நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Thursday, July 23, 2009

மனங்களிலே பல ....நிறம் ..கண்டேன்

மனங்களிலே பல ...நிறம் ..கண்டேன்

உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம்
தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து
உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம்
முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம்.

அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ...
விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் .
மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் ,
நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் .

புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து
ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு ....
இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம்
அது கண்ணீரில் நீராடி கரையாமல் காப்பது ஒரு மனது .

போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

பூவே........... பூச் சூட வா

பூவே..... பூச் சூட வா ...

மலர்களிலே பல நிறம் கண்டேன்
மாலையாகும் திறன் கண்டேன்
பூஜைக்கு போகும் சில ,கண்டேன்
மலர் வளையமாகும் சில கண்டேன்

த்ண்ணீரில் மிதக்கும் சில கண்டேன்
மாடியில் வாடும் சில கண்டேன்
மாலையில் மலரும் சில கண்டேன்
காலையில் மலரும் பல கண்டேன்


நிறம் உள்ளவை பல கண்டேன் ,
முட்களின் நடுவே சில கண்டேன்
நறு மணம் உள்ளவை பல கண்டேன்
பால்போன்ற வெண்மையும் கண்டேன்

வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை .
மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி
கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும்
மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும்.

மலர்களிலே இத்தனை வகை என்றால்
மனிதமலர் கள் எத்தனை வகை ?....
மலர்கள் பல வகை மலர்ந்து சிரிக்கிறது
மனிதனும் பலவகை மலர்ந்து அழுகிறது...

.இன்பம் எங்கே .....இன்பம் எங்கே.....

இன்பம் எங்கே.....இன்பம் எங்கே

மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம்
சிறுமிக்கு பொம்மை மீது இன்பம்
மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம்
பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம்

மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும்
பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம்
கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின்
(******** ) விரும்பியதை போட்டு வாசிக்க

தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம்
தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம்
பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம்
வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம்

தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம்
களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம்
மனிதருக்கு இன்பத்தை தேடி தொலைக்கும் வாழ்வு
பாடையில் போனபின் நித்திய இன்பம்

Wednesday, July 22, 2009

சின்ன சின்ன ......ஆசை

சின்ன சின்ன ......ஆசை

வானத்து நிலவை பிடித்துவிட ஆசை
பஞ்சு முகில் மீது சவாரி செய்ய ஆசை
பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை
மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை
வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை
அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை

முற்றத்து மண்ணில் விளையாட ஆசை
துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை
சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை
நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை

படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை
பனைமர நுங்கும் ,பழமும் தின்ன ஆசை
மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை
முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ....

பாடி திரிந்த் பறவைகள் ......

பாடி திரிந்த் பறவைகள் .......


அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் .
வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (get together )நடத்துவார்கள் .அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள். அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள்,ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிவதில்லை .உங்களுக்கும்  விளங்கும் தானே .

அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை ( parcel passing ) போது அதில் எழுதி
இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெண்ணுடனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம்வரவும் .எல்லோரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

அவள் எழுந்து அதிபரின் (ஆண் ) கை பிடித்து உலா வந்தாள் ...புத்திசாலி ....60 வயது அதிபருக்கு இனம் புரியாதா சந்தோசம் ...பக்கத்தில் அவர் மனைவி ...ஆச்சரியத்துடன் ...என்று பார்த்தார் . சக வயதினரை சேர்த்து நடந்தால் மறுநாள் ஊரில் தலை காட்ட முடியுமா?....அப்படி .. ஒரு நிகழ்ச்சி....

அது ஒரு பாடி பறந்த ... பருவம் . இது ஒரு பசுமை நிறைந்த நினைவு ...

......நன்றியுடன் நிலாமதி

Monday, July 20, 2009

சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து

சிட்டுகுருவி. ..முத்தம் கொடுத்து ....

மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில்
அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன
மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ...
ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது .
கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல
..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து
..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது.
நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ...........

மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்தம் கேட்டு சென்று விட்டன்.என் வேலையில் மும்முரமாக இருந்ததில் மறந்து விட்டேன் ஒரு வாரம் சென்று விட்டது
ஒரு நாள் குருவி நினைவு வர ...ஒரு ஏணி வைத்து எட்டி பார்த்தேன் சின்னஞ்சிறு ... மூன்று முட்டைகள் இருந்தன ..
எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை சுற்றும் முற்றும் பார்த்து கையில் எடுத்து பார்த்து
விட்டு வைத்து விட்டேன் ...

ஆண் குருவி கண்டால் அவ்வளவு தான் கொத்தி.... குட்டி விடும் ... ...சில வாரங்கள் சென்று விட்டன.நானும் எனது வேலையில் ....ஒரு நாள் மரத்தை பார்த்த பொது கீச் ...கீச் என்ற சத்தம் ..
தாய் குருவி குஞ்சு களுக்கு உணவு கொடுத்து கொண்டு இருந்தது ...எவ்வளவு இனிமையான வாழ்கை ...
..ஆண் பெண் குருவிகளிடியே.. உள்ள பாசம் ...ஒற்றுமை ...இரண்டும் சேர்ந்து பராமரிப்பு .

இப்படி மனிதர்கள் வாழ்கிறார்களா/.....

சிட்டு குருவி முத்தம்கொடுத்து... சேர்ந்திடக் கண்டேனே .

செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே ...

மொட்டு விரிந்த மலர்களிலே வண்டு மோதிடக் கண்டேனே ....