தாயும் நீயே தந்தை நீயே ..............
லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறபட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாக காப்பாளர் மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார் ......அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும் கவனித்து கொண்டார் ........
பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .
இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா " என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள்
லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில் விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே என்ற மனக்கவலையிலும் அக்காவுக்கு விடை கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால நோக்கம் கல்வியின் முன்னுரிமை என உணர்ந்த இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா லதாவுக்கு இனம்புரியாத பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு இருக்கிறாள்.
பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .
இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா " என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்