நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Saturday, August 22, 2009

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை..

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை...

நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , நான் அன்புக்கு பஞ்சம் இல்லை . பெரிய பட்டண த்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பழவகை எல்லாம் ...கொண்டு வருவார் ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் அப்பா .. நெஞ்சிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) என்று தொடரும் ..

.பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . நானும் புலம் பெயர்ந்து , நானும் அம்மாவாகி , புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டேன் அப்பா அந்த பாட்டு ...

தொலை பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் .

பென்சனியர் , அம்மவும் காலமாகி விட்டா. நாங்களும் போக முடியாத நிலை . எங்கள் வீட்டு சொக்கன் (தோட்ட வேலை செய்தவர் ) பெற்ற பிள்ளையுடன் இருந்து காலமாகி விட்டார். கடைசி வரை அப்பா என்னுடன் இருக்க கொடுத்து வைக்கவில்லை ..இன்று அதி காலை கனவு கண்டேன் . எனக்கு உறக்கம் இல்லை ...ஒரே பழைய கால சிந்தனையாகவே இருக்கிறது. அவர் விரும்பி பாடும் பாடல் இது தான் ..........

நான் பெற்ற நவமான செல்வம்,.... தேன் மொழி பேசும் சிங்கார ச்செல்வம் நீ...அன்பே இல்லா மானிடரால் ..... அன்னை யை இழந்தாய் இளவயதில் ...
பண்பே இல்லா பாதகர்கள் வாழுகின்ற பூமி இது .............நீ நான் பெற்ற செல்வம்.

Thursday, August 20, 2009

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ....

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ..........

அந்த நகரத்தின் எல்லையில் ஊரில் அமைந்து இருந்தது ஒரு கன்னியர் மட விடுதி. அங்கு தான் நம்ம கதா நாயகியை சந்திச்சேன். பெயர் தனேஸ்வரி ....அநேகமாக் ஈஸ்வரி என்று தான் அழைக்க படுவாள். நகர கட்டிட மேற்பார்வையாளர் கனகாம்பரதுக்கும் மனைவி கோமதிக்கும் பத்து வருட தாம்பத்திய வாழ்வுக்கு பின் தவமிருந்து பெற்ற பிள்ளைதான்
ஈஸ்வரி ..ஆரம்பத்தில் அவள் சாதாரண குழந்தையாகவே இருந்தாள்.
காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே

சில நாளாக அவள் மந்த புத்தி உள்ளவளாக பாடசாலை போகமனம் அற்றவளாக எதையும் விளங்கி கொள்ளாத தோற்றம் உள்ளவளாக விளங்கினாள். அழைத்து சென்று காடாத வைத்தியரில்லை . . நீண்ட நாட்களின் பின்பு தந்த பிள்ளை பாக்கியமும், இப்படியா போகவேண்டும். கவலையில் ஓவசியர் கனகாம்பரமும் கண் மூடி விடார். மனைவி கோமதி அவர் மீதம் வைத்த சொத்தை கொண்டு காலம் ஓட்டினாள் . பின் வருவதை உணர்ந்தோ என்னவோ தன் வீட்டை மகள் பெயருக்கு உயில் எழுதி வைத்தாள். குமரிப்பருவத்தை யடைந்த ஈஸ்வரி சிறு பையன் களுடன் விளையாடுவாள். ஏனைய பருவ பெண் போல இருக்கமாடாள். உடல் வளர்ச்சி இருப்பினும் , புத்தி மந்த நிலையிலே இருந்தது

காலம் தான் பங்குக்கு ஓடிக்கொண்டே இருந்தது . கனகாம்பரம் செத்த பின் கோமதியின் உறவுகள் ஒட்டிக் கொண்டனர். தான் இல்லாத காலத்தில் தன் மகளை யார் கவனிப்பார் என்ற கவலையும் அவளை ஆட்கொண்டது . தன் இளைய தம்பி மாணிக்கத்தை மட்டும் நம்பி எல்லாக் காரியத்தையும் செய்வாள். ஆனால் அவன் மனைவி மரகதம் மிகவும் கொடியவள் . ஈஸ்வரியின் கஷ்ட காலம் தாய் கோமதி , தந்தை இறந்த மூணு வருடத்தில் தானும் போய் சேர்ந்து விடாள். இந்த தருணத்துக்காக காத்திருந்தவள் போல மரகதம் கணவனை நச்சரிக்க தொடங்கினாள். ஈஸ்வரியின் கையெழுத்துடன் வீட்டை தான் பெயருக்கு மாற்றும் படி , கணவன் மாணிக்கமும் அவள் சொல்கேட்டு மனைவி பெயருக்கு மாற்றினான். ஒரு நாள் காலை ஈஸ்வரிக்கு அழகான் பட்டுச்சட்டை போட்டு , காலையில் அவளுக்கு விரும்பிய பழைய சாதமும் கொடுத்து , பெருவிரலிலே மை பூசி பத்திரங்களிலே கை நாட்டு (கையெழுத்து ) பெற்று பின் ஊர்சுற்றி பார்க்கவென அழைத்து சென்றனர். அவளுக்கு தெரியாது அந்த இடம் தான் தான் வாழ் நாள் அஸ்தமிக்கும் இடம் என்று .

ஒரு கன்னியர் நடத்தும் விடுதிக்கு அழைத்து சென்று , இவளை பாரம் கொடுத்தனர். மாதாமாதம் பணம் அனுப்புவதாகவும். உறுதி கூறினார். இப்படியே ஒரு வருடம் நடந்தது முன்பு மாதம் ஒரு முறை வந்து பார்ப்பவர்கள் வருடத்து கொரு முறை வந்து ஈல்வரியை பார்த்தனர். பின் பு முற்றாகவே நின்று விட்டது. அந்த கன்னியர் மட நிர்வாகம்விசாரித்த போது அவர்கள் வீட்டை விற்று வேறு நாடுக்கு சென்று விட்டதாக ஊரார் பேசிக்கொண்டனர். அன்று தொட்டு அங்கு அவள் அனாதையானாள். ஆனால் கன்னியர் அவளை கவனமாக் கண்காணித்தனர்.

எனது ஆரம்ப வேலை யாக சிறுவர் பராமரிப்பு பள்ளியில் துணை ஆசிரியராக கிடைத்து . அங்கு சில காலம் விடுதியிலும் இருந்தேன். ஈஸ்வரியை முற்றாக உணரக் கிடைத்து. விசேட காலங்களில் ஒன்று கூடல் நடக்கும் அப்போது சிறார்கள் கலை நிகழ்ச்சி நடக்கும் . இறுதியில் இவளை போன்றவர்களின் நிகழ்வும் நடக்கும் இவளை போல உடல் நல குறை பாடு உள்ளவர்கள் பலர் இருந்தார்கள் அந்த கன்னியர் விடுதியில். . இவளது முறை வரும் போது எழுந்து நின்று "அமுதை பொழியும் நிலவே " என வானத்தை சுட்டு விரலால் காட்டி அபிநயம் செய்வாள் .

பெயரில் உள்ள தன ஈஸ்வரிக்கு ......தனம் சம்பத்து இல்லாவிடாலும் ..பாது காப்பான இல்லிடமாவது கிடைத்தது .......

.உலகம் இப்படித்தான்

Wednesday, August 19, 2009

(தொடர்ச்சி )...பட்டமும் பெறப்பட்ட வேளை

(தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை .

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்தது
இரக்கம் சிறிதும் இல்லாத வான் குண்டு
என் தாயை சிதைத்தது என்று

விம்மி வெடித்தேன் விழுந்து புரண்டேன்
காலனே உனக்கு கண் இல்லையா
அயல் உறவு ஊரோடு புலம் பெயர
என் தாயை ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்
மண் கொண்டு சென்றாலும்
மலர் தூவ நான் வருவேன் ........


.என் தாயின் இறப்பு நாள் அண்மிக்கிறது
தினமும் நினைக்கும் கவிதைகளில் ஒன்று

மலர் கொண்டு வருவேன் .........

மலர் கொண்டு வருவேன் ..........

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு
ஒரு நினைவலை தாலாட்டு
பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு
பாசமுடன் பேறு எடுத்த பெட்டை நான்
பாலுட்டி தாலாட்டி பண்புடன் நல்ல பழக்கமுடன்

பாங்காய் அணைத்து வளர்த்திடாள்
பள்ளி சென்று நானும்படிகையிலே
பக்குவமாய் பாடங்கள் பலதும்
சொல்லித்தந்த வழிகாட்டி
கடை குட்டி என் மீது கூடிய கரிசனம்
கண்ணன் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுப்பி விடுதி விட்டு
வீடு க்கு விடுமுறை வந்தால்
விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்
பல்கலைக்கு காலடி நான் வைத்த போது
கண் கான தேசம் கவனமடி கண்மணியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது ................

Tuesday, August 18, 2009

சில ஞாபகம் தாலாட்டும் ..........

சில ஞாபகம் தாலாட்டும் ..........

அம்மா கை பிடித்து நான் நடந்தது ஞாபகம்
அப்பா முதுகில் செய்த சவாரி  ஞாபகம்
படுக்கையில் சிறுநீர் கழித்த மறு நாள்
என்னையும் படுக்கை போர்வையும்
துவைத்து காலில் செல்ல அடி ஞாபகம்,
 ,அப்பம்மா,பாட்டி , விலக்கு பிடித்த ஞாபகம்.
அம்மாவின்  செருப்பும், குடையும் பிடித்து
முற்றத்து ,வெய்யிலில் உலா வந்த ஞாபகம்
அயல் வீட்டு தம்பியை காட்டி எனக்கும
ஒரு தம்பி வேணுமென்று அடம் பிடித்த ஞாபகம்
மூணு வயதிலே புத்தக பையை சுமந்து காட்டிய ஞாபகம்
பாலர் பள்ளிக்கு தாத்தாவுடன் சவாரி சென்ற ஞாபகம்
முற்றத்து மாமரத்தில் பழமும் காயும் சுவைத்த ஞாபகம்.
கோமதியின் (பசு) பாலுக்காய் , இரவில் விழித்த ஞாபகம்
கோவில் விழாவில் , அப்பா மடியில் கச்சான் ( நிலக்கடலை )
கடலை கொறித்து தின்ற ஞாபகம் .
பக்கத்து வீடு பாமாவுடன் டூ ........விட்டு நான் வென்ற ஞாபகம்.
தொட்டித் தண்ணீரில் நீச்சல் போட்ட ஞாபகம் .
தூங்கும்  பாப்பாவை விளையாட கூப்பிட்ட  ஞாபகம் ...
வளர்ந்ததும் அவனுடன் சண்டை போட்ட ஞாபகம் .
அவன் புளியங்காய்க்கு எறிந்த கல் என் தலையில் பட
என்னை கட்டி அணைத்து , கண்ணீர் துடைத்து
"சொல்லாதே" என சத்தியம் வாங்கிய ஞாபகம் .........

இத்தனை ஞாபகங்களை என் தாயகத்தில்
விட்டு வந்த ஞாபகமாய் .......என் செல்ல மகள்
என் பிறந்த நாளுக்கு எழுதிய பதிவுகளாய் .....

..உங்களுடன் நான். .

ஒரே ஒரு கணம் ..........

ஒரே ஒரு கணம் ..........

நகரத்தின் ஒதுக்கு புரமான் தொரு கிராமத்தில் , ஆச்சி யம்மாள் தன் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். அவளது நான்கு பிள்ளைகளில் கோவாலு தான் ஆண் மகன். கணவன் ஒரு பிரச்சினை காரணமாக் ஊருக்கு வருவதே இல்லை. கிட்ட தட்ட கைம்பெண் நிலையிலே இருந்தாள் ஆச்சியம்மாள்.

காலம் கடந்து போக பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். மூத்தவள் காயத்திரி ...மணப்பருவம் எய்தினாள் . ஆச்சியம்மாள் வாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்த பணத்தை எண்ணி சரிபார்த்து விட்டு . ஒரு கலியாண தரகரை பார்க்க போனாள். மறுவாரமே கலியாணமும் சரி வந்தது ........மாபிள்ளை ...பெண் பார்த்தபின் அடிக்கடி வரதொடங்கினார். வரும் கார்த்திகை மாதம் கலியாணம் என நிச்சயமாகியது . மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாகவே இருந்தனர். இவர்கள் ஒரு சிறு காணியை குத்தகைக்கு எடுத்து அதில் வரும் விலை பொருட்களை விபதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஐந்து ஜீவன்களும் காலத்தை ஓட்டினார்கள்.

கோவாலு ஆண் மகன் தான் அதிக பிரயாசை எடுத்து கொள்வான். சகோதரிகளும் களை பிடுங்குதல் நீர் இறைக்க் உதவுதல் என்று கை கொடுப்பார்கள். திருமணம் முடித்து எண்ணி எட்டாம் மாதமுடிவில் , மணப்பெண் காயத்திரி அழகான் ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். டாக்டார் கூற்று படி குழந்தை நிறைமாதம் எனவே குறிப்பிடார் . காலம் தன் வேலையை செய்ய ....ஒரு வருடத்தால் மீண்டும் கருத்தரித்தாள். மாபிள்ளை தன் தாய் வீட்டுக்கு போகிறவன் அங்கேய சில நாட்கள் தங்கி விடுவான் . இவள் காயத்திரியும் போய் கூபிடாள் இவளுக்காக வருவான். இப்படியாக காலம் செல்ல செல்ல மாபிள்ளை சில சமயம் சீறி சினத்து விழுவான். தோட்டத்தில் உள்ளதை விற்க சென்றால் காசு கணக்கும் குறைவாகவே காட்டுவான் . காயத்திரியும் எதுவுமே கேட்பதில்லை. இதனால் கோவாலு மிகவும் மனமுடைந்து போனான் . தோட்டத்தை கவனிப்பதுமில்லை .நன்றாக் குடிக்க தொடங்கினான். சாதாரண நிலையிலும் அமைதி அற்றவனாகவே காணப்பட்டான். .

ஒரு நாள் மாப்பிள்ளை தாய் வீடு போனவன் வரவே இல்லை. ஊரார் பலவாறு கதைக்க தொடங்கினர். வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் பேசிக்கொண்டனர். கோவாலு ,வருவான் மாபிள்ளை என பார்த்து கொண்டு இருந்தவன் இரு வாரங்களாகியும் வரவேயில்லை..........அவனை பார்த்து வரும்படி ஆச்சியம்மாள் கோவாலுவை அனுப்பினான். அங்கு மாபிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

விறகு வெட்டும் வேலைக்கு போயிருப்பான் போலும் . அருகில் கிடந்த கோடரியை எடுத்து "சதக் " என ஒரே வெட்டு . கழுத்தில் பட்ட வெட்டினால் மாப்பிள்ளை துடி துடித்து இறந்தான். அன்று மாலையிலே அவன் கோவாலு பொலிஸாரால் கைது செய்ய படான் . வழக்கும் நடந்தது தீர்ப்பாகும் நாள் , ஊரிலே மிகத்திறமையான் சட்ட தரணியை கொண்டு வழக்கு பேசினார்கள் முடிவு .................அவன் ஒரு மன நோயாளிஎன்றும் . அந்த நாள் பூரணை நாள் என்பதால் அதன் தாக்கம் அதிகமாய் இருக்குமென்றும் ...நோய் காரணமாகவும் அதிகம் உணர்ச்சி வசபாட்டதாலும்அவன் அந்த கொலையை செய்தான் என்று தீர்ப்பாகியது .........

.சகோதரி விதவை ஆனாள். இரு குழந்தைகளுக்கு தாயானாள். கணவனை..என்ன இருந்தாலும் சகோதரன், தன் வாழ்வை அழித்து விட்டான் என்று கோப படாள் . கோவாலுவின் ஆத்திரம் ஒரு உயிரை காவு கொண்டது .....ஒரு தாயை விதவை ஆக்கியது ...........அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க பட்டது ...........

நாட்டின் சில விழா காலத்தில் கைதிகளை மன்னிப்பு பெற்று விடுதலையாவார்கள். . அப்படியான ஒரு காலத்தில் கோவாலுவும் விடுதலையானான். சில நாட்கள் ஊரார் கண்களுக்கு தென்படாது இருந்தான் அந்த ஊர் மக்களும் ஆச்சியமாள் குடும்பத்துடன் உறவு வைக்க , தயங்கினர். அந்த மாதத்தின் பெளர்ணமி இரவொன்றில் .....கோவாலு தூங்கி இறந்து கிடந்தான். ஆத்திரமும் அவசரமும் அவன் கண்களை குருடாக்கி அவன் சகோதாரி வாழ்வையும் பறித்து ...........தன்னையும் மாய்த்து கொண்டான்.


அவன் ஒரே ஒரு கணம் சித்தித்து இருந்தால் ...................

Monday, August 17, 2009

போதை தந்த பாடம் ...

எனது நீண்ட நாள் மனப்பதிவிலிருந்து ஒரு சிறு நிகழ்வு

அமைதி யான அந்த கிராமத்திலே , மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள் . பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான் .அவனும் னும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடித்து " வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது ..

பாடத்தொடங்கினான் ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி .
..தங்கம் ...என்று . வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கிவிடார்கள். .அவனது துவீ வண்டி(சைக்கிள்) வேறு ..இடம் வலமாக ஆட்டம் போட தொடங்கி விட்டது ....பொது ஜனங்களுக்கும் இடை யுராக இருந்தான்.

இப்படியாக போய்கொண்டு இருக்கையில் ... வழியில் ஒரு மது வரி இலாகா இருந்தது .. சட்ட விரோத கள்ளு இறக்குதல் ,...வரிபணம் கட்டாமை ,...போன்ற தவறுகளுக்கு , பணம் அறவிடுவார்கள் . சிலரை மறியலிலும் வைப்பார்கள். ..பாவிலுவை கண்டதும் ..துரத்த ஆரம்பித்தார்கள்.

அவன் சைகிளையும் விட்டு விட்டு ..ஓடத்தொடங்கினான் . எட்டி பிடித்தபோது... சாரமும் (லுங்கி) கழண்டு விழ... உள் ஆடையுடன் ஒரே ஓட்டமாக ....எங்கள்... வீடுக்கு அருகாமையில் வந்து,".

அக்கா ............. நான் முடியப்போகிறேன் ....என்று ... பயம் காரணமாக ...எங்கள் வீடுவீட்டு மாட்டுக்கொட்டகையில் புகுந்து கொண்டான் .பின் அவர்கள் சென்று விட்டார்கள்.துரத்தீ வந்தவர்கள்....


. வெறி(போதை) தெளிந்ததும் அவனுக்கு வெட்கமாகி விட்டது .. மனைவி வந்து கூட்டி சென்றாள் . அந்த வெட்கத்தில் போனவர் தான்.. பின் அந்த கிராமத்துக்கு வரவே இல்லை .பின்பு மனைவி ... பிள்ளைகளை ..பெரிய பட்டணத்துக்கு அழைத்துவிட்டார்.

குடியும் விட்டு சில கடைகளுக்கு முதலாளி என்று கேள்விப்படேன். ஒரு நிகழ்வு அவன் வாழ்கை பாதையையே திசை மாற்றி விட்டது .

...இது எப்படி இருக்கு ....