந்தஸ்த்து ...........சின்ன வயதில் இருந்தே  பால குமாரனும் ஆனந்த ராஜாவும் நண்பர்கள்.ஆரம்ப பாடசாலை  முடித்து கல்லூரி   சென்று பின் பல்கலை கழகம் வரை  ஒன்றாகவே படித்தார்கள். பின்பு வேலை பார்க்கும் காலத்தில் பாலகுமாரன் ரயில்வேயிலும் ஆனந்த ராஜன் குடிவரவு குடியகல்வு நிலையத்திலும் பணிக்கு அமைந்தார்கள். இருப்பினும் தொலை பேசி மூலமோ மடல்கள் மூலமோ நட்பை தொடர மறப்பதில்லை. பருவ வயது அடைந்ததும் ஆனந்த  ராஜன் முதலில் திருமணம் செய்து கொண்டான்.  அவனுக்கு வாய்த்த மணமகள்  சற்று வசதியானவள் ..மூன்று அண்ணாக்களுக்கு ஒரே தங்கை .

காலம் வேகமாக் தன் வேலையை செய்தது .பாலகுமாரனும் தன் தங்கை திருமணம் முடிய ஊரில் ஒரு ஆசிரியையாக் உள்ள பெண்ணை திருமணம் செய்து  கொண்டான்.திருமணமான பின் அவர்கள் குடும்பம் வேலை என்று பொழுதுகள் வாய்பாக் அமையவில்லை தொடர்பு கொள்ள. இருபினும் சில மாதங்களுக்கொருமுறை கொண்ட தொடர்புகள் வருடம் ஒரு முறையாகியது.