Followers

Wednesday, September 2, 2009

ஈன்ற பொழுதில் .............

ஈன்ற பொழுதில் .............

       அன்று மாலை ராகவனும் மனைவி சாரதாவும் குட்டி பாப்பா , அனு என்கிற அனுஷ்காவும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு பிறந்த நாள் விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். இங்கு அனுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ராகவனுக்கு முதல் பெண் குழந்தை...அவன் அம்மாவுக்கு முதல் பெற்றது  பெண்ணாக இருந்ததில் சற்று வருத்தம் தான் . இருபினும் ராகவனுக்கு அதிலெல்லாம் , கவலையில்லை . வேலை முடிந்து வரும் அப்பாவை  காண  ஓடோடி வருவாள். காலில் சொக்ஸ் ( காலுறை) கழற்றுவது , அம்மாவின்  தேநீரை அவன் பருகி இடயில் ஒரு மிடறு பங்கு போட்டு கொள்வது என்று அவன் உலகமே அவள் தான் . நல்ல குறுகுறுப்பான பெண் குழந்தை . வேலையில் சற்று தாமதமானாலும் , அவள் இரவு படுக்கும் நேரமானாலும் தந்தையின் மோட்டார்  பைக் சத்தம் கேட்டால் துள்ளி ஓடி வாசலுக்கு வந்து விடுவாள் "அனுக்குட்டி "என்று அவன் அழைத்தால் அவன் வேலை களையெலாம் பறந்து விடும் ..

பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . நான்கு வயது எட்ட இன்னும் சில மாதங்கலே இருந்ததன . பாடசாலயில் சொல்லிக்கொடுக்கும் சிறு பாட்டுக்களை அம்மா தூங்க வைக்கும் போது பாடிக்காட்டுவாள். அவர்கள் தாயாராகி விடவும் , அவர்களை அழைத்து செல் வாடகை வண்டி , வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அங்கு சென்றதும் அனுஷ்காவுக்கு ஒரே கொண்டாடம் . சோடனைகள்... அவளை போலவே அம்மா அப்பாவுடன் குழந்தைகள். அன்று பிறந்தா நாள் கொண்டாட இருப்பவர் ஒரு பாட்டி தன எழுபதியிந்தாவது பிறந்த நாள். அவருக்கு விருப்பம் இல்லாமலே   பேரார்களால் ஆயத்தம் செய்ய பட்டது. சிற்றுண்டி பரிமாறபட்டது .சிந்தாமல் அழகாக்  சாப்பிட்டாள். ராகவன் விருந்தின் போது மருந்தாக் சில குடிவகை எடுப்பார். அதனால் தான் அவர்கள் வாடகை வண்டியில் வந்தனர்.மாயா ஜால வித்தைக்காரன் , வித்தை காடினான். கை கொட்டி ரசித்தாள்.  சங்கீத கதிரை போன்ற  , போட்டி விளையாட்டுக்களும் இருந்தன . பாட்டிக்கு கொள்ளை சந்தோசம். இறுதியாக இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு சிறு போட்டி .........சிறுவர்கள் பாட்டுப்பாடி மகிழ்விக்க வேண்டும்.  சிலர் பிகு பண்ணினார். சிலர் வெட்க பட்டனர். சிலரை இழுத்து வந்து பாட வைத்தனர். அவர் அமைந்துள்ள வரிசையில் ,  அனுஷ்காவின்  முறை வந்தது. தாய் சாரதா .........அவளை பாடிக்காட்டும்படி , கேட்க , கம்பீரமாக் எழுந்து சென்றாள்.  .எல்லோரும் அனுக்குட்டியை பார்த்து கைதட்டினார்கள்.  பாடினாள்.........

அப்பா வை  போல இவ்வுலகில்
 யாரோ உள்ளார் அன்புடையார் ...
காலும் கையும் சோராமல்
கருத்தாய் என்னை காத்திடுவார்
தட்டி தட்டி கொடுத்திடுவார்
தாலோ தாலோ தூங்கேன்பார். ...............

..சாரதாவுக்கு ஒரே ஆச்சரியம் . கடந்த முறை  பெற்றார் தினவிழாவுக்கு பாடிய  அம்மாவைப போல் என்ற பாடலை இவள் அப்பாவை போல் என்று பாடுகிறாளே என்று . ராகவன் சத்தம் கேட்டு ஓடோடி வந்து கட்டி அணைத்தான். குட்டி அனுஷ்கா எல்லோருடைய பாராட்ட யும் பெற்றாள். ........

.ஈன்ற  பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......
.பாடகி என் கேட்ட தந்தை. ..

Tuesday, September 1, 2009

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் .......

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............

அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை  இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை.

பண்ணை  வீட்டுக்கு  போகும் பிரதான நீர் வழங்கல்  குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை எழுத்து கொண்டு , போக அவன் வீடு  பெட்டை  நாய் ஈன்ற குட்டிகளில்  ஒன்று தானும் தானும் என்று , அவன் பின்னே துள்ளி யும் ஓடியும் சென்றது .அவ்வழியால் போவோருக்கு பண்ணை வீட்டு  காவல் நாய்களுக்கு பயம். அவைகளின் தோற்றமும் , கத்தும் (குரைக்கும்) தொனியும் திகிலூட்டும். அவைகளை   கூட்டை விட்டு இரவில் திறப்பார்கள் அதிகாலை  ஆறு மணிக்கெல்லாம் , அடைத்து வைப்பார்கள். யாரும் உள் செல்வதென்றால் காவலாளியிடம் நாய் கூடுக்குள் நிற்கிறதா என்று கேட்டு விட்டு தான் உட் செல்ல முடியும்.

கடைக்குட்டி குடத்தில் நீரை நிரப்பி , தான் தலை மீது வைக்கவும் , நாய்களின் குரைப்பு கேட்கவும் குடத்தை  கீழே போட்டு விட்டு ஓடத்தொடங்கினான். குட்டி நாயும் வேகமாக ஓடத்தொடங்கியது .அவர்களின் கஷ்ட காலம் அன்று நாய்கள் கூட்டுக்குள் அடைக்கவில்லை. ஒரே ஒரு கவ்வி உதறலுடன் குட்டி நாய் , கதறலுடன் இறந்து விட்டது .பெரிய நாய் தன் இனம் என்று கூட சிந்திக்கவில்லை.(ஐந்து அறிவு படைத்தஜீவ்ன் எங்கே அறிவு ) பின்னல் துரத்தி வந்த காவலாளி , அவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

கடைக்குட்டி வீட்டில்  போய் நடந்ததை சொன்னான். வலிமை படைத்தவனின் நாய் கூட , ஏழை களின் நாயை குதறி விட்டன.சில  நாடுகளின் அதிகாரவார்க்கம் , சிறுபான்மையினத்தை கொன்று ஒழிப்பது போல  பண்ணை வீட்டு நாய்க்கும் ஏழை வீட்டு நாய்க்கும் நடந்த கதை  .

 ஒரு  நாட்டில் பெரும் பான்மை இனம் சிறு பான்மை இனத்தை சில வலிமையானவர்களின் உதவியோடு ஒழித்து கட்டுவது என் நினைவுக்கு வருகிறது.

நாய்களுக்கே  இந்தகதி என்றால் மனிதர்களுக்கு .............(என்னை சிந்திக்க வைத்த நிகழ்வு )

யாரை நம்பி ..................

யாரை நம்பி ..............


.......கடந்த வாரம் ஒரு மரண வீடுக்கு சென்று இருந்தேன். ஒரு பெண்மணி எழுபது வயது இருக்கும் . ஊரில் பாலர் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் . காலம் தன் வேலையை செய்ய நானும் வளர்ந்து பெரியவளாகி என் படிமுறைகளை கடந்து இன்று ஒரு அம்மா வாக புலம் பெயர்ந்து உலகின் குளிர் iகூடிய நாட்டில்.


என் எண்ண aஅலைகள் மீளவும் தாயகம் நோக்கி ...........நான் பிறந்து வளர்ந்தது அமைதியான் ஒரு கிராமம் . அங்கு அந்தரீச் சர் தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்தார் .கணவன் ஒரு புடவைகடையில் வேலை பார்த்து வந்தார் . மூன்று ஆண் குழந்தைகள். வீட்டு வேலை , பாடசாலை வேலை என என்ன கஷ்ட பட்டு இருப்பார் அவர்களை வளர்க்க. மூத்தவன் , ஏ எல் (பன்னிரண்டாம் வகுப்பு )படித்து முடிய பல் கலை கழகம் செல்ல புள்ளிகள் போதவில்லை , ஒரு மாமன் முறையானவர் துணையுடன் , பிரித்தானியா அனுப்பி வைத்தார் . அங்கு அவன் படித்து பட்டம் , நல்ல உயர் தொழிலும் செய்வதாக ஊரில் பேசிக்கொள்வார்.

இரண்டாவது மகனும் படித்து நாட்டுப் பிரச்சினையால் மேற்படிப்பு படிக்க முடியாமல் ,ஜெர்மனிக்கு புறப்பட்டான். மூன்றாவது கடைக்குட்டி , குட்டி யானை போல. எந்நேரமும் தாயின் (கைக்குள் )சீலைக்கு பின் திரிவான். நம்ம ஊரில் ராணுவகக்கெடு பிடி . இளம் பையன்களை பிடிப்பதும் , ஆட்காட்டி முன் காட்டி கொடுப்பதுமாய் இருந்த காலம் . பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது நான் வசிக்கும் குளிர் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் . காலம் ஓடிக்கொண்டே இருந்தது , நானும் திருமணமாகி என ஊரில் வாழ்த்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு துயர செய்தி .அவரது மகன் மாரடைப்பால் காலமாகி விடார் என்று . அதை அங்கு வசிக்கும் வெள்ளைக்கார பெண் ஒருவர் தான் அறிவித்து இருந்தார். இவரும பல கஷ்டங்களுக்கு மத்தியில் , லண்டனுக்கு சென்று , மகனின் கிரிகைகளில்பங்கெடுத்தார் . . இறந்த அதிர்ச்சியுடன் மேலும் அதிர்ச்சி இவருக்கு அறிவித்த பெண் , வெள்ளைக்காரி, மருமகள் என்பது , அவனுக்கு ஆணும் பெண்ணுமாக் இரு வாரிசுகள் வேறு. என்ன செய்வது . இவர் தாயகம் திரும்பி விடார். இருப்பினும் அவள் இவருடன் தொடர்புகளை வைத்திருந்தார்.

பின் சில காலம் கணவனும் வலிப்பு நோய் காரணமாகஇறந்து விட்டார். இவர் தனித்து வாழும் காலத்தில் இரண்டாவது மகனுக்கு பெண் பேசி அனுப்பி விட்டார். அங்கு சென்றவள் அவனின் கோலத்தை பார்ர்த்து மணமுடிக்க மறுத்து விடாள், இவருக்கு துன்பத்தில் மேல் துன்பம் , இறுதியாக மூன்றாவது மகன் , பொறுபேற்று நான் வசிக்கும் குளிர் கூடிய நாடுக்கு வந்து விட்டார். சில காலம் இன்பமாய் வாழ்ந்தார். பின்பு மகன் இவரை கவனிப்பதில்லை . நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை , இப்படியாக இருக்கும் காலத்தில் அவனுக்கும் ஒரு பெண் சிநேகிதியாம். அவள் சரித்திரம் அறிந்தால்........... ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை பெற்ற வளாம் .கணவன் கை விட்டு சென்று விடானாம் . இவருக்கு அவளுடனும் ஒத்து வரவில்லை . நம்ம ஊரவார்களை கண்டால் பேசமாடார்.


சோகத்தின் மேல் சோகம் , பின்பு தனியாக ஒரு இல்லிடம் எடுத்து வாழ்ந்து வந்தார். ஆசிரியரின் பிள்ளைகளே இப்படி செய்து விடார்கள் எனறு ஊரார் பேசிகொண்டார்கள் . பின்பு நோயும் மூப்பும் வாட்ட ஒரு பராமாரிப்பு நிலையத்தில் வாழ்ந்தார். இடையில் மகன் மட்டும் வந்து பார்த்து செல்வதாக கேள்வி பட்டோம். அந்தஆசிரியரின் வாழ்வை நினைக்கவே கண் கலங்கு கிறது. பெற்ற பிள்ளைகள் இப்படி செய்து விடார்கள்.

புலம் பெயார் நாடுகளில் என்ன வாழ்கை என்று வாழ்வே வெறுத்து போகிறது . இயந்திரங்களோடு இயந்திரமாக் வாழவேண்டிய வாழ்வு .

இந்த நேரம் என என நினைவில் நிழலாடும் பாடல்.........


..தென்னையை பெற்றால் இளநீரு ,
பிள்ளயை பெற்றால் கண்ணீரு ,
பெற்றவள் மனமோ பித்தம்மா ,
பிள்ளை மனமோ கல்லம்மா ...............

...இப்படி எத்தனை பிள்ளைகள் கல் மனமாய் வாழ்கின்றனரோ ?