Followers
Thursday, November 11, 2010
மாலதி டீச்சர் ............
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது. அம்மா அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு விடைபெற ஆரம்பித்தார்.
Monday, November 8, 2010
விடிவு பிறக்கும்.
ப ரந்த வெளியிலே
ஒற்றை மரமாய்
தனித்து நின்றாலும்
இரைதேடும் பட்சிகளுக்கு
தங்குமிடமாகிறது
மேற்கே மறையும் சூரியனும்
தெளிந்த நீரோடையும்
மெல்லென் தழுவிச்
செல்லும் காற்றும்
நீரிலே தோன்றும்
சூரிய ஒளியும்
இரவை நோக்கி
நகர்ந்து சென்று
விடிவு என்னும் உதயம்
உனக்கும் எனக்குமாய்
ஆழ்ந்த நம்பிக்கையோடு
நிச்சயம் பிறக்கும்
Subscribe to:
Posts (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...