நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Monday, August 22, 2011

அவளுக்காக வாழ வேண்டும்.காலம் வெகு  வேகமாக் ஓடிவிட்டது போல்  இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன்  தாய்  நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும்  செல்ல் பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன்.   நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை  அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார்.  தாயார்  வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர்.  .தாயார் ஆண்பிள்ளை என்று  அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்டியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம் வெளி வேளைகளில் உதவி செய்வான். அவனும் உயர் கல்வி முடித்தும் மேற மேற் படிப்புக்காக செல்ல காத்திருந்தான் . அப்போது  தான்  தாயகத்தில் போரின் ஆரம்ப காலம் . இயக்கங்களுக்கு ஆட  சேர்ப்பு செய்துகொண்டு இருந்தார்கள். குடும்ப் உறவுகள் அவனை விடத் தயாராக் இல்லை. வெளி நாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையம் மூலம் அவன் நாட்டை விட்டு வெளியேறி  னான்.  காலம் தன் பாட்டுக்கு   ஓடிக் கொண்டே சென்றது. ஐரோப்பிய நாடோன்றுக்கு சென்றவன் அந்நாடடு பாஷை  படிக்க வேண்டிய  நிர்பந்தம்  பாஷை படிப்பதும் பகுதி நேர வேலை செய்வதுமாய் ...இருந்தான். அந்நிலையில் மூத்த சகோதரிக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலை. இவன் வருவதற்காய் அடைமானம் வைத்த வீடு சீராக்  கொடுக்க வேண்டி இருந்தது. உழைத்த் காசெல்லாம் ..அனுப்பி அவள் காரியம் முடித்தான்.