நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, November 11, 2010

மாலதி டீச்சர் ............


மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு  போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன்  கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில்   பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி   )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம்.  அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது.  அம்மா  அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு  விடைபெற ஆரம்பித்தார்.
 தனிமையை எண்ணி   கண்கள் கலங்கினாலும் எனது ஒன்று விட்ட் அண்ணா என்னிலும் மூணு மாதங்கள் மூத்தவன் ( பெரியம்ம்வின் மகன்) அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டேன்.

முதல் நாளிலே எல்லோரையும் கைகளை தட்டியவாறு  ஒரு புளியமரத்தை சுற்றி வலம் வந்தோம். பின்பு பத்துமணி இடைவெளி நான் கொண்டு சென்ற ஒரேஞ் ஜூஸ் ...தாகம் தீர்த்தது. சிறு பிஸ்கட்டுகளையும் சாபிட்டு , மறுபடியும் வகுப்புக்கு அழைத்து செல்ல பட்டோம் . முதல் நாள் ஓரளவு கலக்கம் ,தயக்கமாய் இருப்பினும் ஜெயந்தி என்னும் நண்பியும்  சோபனா என்னும் நண்பியும் பழக் இனிமையானவர்கள்.   அடுத்த அடுத்த் நாட்களில் என அண்ணவுடன் செல்ல கற்றுக் கொண்டேன் . அது அரை நாள் வகுப்பு  ஆகையால் சில சமயம் அம்மவும் சில சமயம் தாத்தாவின் சைக்கிள்  சவாரியிலும்  மதியம் வீடு வருவேன்.  பிற்காலத்தில் நல்ல் பாட்டு பாடும் பாடகி யானேன்.வருட இறுதியில் பெற்றார் தின விழா. அது ஒரு மார்கழி மாதம் நடுபகுதி , அப்பாவும் விடுமுறையில் வந்திருந்தார்.  அப்ப்பா அம்மா அண்ணா எல்லோரும் தொடங்குவதற்கு அறிமணி முன்னமே சென்று எனக்கு ஜோடனை செய்வதில் அம்மா உதவினாள். முதற்பாடல் " கொஞ்சிக் கொஞ்சி பேசி " என்பதற்கு அபிநயம் செய்யவேண்டும்
 பின்பு ஒரு ஆங்கில் உரையாலில் ஒரு சிறு நாடகம் . அப்ப்போது தான்  தொலைக் காட்சிபெட்டி நம்ம ஊரு க்குவந்த் ஆரம்பம்.அதில் நானும் ஒரு சிறுவனும் அம்மம்மாவுக்கு தொலைக் காட்சி போடுவதை காட்டி கொடுக்கவேண்டும் . அம்மம்மாவுக்கு நடிப்பவர் ஆவலுடன் வந்து இருக்க , சுவிச்சியை போட்டதும் அது ஒளிர வில்லை .காரணத்தை தேடுகிறோம்.(இது கதையின் சுருக்கம் ) .பின்பு தான் சுவருக் கான இணைப்பை கொடுக்க மறந்து விட்டோம்.  என்பது புலனானது..  விழாமுடிவில் ஆசிரியைகளுடன் நின்று படம் எடுத்துக் கொண்டோம். ஒரு மாலை  நேரத்தில் ஆரம்பித்து இரவாகி விட்டது விழாமுடிவில் நான் நித்திரையாகி விட அப்பா என்னை தோளில் சுமந்து வந்தார்.வீட்டுக்கும் பள்ளிக்கும் நடை தூரம்.  மறு நாள் விபரம் மீண்டும் படமாய் ஓடியது. .

இப்படியான் என சிறுபராய நினைவு குழந்தைகளைக் கண்டதும் இடையில் வந்துபோகும்.உயர்கல்வி கற்று பரீட்சை முடிவுகளை எதிர் நோக்கும் விடுமுறைக்காலம் என் ஆர்வம் காரணமாக் அந்த பள்ளியிலேயே ஆசிரியையாக் சேர்த்து கொண்டார்கள்.  என முதல் வேலையும் அது தான் .நானும் குழந்தைகளுடன் குழந்தையாகி விடுவேன் . என் பாலர் வகுப்பு நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி . மீண்டும். இளம் பராய நினைவுகள் இலகுவில் மறப்பதில்லை .மறந்தாலும் அம் மா மீண்டும் நினைவூட்டுவார் . மனதில் இருக்கும் அழியாத கோலம்.

18 comments:

எஸ்.கே said...

என் பள்ளி நாட்களை/ஆசிரியர்களை நினைவுபடுத்துகிறது உங்கள் பதிவு! அனுபவங்கள் இனிமை!

LK said...

நன்றி நிலா .. குழந்தை பருவ நினைவுகளை தூண்டி விட்டீர்கள்

ஆமினா said...

மறுபடியும் ஸ்கூலுக்கு போய்விட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்!

வாழ்த்துக்கள்

சே.குமார் said...

அனுபவங்கள் இனிமை!

சங்கவி said...

பதிவு அருமை... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது...

வெங்கட் நாகராஜ் said...

பள்ளி நினைவுகள் என்றுமே இனிமையானவை சகோ. அவ்வப்போது எனது மகள் செய்யும்/ சொல்லும் விஷயங்கள் என்னையும் எனது பள்ளிக்காலத்திற்கு அழைத்துச் செல்லும். பகிர்வுக்கு நன்றி.

தமிழ் உதயம் said...

உண்மை தான். மனதிலிருக்கும் அழியாத கோலம், அழியக் கூடாத கோலமும் கூட

இமா said...

எல்லாப் பள்ளிக்கூடத்திலயும் அரிவரி முதல் நாள் எண்டால் புளியமரத்தைத்தான் சுற்றி வர வேணுமோ!! ;)))) அந்தப் பெரீ..ய புளியமரமும் அதில ஓடுற அணில்களும் இப்பவும் கனவில வரும்.

தமிழ்த்தோட்டம் said...

ம் இனிமையான அனுபவம்

safeer said...

அக்கா தாங்கள் வலைப்புபார்த்து மிகவும் சந்தோசப்படுகிறேன்.தாங்களின்படைப்புகள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா தாங்கள் வலைப்பு இன்னும் முன்னேர.

நல்லதொரு அனுபத்தை படிக்க தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் அக்கா

ஹரிஸ் said...

பள்ளி நாட்கள் எல்லோர் மனதிலும் பசுமரத்து ஆணி...பதிவு அருமை..

ஹேமா said...

எனக்கு நிறைய ஞாபகங்கள் வருது.இன்று முழுக்க சந்தோஷமாகத்தான் இருக்கப்போகுது !

நிலாமதி said...

என் தளத்தில் கருத்துப்கிர்ந்த அன்பு உள்ளங்கள் .....எல் கே ,எஸ் கே ஆமீனா, சே குமார், சங்கவி ,வெங்கட் நாகராஜா ,தமிழ் உதயம், இமா, தமிழ் தோட்டம், சபீர் , ஹரிஷ், ஹேமா யாவருக்கும் என் நன்றிகள்.

ரிஷபன் said...

ம்ஹூம்.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..எனக்கும்.

Ananthi said...

பள்ளி நினைவுகளை
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. :-))

polurdhayanithi said...

nalla ninaivugal
polurdhayanitni

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எனது பாட்டாவுடன் முதல் முதலில் பாடசாலை சென்று அதே வீச்சில் அவருடனேயே திரும்பி வந்த எனது அனுபவங்கள் நிழலாடுகின்றன.

yarl said...

மறக்க முடியாத பள்ளி நாட்கள். பகிர்வுக்கு நன்றி நிலா. நாங்கள் இருந்தது வேப்பம் மரத்துக்கு கீழ, சிலநேரங்களில காகம் இருந்து பீச்சிப்போடும்.