தாயொருத்தி பெற்று விட்டாள் தலை மகனாக ..
துள்ளித் திரிந்து பள்ளிப்படிப்பும் முடித்து .
கெட்டும் பட்டணம் போ என ஆன்றோர் வாக்கு
சிரமேற்கொண்டு தொழில் தேடித் புறப்பட்டான்
ஓரளவு இருபாஷைகளின் அறிவு இருந்ததலால்
தொழில் துறையும் கிடைத்தது. காலங்கள் கடந்து போக ..
வாலைப்பருவமதில் வகையாக் வாழ்வதற்கே
மங்கை நல்லாள் வளைக் கரம் பிடித்தான் .
வஞ்சகமின்றி வாழ்கையில் நான்கு கண்மணிகளை
வகைக்கு இரண்டாக் . நலமுடன் பெற்றான்
மங்கை நல்லாள் வளமுடனே வாழ்கையில்
பணியிட மாற்றம் பெற்று தொலை தூரம் போக
இட்டனர் கட்டளை ,வகை தெரியாது கலங்கிய தலைவன்.
கொண்ட பணி சிரமேற் கொண்டு .இடம் மாறிச் சென்று
பணி புரியும் காலத்தில் வஞ்சகர் சேர்க்கையால்
பணியிடம் பதவி ..பறி போயிற்று ..
வாழ்வுக்கு வகையின்றி தள்ளாட
வாழ்க்கை பெரும் பாறாங்கல்லாயிற்று
மங்கை நல்லாள் காணி பூமி நகை நட்டு கடன் பட்டு ...
வெளி நாடு அனுப்பி வைத்தாள். திரவியம் தேட
புறப்பட்ட கப்பல் சூறாவளிக்குட்பட்டு ..திசை மாறி போனது..
சிலர் மாண்டனர் பலர் உயிர் கண்டனர்.
புகலிடம் பெற்றனர் வெள்ளைக் கார நாட்டிலே
அகதி அந்தஸ்தும் சிலருக்கு கிடைத்தது
பாவி இவன் வாழ்வு .பல் கேள்வி பதில் சொல்லி
பலனேதும்ற்று புகலிடக் கோரிக்கை புறக்கணித்தாயிற்று
பணிபுரிய முடியவில்லை திரும்பி போக மனமில்லை .
மங்கை நல்லாளும் மணியான் குழந்தைகள் நான்கும்
கடன் சுமையால் இருந்த வீடும் ஏலம் போனது.
வாடகை குடியிருப்பில் வாடினாள் பெண்ணவள்.
உற்றாரும் சக் உறவும் எது வ்ரை உதவுவார்
கொண்டவன் கோலமும அலங்கோலமாய் ஆனது .
குடியும் மன நிலையும் குழம்பியது இறுதியில்
சித்தம் கலங்கி தஞ்சமானான் மருத்துவ மனை .
.வழியேதும் இன்றி வாடுகிறான். தனிமையில்
தனிமை ஒருபுறம் பிரிவு மறு புறம் ...
மாறுமா வாழ்க்கை வராதா ஒரு வாழ்வு ............
குறிப்பு ": புலம் பெயர்ந்த் ஒரு ஈழத்தவனின் வாழ்வு....(கேட்ட கதை )
.கதையா ?கவிதையா...?...நீங்கள் தான் சொல்லணும். ...
Followers
Saturday, July 24, 2010
Wednesday, July 21, 2010
எனக்குமொரு சைக்கிள் வண்டி ...........
சென்ற வார இறுதியில் ...என் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அவர்களுக்கு ஆறு வயதில் ஒருசிறுவனும் ..எழு மாதத்தில் பெண் குழந்தையுமாக் நால்வரும் வாழ்கிறார்கள். தந்தை மனோகரன் .. குழந்தைகளில் மிகவும்நேசம் மிக்கவர். என்ன குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொள்வார். தாயார் சற்று கண்டிப்பானவர். ஏதும் தப்பு செய்தால் ஒரு மூலையில் இருத்தி விடுவார். அவ்வபோது அகப்பை காம்பு ..காட்டப் படும் ஆனால் அடிக்க மாட்டார். அமைதியாக் இருக்க தண்டனை கொடுப்பார். இப்போது கோடை காலம் ..தந்தை வேலை முடிந்து வீடு வந்ததும்..வெளியில் பார்க்கில் உலாவ செல்வார்கள்.( என் செல்லம்) மாதுளனுக்கு..( எனக்கு குழந்தைகள் கொள்ளை ஆசை.. நானும் குழந்தையாக மாறி விடுவேன் ) மற்றும் சிறுவர்களை போல சைக்கிள் ஓட்ட விருப்பம் . ஒரு சில தடவை தனக்கும் வாங்கி தரும்படி கேட்டு இருக்கிறான். பார்க்கலாம் என தந்தை சொல்லியிருகிறார்.
நாங்கள் சென்ற போது மாதுளன் மாடி அறையில் தொலைக் காட்சியில்
மும்முரமாக இருந்தவர் .... கவனிக்க் வில்லை போலும். பார்த்துக்கொண்டிருந்தவன், நாங்கள் தேநீர் அருந்தி ...விடைபெற சற்று முன் ஓடிவந்து என் கை பிடித்து அழைத்து சென்றான் அவர்கள் கார் தரிப்பிடத்துக்கு ( garage ) வாங்கோ அன்ரி வாங்கோ .....உங்களுக்கு ஒன்று காட்ட வேண்டும்( I want டு ஷோ யு something ) என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து ..சம்பாஷனை போகிறது. அங்கு சென்று .. பார்த்தபோது அவருக்கு ஒரு சிறிய சைக்கிள் வண்டி ..(.training wheel ) உதவிச் சக்கரத்துடன் வாங்கி வந்திருக்கிறார் தந்தை. காலப்போக்கில் அவன் நன்றாக பழகிய பின் அதைக் கழற்றி விடலாம். தான் பழகிய் பின் தன் தங்கையையும் ஏற்றிச் செல்வானாம் ....அவனது எண்ணங்கள கற்பனை உலகில் கொடிகட்டி பறக்கிறது ..."எனக்கு அப்பா வாங்கி தந்தது. நாங்கள் பார்க்கில் ஓடிப் பழக போகிறோம்." அந்த பிஞ்சு மனத்தில் பெருகிய உற்சாகத்துக்கு அளவே இல்லை.
இளவயது ஞாபகம் என்றும் நெஞ்சில் நிறைந்து அழியாத கோலங் களாக இருக்கும். என் அப்பா .... வாங்கியது ..என் அம்மா தந்தது ... என்று பள்ளியிலும் பெருமையாக் சொல்லிக்கொள்வார்கள். அவனுக்கு வரும் ஐந்தாம் திகதி பிறந்த நாள் வருகிறது ..இப்போதே பரிசு வாங்கியாகி விட்டது. மிகவும் அன்பானவர்கள் கொடுக்கும் பரிசு ..பெறுமதி இல்லாதது . என் சின்ன வயதில் என் மாமா வாங்கித்தந்த அழகான் எல்லா வண்ணங்களும் உள்ள குடை என் கண் முன் நிழலாக் விரிந்தது ....குழந்தையின் மகிழ்ச்சியை அசை போட்ட் வண்ணம் வீடு வந்து சேர்ந்தேன்.
Subscribe to:
Posts (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&feature=player_embedded சிரிப்.... பூ ......சிரிக்கலாம் வாங்க. .ஹா ஹா ஹா சிரிக்க கூடிய ...
-
அஸ்தமனத்தில் ஓர் உதயம் ............. அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்க...