நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Friday, October 15, 2010

மாற்றங்கள்அழகான அந்த சின்னஞ்  சிறு கிராமத்த்து  வாழ்க்கை அமைதியாகவும். மனோரம்மியமாகவும்  இருந்தது . அதிகாலையின் ஆலய மணி ஓசை பறவைகளின் இனிய ஒலி ..காலையில்  பரபரப்பான் அந்தக் கிராமம் நெல் வயல்கள் , பேரூந்துக்காக பயணிப்போர்  துவிச்சக்கர வண்டியில் பாடசாலை செல்வோர் , என்று அந்தக் கிராமம் அதிகாலயிலே விழித்து விடும். இத்தகைய சூ ழலில் வாழ்ந்தவள் தான் காவியா...அதிகாலையில் எழுந்து காலைக் கடன்  முடித்து , வீட்டு முற்றம் கூட்டி காலை உணவு உண்டு பாடசாலை செல்வாள். சில சமயம் நண்பியுடனும் சில  சமயம் தனிமையிலும் செல்வாள். இத்தகைய நாளில்  இரு கண்கள் அவளை கூர்ந்து கவனிக்க் தவறுவதில்லை . ஆம் அவ்வூரை சேர்ந்த வாத்தியார் பையன். கணேஷ் மிகுந்த .ஆவலுடன் சிநேகமாய் இருக்க முற்படுவான் அவள் அவ்வூரின் கட்டுபாட்டுக்குரிய வெட்கம் பயம் காரணமாக் விரைவாக் சென்று விடுவாள் இருந்தும் அவளது பதினைந்தாவது வயதில் ஒரு நாள் அவன் இவளைக்  காதலிப்பதாக கடிதம் கொடுத்தான்.  பயத்திலும் வெட்கத்தில் அதை மறைத்து வைத்தாள் ஒரு நாள் நண்பிக்கு சொன்னாள் . அவளோ இது படிக்கும் காலம் அவன் மீது கோபம் இல்லை என்னை படிக்க விடு என்று பணிவாக் மடல் எழுதும்படி சொன்னாள் . அவனும் சம்மதித்து போகவே காதல் பார்வையே  அவர்கள் மொழியானது.

Tuesday, October 12, 2010

அக்கா ...என்னும் உயிர்
கடந்த வார விடு முறையில்  என் நண்பியின் இழப்பு லண்டனில் நடந்து விட்டது .துக்கம் தெரிவிக்க  அவள் சகோதரி வீட்டுக்கு சென்று இருந்தேன். நண்பி என்று சொல்வதிலும் எனது உறவினள். என்னோடு சிறுவயதில் கூடப் படித்தவள். கால மாற்றத்தில் பிரிந்து அவள் லண்டன் சென்று விடாள். அவளது ச்கொதரி எனக்கு அண்மையில் உள்ளாள். காலம் சில நல்லவர்களை விட்டு வைப்பதில்லை. சிறுவயதில் அவளுக்கு மூத்தவன் ஒரு ஆண் சகோதரன் பின்பு இவள் . இவளுக்கு இரு தங்கைகளும் இரு தம்பி மாரும். தந்தை வியாபாரம் செய்பவர். நன்றாக் படிப்பாள். மகிழ்வான் குடும்பம். ஆறாவது பெண குழந்தை (சகோதரி). பிறந்த ஒரு வருடம ஆக இன்னும் சில மாதங்கள். திடீரென தாயாருக்கு ஒருவகைக் காய்ச்சல் கண்டது . சில கை வைத்தியம் செய்ததும் பலனின்றி இறுதியில்  வைத்திய சாலையில் சேர்த்தார்கள. முடிவு சோகமானது. அவர் இறந்து விடார். தாங்க முடியாத சோகம். என் நண்பி  ஒருவாரம் பாடசாலை வரவில்லை  பின்பு வயதான் அம்மம்மா குழந்தையை கவனிப்பதாக சொல்லி இவளைபடிக்க் அனுபினார் கள் .அவள் பாடசாலைக்கு வந்தாள். வீட்டில் அத்தனை பேருக்கும் சமைத்து வைத்து விட்டு கால் நடையில்  பள்ளிக்கு வருவாள்.  அப்போது அவளுக்கு பதினைந்து வயது  இருக்கலாம். சில சக் உறவுகளுக்கு மதிய உணவும் கட்டிக் கொடுத்தனுப்பி தானும் இரண்டு கவளம் கட்டிக் கொண்டு வருவாள். இத்தனைக்கும் மத்தியில் அவளது திறமை பள்ளியில் மிகவும் பாராட்ட பட்டது.