கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது தொலைபேசியில் அழைத்து பேசுவான். தான் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மிக மிக அவசரமென்றால் மட்டும் அவளை அவனுக்கு அழைக்க சொல்வான். மற்றும் படி அவனே அழைத்துபேசுவான்.
Followers
Thursday, October 7, 2010
Subscribe to:
Posts (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...