நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, August 26, 2009

பேனாவின் சிவத்த மை ....

பேனாவின் சிவத்த மை .........

அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது , கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று , மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள்.


போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் பிரத்தியேக (.tuition ..)வகுப்புமாய் ,இருந்தாள். வருட இறுதியும் வந்தது .
தனது திறமையெல்லாம் திரட்டி சோதனையில் வெற்றி பெற்று விட்டாள்.
நான்கு டீ தரத்திலும் நான்கு சி தரத்திலும் சித்தியடைந்து விட்டாள் . பெரியன்னாவுக்கும் ,பெரிய பட்டணத்துக்கு அம்மாவின் கடிதத்துடன்
அவளும் கடிதம் எழுதினாள் . அவளின் பெரியண்ணா மூணு
மாதமொருமுறை ,மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் போது
தான் வருவார்.

அண்ணாவின் பதிலுக்காக நாளும் பொழுதும் பார்த்து கொண்டு இருந்தாள். அடுத்த வகுப்பு க்கு அக்கிராமத்தில் வசதி குறைவு என்பதால் யாழ்பாணத்தில் இருந்து ப்டிக்க, ஒழுங்கு களை பெற்றவர் ஆயத்த படுத்திக்கொண்டு இருந்தனர் மூன்று வாரங்களால் ,பெரியண்ணாவின் கடிதம் அவள் பெயருக்கு ,
திருத்தி திருப்பி அனுப்பப்பட்டது . ஆங்கில எழுத்துகளை சுற்றி சிவப்பு வட்டங்களுடன்....... " கடிதம் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும் " .....

இறுதியில் அடுத்த வாரம் போயா விடுமுறையுடன் ,ஊருக்கு வருவதாகவும் ,
மீதி நேரில் என்று . அந்த கடிதம் அவளுக்கு சம்மட்டி போன்று இருந்தது.
பரிசை எதிபார்த்து , சந்தோஷத்தில் துள்ளி குதித்த அந்த சிட்டின் மனம்
நொந்து விட்டது ஏமாற்றத்தால் . அந்த சொற்கள் (...Distintion, Credit, Bus, traveling,tuition fees ,......)போன்றவை . அவள் மனம் .....இவர் "பெரிய "....
சட்டம்பியார் போல ...என்று திட்டி கொண்டது .

அந்த நாளும் வந்தது , மாலைபொழுது இருளாகிய நேரம் வந்தார் பெரியண்ணா. வீடுக்கதைகள் ,பேசியபின் ,சாதனாசிட்டு ,பெரியண்ண வுடன் ,கோபமாகவே இருந்தது. மறுநாள் காலை ,அவள் ப்டிக்கும் மேசையில் , ஒரு நூறு ரூபா நோட்டு (தாள்) காற்றில் பறக்காமல் புத்தகத்தின் கீழ் இருந்தது. பிரபலமான கண்டோஸ் சொகோலேட் உடன் . .அண்ணா மீண்டும் பெரியபட்டண்ணம் சென்று விட்டார் .

நம்ம கதாநாயகி ,உயர் தரம் முடித்து ,கோப்பாய் பயிற்சி கூடம் முடித்து காலப்போக்கில் சர்வகாசாலையில் தமிழ் விரிவுரையாளர் ஆகினார் . .
சில வருடங்கள் உருண்டோடின ,பெரிய அண்ணாவும் குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் . சாதனாவும் இயற்கை சக்கரத்தில் சுழன்று , தாயாகி தொடர்ந்தும் வேலையில் இருந்தாள் .

வரலாறு மீண்டும் எழுதப்படும் என்பது போல , பெரிய அண்ணாவின் மகனும் பல்கலை கழகம் வந்தான் , ஒரு நாள் அவனது குறிப்புகள் திருத்தும் போது அவனின் புத்தகத்தில் பிழைகளை சுற்றி வட்டம் போடும் போது ,எங்கோ சென்றுவிட்ட , பழைய நினைவுகள் ,மீட்ட பட , நொந்த அவள் இதயத்தில்
இருந்து கண்ணீர் துளிகளாய் .... இரண்டு சொட்டுகள் அவன் புத்தகத்தில் விழுந்தன . அவளது திருப்பி அனுப்ப பட்ட கடிதம் நன்றாக மனத்தை பாதித்து இருந்தது . . .

(அண்ணா சட்டம்பியாராக இல்லாமல் , பாசத்துடன் சொல்லி திருத்தி இருக்கலாம் தானே .அன்று மனம் நோகாதிருந்தால் .......இன்று நான் எழுதியிருக்க மாட்டேன் )

யார் சொன்னது இது கற்பனை .............என்று

Tuesday, August 25, 2009

தெளிவு பிறந்தது .............

தெளிவு பிறந்தது .................

அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடுமையால் தாயின் அருகாமையயை விட்டு விலகவே இல்லை . பள்ளி விடுமுறை வேறு . எங்காவது கூடி போங்கள் என்று சாருமதி கேட்டு இருந்தாள். மாதக் கடைசி விடுப்பு எடுக்க முடியாது அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

அலுவலகத்தில் டைபிஸ்டு இந்திரா , சற்று ஒரு மாதிரியானவள் என்று கேள்வி பட்டு இருந்தான் . ஆனால் அவனுடன் எந்த விதமான் , செயல்களுக்கும் இடம் கொடுபவளாக் காட்டிக் கொடுக்க வில்லை. . ராகவன் தன் தேநீர் இடைவேளை முடிந்து , மீண்டும் தன் இருக்கையை அடைந்தான். எதோ சந்தேகம் கேட்க வந்தவள் , சார் இன்று , ஏதும் சுகவீனமா ? ஏதும் பிரசினியா ? வீடுக்கு போகும் போது நம்ம வீடு பக்கம் வந்து போங்க சார் என்று ........சூசகமாக சொன்னாள்.

ராகவன் மனம் கிடந்து அல்லாடியது. இரவு மனைவியின் அணைப்பு கிடைக்க வில்லை எதோ ஒன்றுக்காக மனம் ஏங்கியது. அவனது வாழ்வில் என்றுமே அப்படியான இடங்களுக்கு போனதில்லை. வாலிபத்திலும் சரி இப்போதும் சரி , "அப்படியான " கதைகளை நண்பர்களுடன் பேசி கொள்ளவதுடன் சரி . அந்த இடத்திலே அந்த நினைப்பை விட்டு விடுவான். இன்று ஏனோ ஒரு தடுமாற்றம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் என்று ..... என்று மனம், அமைதி அடைய வில்லை.

எதோ ஒரு தவிப்பு ........ஒரு தடவை போய் தான் பார்ப்போமே....என்று மனம் ஏங்க , வேலை முடிந்ததும் தன் வாகனத்தை ,அவள் வீடு நோக்கி ஓட்டினான். வீட்டை அண்மித்தும் சற்று தூரத்தில் நிறுத்தினான். கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான். களவு மாங்காய் ருசிக்கும் என்பார்கள். அவள் வீட்டை அண்மித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். அழைப்ப்பு மணியை , அழுத்த கையை உயர்த்தியவன் , வாயிலில் இருக்கும் ஆண்களின் காலணிகளை பார்த்தும் திடுக்கிட்டான். யாரோ உள்ளிருக்கிறார்கள். சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு . விறு விறு என்று , தன் காரை நோக்கி நடந்தான். வேகமாக் வீடு நோக்கி சென்றான். வீட்டை அடைந்ததும் , சாருமதி , ஏனுங்க இவ்வளவு லேட்டு , மாதுளனை டாக்டரிடம் அழைத்து போனேன் , மாத்திரைகள் தந்தார், நன்றாக் வேர்த்து காய்ச்சல் , குறைந்து விட்டது. சமர்த்தாக் தூங்குகிறான் என்றாள்.

குளித்து இரவு உணவை முடித்தவன் .........சற்று நேர தொலைக்காட்சி பார்த்தவன், நித்திரைக்கு சென்றான். சமையலறை வேலை முடித்து வந்தவள் , மாதுளனுக்கு இரவு மருந்தை புகட்டி விட்டு , நன்றாக் போர்வையை இழுத்தி போர்த்து விட்டு , படுக்க சென்றாள். ராகவன சலனமற்று காத்திருந்தான். என்னங்க தூங்கிடீங்க்களா? நேற்று மாதுளனுக்கு ,முடியலைங்க , அது தான் அவனுடன் படுக்க வேண்டியதாயிற்று என்றாள். . அடியே என் ராசாத்தி கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும். ஒரு சின்ன் அஜச்த்மேண்டு (adjustment )...இது கூடவா முடியாது ? என்று அவளை இறுக அணைத்தான். விடிந்ததும் நல்ல பொழுதாக் விடிந்தது , . வேலைக்கு போகும் வழியில் அட சீ .....இப்படி ஒரு , சபலமா ? அநியாயமாக் ஒரு சாக்கடையில் விழ இருந்தேன். ஜென்மம் முழுது ம ஒரு கறையை தேட இருந்தேன். அப்படி போய் இருந்தால் மனம் அமைதியடையுமா? சாருவுடன் , இணயும் போது குற்ற உணர்வால் அல்லவா கூனி குறுகி இருப்பேன். என் சாருவுக்கு துரோகம் செய்ய இருந்தேனே. கடவுளே என்னை மன்னித்து விடு ...........இனி மேலும் தடுமாற விடாதே என்று மனதுள் கும்பிடான். அலுவலகம் சென்றவன், அமைதியாக தன் வேலையில் ஈடு படான். டைபிச்டுவை கூபிட்டு ..........தான் ஒரு வாரம் குடும்பத்துடன் விடுமுறை செல்வதாகவும் அந்த வாரதுக்கான் வேலையை குறிபெடுக்க் வரச் சொல்ல அழைப்புமணியை யை அழுத்தினான்.

மறு நாள் ராகவன் சாரு , குழந்தைகள் மாதுளன் , மனோஜனுடன் விடுமுறை விடுதி ..........நோக்கி பயணமாயினர்.

குறிப்பு .....நான் இப்படி யான கதை எழுவது இது தான் முதல் தடவை .
குறை நிறை சொல்லுங்க.

Monday, August 24, 2009

பருவத்தே செய்யும் பயிர் ............

பருவத்தே செய்யும் பயிர் ..............

அன்று ஞாயிறுமாலை, ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .
எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது. கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவஅட்டகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை எல்லாம் பணமாகி ,அவன்
லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை
கொஞ்சம் தணித்து மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,
மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் .

சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்திரத்தை மீட்க பணம் அனுப்பும் படி கடிதம் வந்தது . இவ்வாறு அவன் அனுப்பும் செலவை மீத படுத்த மூன்று மாத காசை ஒரே தடவையில் அனுப்பினான் .காசை எப்படி உழைத்தான் என்பது வேறுகதை ,படிப்பில் ஆர்வமுள்ள அவன கஷ்டத்தின் மத்தியிலும் படித்தான் , இரவில் வேலையும் , பகலில் படிப்பும் ,ஆகி ,நித்திரை குறைய
உடல் சோர தொடங்கியது ,இதற்கிடையில் கெளசலா வின் கலியாணம் நடந்து முடிந்தது , தம்பியின் காசில் கோலாகலமாக் கலியாணம் . மாறிய கடன் கட்ட இரண்டாவது வேலை தொடங்கினான் . காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடியது

தகப்பனும் இளைப்பாறி ,தாயக கெடுபிடியால் அவர்கள் மருமகனின் துணையுடன் கொழும்புக்கு இடம் மாறினார்கள். அதற்கும் ஒரு பெரிய தொகை நண்பர்களிடமும் ,முதலாளியிடமும் உருட்டி பிரட்டி அனுப்பி வைத்தான் , காலம் தன் கடமையை செய்ய அவனும் முப்பது வயதானான் . தந்தையின் ஓய்வு ஊதியப் பணம் போதாது என்றும் மாதம் மாதம் அனுப்பும் படியும் கடிதம் மேல் கடிதம் வரும் சிலசமயம் மேசையில் உள்ள கடிதம் திறக்க படாமலே இருக்கும் கெள சலாவும் இரு பெண் குழந்தைகளுக்கு தாயாகி ,வாழும் காலத்தில் , ஆதவனை பற்றி , அவன் உணர்வுகளை பற்றி சிறிதும் எண்ணவில்லை ,தந்தையாரும் காலமானார் .

பதின் மூன்று வருடங்காளாகின.... ஒரு நாள் அதிகாலை , டெலிபோன் (தொல்லை பேசி ) சிணுங்கியது ,உடன் தங்களுக்கு அழைக்கும் படி .... சேதி இது தான் ............ அக்கா மகள் பெரியவளாகி விடாள் . ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று , நான் என்ன காசு காய்க்கும் மரமா ? கோடியில் வெட்டி அள்ளியா காசு வரும் . எதோ கடமைக்காக அனுப்பி வைத்தான். மறு மாத மடலில் அவனது ,முகம் தெரியா மருமகளின்
வித விதமான் போட்டோக்கள் (நிழல்படம் ) அன்றைய தபாலில் வந்திருந்தன . இன்னும் காலம் கடமையை செய்யா ,அவன் வந்து பதினாறு வருடங்கள்
ஆயின . வயதும் முப்பதியாறானது . இப்போதெலாம் சாராசரி வாழ்கை காலம் அறுபது என்பார்கள் .அதில் முப்பத்தி ஐந்தில் மாரடைப்பு வருவது ,விதி விலக்கு வாழ்கையின் மூன்றில் இரண்டு பகுதியை , இழந்து விட்டான் .அக்காவோ அம்மாவோ அவனை பற்றி சிந்திபதாயில்லை . உறவினர் கேட்டாலும் ,
கடன் பிரச்சனை என்று சமாளித்து விடுவான் .

காலம் கரைந்து கொண்டேயிருந்தது . கடற்கரை இருள் சூழ்ந்து கொண்டது .
தாயக சேதிகளை கேட்கும் அவன், மீண்டும் தாயகத்தில் , தனது அயல வீட்டு நண்பனை ....,இரண்டு மாதங்களுக்கு முன் மாவீரனான கேசவனை, நினைத்து கொண்டது .அவர்களின் குடும்பம் தற்போது வவனியாவில் .இருந்தனர்.

தன்வீடு நோக்கி செல்லும் அவனின் எண்ணத்தில் ,கேசவனின் அக்காவையும் குடும்பத்தினரையும் , இந்தியாவுக்கு வரும்படி தொலை பேசியில் அழைத்து சொல்லவேண்டும் ........,கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் .

காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக ......................