நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Friday, November 19, 2010

என் இதயம் கவர்ந்தவளே என் இதயம் கவர்ந்தவளே
கண்கள் கண்டதால்
கவரபட்டதால்
காதல் கொண்டதால்
கருத்து ஒன்றி அதனால்
இணைந்து கொண்ட இருவர்
கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா

கனத்தத் மனதுடன்
கலந்து பேசி நாமும்
கலைத்திடுவோம் பகை
கன்னி உனக்கு ஆகாது
கருத்து மோதலில்
கரையும் நம் வாழ்க்கை
கண்மணியே வா
காலமெலாம் கை
கொடுப்பேன்
காலம் இன்னும்
கடக்க வில்லை

மன்னிப்போம் மறப்போம்
மங்கை நீ மனது வைத்தால்
மா மலையும் ஒரு துரும்பு
மகிழ்வான காலம் இருக்கு
மனது வைத்து மன்னித்தால்
மாலை யிட்ட மணாளனின்
மனது தன்னை புரிந்து விடு
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
இனிய  இல்லறத்துக்கு
புகழ் சேர்க்கும் புனித மொழி
புரிந்து கொள் , புறப்படுவாய்
புகலிடம் நோக்கி

உன் வரவைக்கான விரும்பும் ................

Monday, November 15, 2010

பசி தீர்க்கும் தாய்மைநம் பசி தீர்க்க தன்
பசிக்கு உணவு
நாடிச்  சென்றவள
சென்றும் பல நாழியாச்சு

நலமோடு வரும் வரையில்
நாம இருப்போம் ஒற்றுமையாய்
நகர்ந்து சென்று ஓடாதே
நன்றும் தீதும் காத்திருக்கும்

நிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்
சென்ற வழி பார்த்திருப்போம்

பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி  வந்திடுவாள்

அண்ணாவும் நானுமாய் .....
அண்ணாவும் நானுமாய்
மகிழ்ந்திருந்த காலங்கள்
விளையாட்டு தோழனாய்
துணைக்கு உற்ற நண்பனாய்

பிரித்தது உயர் கல்வி
என்னும் உயர் கடமை
தனி மரமாய் நானும்
தவித்திருந்த வேளை

துணையாகி வந்தான்
நண்பனேனும் கோபி
அவனது பழக்கங்கள்
என்னுடன் ஒட்டின

கூடா வேறு நட்புகளும்
கேடாய் முடிந்தது
பாடாய் படுத்துகிறது
கூடம் என்னும் சிறைக்கூடம்

வாடுகிறேன் அண்ணா
 உனை எண்ணி நாளும்
வந்து ஒரு வழி சொல்லு
விட்டு விடுதலை யாகி விட

வீண் வேடிக்கை கதையல்ல்
உன் உயிர் மீது சத்தியம்
பெற்றவர் உற்றவர் இன்றி
தேடுகிறேன் விடுதலை