நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, July 8, 2010

படிக்கற்கள். ...........அந்தக்கிராமத்தில் வீரசிங்கதுக்கும், பாரியார் கண்மணியம்மாவுக்கும்  நீண்ட காலமாக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவர் ஒரு காணிப்பதிவுக் கந்தோரில்   எழுதுவினை ஞர்  பதவியில் இருந்தார். ஊர் மக்களின் அறிவுரைக்கேற்ப ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்கள். அவளும் கல்வியிற் சிறந்து ..விளங்கினாள்.  ..உய்ர்கல்வி பெற்றதும் ..கண்மணிம்மவுக்கு பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ் ஆர்வம் வந்தது .காலா காலத்தில் ..புரோக்கர் மூலம் திருமணம் நிச்சயமானது ..அந்த வருடம் வந்த ஒரு நல்ல நாளில் மங்கை கலைவாணியும் ஆசிரியர் செல்வதாயாளனும் இனிதே திருமண் பந்தத்தில் இணைந்தனர் ....காலம் யாருக்காகவும் காத்திராமல் ...உரிய வேளையில் ..கலைவாணி எனும் வாணி  ஒருபெண் குழந்தைக்கு தாயானாள். ....வீரசிங்கம் குடும்பத்துக்கு அளவில்லாத மகிழ்ச்சி ...தயாளன் வாணி வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருந்தது . இரண்டு வருடங்களின் பின் .ஆசிரியர் தாயாலனுக்கு ....ஒரு ஒதுக்கு புறமான் ஒரு கிராமத்துக்கு மாற்றல் கிடைத்து. .அங்கு மின்சார வசதி கூட இல்லை. மாணவர்களும்  மிகவும் வறுமை பட்ட் குடும்பத்திலிருந்து வந்தவர்களாய் இருந்தார்கள். சிலருக்கு சாராயம் காய்ச்சுவதே தொழிலாய் இருந்தது.அவ்வூர்  கிராம் அதிகாரி ...மற்றும் ஊர்காவலார்கள் கண்டும் காணாமல் கையூட்டு வாங்கி ....அத்தொழில் வளர்சியடைந்த்து .....ஆசிரியரும் ..தனிமை ..கவலையை  போக்க ...இவர்களுடன் கூட்டுச சேர்ந்து குடிவகை பாவிக்கக் பழகினார். வருட விடுமுறை வந்த போது ...இவரிடம் மனைவி சில மாற்றங்களை கண்டு கொண்டாள். அவர்களது ஊரிலும் குடிவகை விற்கும் இடங்களை தேடிப் போனார். வருடங்கள் செல்ல செல்ல ...ஒவ்வொரு குழந்தையாகக் பிறந்து ...அவர்கள் குடும்பம் தாய் தந்தையுடன் எண்ணிக்கையில் பதினொன்றாகியது...( ஒன்பது குழந்தைகள்) ..ஆசிரியரின் மாத வருமானமும் குறைந்தது..வீரசிங்கம் நோய் வாய்பட்டார்....மூன்றாம் மாதம் காலமாகி விடார்.

வாணிக்கு குடும்பகஷ்டம் ..போதிய வருமான மின்மை குழந்தை செல்வங்களின் சிரமங்களால் வேதனைபட்டாள். ஆனால் எல்லோருக்கும் கல்வியறிவில் மிகுந்த நாட்டம் காட்டினாள் . . ஒருவாறு பெரிய அதிகாரிகளை கண்டு கணவனுக்கு ஊருக்கு மாற்றம் வாங்கினாள். தாயார் கண்மணி அம்மாளும் வயோதிபத்தால் ...தளர்ந்து போனார். தாயின் ஓய்வூதிய பணம் , கணவனின் மாத வருமானதுடனும் குடும்பம் மிகவும் கஷ்ட பட்டது.... அப்போதும் ஆசிரியர் தாயாளன்  குடிப்பழக்கத்தை விடுவதாயில்லை. பகலில் ஓரளவு நிதானமாய் இருந்தாலும் பாடசாலை  விட்டதும  நேரே குடிக்க போய் விடுவார் . ஒரு வழிகாட்டியாக் இருக்க வேண்டிய ஆசிரியரே இப்படி என்றால் .என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். வீரசிங்கதாருக்கு  இருந்த மதிப்பும் மரியாதையும் இவரால் ..இவர்கள் குடும்பத்துக்கு,  ஊரவர்கள் மத்தியில் குறைந்து போயிற்று. பிள்ளைகளும்  தந்தை மீது பற்று இன்றி ... நடந்து கொண்டனர்..........ஒரு நாள் ..மாலை...தெருவிளக்கு இல்லாத நிலையில் ..ஆசிரியர் வரும் போது ...ஒரு லாரி யினால் மோதிக் கொல்ல பட்டார்..அப்போ தும் ....அவள் பத்தாவது ... குழந்தையை மூன்று மாதமாக் சுமந்து  கொண்டு இருந்தாள். வாணி மிகவும் கஷ்ட பட்டாள்.  அன்றாட உணவுச்..செலவுக்கே போதியதாக இல்லை. மூத்தவள் காயத்திரி ....பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.

இரண்டு வருடங்கள் சென்றது ....வாணி விழித்துக் கொண்டாள். தான் கற்ற கல்வி கை கொடுக்க ஆசிரிய பயிற்சிக்கு விண்ணப்பித்து ..அவ்வூரில் வேலை கிடைத்தது. மேலும் பயிற்சிக்கு ஆசிரிய ..பயிற்சிக் கலாசாலைக்குக்கு செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகளை தாயின் கவனிப்பில் விட்டு விட்டு அங்கு சென்றாள். மாலையில்  பஸ் வண்டியால் ...வீடு வரும் போது அத்தனை குழந்தைகளும் அம்மாவுக்காக . காத்திருப்பார்கள். மூத்தவள் .. இருக்கும் உணவை பகிர்ந்து எல்லோருக்கும் கொடுப்பாள். வந்த களையுடன் இரவு உணவு சமைத்து ......குளித்து ...தன் வீட்டுப்  பாடங்கள் செய்து ....தூங்க செல்ல நள்ளிரவு தாண்டி விடும்...தான் ஒரே ஒரு மகளாக் வாழ்ந்து தனக்கு ... இறைவன் இவ்வளவு குழந்தை செல்வங்களை தந்தும் அவர்களை நல்ல படியாக் வாழ் வைக்க வேண்டுமென்று திட சங்கற்பம் கொண்டாள்.

சில காலம் செல்ல தாயார் கண்மணிம்மாலும் காலமாகி விடார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டில் இனக்கலவரம் தொடங்கியது .வீட்டை விற்று .......ஒவ்வொரு  பிள்ளைகளாக  மேற்படிப்புக்கு   வெளி நாடு அனுப்பி வைத்தாள். அவர்களும் மிகுந்த சகோதர பற்று உடையவர்கள். ஒருவர் ஒருவருக்கு உதவியாக எல்லோரும் வெளி நாட்டு க்கு சென்று விட்டனர் .. இறுதியாக் அவர்களது ஊரில் இருக்க முடியாத் நிலை வரவே  ..அவளை தலை நகரில் இருக்க வழி செய்தனர். அப்போது கடைசி இரண்டு பிள்ளைகளும் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மூத்தவள் வெளி நாட்டுக்கு சென்று திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள். படிப்படியாக் ..எல்லோரும் வெளி நாடுவந்த பின் ..தாயாரையும் கடைசி மகள் அழைத்துக்கொண் டாள் . மூவர் லண்டன் மா நகரிலும் ..இருவர் பிரான்சு நாட்டிலும் ....மூவர் கன்டா நாட்டிலும்  ..இன்னும் இருவர் திருமணமாகாமல் தாயுடனும் அவுஸ்திரேலியா நாட்டில்  வாழ்கின்றனர்.

 எல்லோரும் மாறி மாறி தாயை தங்கள்நாட்டுக்கு அழைத்து கவனிப்பார்கள். இப்பொது அவருக்கு சற்று வயது முதிர்ச்சி ....இருப்பினும் பழைய கதைகளை சொல்லுவார். அத்தனை சோதனைகள் மத்தியிலும் அந்த தாய் எடுத்த முயற்சி ..பிள்ளைகளுடனும்  காத்த் பொறுமை ...சகோதர பாசம் ....தாயின் கஷ்டம் உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கை .....இன்று அவர்களை நல்ல நிலைமையில் வைத்து இருக்கிறது.

ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சோதனைக்களம் . அதில் வரும் சவால்களை சந்தித்து ..முன்னேறினால் வாழ்வு பிற்காலத்தில் வசந்தம் ஆகும். இவரது வாழ்வு ஒரு வழிகாட்டியாக பலருக்கு அமைந்தது என்பதால் இதை உங்களுடன் பகிர்கிறேன். ..வாழ்வில் ஆயிரம் தடைக்கற்கள் வந்தாலும் அதை  படிக்கல்லாக்குவது   ஒவ்வொருவருடைய முயற்சியிலும் இருக்கிறது . .

கதை உண்மை பெயர்கள் கற்பனை ......


Tuesday, July 6, 2010

ஏழையின் சிரிப்பில் இறைவன் .ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்)  சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின்  ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான  பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார்.  அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள்  தினமும் வந்து பனி ( சினோ) தள்ளுவான். வீசுகின்ற காற்று குளிர் நிலையை மேலும் கூட்டும். அவனை கண்டவர் அவன் சினோ தள்ளி முடிய தன் அறைக்கு வரும்படி செய்து சூடான் தேநீர் பரிமாறினார். அந்த கூலியாளின் மலர்ச்சி.....மன மகிழ்வு , இவரை .மகிழ்வித்தது. விடைபெற்று சென்று விடான்.

மீண்டுமொரு நாள் ..அந்த நடை பாதையில் ஒரு கிழவி பழங்களை கடை பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். கூடை கூடையாக் வைத்திருப்பாள். அந்த வழியால் வந்த சிறுவன் ...அந்த கூடையில் இருந்து ஒரு ஆரஞ்சு  பழத்தை திருடி தின்றான் .. இதை அவள் கண்டு விட்டு அவனை பிடித்த்துநன்றாக்  அடித்தாள். இதைக்கண்ட முதியவர் கீழே  வந்து இன்னொரு ஆரஞ்சு ் பழத்தை எடுத்து அந்த சிறுவனை சாப்பிட சொன்னார்  இரு பழங்க்களுக்குமான் காசை தானே கொடுத்தார். சிறுவன் நன்றியோடு ... பெற்றுக்கொண்டான். சரியான் பசி போலும். கையில் காசு இல்லை திருடி இருக்கிறான்..........சந்தர்ப்பங்கள் தான் குற்றம் செய்ய வைக்கின்றன.

இன்னொரு முறை ...துணிகளை சலவை செய்பவள். இவரது வீடுக்கு வந்து ..சலவைத்துணிகளை எடுத்து சென்றாள். ...மீண்டும் மூன்றாம் நாள் கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்றாள். தான்  பட்டாதாரித்தரம்  வரையில் ..படித்திருப்பதாகவும் தனக்கு பொருத்தமான் வேலை கிடைக்கக் வில்லை  என்றும் ..கஷ்டத்தின் நிமித்தம் இந்த வேலையை செய்வதாகவும் சொன்னாள். அவள் கதையை கேட்டவர் ...வாரம் ஒரு முறை வந்து துணி எடுத்து செல்லும்படி சொன்னார். அவளுக்கு  வாடிக்கையாளர் கிடைத்த்தை எண்ணி ...மகிழ்ந்தாள்.

முதியவர் நன்றாக் புத்தங்கள் படிப்பார். அருகே இருந்த்  சமய சஞ்சிகையை ..திறந்த போது ...".ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்பாய்."............குளிரால் விறைத்த மனிதனுக்கு சூடான் தேநீர்.........பசியால் வாடிய சிறுவனுக்கு ஆரஞ்சு ....வேலையற்று சீவியம் நடத்தத் கக்ஷ்டபட்ட்வளுக்கு வேலை .....இவர்களின் சிரிப்பு  அவர் மனத்தில் நிழலாடியது ..... ..மறு நாள்  பேப்பர் காரன் கதவு தட்டியபோது ..கதவு தானாகவே திறந்து கொண்டது ....நெஞ்சில் பைபிள் புத்தகம் ...தரையில் மூக்கு  கண்ணாடி ...கைகளை விரித்தபடி ....மீளாத உறக்கத்தில்........போகும் வழிக்கு தேடிக்கொண்ட புண்ணியம். அவரது உடல் வேண்டியவர்களுக்கு அறிவிகக்பட்டு கிறிஸதவ  முறைப்படி அடக்கம் செய்ய பட்டது. ..இறுதி நாளில்  அவஸ்தை இல்லாத மரணம்.

ஒரு மனிதனின் வாழ்வு பற்றி கேள்விபட்ட் ஒரு கதை ...நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி.........

முற்றும். ..