நன்றி உங்கள் வரவுக்கு

என் தளத்துக்கு வருகைதந்த உங்களுக்கு நன்றி

Wednesday, November 4, 2009

நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற வாழ்வும்.........

கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை .........
மழைக்கால ஆரம்பம் ,மண்   மீது தூறல்கள்
ஒவ்வொரு இதயத்திலும்  இனம் தெரியாத சோகங்கள்.
மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது
ஈழத்து மக்களின் , வீர வேங்கை களின் நினைவுகளும்
பிறந்த தினமும் ஒரு சேர  மகிழ் வுற்றா ஒரு பொழுதும்
மண் ண்ணில் விதைத்த  மா வீரருக்காய் ,
என்  இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி.

எத்தனை  எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ...
கார்த்திகை தோறும்  கல்லறைத் தீபங்கள்.
மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள்
இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே
சிந்திய  குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே ....
சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு
மண்ணுக்காய் மரணித்த  மக்களிற்கு நித்திய  சாந்தி கொடு ........

 ஐயோ என்ற அவலைககுரலை ஐ நாவும் கேட்கவில்லை
ஆறுதலும் தரவில்லை , அயவலன் கூட அடக்க ஆள் அணி
கொடுத்தானே ஒழிய யாருமே ஏனென்று கேட்கவில்லை ..
எங்களை வைத்து அரசியலா? அனாதையாய்  போனதா தமிழ் இனம்.
நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற  வாழ்வும்
சமூக சீரழிவும் , அகதி வாழ்வும் தான் எஞ்சியதோ ?
மீளுமா தமிழ் இனம் , தளிர்க்குமா எம் இனம்?


வாழ நினைத்தால் .வாழலாம்

வாழ நினைத்தால் .வாழலாம்

.வாழ்க்கை ....(..வா +..வாழ் .+..வாகை ...)

வாழ்க்கை  ........என்ற சொல்லை நினைக்கும் போது முதலில் வா என்கிறது .பின் வாழ் ....என்கிறது.அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது.என்ன அழகான தத்துவமுத்துக்கள்.அவனும் வாழ தான் நினைத்தான்.

ராகவனுக்கு வயது நாற்பது ,வைத்திய சாலைக்கு   உரியஅந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான்,அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும்.இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்துசம் பவதுக்காக் அவனைஅனுமதித்து இருந்தார்கள் .அவனது மறைப்பு போடப்பட்டு இருந்த தாலும்,அதிக நேரம் அவன்தூங்கியதாலும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை . நாளை காலையில் விசாரிக்கலாம்என்று இருந்து விட்டான்,ராகவன்.

சில மாதங்களாக அவனது வலது முழங்கால் மிகவும் வலி கொடுத்ததால் வைத்தியரிடம் போய்வருவதே அவன் முதல் வேலையாக இருந்தது. இறுதியாக எதற்கும் குணமாகாமல் ஒரு சத்திரசிகிச்சை செய்ய வேணும் என்று டாக்டர் சொல்லியிருந்த தால்  இன்று அவன் வைத்திய  சாலைக்கட்டிலில் ..நாளை மறு நாள் சத்திர சிகிச்சை . அவன் வாழ்கையே வெறுத்த ஒரு நிலைக்குபோய் இருந்தான். காரணம் அவனுக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. புண் ஆறுமா ,தொற்றினால் (infection) அவதி பட வேண்டுமா என்று எண்ணிய படியே நித்திரையாகி விட்டான்.

மறு நாள் விடிந்தது .மனைவி மாலா பழங்களும் .மாற்று துணி களும் கொண்டுவந்து வைத்து விட்டு போயிருக்கிறாள்.தாதி மார் வந்து அன்றாட கடமைகளைசெய்து விட்டுபோயிருந்தனர் .அயலில் உள்ள கட்டிலில் பேச்சு குரல் கேட்கவே அவன் அவனது உதவி ஆள் மூலம் அறிந்ததில் இருந்து ....பக்கத்துக் கட்டில் .நோயாளி இருபதுவயதானவன் என்றும் விபத்தினால் இடது முழங்க்காலோடு அகற்ற பட வேண்டும் என்றும்அறிந்து கொண்டான்.

அப்போது தான் அவன் நினைத்தான் நான் நாற்பது வயது வரை வாழ்ந்துவிட்டேன்இவன் இன்னும் வாழ்கையின் இன்பங்களை காணாத வயது.... இவனை யார் மணமுடிப்பர்கள் ?கால் இழந்த ஒருவனை ?  வாழ்வின் இன்பங்களை இளமையின் சந்தோஷங்களை , இழந்து விட போகிறான் என்று.பலவாறாக சிந்தைகளை ஒடவிடான்.  எனக்கோ காலில் சத்திர சிகிச்சைஅவனுக்கோ.... இடது காலையே   எடுக்க போகிறார்கள். இறைவா என்ன சோதனை ...

கடவுள் தந்த அழகிய வாழ்வை , வாழ எவ்வளவு எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. அப்போது வான் அலையில்ஒலிக்கிறது .......

வாழ நினைத்தால் வாழலாம் ..
.வழியா இல்லை பூமியில் ..
ஆழக் கடலும்சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி ....வா.........