சிற்ப்பிகள் இருவர்
வரைந்த சித்திரம்
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு
மழலைகள் கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா
தரையை சுத்தஞ் செய்வதா
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா
குறுஞ்செய்தியில் போடவா
குஞ்சுகளை என்ன செய்வேன் .....
..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.
Followers
Thursday, November 4, 2010
Wednesday, November 3, 2010
Tuesday, November 2, 2010
அம்மா உன் அன்பு உள்ளவரை
அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை
உணவும் தேவையில்லை
தனித்த் போது ஒரு சிணுங்கலில்
தாவி ஓடி அணைத்திடுவாய்
அள்ளி முத்தம் தந்திடுவாய்
அம்மா மடி மீதும் நான் மட்டும் அரசாட்சி
கண்ணுறங்க கதை சொல் வாய்
அப்பாவை எனக்கு
அறிமுகம செய்தவளே
தப்புக்கள் நான் செய்தால்
தட்டிக் கேட்பவளே
பகட்டான பட்டுச்சட்டை
கலர் கலராய் காலுறை
மெத்தென்ற சப்பாத்தும்
கை காது கழுத்துக்கும்
நகையணிபூட்டி
அழகு பார்த்தவளே
பள்ளிக்கு சென்று நானும்
பாடங்கள் பல படித்து
பரீட்சையில் சித்தி பெற்று
பட்டங்கள் பல பெற்று
பாங்காய் ஒரு பணியிடத்தில்
பல்லாயிரம் பணம் பெற்று
பக்குவமாய் வீடு கட்டி
பல பேரும் பார்த்து நிற்க
பாரினிலே தலை நிமிர்ந்து
"பாருடா என் பிள்ளயை "என்று
மார் தட்டி புகழ் வைப்பேன்.
கலங்காதே என் தாயே ......
காலம் .....ஒரு காலம் வரும் ..
கனவில்லை இது நிஜம்
Subscribe to:
Comments (Atom)
-
ஒரு கிராமத்திலே சிறந்த கல்விமான் இருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவரை பேச அழைப்பது வழக்கம் .இப்படியாக ஒரு நாள் மாலை ஒரு கூட்ட்துக்க...
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...