Followers

Wednesday, January 27, 2010

வேண்டாம் ....கண்ணா

வேண்டாம் ....கண்ணா

பசும் பாலும் சுவைக்க் வில்லை
பாட்டியின் மடியும் இனிக்க வில்லை....
கண்டதும் தாவி வருகிறான்.
 உண்டாலும் பசியடங்கவில்லை
தாகமும் தவிப்பும் தீரவில்லை
வேம்பின் எண்ணெயும் கசக்கவில்லை
ஊர் அடங்கி உறங்க சென்றதும்
மெல்ல நுழைந்து இறுக்கி அணைத்து
சேலை விலக்கி நுழைந்து விடுவான்
" அம்மா பாப்பா (பால்) ..........என்று
அவள்  இரண்டு வயது கடைக்குட்டி ......

7 comments:

ஹேமா said...

குழந்தைக் கண்ணனின் குறும்பா...ஆசையா.
வெட்கமும் வந்திடிச்சா அவருக்கு.
அம்மா பால் குடிக்க போராட்டமா.
வேம்பெண்ணையா வெட்கமா...
அம்மாப் பாலுக்காக தாண்டலாமே எல்லாத்தையும் !

ஈரோடு கதிர் said...

ஆஹா... அழகாயிருக்கே கவிதை

மகா said...

தாய் சேய் உறவின் கவிதை மிக அழகு ....

சீமான்கனி said...

பல் முளைக்காமலே இருந்தால் மாறி இருக்குமோ இந்த நிலை... அழகான, தாய் பால்...கவிதை அருமை அக்கா....

ரிஷபன் said...

இப்போதும் பக்கத்து வீட்டு பாட்டி என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.. ‘வேப்பெண்ணை தடவினப்புறம்தானே விட்டே’னு. கவிதை பழைய நினைவுகளைச் சுலபமாய் தூசி தட்டிக் காட்டியது.

Pinnai Ilavazhuthi said...

நன்று. ரிஷபனின் கருத்தை ஆமோதிக்கிறேன்

கவி அழகன் said...

நல்ல கவிதை இப்ப கவிதையும் நன்றாக எழுதுகிறீர்கள்